பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை முடக்க சதி செய்யும் திமுக.
தொகுதி மறுவரையறை என்ற கபட நாடகம் ஆடும் திரு.மு.க.ஸ்டாலின்.இந்திய நாடாளுமன்ற
மக்களவையில் தாக்கலான தொகுதி மறுவரையறை, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாக்கள் தொகுதி மறுவரையறை, மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாக்களை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்குக் கூடியது. சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையை வழி நடத்தினார். அவை துவங்கியதும் சட்ட அமைச்சர், மசோதாக்களை அவையில் முன்மொழிய அனுமதி கோரிய போது காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. வேணுகோபால், “இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதை காங்கிரஸ் கட்சி ஆரம்ப நிலையில் எதிர்க்கிறது. நாங்கள் மகளிர் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம். ஆனால், தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்கிறோம்.
மத்திய அரசு தற்போது எடுத்து வரும் நடவடிக்கை என்பது இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை மீதான தாக்குதல். மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா 2023-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட போது மத்திய அரசு, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்த பிறகே தொகுதி மறு சீரமைப்பு மேற்கொள்ளப்படும். அதன் பிறகே இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தது. அவ்வாறு இருக்க, இப்போது எதற்கு தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள மத்திய அரசு முயல்கிறது” எனக் கேள்வி எழுப்பிய நிலையில்
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “மசோதா தாக்கல் செய்வதற்கு முன்பாக அதை எதிர்ப்பதாக இருந்தால் பிரிவு 72-ன் கீழ் தொழில்நுட்பக் காரணங்களுக்காக மட்டுமே எதிர்க்க முடியும். தொழில்நுட்பப் பிரச்சினை ஏதும் இல்லாத நிலையில் மசோதா தாக்கல் செய்வதை எதிர்க்க முடியாது” எனக் கூறினார் இதைத் தொடர்ந்து பேசிய சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் அகிலேஷ் யாதவ், “மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவில் இஸ்லாமியப் பெண்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்படுமா?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, “மத ரீதியாக இட ஒதுக்கீடு வழங்குவது என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே, முஸ்லிம் பெண்களுக்கு உள் இட ஒதுக்கீடு என்ற கேள்விக்கே இடமில்லை” எனப் பதிலளித்தார்.
அதற்கு,அட்டவணை பட்டியல் சமூக பெண்களுக்கு உள் இட ஒதுக்கீடு அளிக்கப்படுமா?” என அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் அமித் ஷா, “தற்போது மக்கள் தொகை கணக்கு எடுக்கும் பணி தொடங்கப்பட்டு விட்டது. முதற்கட்டமாக வீடுகள் குறித்த கணக்கெடுப்பு நடக்கிறது. தொடர்ந்து ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்” எனப் பதிலளித்தார்.
தொடர்ந்து மசோதாவை அறிமுகம் செய்ய அவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மசோதா அறிமுகத்துக்கு ஆதரவாக 207 எம்பிக்கள் வாக்களித்தனர். எதிராக 126 எம்பிக்கள் வாக்களித்தனர். இதன்மூலம், மசோதாவை அறிமுகம் செய்வதற்கு அதிக ஆதரவிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த மசோதாக்கள் மீது பிற்பகல் 3 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.நாடாளுமன்றத் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை தற்போதைய 543-ல் இருந்து 850-ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்தத் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு, 2029 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அமல்படுத்தப்பட உள்ளது. 33 சதவீதம் மகளிர் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மொத்த இடங்கள்: 850 (815 மாநிலங்களுக்கும் + 35 யூனியன் பிரதேசங்களுக்கும்) 33 சதவீதம் மகளிர் இட ஒதுக்கீடு அமல் மற்றும் மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கேற்ப பிரதிநிதித்துவம் 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்.
உத்திரப் பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களில் இடங்கள் கணிசமாக உயரும். தமிழ்நாட்டில் தற்போதைய 39 இடங்கள், 50-ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு, குறிப்பாக மக்கள்தொகை குறைவாக உள்ள மாநிலங்களில் இருந்து, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.







கருத்துகள்