தமிழ்நாடு காவல் உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் உடனடி மாற்றம் தேர்தல் ஆணையம் நடவடிக்கை;
புதிய காவல் உளவுத்துறை ஐஜியாக அவினாஷ்குமார் நியமனம் செய்யப்பட்டார். தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நடைபெறும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உளளன. இதில் திமுகவுக்கு ஆதரவாகச் செயல்படும் உயர் அதிகாரிகளை மாற்றம் செய்ய வேண்டும் எனக் கூறி, எதிர்க்கட்சிகள் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு மனுக்கள் அனுப்பப்பட்டன. அதன்படி உயர் அதிகாரிகள் மாற்றப்படுகின்றனர்.
அந்தவகையில் இன்று ஏப்ரல் மாதம் 19 ஆம்தேதி தமிழ்நாடு காவல் உளவுத்துறை ஐஜி செந்தில்வேலனை மாற்றம் செய்து தேர்தல் கமிஷன் உத்தரவு. புதிய ஐஜியாக அவிநாஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஏற்கனவே தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார், தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு டிஜிபி மற்றும் சில மாநகரக் காவல்துறை ஆணையர்கள், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர், அந்த அடிப்படையில் இன்னும் ஆதரவாகச் செயல்படும் சில மாவட்ட ஆட்சியர்கள் குறித்து சில தகவவ்கள் உளவுத்துறை மறைத்துக் கூறிய நிலையில் தான் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும்இந்த நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும்
தேர்தல் ஆணையம் உத்தரவு, இதனைத் தொடர்ந்து இன்னும் சில ஊழல் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் நடக்கவும் வாய்ப்புள்ளது.





கருத்துகள்