முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜி.கே. மணி மகனை கூட்டணி பலத்தால் வீழ்த்தும் செல்வம் .முந்தும் மாம்பழம்

தேர்தல் கள நிலவரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் 

பென்னாகரம், தருமபுரி, சோளிங்கர்,


திருப்போரூர், விக்கிரவாண்டி, போளூர், ஜெயங்கொண்டம், மயிலாடுதுறை, 

ஆகிய எட்டு தொகுதிகளும் என்டிஏ கூட்டணியில் பாமகவுக்கு வெற்றியை முதலில் உறுதி செய்த தொகுதியாக முதலிடத்தில் உள்ளது 

உத்திரமேரூர், செஞ்சி, ரிஷிவந்தியம், விருத்தாசலம், சேலம் மேற்கு,  காட்டுமன்னார் கோயில், கீழ்வேளூர், சேலம் வடக்கு  ஆகிய எட்டு தொகுதிகள் இன்னும் அதிகமாக களப்பணியாக வேலையும் கூடுதல் கவனிப்பும் கடைசி நேர முயற்சியும் இறுதி வெற்றியை உறுதி செய்யலாம் என்ற சமநிலை மற்றும் 

பெரம்பூர் தொகுதியில் திலக பாமா வாக்குகள் வாங்குவார் ஆனால் வெற்றிக்கு வாய்ப்பில்லை, 





அம்பத்தூர் நெருக்கடியான சூழ்நிலை கடுமையாக இன்னும் வேட்பாளர் சேகர் போராடினால் வாய்ப்பு 

கட்சியின் அங்கீகாரம் பெறும் மேலும் ஜி. கே. மணியை பயன்படுத்தி பாமகவில் மருத்துவர் ராமதாஸை மருத்துவமனை முச்சந்தியில் நிறுத்தி தன் மகனை மாற்றுக் கட்சியில் திடீர் வேட்பாளராக நிறுத்தி பாமகவை உடைக்கப் பார்த்த ஜி. கே.மணிக்கு இது வாழ்வா சாவா தேர்தல் இந்தப் போட்டியில் பரபரக்கும் தொகுதி பென்னாகரம். மருத்துவர் அண்புமணி ராமதாஸ் Vs ஜி.கே. மணி மகன் தமிழ் குமரன் ? - யார் அதிக பலம்?

 பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி இரண்டு வாரிசுகளின் நேரடி மோதலால் தேர்தல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நடைபெற உள்ள 2026 தேர்தல் களத்தில் தமிழ்நாட்டிலுள்ள மற்ற சட்டமன்றத் தொகுதிகளை விட பென்னாகரம் அதிக முக்கியத்துவம் கொண்டதாக மாறியிருக்கிறது. அதற்குக் காரணம் பாட்டாளி மக்கள் கட்சியில் வலிமை வாய்ந்த சக்தியாக இருந்தவரும் டாக்டர் அன்புமணி ராமதாஸின் எதிரியான ஆரம்பகாலத் தொடக்கப்பளி ஆசிரியர் பணி செய்து பேராசிரியர் தீரன் விலகிய நிலையில் தலைவரான ஜி.கே. மணி இத்தொகுதியில் வென்ற போது எடப்பாடி கணேசன், தாரமங்கலம் கோவிந்தன் உள்ளிட்ட நால்வர் பாமகவில் திமுக மற்றும் அதிமுக ஆதரவில்லாமல் வென்றனர்.



அதற்குக் காரணம் சந்தணக் காடு வீரப்பன் அவரது உறவினர் அவர் சமூகத்தினர் அதிகம் வாழும் பகுதியாக இருப்பது தான். திமுக தொடங்கப்படுவதற்கு முன்னர் அந்த நிலையில்லை. காரணம் ராமசாமி படையாச்சி பௌன்ற தலைவர்கள் ஆரம்பக் காலங்களில் காங்கிரஸ், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி ஆகிய பொது அடையாளம் கொண்ட கட்சியின் வேட்பாளர்கள் வென்றுள்ளனர். 1962ல் இத் தொகுதியில் அறிஞர் அண்ணாதுரை தலைவராக இருந்த போது திமுக வென்றது. அதே திமுக ஆட்சி அமைத்த 1967 தேர்தலில் இத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வென்றது.

திமுகவும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட இங்கே போட்டியிட்டு சில தேர்தல்களில் தோல்விகளைச் சந்தித்தன என்பது குறிப்பிடத்தக்கது. பாமக தொடங்கப்பட்ட 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நிலைமை வேறானது. களம் ஜாதி சார்ந்த அரசியலுக்கு வலுசேர்ப்பதாக இருந்தது. பெரும்பான்மை வன்னியர் படையாச்சி ஜாதியைச் சார்ந்த மக்களின் ஒரு ரூபாய் நோட்டும் ஒரு ஓட்டும் கொண்ட வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லை என்ற கள ஒருங்கிணைப்பினால் பாமகவின் கோட்டையாக அப்போது முதல் ஒரு தோற்றம் உருவானது. ஆனால், இத்தொகுதியின் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வெறுமனே பாமகவைச் சார்ந்தவர்கள் மட்டுமே பெரும்பான்மையாக இருக்கவில்லை என்பதே நிஜம்.

தொடர்ந்து 2006, 2010 ஆகிய இரு சட்டமன்றத் தேர்தல்களில் திமுக தொடர்ச்சியாக இருமுறை வென்றுள்ளது. இன்னும் சொல்லப்போனால், ஜாதிய அரசியலின் மையப்புள்ளியாக முன்வைக்கப்படும் இத்தொகுதியில் 2011 ஆம் ஆண்டில் இந்தியப் பொதுவுடைமை கட்சியின் வேட்பாளர் நஞ்சப்பன் வெற்றி பெற்றுள்ளார். இடதுசாரி அரசியல் சித்தாந்தமும் இத்தொகுதியில் தாக்கத்தை உண்டாக்கியுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டியே உள்ளது.

இவ்வாறு கலவையான பல்வேறு நல்ல அம்சங்கள் இருந்தாலும், பொதுப்புத்தியில் இது பாமக சார்ந்த ஜாதிய கட்சியின் அடையாளத்துடன் இத்தொகுதி இணைத்து அடையாளம் காணப்படுவதை மறுக்கமுடியாது. 1996 வெற்றி மூலம் சாதாரண ஜி,கே.மணி பாமகவின் முகத்தை மருத்துவர் ராமதாஸ் மூலம் இத்தொகுதிக்கு அளித்தார். அடுத்து 2001 தேர்தலிலும் அவரே வெற்றியாளர். தொடர்ந்து 10 ஆண்டுகள் அவரே இத்தொகுதியின் பாமக அடையாளமாகக் கருதப்பட்டார். அதன்பின்னர் அடுத்து வந்த பத்து ஆண்டுகள் திமுக வசம் சென்றது இத்தொகுதி. உறவுகள் அதிகம் 

ஜிகே மணியின் சுய பலத்தை அதிகரிக்கும் நிலை பணவசதியில் உயர்ந்தார் சாதாரண ஆசிரியர் ஜி. கே. மணி பணம் சேர அகங்காரம், ஆணவம கூடியது தற்போது அவர் மகன் திமுகவின் பிணாமி செல்வாக்கு

ஜி.கே.மணி மூலம் உண்டான பாமக செல்வாக்கைக் கணக்கிட்டு, கடந்த 2016 ல் பாமகவின் வேட்பாளராக மருத்துவர் ராமதாசின் மகன் மருத்துவர் அன்புமணி களம் கண்டார். ஆனால், தனித்து போட்டியால் திமுக வேட்பாளர் இன்பசேகரனிடம் அவர் தோல்வியைத் தழுவினார். அதற்குக் காரணம் கூட்டணி பலம் இல்லாதது. 'மாற்றம் முன்னேற்றம்' எனத் தனித்து களம் கண்டது. அவரை முதல்வர் வேட்பாளராக அனைத்து மக்களும் ஏற்கவில்லை.

மருத்துவர் அன்புமணி இங்கு களம் கண்டதன் மூலம் மருத்துவர் ராமதாஸின் அரசியல் வாரிசு போட்டியிட்ட தொகுதி என்ற முத்திரை இதன் மீது விழுந்தது.மருத்துவர் அன்புமணியின் தோல்வி மோசமானதாக இருக்கவில்லை. அவர் 50 ஆயிரத்திற்கும் மேலான வாக்குகளைப் பெற்றார். இடைவெளி சுமார் 18 ஆயிரம் வாக்குள் என்ற அளவிலிருந்தது.

மருத்துவர் 

அன்புமணியின் தோல்விக்குப் பின்னர் மீண்டும் கூட்டணி பலத்துடன் பாமக வேட்பாளராக ஜி.கே.மணி களம் கண்டார். அவர் இம்முறை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் சுமார் 80 ஆயிரம் வாக்குகளைப் பெற முடிந்தது. ஒருவகையில் பாமகவின் கோட்டை எனத் தோற்றம் பெற்றுள்ள பென்னாகரத்தில் பாமக தனித்து நின்று வெற்றி பெற முடிந்ததில்லை. கூட்டணியே பாமகவின் வெற்றியை இதுவரை உறுதிசெய்துள்ளது.

கடந்த முறை மருத்துவர் ராமதாஸின் மகன் அன்புமணியின் தொகுதி எனக் கருதப்பட்ட இந்தப் பென்னாகரம், இந்த முறை ஜி.கே மணியின் வாரிசான தமிழ்க் குமரன் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிருக்கிறார். இதனால் மகன்களின் தொகுதியாக மாறியுள்ளது, பென்னாகரம்.

திமுகவுக்கு இங்கு பலம் உள்ளது. கூடவே பாமகவில் இப்போது திரிசங்கு நிலையை விட்டு திமுகவிடம் தஞ்சம புகுந்துள்ள ஜி.கே.மணியின் தனிப்பட்ட செல்வாக்கும் இங்கு உள்ளது. எனவே தமிழ்க் குமரன் மீது பலரது கவனம் இப்போது பெற்றுள்ளது. அதுவும் பாமகவின் அடையாளமாக இருந்து மருத்துவர் ராமதாஸ் குடும்பத்தில் பல பிரிவினை செய்து அங்கு எதிராக இருந்தவர் திடீரென்று காங்கிரஸ் கட்சியின் சீட்டு வாங்கிப் போட்டியிடுகிறார்.

யாருக்கு வாக்குகள் விழும்?

வாக்காளர் மறுசீரமைப்புக்கு முன் (சார்) இத்தொகுதியின் வாக்காளர்களின் எண்ணிக்கை 2,52,042 ஆக இருந்தது. அதில் ஆண்கள், 1,29,613 ஆகவும் பெண்கள்,1,22,421 என்ற அளவிலும் இருந்தனர். தற்போது மறுசீரமைப்புக்குப் பின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. தற்சமயம் 2,46,293 பேர் மொத்த வாக்காளர்களாக உள்ளனர். அதில் 1,26,763 பேர் ஆண்களாகவும் 1,19,521 பெண்களாகவும் உள்ளனர். சொல்லப்போனால் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெண்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. மாற்றுப் மூன்றாம் பாலினத்தவர் 9 ஆக அப்படியே தொடர்கின்றனர். இத்தொகுதியில் மொத்தம் 320 வாக்குச்சாவடிகள் உள்ளன.

பாமக இந்த முறை எனடிஏ வில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் திமுக கூட்டணியில் நீடிக்கிறது. ஜிகே மணி கடந்த முறை திமுக வேட்பாளரை 21,186 வாக்குகளில் தோற்கடித்தார். அவரது மகன் இம்முறை, பாமக அல்லாத காங்கிரஸ் அடையாளத்தை ஏற்றுள்ளார். அரசியல் ரீதியாக அடிப்பட்ட துரோகியாக பாமக இவரை பூனையாக பார்க்க புலியாக மாற வேஷம் கட்டிய ஜி.கே.மணியின் நிலை மாறியுள்ளது. அதேசமயம் பாமக தன் தலைமையில் வலிமையாக உள்ளது என்பதை மருத்துவர் அன்புமணி நிரூபித்துக்காட்ட பென்னாகரம் ஒரு 'கீ' பாயிண்ட் ஆக தற்போது உள்ளது.

வன்னியர் சமூகத்தினர் இத்தொகுதியில் 60% மேல் வாழ்கின்றனர். அதே சமயம் பட்டியலின மக்களின் வாக்கும் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக 15 % உள்ளது. பிற ஜாதியினரும் உள்ளனர். தமிழக் குமரன் முன்பே இத்தொகுதிக்கு அறிமுகமான வேட்பாளர் தான் ஆனால் இப்போது பாமகவின் துரோக முகம் . 2010 திமுக சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணனின் திடீர் மறைவால் இடைத்தேர்தல் நடைபெற்றபோது தமிழ்க் குமரன் களம் கண்டு, சுமார் 36 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

இப்போது 2026 ஆம் ஆண்டில் பாமகவின் சார்பில் வி.செல்வமும் காங்கிரஸ் சார்பில் தமிழ்க் குமரனும் நேரடியாகவே மோதுகின்றனர். தந்தையின் தனிப்பட்ட செல்வாக்கும், வன்னியர் அல்லாத பிறஜாதியினரின் வாக்கும் தன்னைக் காப்பாற்றும் எனக் கணக்கிட்டுக் களம்புகுந்துள்ளார் தமிழ்க் குமரன். அங்கு தவெக விசில் கணிசமாக வாக்குகளைப் பெறுவது மணி மகனுக்கு ஆபத்து.

அதேபோல், பாமக நிறுவனர் ராமதாசுக்கும் அன்புமணிக்கு இடையேயான பிரிவை உண்டாக்கியவர் ஜி.கே.மணி என்ற நபர் மஹாபாரதத்து சகுனியாக, இராமாயணத்தில் கூனியாக, மனோன்மணியத்து குடிலனாக, சிலப்பதிகாரத்து வஞ்சிப்பத்தனாக, காட்சி தருகிறார் என நம்பும் மருத்துவர் அன்புமணி அவரது மகனை வீழ்த்த புஜபல பராக்கிரம படை பலத்தை வைத்து பலகட்ட முயற்சிகளை எடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆக, மகன்களின் மோதலால் இத்தொகுதி தேர்தல் களத்தில் செல்வாக்குப் பெற்றுள்ளது. இறுதியில் வெற்றி செல்வத்துகு வரும். இதுவே கள நிலவவரம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...