இந்தியத் தேர்தல் ஆணையம் சமூக வலைதளங்களில் வெளியாகும் தேர்தல் தொடர்பான பதிவுகள் மற்றும் பிரச்சாரங்களைக் தீவிரமாகக் கண்காணிக்கிறது.
விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமீறல்களைத் தடுக்க, சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட 11,000-க்கும் மேற்பட்ட தவறான பதிவுகள் இதுவரை நீக்கப்பட்டுள்ளன.
விளம்பரங்களுக்கு முன் அனுமதி டிஜிட்டல் தளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அரசியல் விளம்பரங்களை வெளியிட, ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் (MCMC) முன் அனுமதி பெற வேண்டும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் சமூக வலைதளக் கணக்கு விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தனிநபர் தாக்குதல் மற்றும் வெறுப்புப் பேச்சு: தனிநபர் தாக்குதல், வன்முறையைத் தூண்டும் பதிவுகள் அல்லது தேர்தல் விதிகளை மீறும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளர்களை நிர்ப்பந்திக்கும் வகையில் செயல்பட்டால், வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
வாக்களித்ததை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க எச்சரிக்கை விடப்பட்டது. சமூக வலைதளங்களில் தேர்தல் விதிமுறைகள் கடுமையாக அமலில் உள்ளதால், அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்