கோயம்பத்தூர் தெற்குத் தொகுதியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அராஜகங்களும், பணப்பட்டுவாடாவும் நடப்பதாகக் குற்றம் சாட்டி, தேர்தலை ரத்து செய்யக் கோரி தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய அம்மன் அர்ஜுனன்:
"தமிழ்நாட்டில் எத்தனையோ தேர்தல்கள் நடந்துள்ளன, ஆனால் இது போன்ற அராஜகத்தை நான் பார்த்ததே இல்லை. குறிப்பாகத் தெற்குத் தொகுதியில் அடுக்கடுக்கான அட்டூழியங்கள் அரங்கேறி வருகின்றன. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறது. காவல்துறையினரால் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இல்லை.பணம் விநியோகிப்பவர்களை நாங்கள் கையும் களவுமாகப் பிடித்துக் கொடுத்தாலும், தேர்தல் அதிகாரிகள் அவர்களைத் தப்பவிடுகிறார்கள்.
கரூரைச் சேர்ந்த 18 பேரைச் சுயேட்சை வேட்பாளர்களாகத் தெற்குத் தொகுதியில் நிறுத்தியதே குழப்பத்தை ஏற்படுத்தத்தான். இன்று இந்தத் தொகுதி ஒரு கலவர பூமியாக மாறியுள்ளதுதேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் புகார் அளித்தால், பெரிய அளவில் பணம் பிடித்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்போம் என்கிறார். அவருக்கு உயிரை விடப் பணம்தான் முக்கியமா?" என்றார்.கோயம்பத்தூர் தெற்குத் தொகுதியில் தாராளமாகப் பணப்பட்டுவாடா நடப்பதாகவும், அதைத் தடுக்க வேண்டிய அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதாகவும் கூறி, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர் , "மாவட்ட ஆட்சியர் நேரில் வரும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம்" என உறுதியாகத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அம்மன் அர்ஜுனன் மட்டும் ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்கச் சென்றார். இருப்பினும், அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதி பரபரப்பு நிலவுகிறது.தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நேற்று வரை லஞ்சம் லாவண்யம் என இருப்பவர்கள் தான் ஆகவே அவர்கள் தேர்தல் காலத்தில் திருந்துவார்கள் என்பது பாஜக கூடடணித் தலைமைக்கு வேண்டுமால் தெரியாமல் இருக்கலாம் ஆனால் தேர்தல் பார்வையாளர்களும் எப்படி ஊழல்வாதிகளாக இந்த பணம் மாற்றுகிறதா என்பதே எழு வினா? இந்திய அரசின் உள்துறை இதை வேடிக்கை பார்காமல் இந்தியத் தேர்தல் ஆணையம் மூலம் கோயம்பத்தூர் உள்ளிட்ட பணப் பட்டுவாடா செய்த வேட்பாளர் தொகுதிகளில் தேர்தலை நிறுத்த வேண்டும் என்பதே அவர்கள் கோரிக்கை.




கருத்துகள்