தமிழ்நாடு 234 சட்ட மன்ற
ப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தேர்தல் ஆணையத்தின் வாக்குப்பதிவு தரவுகளின்படி சுமார் 85 சதவீதம் +வாக்குகள் பதிவாகியுள்ளன.வாக்காளர் மறு சீரமைப்பு 2026 SIR வந்த பின்
சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல்களில் பதிவான வாக்குச் சதவிகிதத்தில் அதிகம் எனத் தேர்தல் ஆணையம் கருத்து.
தமிழ்நாட்டில் முதல் முறையாக 85 சதவிகிதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாக SIR காரணம் இதற்கு முன்னர் அதிகபட்சம் 2011-ஆம் ஆண்டு சட்ட மன்றப் பேரவைத் தேர்தலில் 78 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் உற்சாகத்துடன் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டுமென' பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தள பக்கத்தில் நேற்று காலை பதிவிட்டார்.
காலை 7 மணிக்குத் துவங்கி மாலை 6 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் 85 சதவீதம் +வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையத்தின் தரவுகள் தெரிவித்ன.
தமிழ்நாட்டில் மொத்தமாக 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். https://elections.tn.gov.in/, votervazhikatti.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக வாக்குச்சாவடி விவரம் அறிய புதிய வாக்காளர்களுக்கு உதவியாக இருந்தது.தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026க்கான வாக்குப்பதிவு நாளில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், ஐ.ஏ.எஸ்., சிறப்பு பார்வையாளர் திரு.பிரதாப் சிங், மாநிலக் கட்டுப்பாட்டு அறைக்கு வருகை தந்து, வாக்குப்பதிவு நாள் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, தமிழகம் முழுவதும் சுமூகமான, சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான செயல்முறையை உறுதி செய்வதற்காக 24 மணிநேர கண்காணிப்புடன் செயல்பட்டனர். அமைதியாகத் தேர்தல் நடந்து முடிந்தது.தமிழ்நாடு வந்துள்ள மத்திய தேர்தல் பார்வையாளர்கள் அவ்வப்போது வந்து வாக்குப்பதிவைக் கண்காணித்தனர். 300 கம்பெனி துணை ராணுவத்தினர் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் துணை ராணுவத்தினரும் பணியமர்த்தப்பட்டனர். அவர்களுடன் 83 ஆயிரத்து 875 தமிழ்நாடு காவலா படையினரும், 3 லட்சத்து 60 ஆயிரத்து 68 அரசு ஊழியர்களும் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.மொத்தம் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகளில், 1 லட்சத்து 6 ஆயிரத்து 418 வாக்குப்பதிவு எந்திரங்களும், 75 ஆயிரத்து 64 கட்டுப்பாட்டு எந்திரங்களும் மற்றும் வாக்கை உறுதி செய்யும் 'விவிபாட்' எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. கூடுதலாக 20 சதவீத வாக்குப்பதிவு எந்திரங்களும், கட்டுப்பாட்டு எந்திரங்களும், 30 சதவீத விவிபாட் எந்திரங்களும் ரிசர்வில் வைக்கப்பட்டன.
சில இடங்களில் எந்திரங்களின் பழுதால் வாக்குப்பதிவு காலதாமதமாகத் துவங்கியது. தவிர சில இடங்களில் மட்டும் வன்முறை நடந்ததால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்துத் தொடங்கியது. சரியாக மாலை 6 மணிக்கு வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள மையங்களின் பிரதானக் கதவுகள் அடைக்கப்பட்டன. அந்த மையங்களுக்குள் ஏற்கனவே வந்திருந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் தரப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்தது. இதனிடையே வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வெளியிட்டது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் அங்கிருந்த வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் மூடி சீல் வைக்கப்பட்டன. பின்னர் அவை உரிய பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பு அறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.
கடந்த தேர்தல்களைவிட இந்தத் தேர்தலில் நடந்துள்ள வாக்குப்பதிவு மிக வித்தியாசமாகும். ஏனென்றால், தமிழ்நாடு தேர்தல் சரித்திரத்தில் சரியான வாக்காளர் பட்டியல் படி இதுவரை இல்லாத அளவுக்கு 85.15 சதவீத வாக்குகள் பதிவாகின. இதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் பதிவானதை விட நேற்று பதிவான வாக்குகள் சதவீதம் அதிகம். இந்தத் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291; அதில் வாக்களித்தோர் 4.81 கோடி. தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணி தற்போது துவங்கி உள்ளது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு வழங்கப்பட்ட படிவம் 17C-யில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையுடன், மொத்தம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையின் விபரங்கள் ஒப்பீடு செய்து சரிபார்க்கப்படுகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள் இணைந்து இப்பணியை மேற்கொண்டனர்.
சரிபார்ப்புப் பணி முடிந்த பின், தொகுதி வாரியாக வாக்குகளின் புள்ளி விவரங்கள் இன்று அல்லது நாளை வெளியாகும். இந்த முறை இளைஞர்களும் யுவதிகளும் பெண்களும் ஆர்வமுடன் வாக்களித்தனர், சிறு குழந்தைகள் இந்தத்தேர்தலில் அதீத ஆர்வம் காடடினர்.ஆனால் இந்தத் தேர்தலில் பணம் பிரதான விஷயம் ஆனால் சாமானியன் பணத்தை பறிமுதல் செய்து அரசியல் வாதிகள் பணத்தை தாராளமாக மக்களிடம் ஊழல் காரணமாக கொண்டு சேர்த்த பறக்கும் படை என்ற பறக்காத படை தான் காரணம் சில இடங்களில் மட்டுமே அவர்கள் அரசியல் கட்சி பணத்தை பறித்து பெயர் எடுத்தனர் ஆனால் பல இடங்களில் நிலைமை வேறு.
கரூர் தொகுதியில் ஒரு ஓட்டுக்கு அதிமுக சார்பில் ரூபாய் 3,000 கொடுக்கப்பட்டதாகத் தகவல் . இதற்கு பதிலடியாக திமுக தரப்பில் ஒரு ஓட்டுக்கு இரு மடங்காக ரூபாய் 6,000 கொடுக்கப்பட்டதாகவும் தகவல்.
இந்த நிலையில் அதிமுகவினர் 1 ஒரு ஓட்டுக்கு 4 கிராம் வெள்ளி காசு கொடுத்துள்ளதாகவும் தகவல் . 1 கிராம் வெள்ளியின் இன்றைய சந்தை மதிப்பு ரூபாய் 275. 4 கிராம் வெள்ளியின் இன்றைய மதிப்பு ரூபாய் 1,100..
இதற்கு போட்டியாக திமுகவினர் அடுத்த ஒரு மணிநேரத்துக்குள் ஒரு ஓட்டுக்கு அரை கிராம் தங்கக் காசு என வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் . 1 கிராம் தங்கத்தின் இன்றைய மதிப்பு ரூபாய் 14,250. அரை கிராம் தங்கத்தின் மதிப்பு ரூபாய் 7,125.. இதில்
கரூர் தொகுதியில் அதிமுகவினர் இதுவரை ரொக்கம் ரூபாய் 3,000, ரூ.1,100 மதிப்பிலான வெள்ளி காசு கொடுத்துள்ளதாகவும் தகவல் . அதாவது கரூரில் ஒரு வாக்காளர்களுக்கு அதிமுக ரூபாய் 4,100 வீதம் சுமார் 2 லட்சம் வாக்காளர்களுக்கு ரூபாய் .82 கோடி கொடுத்துள்ளதாகத் தகவல்.. இதை உளவுத்துறை நன்கு அறியும் இருந்த போதிலும் எல்லா இடத்திலும் ஊழல் மயம்
திமுக தரப்பில் இதுவரை ரொக்கம் ரூபாய் 6,000 , ரூபாய் . 7,125 மதிப்பிலான அரை கிராம் தங்க காசு என 1 ஓட்டுக்கு ரூபாய் 13,725 கொடுத்துள்ளதாகத் தகவல்
அதாவது சுமார் 2 லட்சம் வாக்காளர்களுக்கு திமுக தரப்பில் ரூபாய் 274.5 கோடியும் கொடுக்கப்பட்டதாகத் தகவல்.
கரூர் தொகுதியில் மட்டும் சுமார் 2 லட்சம் வாக்காளர்களுக்கு அதிமுகவும் திமுகவும் இதுவரை சுமார் ரூபாய் 356.5 கோடி பணத்தை வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்துள்ளதாக வரும் தகவல் வேதனை. இந்த ஊழல் ஒழிய வேண்டும் என்பதே மக்கள் எதிர் பார்ப்பு இதை நிலை தான் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி திமுக வினர் ஒரு வாக்குக்கு 1000 சில இடங்களில் அதிகம் கொடுத்துளளதாகவும் தகவல் ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக கூட்டணி வேட்பாளர் நேர்மையாக பணம் கொடுக்காமல் மக்களை நம்பி வாக்கு சேகரித்தார். இதில் பணம் வங்கிக் கொண்டு மாறி வாக்களித்த மக்கள் ஜனநாயகக் காவலர்கள். ஓட்டுப்போட இந்தியக் குடியுரிமை பற்று சிங்கப்பூரில் வசித்த குடும்பம். வாக்களிக்க வந்து வாக்காளர் படடியலில் பெயர் இல்லாததால் SIR மூலம் நீக்கம் செய்ததை சரிபார்க்காமல் வந்தவர்கள் அதிர்ச்சி.
சென்னை பெரம்பூரில் ஒரு குடும்பத்தினர்
வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தாலும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியே தீர வேண்டும் என ஆர்வத்தில், சிங்கப்பூரிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் நேற்று காலை சென்னை வந்தடைந்தனர். விமான நிலையத்திலிருந்து நேராக வாக்குச்சாவடிக்குச் சென்ற அவர்களுக்கு, அங்கு காத்திருந்த அதிர்ச்சி அவர்கள் அனைவரையும் நிலைகுலையச் செய்தது. சர்க்கார் திரைப்படக் கடசி போல
வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர் பட்டியலில் அந்த 3 பேரின் பெயர்களும் விடுபட்டிருந்ததைக் கண்டு அவர்கள் மிகுந்த வேதனையடைந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது, தாங்கள் முறையாக விண்ணப்பித்துப் பெயர்களைச் சேர்த்திருந்ததாகக் கூறிய அவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர். அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தும், கடைசி நேரத்தில் தங்களது பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதைக் கண்டு அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆகவே அவர்கள் தரப்பு வழக்கு போடவும் முயற்சி எனத் தகவல்.
சுமார் 1000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணம் செய்து, பெரும் பொருட்செலவில் ஓட்டுப்போட வந்த தங்களுக்கு உரிய வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய ஜனநாயகத் துரோகம் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் தங்கள் வாக்குரிமை பறிபோய்விட்டதாக அந்த குடும்பத்தினர் அங்குள்ள அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட தூரம் பயணம் செய்து வந்தும் வாக்களிக்க முடியாமல் போன அந்தக் குடும்பத்தின் ஏமாற்றம், அங்கிருந்த மற்ற வாக்காளர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.












கருத்துகள்