ஆசை துறந்த புத்தன். ஆசை கொண்ட பிக்குகள்! இது மஹாயானமா? ஹீனயானமா? தாய்லாந்தில் இருந்து ரூபாய் .100 கோடி மதிப்புள்ள 110 கிலோ போதைப் பொருட்களை இலங்கைக்கு கடத்தி வந்த 22 புத்த பிக்குகள் கொழும்பு விமானநிலையத்தில் கைதாகினர்.
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக இலங்கை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில், தலைநகர் கொழும்பில் உள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.அப்போது, தாய்லாந்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்றுவிட்டு நாடு திரும்பிய 22 புத்த பிக்குகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. அவர்கள் கொண்டு வந்த பைகளில் பள்ளி உபகரணங்கள், பல்வேறு இனிப்புகளுடன் 110 கிலோ போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு துறவியின் பையில் இருந்தும் தலா 5 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் சர்வதேச மதிப்பு ரூபாய் .100 கோடி ஆகும்.
இதையடுத்து, 22 புத்த பிக்குகளும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். புத்தவிஹார் எனும் மடாலயங்களில் தங்கியிருந்த படி உயர்கல்வி பயின்று வரும் மாணவர்கள்.
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்த அளவுக்கு போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது மற்றும் கடத்தலில் புத்த பிக்குகள் குழு ஈடுபட்டது இதுவே முதல் முறை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 22 புத்த பிக்குகளையும் இலங்கை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் 22 புத்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இலங்கையின் மகாநாயக்க துறவிகள் வெளியிட்ட கூட்டறிக்கையில்: புத்த துறவிக்கான உடையை அணிந்துகொண்டு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது அரசியல் சாசனத்துக்கு எதிரானது, சட்ட விரோதமானது.
அவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, அவர்களை புத்த பீடங்களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். அது மட்டுமின்றி, இளம் துறவிகளை இதுபோல சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுத்துவோர் மீதும், அவ்வாறு தூண்டுவோர் மீதும், இதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினர் மீதும் விரைவான, விரிவான விசாரணையை பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். புத்த பிக்குகளின் உடைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதற்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.
பௌத்தர்கள் பயணத்தில் "புத்தம் சரணம் கச்சாமி. தம்மம் சரணம் கச்சாமி. சங்கம் சரணம் கச்சாமி." ("நான் புத்தரிடம் அடைக்கலம் புகுகிறேன், நான் தஞ்சம் பெற தம்மத்திற்குச் செல்கிறேன், என்பதே ஆனால் இந்த பிக்குகளான பக்குகள் சிறைக்கு அல்லவா செல்கிறது இதுவா புத்தம் கூறுவது.





கருத்துகள்