பதநீர் அல்லது கள் இறக்கியதாக பனைஏறிய தொழிலாளி மீது சீறுடை இல்லாத காவலர் நடத்திய துப்பாக்கிச் சூடு.
ஆலங்குளம் உதவி ஆய்வாளர் உட்பட 3 நபர்கள் மீது வழக்கு. குற்றம் சாட்டப்பட்ட காவல் துறையைச் சேர்ந்த 3 நபர்கள் குறித்து முதல் தகவல் அறிக்கை:
அதில் கண்டுள்ள படி 07.04.2026-ம் தேதி 23.30 மணிக்கு ஆலங்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் K.சுபாஷ் சந்திர போஸ் நிலைய பொறுப்பிலிருந்த போது தென்காசி மாவட்டம், ஆலங்குளம் (தாலுகா), மருதம்புத்தூர், S.பிரதிபா வயது 17 என்பவர் காவல் நிலையத்தில் ஆஜராகி கொடுத்த புகார் மனுவை பெற்று புகார்மனுவின் தன்மைக்கேற்ப சட்டப்பிரிவுகள் 197/2026 U/s 296(b), 109(1), 351(3) BNS & 4 of TNPHW ACT -"ன். படி பதிவு செய்தார் அதன் விபரம். புகார் மனு அனுப்புநர்: எஸ். பிரதீபா மருதம்புத்தூர், ஆலங்குளம் (தாலுகா), தென்காசி மாவட்டம். பெறுநர் உயர்திரு காவல் ஆய்வாளர், ஆலங்குளம் காவல் நிலையம், ஆலங்குளம். ஐயா, இன்று 7-04-2026 மதியம் சுமார் 12.45 மணியளவில், மூன்று நபர்கள் எனது
சித்தப்பா மணிகண்டன் என்பவரை, எங்கள் தோட்டத்திற்கு அழைத்து வந்து எங்களது பனைமரத்தில் ஏறச் சொல்லி வற்புறுத்தினார்கள். அங்கு நின்ற நானும் எனது தந்தை மற்றும் தம்பியும் என்ன நடக்கிறது என்று பார்க்கச் சென்றோம். அந்த நேரம் பனையின் உச்சியிலிருந்த எனது சித்தப்பாவை "ஏலே சாணாத் தே×××மவனே" கலயத்தில் ஒன்னுமே இல்லையா லேய் என்று அந்த மூன்று நபர்கள் கேட்டனர். அப்போது அந்த இடத்திற்கு விவரம் தெரிந்து வந்த எனது தாத்தா பெருமாள் சேட் என்பவர் அய்யா கெட்ட வார்த்தை பேசாதீர்கள் என வேண்டினார். ஆனால் அவர்கள் எங்கள் தாத்தாவையும் வயதில் பெரியவர் என்ற மரியாதை கூட இல்லாமல் "ஏலே கிழட்டு தே××× மவனே" என தகாத வார்த்தை கூறி ஆபாசமாகப் பேசியதோடு மட்டுமல்லாமல் ஒழங்காக ஓடிப் போய்விடு இல்லை என்றால் உன்னையும் பொய் வழக்குப் போட்டு உள்ளே தள்ளி விடுவேன் என்று மிரட்டினார்கள். உடனே நான் எங்கள் தாத்தாவை கெட்ட வார்த்தை பேசாதீர்கள் என்று கூறினேன். ஆனால்
அவர்கள்குழந்தை என்றும் பார்க்காமல் "ஏளா தே××× மவளே" என்று தகாத வார்த்தைகளால் பேசி எங்களை ஓடிப் போய்விடு என்றார்கள். இதை பார்த்த எனது தம்பியையும் "ஏலே பு×× மவனே" குடும்பத்தோடு உங்கள் அனைவரையும் உள்ளே தள்ளி விடுவேன் என்று மிரட்டியதோடு மட்டுமல்லாமல் கீழே கிடந்த கம்பை எடுத்து அடிக்க முற்பட்டபோது மரத்திலிருந்து இறங்கி வந்த எனது சித்தப்பா மணிகண்டன் அதைத் தடுத்து எதற்காக அசிங்கமாக குழந்தைகளைப் பேசுகிறீர்கள் என்று கேட்டார். உடனே அவர்கள் கையிலிருந்த கம்பை கொண்டு எனது சித்தப்பாவையும் எங்களையும் அடிக்க முற்பட்டபோது எனது சித்தப்பாவும் அவர்களும் உருண்டு வரப்பிலிருந்து கீழே விழுந்த போது அவர்கள் வைத்திருந்த கம்பே அவரது தலையில் காயத்தை ஏற்படுத்தியது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அந்த நபர்கள் "ஏலே தே××× மக்களா" உங்களைக் கொல்லாமல் விடமாட்டேன் என்று கூறிக்கொண்டு கீழே கிடந்த துப்பாக்கியை எடுத்து முதல் முறை எனது சித்தப்பாவைச் சுட்டார். இரண்டாவது முறை சுடும் போது அந்தக் குண்டு என்னை நோக்கி சுட்டார். நான் விலகி விட்டதால் அந்தக் குண்டு எனது காலருகில் சென்று கீழே விழுந்தது. ஒருவேளை நான் விலகாவிட்டால் அந்தக் குண்டு எனது உடம்பை துழைத்து எனது உயிருக்கு ஆபத்தாய் போய் இருந்திருக்கும். பின்னர் நான் பயந்து
கூச்சலிட்டு சுடாதீர்கள், சுடாதீர்கள் எனக் கூறினேன். ஆனால் அந்த நபர்கள் கொலை வெறித் தாக்குதலுடன் மீண்டும் இரண்டு முறை எனது சித்தப்பாவின் காலில் சுட்டனர். இப்போது எனது சித்தப்பா உயிருக்கு ஆபத்தான நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் அவர்கள் எங்களை அந்த இடத்திலிருந்து அப்புறபடுத்திவிட்டு எனது தாத்தாவை மட்டும் அந்த இடத்தில் நிறுத்தி வைத்து அவர்களது காலில் விழ வைத்து அசிங்கப்படுத்தியதோடு நில்லாமல் அவர்கள் கூறியபடி பேச வைத்து வீடியோ பதிவை எடுத்துகொண்டு, குண்டடிபட்ட எனது சித்தப்பாவை 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அவர்களே அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டனர். பின்னர் தான் தெரிந்தது வந்த நபர்கள் மூவரும் காவல்துறையைச் சார்ந்தவர்கள் என்று. இவர்களின் நடவடிக்கையினால் நான் மனதளவில் மிகப்பெரிய அளவில் அழுத்தம் ஏற்பட்டு பயத்தில் உறைந்து போனேன். ஆகையால் மேற்படி எதிரிகளின் செய்கையால் எனக்கும் எனது குடும்பத்தார்க்கும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு அவதியுற்று வருகிறோம். எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் எங்களுக்கும் எங்களது குடும்பத்தினருக்கும் துப்பாக்கியால் சுட்டு அச்சுறுத்தல் ஏற்படுத்தி, அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்த மற்றும் கொலை முயற்சி செய்த மேற்படி நபர்களின் மீது உரிய சட்ட பிரிவுகளின்படி வழக்குப்பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு (s/d) பிரதீபா இடம் : ஆலங்குளம் தேதி : 07/04/2026 என்ற புகார் மனுவில் மேலும் Sir, Received the Petition and Registered a case in Alanguiam PS Cr.No 197/2026 U/s 296(b), 109(1), 351(3) BNS & 4 of TNPHW ACT on 07.04.2026 at 23.30 hrs (s/d) K.Subash Chandra Bose SI இதன் அசல் முதல் தகவல் அறிக்கையுடன், வாதியின் புகார் மனுவை இணைத்து கனம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஆலங்குளம் அவர்களுக்கு அனுப்பியும், மற்ற நகல்களை சம்மந்தபட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியும், ஒரு நகலை விசாரணைக்கு ஆலங்குளம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.ஆடிவேல் அவர்களுக்கு வழங்கியதாக உள்ளது. இதில் நடந்த உண்மை என்ன என உற்று நோக்க வேண்டும். இதில் மற்றொரு தரப்பு கூறுவது மண்டையை உடைத்திருக்கிறார்கள், உதவி ஆய்வாளர்
நேர்மையான நடவடிக்கைக்கு தங்கப் பதக்கம் வாங்கித் தந்தவர்,
சட்டப்படி இவர் செய்தது தவறா இல்லையா? யூனிபார்ம் இல்லாமல் சென்றாரா?
இவர் ஜாதி மதம் பார்க்காமல் குற்றம் யார் செய்தாலும் நடவடிக்கை எடுப்பவர் எனவும் இந்த விவகாரத்தில் ஜாதி புகுந்து விட்டதாகவும், நேர்மையானவர்கள் முக்கியமில்லை எனவும்
உண்மையிலேயே இவர் மீது குற்றம் சுமத்துபவர்கள் தான் ஜாதி வெறியர்கள், எனவும்,
இசக்கி ராஜா ஆதரவாளர்கள் கருத்தாக உள்ளது.








கருத்துகள்