ஜாதிவாரிக் கணக்கெடுப்பை உடனே
நிறுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஒற்றைக் குழந்தை குடும்பங்களுக்கு பொருளாதார ஊக்குவிப்புக் கொள்கைகளைக் கோரும் தொடர்புடைய மனுவையும் நிராகரித்தது.ஜாதி வாரிக் கணக்கெடுப்பை நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது மத்திய மாநில அரசின் கொள்கை முடிவுகள் சார்ந்த விஷயம் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இந்த மனுவில் பயன்படுத்தப்பட்டிருந்த தரம் குறைந்த மொழிநடைக்காக மனுதாரரை நீதிமன்றம் வன்மையாக கண்டித்தது. ஜாதிவாரிக் சமூக-பொருளாதார கணக்கெடுப்பை நிறுத்தக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
இது அரசின் கொள்கை சார்ந்த கொள்கை முடிவான Policy Decision என்பதால், தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது மனுவில் பயன்படுத்தப்பட்டிருந்த மொழிநடை சரியில்லை எனக் கூறி, தலைமை நீதிபதி சூர்ய காந்த் மனுதாரரை கண்டித்தார்.
நாடு முழுவதும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் மற்றும் எதிர் கோரிக்கைகளுக்கு மத்தியில், இந்த உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது.


கருத்துகள்