செவ்வாய் கிழமை முருகன் வழிபாடு திருச்செந்தூர் செல்கிறார் தவெக தலைவர் விஜய்
தனி விமானம் மூலம் இன்று இரவு 11 மணிக்கு மதுரை பயணம்
அங்கிருந்து சாலை மார்க்கமாக நாளை அதிகாலை திருச்செந்தூர் செல்கிறார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்."ஞானச் செருக்கின் வடிவேல்! - நல்
ஞாலத் தவர்உயர் வடிவேல்!
ஈனப் பிறவி அறுக்கும் - எங்கள்
ஈசன் மகனடிப் போற்றும் வடிவேல்!
தூய அடியவர் நெஞ்சே - நிலை
தோன்றும் பிரணவ மந்திர வேல்!
மாயச் சுழலை அறுக்கும் - இந்த
மாண்புயர் ஞானத்தின் வேல்! அசுரனை அழித்த செந்தூர் வடி வேல் "
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் சுற்றுப்பயணங்களின் போது தொண்டர்களால் வழங்கப்படும் முருகன் வேல்-ஐ கையில் ஏந்தி உற்சாகமாக போஸ் கொடுக்கிறார். குறிப்பாக, திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி ரோடு, காரைக்குடி ஷோக்களில் வேல் மற்றும் கட்சிக் கொடியுடன் அவர் மக்களை சந்தித்த காட்சிகள் உண்டு . இது அவரது காணிக்கை வேல் அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய குறியீடாகப் பார்க்கப்படுகிறது வேலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, காரைக்குடி போன்ற இடங்களில் தொண்டர்கள் விஜய்க்கு வேல், வாள், மற்றும் பெரியார், பிள்ளையார்பட்டி வினாயகர், பாண்டி முனிஸ்வரர் படங்களை பரிசாக அளித்தனர்.
பயபக்தி: வேல்-ஐ வாங்கியபோது விஜய் அதை மிகவும் மரியாதையுடன் கையில் எடுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசியல் அர்த்தம்: ஊழல் திமுக அரசை அசுர வதை போல நடத்த எதிர்கொள்ளும் வகையில், விஜய் வேலையும், மாதா சிலுவையையும் சேர்த்து ஏந்திய காட்சிகள், மத நல்லிணக்கம் மற்றும் ஆன்மீக அரசியலை வலியுறுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.இந்த வேல் ஏந்திய காட்சிகள் தமிழக அரசியல் களத்தில் முக்கிய பேசுபொருளாக உள்ளது, அதே போல் அண்ணாமலைக்கு பாஜக கூட்டணி வேட்பாளர்கள் வேல் வழங்கிய நிகழ்வுகள் உண்டு அதில் தான் அரசியல் ஆன்மீக முக்கியத்துவம் பெறுகிறது.
திருப்பத்தூர் தொகுதியில் பாஜக கூட்டணி தெ இ பா பி வேட்பாளர் கே. சி.திருமாறனை ஆதரித்து, பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டபோது, கே. சி.திருமாறன் கே. அண்ணாமலைக்கு வேல் வழங்கினார். இது தான் தமிழ்நாடு அரசியல் குறியீடு.



கருத்துகள்