மக்கள் புரட்சியா? அரசின் வீழ்ச்சியா? வெற்றி குவிக்கும் கட்சிகளும், சிலருக்கு காத்திருக்கும் தோல்விகளும் அலசல்
இதுவரை நடந்த ஊழல் ஆட்சி சமூக நீதி ஆட்சியாம்…!
பாசிச பாஜகவை இவர்களை விட்டால் தடுக்க ஆளில்லையாம்…! தேனாறும், பாலாறும் ஓடிய பொருளாதார முன்னேற்றமாம்..!
இது எல்லாம் உண்மை என்றால், ஏன் இந்த தேர்தலை இவ்வளவு பதட்டத்தோடு மற்றும் பணத்தோடு அணுகியது திமுக கூட்டணி ?
ஜனநாயகத்தில் நம்பிக்கை இழந்து பணநாயகத்தையே முழுக்க நம்பி ஒரு வாக்கிற்கு ஆயிரம் முதல் 10,000 வரை தந்தார்களே திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர். தவெக மற்றும் அதிமுகவின் பல நிர்வாகிகளை பணம் தந்து விலை பேசினார்களே..!. எத்தனை சட்ட மீறல்கள், அத்துமீறல்கள்..இவையெல்லாம் சொல்வது என்ன?
இவர்கள் தங்களைக் குறித்து கட்டமைத்துக் கொண்ட பிம்பங்களை தாங்களே நம்பவில்லை என்பது தானே..!
பெரும்பாலான ஊடகங்களும், பத்திரிகையாளர்களும்..மற்றும் சில அறிவு ஜீவிகளும் திமுக ஆட்சியை விதந்தோதி, ”இந்த நல்லாட்சியே மீண்டும் வரும்” என்ற கருத்தாக்கத்தை வலுவாக பணம் பெற்றுக் கட்டமைத்தார்கள். இதற்காக திமுக தலைமை பணத்தை அள்ளி இறைத்திருந்தது. அதில் இதுவரை நேர்மையான நபர்கள் என நம்பப்பட்ட பலரும் உண்டே, ஆனால், தேர்தல் நெருங்கும் தருவாயிலும், தேர்தலன்றும் அந்த பிம்பம் நொறுங்கிப் போனதை பல இடங்களில் நாம் கண்கூடாக காண முடிந்தது.
இது என்ன ஜனநாயகம்? முழுக்க, முழுக்க ஆட்சியாளர்கள் பணநாயகத்தை தான் நம்பினார்கள். ஆளும் கட்சியும், அதற்கு முன் ஆண்ட கட்சியும் தங்கள் தேர்தல் அறிக்கையிலுமே கூட பணம் தருவது, இலவசங்கள் தருவதைக் கொண்டு தான் மக்கள் வாக்கை வாங்க நினைக்கிறார்கள்!
பணத்தை தருவதிலும், பெறுவதிலும் காட்டப்படும் சாமார்த்தியம் தான் தேர்தலா? இந்த தேர்தலில் விளையாடிய மிகப் பிரமாண்டமான பணம், பிரதான கட்சிகள் ஜனநாயகத்தை எவ்வளவு கீழ்த்தரமாக மதிப்பீடு செய்து அணுகினார்கள் என அப்பட்டமாக தெரிய வந்துவிட்டது. அதே சமயம் சில நம்பிக்கை கீற்றுகளையும் காண முடிந்தது;
இத்தனைக்கு இடையிலும் பணத்தை பொருட்படுத்தாமல் நல்லாட்சி வேண்டும் என்ற தேடலில் வாக்கை செலுத்திய வாக்காளர்களும் கணிசமாக இருக்கிறார்கள் என்பதை தவெக மற்றும் சில பாஜக கூட்டணி வாங்கிய வாக்குகளும், தவெக வாங்கிய வாக்குகளும் மற்றும் சில சுயேட்சைகள் வாங்கிய வாக்குகளும், மற்றும் நோட்டாவிற்கு விழுந்த வாக்குகளும் நமக்கு உணர்த்துகின்றன.
உண்மையில் இந்த வாக்காளர்களே புதைந்து கொண்டிருக்கும் ஜனநாயகத்தை மீட்க வல்லவர்கள். பணத்தை பொருட்படுத்தாத வாக்காளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் தான் உண்மையான ஜனநாயகம் சாத்தியம். தமிழ்நாட்டில் மொத்த வாக்குச்சாவடிகள்: 75,032, ஒவ்வொரு சாவடியிலும் குறைந்தபட்சம் 150 முதல் வாக்குகள் தமிழக வெற்றி கழகம் பெறுகிறது 75,032 × 200 = 1,50,06,400 வாக்குகள் அதாவது சுமார் 31.08 சதவீதம் இது கூட நாம் சொல்வது மிகக் குறைவு தான் இதுக்கு மேல் போனால்? அது சாதாரணம் இல்லை… அது முழுக்க முழுக்க திமுக எதிர்ப்பு விஜய் அலை தான்
குறைந்தபட்சம் 44 சதவீதம் தாவெக வசம் வரும் காரணம் அவர்கள் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே என்பது லட்சம் இதுதான் நேர்மையான கணிப்பு
இதை இந்த கொத்தடிமைக் கூட்டம் புரிந்து கொள்ளாது ஏனென்றால் 75 வருட காலம் சிறு எலும்புத் துண்டுக்கு ஆசைப்பட்டு அவர்கள் காலடியிலேயே இருந்து விட்டார்கள் இந்தக் கொத்தடிமைகள் அவர்களை மாற்றுவது கடினம்
எதிர்க்கட்சி அந்தஸ்து கூட திமுக வருவதே இப்போது சந்தேகம் தான் 23 சீட்டை தான் திமுக வெல்லும் என்பதே சர்வே முடிவுகள் கூறும் நிலை பல முக்கிய மந்திரிகள் தோல்வியைத் தழுவுகிற்ர்கள்,2011 ஆம் ஆண்டு தேர்தல் நிலைமை தான் தற்போது திமுகவுக்கு வரும் என்டிஏ கூடடணியில்
அதிமுக பாஜகவின் கட்டுப்பாட்டில் வரும் முன்னால் அமைச்சர் வேலுமணி எடப்பாடி கே. பழனிசாமி என இரு குழு அதிமுகவில் உறுவாகும், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனாவின் தவெக தரப்பு ஆதரவு பெறப்படும் தவெக வெற்றி பெறும் தொகுதிகள் உறுதியாக 65 வரை தெரிகிறது, அதில் ஆவடி, இராணிப்பேட்டை, குன்னம், மதுரவாயல், வேலூர்,நெய்வேலி, அம்பத்தூர், திருப்பத்தூர்(வ ஆ), பண்ருட்டி, திருவொற்றியூர், செய்யார், கடலூர், டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர், சேலம் (மேற்கு), கும்பகோணம், பெரம்பூர் (விஜய்), சேலம் (தெற்கு), திருவையாறு, கொளத்தூர் (ஸ்டாலின்), ராசிபுரம் (தனி), தஞ்சாவூர், வில்லிவாக்கம், திருச்செங்கோடு, பட்டுக்கோட்டை, திருவிக நகர் (தனி), பெருந்துறை, பேராவூரணி, எழும்பூர் (தனி), கோபிசெட்டி பாளையம், கந்தர்வகோட்டை (தனி), இராயபுரம் (ஜெயக்குமார்), காங்கேயம், திருமயம், துறைமுகம் (சேகர் பாபு), திருப்பூர் (வடக்கு), அறந்தாங்கி, ஆயிரம் விளக்கு, திண்டுக்கல், காரைக்குடி, அண்ணாநகர், கரூர், திருப்பரங்குன்றம், விருகம்பாக்கம், மணப்பாறை, கம்பம், சைதாப்பேட்டை (மா.சுப்பிரமணி) ஸ்ரீரங்கம், தூத்துக்குடி, தியாகராயநகர், திருச்சிராப்பள்ளி (மேற்கு) (K.N.நேரு), திருச்செந்தூர், மயிலாப்பூர் (தமிழிசை) திருச்சிராப்பள்ளி (கிழக்கு) (விஜய்), ஆலங்குளம், வேளச்சேரி, திருவெறும்பூர், திருநெல்வேலி, சோழிங்கநல்லூர், லால்குடி, பாளையங்கோட்டை, பல்லாவரம், பெரம்பலூர் (தனி), நாங்குநேரி, தாம்பரம், செங்கல்பட்டு, எனத் தெரிகிறது அதே நிலைதான் அதிமுக பாஜக பாமக, மற்றும் கட்சிகள் நிலை.
இதுதான் கள நிலவரம்: “திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் பெரும் கொந்தளிப்பில் இருந்தனர். திமுக ஆட்சியை அகற்றுவதற்காக திரண்டு வந்து வாக்களித்துள்ளனர். தேர்தலில் தங்களின் கோபத்தை தீர்ப்பாக வெளிப்படுத்தி விட்டனர். அதன் விளைவுதான் வரலாறு காணாத வகையில் 85.12 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருக்கிறது” என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 85.12% வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் தேர்தல் வரலாற்றில் இந்த அளவு வாக்குகள் பதிவாகியிருப்பது இதுதான் முதல் முறையாகும்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் பெரும் கொந்தளிப்பில் இருந்தனர்; திமுக ஆட்சியை அகற்றுவதற்காக திரண்டு வந்து வாக்களித்துள்ளனர் என்பதையுமே இது காட்டுகிறது.
தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஜனநாயகத்தை மதிப்பவர்கள்; அமைதிப்புரட்சி செய்பவர்கள். இப்போதும் அதைத்தான் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டன.
இன்னொருபுறம் சட்டம் - ஒழுங்கை பாதுகாத்தல், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை கட்டுப்படுத்துதல், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், வேலைவாய்ப்பு வழங்குதல் உள்ளிட்ட ஓர் அரசின் அடிப்படைக் கடமைகள் எதையுமே திமுக அரசு செய்யவில்லை.
அதனால், கொந்தளித்துப் போன மக்கள் திமுகவுக்கு பாடம் புகட்டுவதற்காக காத்திருந்தனர். மக்கள் தங்களின் உணர்வுகளை அப்பட்டமாக வெளிப்படுத்தாமல், தெளிந்த நீரோடையாக இருந்தாலும், ஆழ்கடலின் பிரளயம் போன்று அவர்களின் மனதுக்குள் திமுகவை இந்தத் தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்ற கோபம் நீரு பூத்த நெருப்பாக கனன்று கொண்டே இருந்தது.
தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்த என்னைப் போன்றவர்களால் இந்த கோபத்தை புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், ஆட்சியாளர்களால் இதைப் புரிந்துகொள்ள முடியவில்லை; அதனால் தங்களைத் திருத்திக் கொள்ளவும் இல்லை. எனவேதான் தமிழ்நாட்டு மக்கள் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தவாறு நேற்று நடந்த தேர்தலில் தங்களின் கோபத்தை தீர்ப்பாக வெளிப்படுத்தி விட்டனர். அதன் விளைவு தான் வரலாறு காணாத வகையில் 85.12 வாக்குகள் பதிவாகியிருப்பதாகும்.
இந்த வாக்குகள் ஆட்சி மாற்றத்துக்கான வாக்குகள் தான் என்பதை அனைவராலும் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தத் தீர்ப்புக்காகத் தான் தமிழ்நாட்டு மக்கள் காத்திருந்தார்கள். இந்தத் தீர்ப்பு தான் தமிழக மக்களுக்கு நரக ஆட்சியிலிருந்து விடுதலை அளிக்கப் போகிறது.
இனி வரும் காலம் தமிழ்நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியையும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பையும், அனைவருக்கும் அமைதியான, நிம்மதியான வாழ்க்கையையும் வழங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்தத் தீர்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வயலில் பயிர்கள் செழித்து வளர்ந்திருந்தாலும் அவற்றை அறுவடை செய்து வராவிட்டால் எந்தப் பயனும் இல்லை. அதேபோல் தான் தேர்தல் களமும். மக்கள் மனதில் கனன்ற கோபத்தை ஆட்சியாளர்களுக்கு எதிரான வாக்குகளாக மாற்றியது தான் இந்தத் தேர்தலின் வெற்றி ஆகும். அதற்காக அதிமுக தலைமையிலான கூட்டணியில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் மாநிலம் முழுவதும் சுற்றி வந்து தீவிரமாக பரப்புரை செய்தனர்.
அதேபோல், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் அனைத்து நிலை நிர்வாகிகளும் எந்தத் தொகுதியில் எந்தக் கட்சி வேட்பாளர் போட்டியிடுகிறார் என்பதையெல்லாம் மனதில் கொள்ளாமல் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தார்கள். இதற்காக அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சியினர் இந்தத் தேர்தலில் காட்டிய வேகமும், விவேகமும் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. பாட்டாளி மக்கள் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எல்லா தொகுதிகளிலும் பலமுறை வீடு வீடாக சென்று கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்காக வாக்குகளைச் சேகரித்தனர்.
பல்வேறு தரப்பினராலும் ஏற்படுத்தப்பட்ட தடைகளையும், முட்டுக்கட்டைகளையும் தகர்த்தெறிந்து பாமக மற்றும் கூட்டணி கட்சியினரின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்களுக்கு நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என்று மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார் களத்தைத் தீர்மானிக்கும் 163 தொகுதிகள்! உள்துறை அமித்ஷா ஆபரேஷன்!
கடைசி பந்து வரை திக்... திக் மன நிலையில் இருக்கும் கிரிக்கெட்டைப் போல், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி என்பது எளிதில் கிடைக்காது என்பதை நிரூபித்திருக்கிறது ஒன்றிய அரசின் உளவுத்துறை அறிக்கை. "163 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிக்கான வாக்குவித்தியாசம் எண்ணிக்கையில் சொற்ப அளவிலேயே இருக்கும். "கடுமையாக உழைத்தால், தேர்தல் பணியின் அணுகுமுறையை மாற்றிக்கொண்டால் வெற்றியை நம் வசமாக்கலாம். அவை இந்தந்த தொகுதிகளே' என அமித்ஷா கையில் தொகுதிகளின் லிஸ்ட்டை கொடுத்துள்ளது மத்திய அரசின் உளவுத்துறை.
இந்தமுறை ஆட்சியை தக்கவைக்க வேண்டு மென தி.மு.க.வும், காங்கிரஸின் நண்பரான தி.மு.க.வை அகற்றி விட்டு காங்கிரஸ் கூட்டணி அல்லாத, பா.ஜ.க.வின் சொல் பேச்சு கேட்கும் அ.தி.மு.க.வை ஆட்சி அரியணையில் ஏற்ற பா.ஜ.க.வும், நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் போட்டி போட்டு வேலை செய்கின்றன. காங்கிரஸ் தரப்பில் ராகுல் பரப்புரையை துவங்க. பிரதமர் நரேந்திரமோடி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பா.ஜ.க. பிரபலங்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு பரப்புரை செய்கின்றனர். தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. மட்டுமே மும்முனைப் என நான்குமுனைப் போட்டியாக மாறிய தேர்தல் களத்தில் நாம் தமிழர் கட்சி பல இடங்களில் டெபாசிட் இழக்கும் நிலை தான் உண்மையான போட்டி என்பது தி.மு.க., அ.தி.மு.க.வில் உள்ள கூட்டணிக்கும் தவெக மட்டுமே.
இருப்பினும், த.வெ.க.வின் விஷுவல் பாலிடிக்ஸால் பிரிக்கப்படும் வாக்குகள் இங்கு சில தொகுதி வெற்றியை நிர்ணயிக்கின்றன. தி.மு.க.விற்கு எதிரான வாக்குகள் அ.தி.மு.க.விற்குச் சென்றால் அ.தி.மு.க.விற்கு லாபம் என்ற நிலையில், அ.தி. மு.க.விற்கு செல்லவேண்டிய வாக்குகளையும் த.வெ.க. பிரிக்கின்றது. தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிக்கென அடிப் படை வாக்குகள் 30 சதவிகிதம் என்பது இப்போது கற்பனை தான் என இருக்க, பிரிக்கப்படும் வாக்குகள் த.வெ. க.விற்கு வெற்றியை பல தொகுதி தரும் எனினும் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் இடங்களில் சொற்ப வாக்குகள் எண்ணிக்கையிலேயே வெற்றிபெறக்கூடும் என்கின்றது மத்திய அரசின் உளவுத்துறை கணக்கு.
அமித்ஷா கையில் கொடுக்கப்பட்ட ஒன்றிய அரசின் உளவுத்துறை லிஸ்ட்டோ, "கும்மிடிப் பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூவிருந்தவல்லி, மதுரவாயல், அம்பத்தூர், திருவொற்றியூர், மாதவரம், எழும்பூர் தனி, ராயபுரம், ஆயிரம் விளக்கு, விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், வேளச்சேரி, சோளிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, செய்யூர், ஆலந்தூர், மதுராந்தகம் தனி, காஞ்சிபுரம், அரக்கோணம் தனி, சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி, குடியாத்தம் தனி, ஆம்பூர், திருப்பத்தூர்( வ ஆ) கிருஷ்ணகிரி, பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பி ரெட்டிப்பட்டி, அரூர் தனி, கீழ்பெண்ணாத்தூர், போளூர், செங்கம் தனி, செய்யாறு, செஞ்சி, மயிலம், திண்டிவனம் தனி, விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி தனி, கெங்கவள்ளி தனி, ஆத்தூர் தனி, ஏற்காடு தனி, ஓமலூர், சேலம் மேற்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி, ராசிபுரம் தனி, சேந்தமங்கலம் தனி, நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் தனி, தாராபுரம் தனி, காங்கேயம், அவினாசி தனி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், மடத்துக்குளம், உதக மண்டலம், குன்னூர், கூடலூர், மேட்டுப் பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, வால்பாறை தனி, பழனி, திண்டுக்கல், நத்தம், அரவக்குறிச்சி, கரூர், மணப் பாறை, ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி மேற்கு, திருச்சிராப்பள்ளி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மணச்சநல்லூர், துறையூர் தனி, பெரம்பலூர் தனி, குன்னம், ஜெயங்கொண்டம், விருதாச்சலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப் பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் , புவனகிரி, சீர்காழி (தனி), மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேதாரண்யம், திருத் துறைப்பூண்டி தனி, மன்னார்குடி, திருவாரூர், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, கந்தவர்வ கோட்டை (தனி), புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், போடிநாயக்கனூர், கம்பம், ராஜபாளையம், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், முது குளத்தூர், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, சங்கரன்கோவில் தனி, வாசுதேவநல்லூர் தனி, ஆலங்குளம், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், கன்னியாகுமரி, நாகர்கோவில், விளவங்கோடு உள்ளிட்ட 163 சட்டமன்றத் தொகுதிகள்'' என்கிறது.
"கடுமையான இழுபறியாக இருக்கும் மேற்கண்ட தொகுதிகளில் வெற்றிக்கான வாக்குகள் வித்தியாசம் குறைந்தபட்சம் 100-லிருந்து ஆரம்பிக்கின்றது. இதில் தே.மு.தி.க. பிரேமலதா, விஜயபிரபாகரன், தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடி மகன் தெய்வசிகாமணி, துரை முருகன், செஞ்சி மஸ்தான், காந்தி, பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், ராஜகண்ணப்பன், அப்பாவு, வைத்திலிங்கம், அனிதா ராதாகிருஷ்ணன், அப்துல் வகாப், காங்கிரஸ் இனிகோ இருதயராஜ், அ.தி.மு.க. செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார், பிரிசில்லா பாண்டியன், தளவாய்சுந்தரம், பா.ம.க. சௌமியா அன்புமணி, பா.ஜ.க. எல்.முருகன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர்களும் இழுபறி தொகுதிகளுக்குள் வருவது குறிப்பிடத்தக்கது.
"வாக்குகள் சொற்ப வித்தியாசத்தில் இருக்கும் 163 தொகுதிகளில் யார் வெற்றி பெற்றாலும் வெற்றி எளிதில் கிடைத்துவிடாது. 100 வாக்குகள் தொடங்கி குறைந்தபட்ச வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றிபெற வாய்ப் புள்ளது. பெரும்பாலான தொகுதிகள் வெற்றி பெற்றாலும், இந்த தொகுதிகளில் வெற்றியை அறிவிப்பதற்கு காலதாமதம் ஆகும். ஆகையால் பல்வேறு வேட்பாளர்கள் தமது வெற்றியை நிர்ணயிப்பதற்கும், மறு வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கும் நீதிமன்றத்தை அணுகும் சூழ்நிலைதான் வரும். அதற்கும் நாம் தயாராக வேண்டும்'' என எடப்பாடி கே.பழனிச்சாமியிடம் அட்வைஸ் செய்திருக்கின்றது உள்துறை அமித்ஷா தரப்பு.
இது இப்படியிருக்க... தி.மு.க. கூட்டணியிலுள்ள தி.மு.க. 22, காங்கிரஸ் 3, வி.சி.க.2, சி.பி.எம். 1, சி.பி.ஐ. 1, ம.தி.மு.க.1, தே.மு.தி.க. 1, கட்சிகள் சட்டமன்றத் தொகுதிகளையும், அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க. 70, பா.ஜ.க. 6, (தெ இ பாபி 1,) பா.ம.க.7 உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளையும் கைப் பற்றுகின்றது. த.வெ.க.வோ, 65 + சட்டமன்றத் தொகுதிகளை கைப்பற்றுகின்றது எனவும் மத்திய அரசின் உளவுத்துறை குறிப்பு எழுதி வைத்தது. கருப்பு மை கைவிரலில்!ஜனநாயக ஜெயிக்க அல்ல பணநாயகம் ஆள! ஒரு பைசா கூட எவரின் உழைப்பிலும் வந்தது அல்ல, மக்கள் பணத்தை திருடியதை பங்கிட்டுத் தருகிறான்! ஜாக்கிரதை“ஏதோ இந்த ஓட்டு பிரியுது..யாருக்கோ ஏதோ ஒண்ணு சரியுது.. மக்கள் மனதில் ஏதோ ஒரு விஷயம் பற்றி எரியுது”- என வாக்களித்தப் பின் டி.ஆர்.ராஜேந்தர் பேட்டி அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் அதிமுக கோயம்பத்தூர் வேட்பாளருமான எஸ்.பி.வேலுமணிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் வருமான வரித்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் நிலையில், கோயம்பத்தூர் விக்னேஸ்வரன் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவில், எஸ்.பி.வேலுமணி 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்களை ஒப்பிட்டு பார்க்கையில் இந்த ஆண்டு அதிக அளவில் இருக்கிறது. ஆனால் அதற்கான ஆதாரங்களை அவர் தாக்கல் செய்யவில்லை. எனவே சொத்து விவரங்களில் உண்மைத் தன்மையை அறிய வருமான வரித்துறை விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்தார். இந்த மனு மீதான விசாரணை தேர்தல் மறுநாள் 24-04-2026 அன்று தலைமை நீதிபதி அமர்வு முன்பு வந்த போது அந்த மனுவை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக வருமான வரித்துறை 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதுதான் தற்போது டாப் சீக்ரெட் அரசியல் நகர்வு.தேர்தல் முடிவுகள் எப்படி வந்தாலும்
அதை அனைவருமே ஏற்போம், ஆனால் என்டிஏ கூட்டணி ஆட்சி விஜய் இணைந்து, ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும், அதுதான் ஜனநாயகம். நம் கவலை அதுவல்ல!, அரசியல் ஆய்வாளர், சமூக செயற்பாட்டாளர், வியூக வகுப்பாளர், தேர்தல் பார்வையாளர், அரசியல் விமர்சகர், பத்திரிகையாளர், மூத்த பத்திரிகையாளர், கள செயற்பாட்டாளர், சமூக சேவகர் என 2026 க்கு முன் நாம் பார்த்திராத இப்படியான 'ஆளர்' களை மே மாதம் 4 ஆம் தேதிக்குப் பின் எப்படியெல்லாம் பார்க்கப்போகிறோமோ என்பதே என் கவலை.. திமுக சார்பாக .27 கட்சிக் கூட்டணி நடிகர் விஜயின் தவெகவில் கிடையாது, என்டிஏ சார்ந்த 16 கட்சிகா கூட்டணி தவெகவில் கிடையாது கூட்டத்திற்குப் பணம் கொடுப்பது கிடையாது ஓட்டுக்கும் பணம் கொடுக்கும் ஊழல் கிடையாது. ஆனால் வெற்றி வருகிறது காரணம் ஆளும் கட்சி ஆணட கட்சி மீதான வெறுப்பு மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமீத்ஷா போஞ்ட திட்டம் தமிழ்நாடு பவன்கல்யாண் தான் நடிகர் விஜய்.தேர்தல் முடிந்து தவெக தலைவர் நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கை தான் அதில்." என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும், வணக்கம்.
அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே. இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜாலக் கணக்குகள், சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.
அரசியலைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்று இதுவரை அனுமானிக்கப்பட்ட இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேசத் தொடங்கிய அதிசயமும் அவசியமும் நிகழத் தொடங்கிவிட்டது. இது எப்போது இருந்து தொடங்கியதென நடுநிலை மனம்கொண்டோர் அனைவரும் உணர்வர்.
இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவிகித வாக்குகள், வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தன. ஆனால், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழ்நாடு தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வரலாற்று நிகழ்வாகப் பதிவாகி உள்ளது.
85 சதவீதம் வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று.
வாக்குச்சாவடிகள் எங்கும் கோவில்களில் காணப்படும் கூட்டம் போல, குடும்பம் குடும்பமாகக் குழந்தை குட்டிகளுடன் வந்து வாக்களித்ததைக் கண்டு வியக்காதோர் எவரும் இருக்கவே வாய்ப்பில்லை. அது மட்டுமா?. வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வாக்களிப்பதற்காகவே பெரும்பொருள் செலவு செய்து வந்த ஜனநாயகர்களை இருகரம் கூப்பி வணங்காமல் இருக்க முடியுமா?
தேர்தல் திருவிழா என்றும் ஜனநாயகத் திருவிழா என்றும் சொல்லப்படுவதன் அர்த்தம் சுகப்பட்டதே நேற்று தான். இந்த 2026 ஏப்ரல் 23 தான். எனினும் இது ஒரு தொடக்கம் மட்டுமே.
தமிழகத் தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழ்நாட்டு மக்களாகிய, என் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், என் தாத்தா, அப்பா, அண்ணன், தம்பிகள், என் குடும்ப உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியறிதலைக் காணிக்கையாக்குகிறேன்.
குறிப்பாக, நம் குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா நண்பீஸ்க்கு என்னுடைய - உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும்.
குறிப்பாக, நான் நன்றி செலுத்த வேண்டியது, நம் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் நம் கழகத் தோழர்களுக்கும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும்தான். இவர்களுக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும்? எப்படித் தாக்குப் பிடிப்பார்கள் என்று ஏளனம் பேசியோருக்குச் செயல் மூலம் பதிலடி தந்த தோழர்களே…உங்களுக்கு என் மனம்நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும். கழகத் தோழர்களுக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் நன்றி.
நம்பிக்கையோடு இருப்போம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். எனக் குறிப்பிட்டுள்ளார்.அதிமுகவினர் ஊழல் செய்துள்ளதால் பாஜகவிடம் அடங்கி நடக்க வேண்டிய கட்டாயத்தை எதிர்கொள்கிறார்கள் என்றால், அது திமுகவிற்கும் நூறு சதவிகிதம் பொருந்தும் தானே!
இன்னும் சொல்வதென்றால், ஊழலில் திமுக தலைமையும், அமைச்சர் பட்டாளமும் இங்கு ஊழலில் உச்சம் தொட்டுள்ளனர்…!
எனில், ஊழல் செய்த அதிமுகவை அடிமையாக வைத்திருக்கும் பாஜக, அவர்களை விட ஊழலில் சிக்ஸர் அடித்திருக்கும் திமுகவை ஏன் தன்னை எதிர்த்து செயல்பட அனுமதிக்க வேண்டும்…? அப்படியானால், இவர்களுக்குள் இருக்கும் புரிந்துணர்வு தான் என்ன..? குறிப்பாக சில அதிமுக முன்னால் அமைச்சர்களான மாவட்டச் செயலாளர்களும் திமுக அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர்களும் மறைமுக நெருக்கம் காரணம் தங்களை மட்டுமே அரசியல் தலைமை என வர விரும்பும் ஊழல் பெருச்சாளிகள்.
தமிழகத்தில் மணல் குவாரி மாபியாக்கள் இடங்களில் ரெய்டு நடத்திய அமலாக்கத் துறை அனுமதிக்கப்பட்ட வரம்புகளை கடந்து பல மடங்கு அதிகமாக அள்ளியதோடு, விற்பனை செய்யப்பட்ட தொகையில் 10 சதவிதத்திற்கும் குறைவே அரசு கஜானாவிற்கு வருகிறது என்றது. ஆனால், நடவடிக்கை இதுவரை இல்லை.
டாஸ்மாக் மதுபான விற்பனையில் ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது எனக் கூறிய அமலாக்கத் துறை பின்பு அதை விசாரணை நடத்தாமல் அடக்கி வாசித்தது ஏன்?
இயற்கை வளம் சூறையாடப்பட்டு, மலைகள் தரைமட்டமாக்கப்படுகின்றன..என திமுக அரசின் ஊழல் குறித்து பல ஆதாரங்களுன் புத்தகம் வெளியிட்ட பாஜக இதன் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டது ஏன்?
உதயநிதி துணை முதல்வராக்கப்படுவதற்கு முன்பு அவர் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடியை சந்திக்கவும், அவர் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி பல்வேறு விழாக்களுக்கு வந்து கலந்து கொண்டதும் உதய நிதியை அரசியலில் மோடி அங்கீகரித்ததற்கான அடையாளம் தானே.
முதல்வரின் மருமகன் சபரீசன் இந்தியாவிலேயே மிக பிரம்மாண்டமான அளவில் ரியல் எஸ்டேட் தொழிலில் பல சட்ட விதிமுறைகளை மீறி கொடி கட்டிப் பறப்பதோடு, பலருடன் நெருக்கம் பாராட்டுவது எப்படி?
கார்ப்பரேட்களுக்கு 48,000 ஏக்கர் நிலங்களை விவசாயிகளிடம் இருந்து பறித்துக் கொடுக்கத் தோதாக நில ஒருங்கிணைப்பு மசோதாவை நிறைவேற்றி பாஜகவை பரவசப்படுத்திய ஆட்சி எது?
போக்குவரத்து துறை தனியார் மயம், தேசிய கல்வி கொள்கை தமிழக கல்வி கொள்கை என்ற அமலாக்கம், தொழிலாளர் விரோத சட்ட அமலாக்கம், பழவேற்காடு துறைமுகத்தை அதானிக்கு தாரை வார்த்தது, 20 முதல் 30 ஆண்டானாலும் மற்ற கைதிகளை விடுவிப்பது போல இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க மாட்டோம் என பாஜகவிற்கு விசுவாசம் பாராட்டியது, பாஜகவில் சேர்ந்த ரவுடிகள் மீது சட்ட நடவடிக்கைகளை தவிர்த்தது, ஆர்ம்ஸ்டிராங் கொலையாளிகளை பாதுகாப்பது, தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்திய காவலர்களுக்கு பதவி உயர்வு தந்தது…இப்படியாக ஐந்தாண்டு ஆட்சி முழுவதையுமே பாஜகவிற்கு அர்ப்பணிக்கும் ஆட்சியாக நடத்தியவர் தான் முதல்வர் ஸ்டாலின்.என்ற குற்றச்சாட்டு வைத்து பேசப்படும் நிலை
இந்த உண்மையை திசை திருப்பவே திராவிட மாடல் ஆட்சி, சமூக நீதி ஆட்சி..என்று சவடால் விட்டும், பாஜகவை எதிர்ப்பது போல சப்தம் கொடுத்துக் கொண்டே இருந்தால் தான் தன் மீது சந்தேகம் வராது என சாமார்த்தியமாக நடித்துக் கொண்டும் இருப்பவர்களை எப்படி பாஜக எதிர்ப்பாளர்கள் என மக்கள் நம்புவது? திமுகவை திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் வேட்பாளர் தவிர வேறு யாரும் விமர்சிக்க வில்லை, காரணம் மற்றவர்கள் செய்த ஊழல்
தமிழ் மண் பாஜகவின் மதவாதத்தை அனுமதிக்காது, தமிழர்கள் பாஜகவை ஏற்கமாட்டார்கள் என்ற பொய்யை யதார்த்த விளம்பரம் ஆக்கி தனக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைக்கும் திமுக, அதற்கு தன்னை தகுதிபடுத்திக் கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, தமிழகத்தில் அதிமுகவை காலி செய்து திமுக-பாஜக என்ற இருதுருவ அரசியலை முன்னெடுக்கவே காய் நகர்த்துகிறது.
அதற்காகத் தான் இந்த சட்டமன்ற தேர்தலை தமிழகத்திற்கும், டெல்லிக்குமான போராட்டமாக திமுக சித்தரிக்கிறது…!
முன்னதாக திருப்பரங்குன்றம் தீப விவகாரத்திலும் காட்டியது.
அதிமுக ஆட்சிக காலத்தில் இருப்பதே தெரியாமல் இருந்த பாஜக, திமுக ஆட்சி காலத்தில் ஒரு வலுவான இயக்கமாக தன்னை கட்டமைத்துக் கொள்ள அண்ணாமலைக்கு களம் அமைத்து தந்தது
பல்லாயிரம் கோடிகள் ஊழல் பணத்தை குவித்து வைத்திருப்பவர் - அடுத்து தன் வாரிசான மகன் தடையின்றி அரியணை ஏற வேண்டும் என்பதில் கருத்தாக உள்ளவர் - பாஜகவிடம் ஒரு போதும் சமர் புரிய வாய்ப்பே இல்லை.
திமுக பாஜகவை எதிர்க்கிறது என்பதற்கு ஈடான அறியாமை உலகில் வேறில்லை.
அதிமுக பாஜகவின் வெளிப்படையான கூட்டாளி. ஆனால், திமுகவோ பாஜகவின் ரகசியக் கூட்டாளி.
ஆக, தமிழர்கள் பாஜகவை, அது நிற்கும் 27 தொகுதிகளில் வெற்றி பெறுவது எனப் பார்த்தால் திருப்பத்தூர், இராமநாதபுரம், இராஜபாளையம், என பத்து தொகுதியில் மட்டுமேஜெயலலிதா காலமான பின் ஆளுமை இல்லாத எடப்பாடி கே. பழனிசாமியை முன்னிருத்தி சந்திக்க உள்ள இந்த தேர்தல் கணிப்பு யாருடைய தேர்தல் வெற்றி, தோல்வியையும் பாதிக்கப் போவது இல்லை!!!
மும்முனைப் போட்டியா என்றால்... இல்லை என்றே சொல்ல முடியும்...
ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அணி இருமுனைப் போட்டியாக இருக்கும் என்று கணிக்கலாம்!
முதலில் அதிமுகவைப் பற்றிச் சொன்னால்!!!
2021 தேர்தலில் அதிமுகவுக்கு ஆன்டி இன்கம்பன்சி மட்டுமே இருந்தது! எடப்பாடிக்கு கெட்ட பெயர் எதுவும் இல்லை!!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம், லாக்கப் டெத் — இது மட்டுமே!!! கமிஷன், கரப்ஷன் மட்டுமே...
பாலியல் குற்றம், போதை கலாச்சாரம் இப்படி எதுவும் இல்லை.
அப்போதே அதிமுக 60+ தொகுதிகள் மட்டும் தான் பெற்றார்கள்!!!
அப்பொழுது கையில் பணம் இருந்தது...
கட்சி கட்டுக்கோப்பாக, ஒற்றுமையாக இருந்தது,
கூட்டணிக் குளறுபடி இல்லை!!
பாஜக கூட மோதல் போக்கு இல்லை
பாட்டாளி மக்கள் கட்சி உடையாமல் வலிமையாக இருந்தது.
சசிகலா நடராஜன் கூட பிரிவினை இல்லை. பிரதமர் நரேந்திர
மோடியின் ஆதரவு...
மூன்று முறை முதல்வர், ஓ.பன்னீர் செல்லம் கூடவே இருந்தார்
தேவர்கள் vs கவுண்டர்கள் பகைமை உணர்வு இல்லை
டெல்டா பகுதி வைத்திலிங்கம், வெல்லமண்டி, மற்றும் மனோஜ் பாண்டியன்,
ஜேசிடி பிரபாகர், செங்கோட்டையன், மாஃபா. பாண்டியராஜன், போன்றோர் கூடவே இருந்தார்கள்
இப்போது.
கூட்டணியில் மருத்துவர் ராமதாஸ் வன்னியர் ஓட்டில் சிலவற்றை பிரிக்கிறார்
சசிகலா நடராஜன் தேவர் ஓட்டை சிறிது பிரிக்கிறார்கள்
ஓ.பன்னீர் செல்லம் எதிரணிக்கு சில ஓட்டை எடுத்து செல்கிறார்
2024 தேர்தல் கூட்டணியில் இருந்த விஜயகாந்து மனைவி பிரேமலதா இப்போது அந்தப் பக்கம்
புதிய தமிழகம் வேறு சில ஆயிரம் ஓட்டைப் பிரிக்கிறார்கள்
பாஜக கூட்டணி இப்போது சிறப்பாக அமையவில்லை
அண்ணாமலை என்ன தான் பிரச்சாரம் செய்தாலும், அதிமுக + பாஜக ஒட்டுகிற மாதிரி தெரியவில்லை.
செங்கோட்டையன் கங்கர்கள் ஆண்ட பகுதியில் கொங்கு மக்கள் ஓட்டை எதிரணிக்கு எடுத்துக் கொடுக்கிறார்..
வைத்திலிங்கம் டெல்டா ஓட்டை எடுத்து செல்கிறார்
மனோஜ் பாண்டியன் தென் மாவட்ட ஓட்டை எடுத்து செல்கிறார்
ஜேஸிடி பிரபாகரன், பத்மநாபன், ஜீவிதா, இசக்கி ராஜா உட்பட 30க்கும் அதிகமான வேட்பாளர்கள் மற்றும் அதிமுகவினர் பலம் குறைவு, கூட்டணிக் கட்சியின் ஒத்துழைப்பு 50 சதவீதம் இல்லை, இதை மீறி சிலர் வெற்றி பெறுவது தான் திமுக மீதான கோபம்.
எதிரணி திமுக 25 கட்சி பிரமாண்ட கூட்டணி
எடப்பாடி கே. பழனிசாமிக்கு கொங்கு மண்டலப் பகுதியைத் தவிர வேறு பகுதி ஆதரவு இல்லை; பணம் செலவு செய்து வரும் கூட்டம் அதுவும் கவுண்டர்கள் மத்தியில் மட்டுமே செல்வாக்கு,
தென் மாவட்டங்களில் கடும் எதிர்ப்பு
இளைஞர்கள் என்று கட்சியில் பெரிதாக இல்லை; புது வாக்குகள் போடுவோர், படித்தவர்கள் யாரும் இப்போது இல்லை
10 முறை தோற்ற வரலாறு உறுத்தல்
அதிமுகக்கு நல்ல IT விங் இல்லை.
வேட்பாளர்களை 20 கோடி பணம் காட்டச் சொல்லி நிறுத்தினால் யார் வருவார்கள் ?
பணம் கொடுக்க ஸ்பான்சர் இல்லை..
அவர்கள் செய்த பணம் பட்டுவாடா ஒழுங்காக நடக்கவில்லை. பணத்தை கிளை கூட்டம் ஏடுத்துக்கொண்டது
கொங்கு தவிர... மற்ற பகுதிகளில் அதிமுகவை கண்டுகொள்ளவே ஆள் இல்லை!!
களப்பணி தீவிரப்படுத்த பெரிய தலைவர்கள் இல்லை!!
பெரிய தலைவர்கள் தங்கள் தொகுதியைக் கவனிக்கவே நேரம் போதவில்லை!!!
இதையெல்லாம் விட, நடிகர் விஜய் என்ற அலை தமிழ்நாட்டில் சூறாவளியாகி... அதிகமாக ஓட்டை எடுத்தது
என்னால் நிச்சயம் கணிக்க முடியும்.... அதிமுக தனித்து 50 சீட்டை மட்டுமே பெறும் பாஜக பாமக கூடடணி 20 தொகுதியில் வெற்றி பெறும் அதன் விபரம் எக்ஸிட் போல் மூலம் 29 ஆம் தேதி வெளிவரும். விபரம் புரியாதவர்கள்
இது வன்மம் என்று கூடக் சொல்வார்கள்!
இது வன்மம் கிடையாது.
ஆனால் இதுதான் எதார்த்த நிலவரம்!
எப்படி இருந்தாலும் இன்னும் 10 நாளில் எல்லாம் தெரிந்து விடும் -- அப்பொழுது நம் செய்தி பார்த்துகா கேள்வி கேட்பீர்கள். என்று எனக்கு தெரியும்.
இனி அமைவது தவெக விஜய் மற்றும் எனடிஏ கூட்டணி ஆட்சி அதில் பாஜக பங்கு சிறப்பாக இருக்கும். இனி எக்ஸிட் போல் முடிவு ஏப்ரல் 29 ஆம் தேதி வரும் யானை மணி ஓசை போல.





















.jpg)















கருத்துகள்