'' மருத்துவர் ஐயாவுக்கு ம
ட்டும் ஏதாவது ஆச்சுன்னா இவர்களை நான் சும்மா விட மாட்டேன்'' - அருகிலிருந்த நிர்வாகியிடம் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ஆவேசம்சேலம் மேற்கு தொகுதியில் வேட்பாளர் இரா.அருளை ஆதரித்து பள்ளப்பட்டியில் பிரசாரம் செய்த பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் திடீரென மேடையில் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அங்கிருந்த சில நிர்வாகிகள் மருத்துவர் ராமதாஸை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.பிரச்சாரத்தின் போது திடீரென மயக்கமடைந்த மருத்துவர் ச.ராமதாஸ்..! சட்டென தூக்கிக்கொண்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட காட்சிகள்.. வெளியான நிலையில் பரபரப்பான நிர்வாகிகள்..யாரும் பயப்பட வேண்டாம். மருத்துவர் அய்யா மருத்துவமனையில் சுயநினைவுடன் இருக்கிறார். நலமாக இருக்கிறார். அங்குள்ளவர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார்.
சேலம் கோகுலம் மருத்துவமனையில் உள்ள மருத்துவர் அய்யா அவர்கள் நலமாக உள்ளார். ECG நார்மலாக உள்ளது. அவருடன் அரசியல் ஜி.கே.மணி, ஶ்ரீகாந்தி, சேலம் அருள் ஆகியோர் தற்போது இயல்பாக அரசியல் ஆலோசனைகள் நடத்தி வருவதாகத் தகவல். சேலம் சீலநாயகன்பட்டியில் உள்ள தரண் மருத்துவமனைக்கு மாற்றம். அதிக வெப்பம் காரணம். உடலில் சர்க்கரை அளவில் மாற்றம். ஓய்வு மட்டும் தான் தற்போது தேவை.



கருத்துகள்