முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊழல் நிறைந்த தொலைக்காட்சி மற்றும் ஊடக நெறியாளர்களின் உலகம்

தமிழ்நாட்டு தொலைக்காட்சி மற்றும் ஊடக நெறியாளர்களின் உலகம் இன்று ஊழல் நிறைந்த கேவலமான அரசியல் சூழ்ச்சிகளின் மையமாக மாறியுள்ளது.


ஒரு காலத்தில் செய்திகளை நடுநிலையுடன் வழங்கி பொதுமக்களின் கண்ணாக இருந்தவர்கள் இன்று சேனல் உரிமையாளர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடனமாடும் கோலாக மாறியே விட்டனர். அவர்களது நிலைப்பாடுகள் பெரும்பாலும் கட்சி சார்புடையவையாகவும், நெறியாளுகை பாணி உணர்ச்சிவசப்படுத்தும் கூச்சல்களாலும், ஒருதலைச்சார்பான தாக்குதல்களாலும் நிரம்பியுள்ளன. தமிழ்நாட்டில் திமுக சார்ந்த சன் நியூஸ், கலைஞர் தொலைக்காட்சி ஜமக வின் புதிய தலைமுறை, வேந்தர் தொலைக்காட்சி , நாடார்கள் சங்கமாகவே மாறிய தந்தி டிவி பாமக வின் மக்கள் தொலைக்காட்சி, வி. கே.சசிக்கலா நடராஜன் ஆதரவு ஜெயா தொலைக்காட்சி, பிரேமலதா வின் கேப்டன் தொலைக்காட்சி, எடப்பாடி கே பழனிசாமி நடத்தும் ஜெ தொலைக்காட்சி விசிக நடத்தும் வெளிச்சம் தொலைக்காட்சி,  காங்கிரஸ் வசந்த் தொலைக்காட்சி மெகா தொலைக்காட்சி, மற்றும் திமுக சார்ந்த ஹிந்து நாளேடு, நக்கீரன் வார இதழ் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் என்ற கூலிப் பேசசாளர்கள் உள்ளிட்ட முக்கிய அச்சு ஊடக மற்றும் காட்சி சேனல்கள் தங்கள் நெறியாளர்களை வழியாக அரசியல் களத்தை கட்டுப்படுத்த முயல்கின்றன. இந்த நெறியாளர்கள் செய்தியை வழங்குவதை விட, செய்தியை உருவாக்கி பொதுமக்களின் மனதை வளைக்கின்றனர்.



இது ஜனநாயகத்தின் அடிப்படையான தகவல் உரிமையை பலவீனப்படுத்துகிறது. தேர்தல் காலங்களில் இவர்களின் விவாதங்கள் பிரசார அரங்கங்களாக மாறி, உண்மையை மறைத்து உணர்ச்சிகளை தூண்டுகின்றன. பெரும்பாலான நெறியாளர்கள் தங்கள் சேனலின் அரசியல் சாயலை மறைக்காமல் வெளிப்படுத்துகின்றனர். இந்த விமர்சனப் பார்வையில், குறிப்பிட்ட சில நெறியாளர்களின் பங்களிப்பை ஆராய்ந்தால், தமிழ்நாட்டு ஊடகத்தின் உள்ளார்ந்த பிரச்சினை தெளிவாகிறது.

கார்த்திகை செல்வன் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் மேலாண்மை ஆசிரியராக,திமுக அரசின் கொள்கைகளை தீவிரமாக பாதுகாக்கும் விதத்தில் தனது நிகழ்ச்சிகளை நடத்துகிறார். அவரது விவாதங்கள் எப்போதும் எதிர்க்கட்சிகளை சுற்றி அமைவதும், ஆளும் கட்சியின் நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதும் தெளிவாகத் தெரியும். திமுகவின் வாய்ப்பேச்சு வழக்கறிஞராக மாறிய குரல் என்பது அவருக்கு பொருத்தமான வரி. இந்த நிலைப்பாடு அவரது நெறியாளுகையை சேனல் சார்பு அரங்கமாக்குகிறது தமிழரன் பல சேனல்களில் பணியாற்றிய அனுபவசாலியாக, தற்போது மாலை முரசு டிவியில் எடிட்டர் இன் சீஃபாக செயல்படுகிறார். அவரது அரசியல் விவாதங்கள் தீவிரமானவை என்றாலும், சேனல் மாற்றங்களுடன் அவரது நிலைப்பாடுகளும் மாறுபடும் தன்மை கொண்டவை. அரசியல் காற்றுக்கு ஏற்ப திசை மாறும் தமிழன் என அவரை விமர்சிக்கலாம். இது அவரது நெறியாளுகையில் உள்ள நிலையற்ற தன்மையை சுட்டிக்காட்டுகிறது.

குணசேகரன் சன் நியூஸின் எடிட்டர் இன் சீஃபாக, முன்பு நியூஸ்18 ல் சர்ச்சையில் சிக்கிய பின்னரும் தனது தீவிர நெறியாளுகையை தொடர்கிறார். திமுக சார்பு சேனலில் அவரது விவாதங்கள் சூடுபிடிக்கும், ஆனால் ஒருதலைச்சார்பு தெளிவாக வெளிப்படும். சன் டிவியின் சுட்டெரிக்கும் திமுக பிரசாரகர், சர்ச்சையின் நிரந்தர விருந்தாளி என்பது அவருக்கு ஏற்ற ஒரு வரி. இந்த பாணி பொதுமக்களிடையே பிளவை ஏற்படுத்துகிறது.

ஹரிஹரன் தந்தி டிவியின் மூத்த நெறியாளராக, 'ஆயுத எழுத்து' போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர். அவரது நெறியாளுகை தாக்குதல் முறையில் அமைந்தாலும், சமீபத்தில் பாஜக மற்றும் அண்ணாமலை தரப்புக்கு ஆதரவாக சாய்வது விமர்சனத்துக்கு உள்ளாகிறது. தந்தி டிவியின் தாக்குதல் தந்திரவாதி, எதிர்க்கட்சி எதிரிகளை அடித்து நொறுக்கும் ஆயுதம் என அவரை வர்ணிக்கலாம். இது சேனலின் எதிர்கட்சி சாயலை பிரதிபலிக்கிறது.

கார்த்திகேயன் புதிய தலைமுறை டிவியின் அரசியல் செய்தி ஆசிரியராக, பேட்டிகள் மற்றும் விவாதங்களில் திமுக சார்பு நோக்கை வெளிப்படுத்துகிறார். அவரது பார்வை எதிர்க்கட்சிகளை புறக்கணிக்கும் தன்மை கொண்டது. புதிய தலைமுறையின் திமுக கண்ணாடி, எதிர்க்கட்சிகளை பிரதிபலிக்காத பார்வை கொண்டவர். இந்த நிலைப்பாடு நெறியாளுகையை அரசியல் கருவியாக்குகிறது.

திலகவதி புதிய தலைமுறையின் பெண் நெறியாளராக அரசியல் விவாதங்களை மட்டுப்படுத்துகிறார். ஆனால் அவரது நிலைப்பாடு சேனலின் திமுக சாயலை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. புதிய தலைமுறையின் பெண் முன்னோடி, ஆனால் திமுக அரசியலின் நிழல் பாதுகாவலி என்பது அவருக்குப் பொருந்தும் வரி. இவர்கள் போன்ற நெறியாளர்கள் தமிழ்நாட்டு ஊடக அரங்கை ஆக்கிரமித்துள்ளனர்.

இந்த நெறியாளர்களின் செயல்பாடுகள் தமிழ்நாட்டு ஊடகத்தின் பரந்த பிரச்சினையை பிரதிபலிக்கின்றன. பெரும்பாலான சேனல்கள் கட்சி உரிமையாளர்களால் நடத்தப்படுவதால், நெறியாளர்கள் நடுநிலையை துறக்கின்றனர். விவாதங்கள் உண்மையை வெளிப்படுத்துவதை விட, கட்சிப் பிரசாரமேடையாக மாறுகின்றன. தேர்தல் காலங்களில் இவர்களின் நிகழ்ச்சிகள் வாக்காளர்களை திசை திருப்புகின்றன. சமூக ஊடகங்கள் இந்த பாரபட்சத்துக்கு எதிராக எழுந்தாலும், டிவி ஊடகத்தின் செல்வாக்கு இன்னும் அதிகம். நெறியாளர்கள் தொழில்முறை நெறிமுறைகளை மீண்டும் கடைப்பிடிக்கத் தவறினால், பொதுமக்கள் முழுமையாக சமூக ஊடகத்தை நம்பி திரும்புவர். இது ஊடகத்தின் நம்பகத்தன்மையை இழக்கச் செய்யும்.

தமிழ்நாட்டு ஊடக நெறியாளர்கள் இன்று சவாலை எதிர்கொள்கின்றனர். அவர்களது நிலைப்பாடுகள் மற்றும் நெறியாளுகை பொதுநலனுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய நிலை அதற்கு எதிரானது. விமர்சனம் செய்யும் போது, இவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். இல்லையெனில், தமிழ்நாட்டு ஜனநாயகம் ஊடக பாரபட்சத்தால் பலவீனமடையும். இந்தச் சூழலில், சுயபரிசோதனை தேவை. நெறியாளர்கள் செய்தியை வழங்குபவர்களாக மட்டும் இருக்காமல், உண்மையின் காவலர்களாக மாற வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டு ஊடகம் உண்மையான முன்னேற்றத்தை நோக்கி செல்லும். ஒரு சாரபு நிலை இல்லாமல் பொதுவான பார்வை மட்டுமே நடுநிலை செய்திகள் வழங்க வழி வகுக்கும்.பல்லவர்கள் ஆண்ட சென்னை மாநகரத்தையும், கங்கர்கள் ஆண்ட கொங்கு மண்டலத்தையும் கடலோர மாவட்டத் தொகுதிகளையும் மொத்தமாக நடிகர் விஜய் பெறுவார் . தென் தமிழகம் மற்றும் டெல்டா பகுதியில் ஓட்டை பெருமளவில் பிரிப்பார். சில இடங்களில் வெல்வார், ஆனால் திமுக, அதிமுக ரெண்டு கட்சியும் ஆட்சி அமைப்பதைத் தடுத்து நிறுத்தி விடுவார். விஜய் ஆதரவு இருந்தால் தான் ஆட்சி அமையும் என்ற நிலையைக் கொண்டு வந்துவிடுவார். அதன்பிறகு தான் ஆட்டம் ஆரம்பமாகும்.

தமிழ்நாட்டின் அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி முன்னெப்போதும் இல்லாத ஒரு பெரும் மாற்றத்தை சந்தித்து வருகிறது.


குறிப்பாக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் களமிறங்கியிருப்பது, நீண்டகாலமாக தி.மு.க மற்றும் அ.தி.மு.க இடையே இருந்து வந்த நேரடி போட்டியை சிதறடித்தது. இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவு விஜய்க்கு சாதகமாகத் திரும்புவது, இரு பெரும் திராவிடக் கட்சிகளின் வெற்றி வாய்ப்புகளை கணிசமாக குறைக்கக்கூடும்.

தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை, அங்குள்ள ஆழமான அரசியல் வேர்களை விஜய் முழுமையாக பிடுங்கிவிட முடியாது என்றாலும், பதிவாகும் வாக்குகளில் பெரும் பகுதியை அவர் பிரிப்பார் என்பது உறுதி. இந்த வாக்கு சிதறல் என்பது குறிப்பாக ஆளுங்கட்சியான தி.மு.க-வின் வாக்கு வங்கியில் பெரிய ஓட்டையை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. விஜய்யின் கட்சி நேரடியாக ஆட்சி அமைப்பதற்கான இடங்களை பெறுவது சவாலான காரியமாக இருந்தாலும், மற்ற கட்சிகள் பெரும்பான்மை பெறுவதை தடுத்து நிறுத்தும் ஒரு ‘கிங் மேக்கர்’ இடத்தைப் பிடிக்கும் வல்லமை அவருக்கு இருப்பதாக பலரும் நம்புகின்றனர். தனிப்பட்ட முறையில் அவர் வெற்றி பெறுவதை விட, மற்றவர்கள் ஆட்சியை பிடிப்பதை தடுப்பதே அவரது முதல் வெற்றியாக அமையும்.

அரசியல் நோக்கர்களின் கூற்றுப்படி, விஜய்யின் வருகை என்பது ஒரு ‘ஹேங் அசெம்பிளி’ அல்லது தொங்கு சட்டமன்ற நிலையை உருவாக்க அதிக வாய்ப்புள்ளது. அதாவது, தி.மு.க அல்லது அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுமே தனித்து ஆட்சி அமைக்க தேவையான 118 தொகுதிகளை எட்ட முடியாமல் தவெக தடுத்துவிடும். அத்தகைய சூழலில், “விஜய்யின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி” என்ற கட்டாயம் நிலவும். இது தமிழ்நாடு அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு புதிய அதிகாரப் பகிர்வு கலாச்சாரத்தை தொடக்கி வைக்கும். நடிகர் விஜய் நேரடியாக அமைச்சரவையில் பங்கு கோருவாரா? அல்லது வெளியில் இருந்து ஆதரவு அளிப்பாரா? என்பதே அப்போது பிரதான கேள்வியாக இருக்கும்.

நடிகர் 

விஜய்யின் இந்த வியூகம் என்பது வெறும் 2026 தேர்தலோடு முடிந்துவிடப் போவதில்லை; அது ஒரு நீண்ட கால திட்டத்தின் தொடக்கமாகும். மற்ற இரு கட்சிகளையும் பலவீனப்படுத்தி, தன்னை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக நிலைநிறுத்திய பிறகுதான் அவரது உண்மையான ‘ஆட்டம்’ ஆரம்பமாகும் என அரசியல் ஆலோசகர்கள் கணிக்கின்றனர். தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய பேரங்கள் மற்றும் கூட்டணி மாற்றங்கள் தமிழ்நாடு அரசியலை வேறொரு திசைக்கு இட்டுச் செல்லும். குறிப்பாக, திராவிட சித்தாந்தங்களுக்கு மாற்றாக அவர் முன்வைக்கும் அரசியல் பார்வைகள் எந்த அளவிற்கு மக்களிடம் எடுபடுகிறது என்பதைப் பொறுத்தே அவரது அடுத்தகட்ட நகர்வுகள் அமையும்.

இறுதியாக, 2026 தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான களமல்ல, அது தமிழ்நாட்டின் அரசியல் தலைமுறையை மாற்றும் ஒரு மைல்கல்லாக அமையப்போகிறது. மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி கே.பழனிசாமி போன்ற அனுபவம் வாய்ந்த தலைவர்களுக்கு மத்தியில், ஒரு ‘அவுட்சைடர்’ ஆக நுழைந்து நடிகர் விஜய் செய்யப்போகும் மேஜிக் என்ன என்பதைப் பார்க்க ஒட்டுமொத்த இந்திய நாடே காத்திருக்கிறது. வியூகர்களின் கணிப்பு நிஜமாகி, விஜய் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்தால், அது தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக இருக்கும். மும்முனைப் போட்டியின் இறுதியில் மக்களின் தீர்ப்பு யாருக்கு சாதகமாக இருக்கும் என மே மாதம் 4 ஆம் தேதி மதியம் வெளிச்சத்திற்கு வந்துவிடும்.

இந்த யூக கருத்து எந்த அளவில் 2026 தமிழ்நாடு பொதுத்தேர்தல் முடிவுகள் வரும் தினமான மே நாலாம் தேதி, எந்த அளவிற்கு உறுதி செய்யப்படும் என்பது எனக்குத் தெரியாது, ஒன்று மட்டும் உறுதியாக சொல்ல முடியும், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி மூன்றாவது ஆண்டு தொடக்கத்திலேயே இருநூற்று முப்பத்தி நான்கில் (233), தொகுதிகளில் போட்டியிடும் இக்கட்சி ஒரு தனித்துவம் பெற்றதாகவே, இந்திய அரசியல் வல்லுநர்கள் பெரும்பாலானவர்கள் கருதும் இந்த சூழலில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் ச. ஜோசப் விஜய் ஒரு கிங்காகவே மாறுவார் என்பது பலரது கருத்து,தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை தனது வேட்பாளர்களுக்குப் பாதுகாப்பு மற்றும் வாக்கு எண்ணிக்கை குறித்த முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தெரிகிறது.. மே மாதம் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள சூழலில், பனையூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வெற்றி வாய்ப்புள்ள 60-க்கும் மேற்பட்ட தொகுதி முக்கிய வேட்பாளர்களுக்குப் பல்வேறு வியூகங்கள் வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்

 முதல் தேர்தலை சந்தித்துள்ள தவெக வெற்றி கோட்டைத் தொட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளது. 3 பிரதானக் கட்சிகளுமே தங்களுக்குச் சாதகமான முடிவுகள் வரும் என்ற எதிர்பார்ப்புடன் தேர்தல் களத்தை  கவனிக்கின்றன.

கடந்த 2 நாட்களாக பனையூர் தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தொடர் ஆலோசனைக் கூட்டங்கள், வாக்கு எண்ணிக்கை நாளுக்கான ஆயத்தப் பணிகளை மையமாக வைத்தே நடத்தப்பட்டன.

குறிப்பாக, தவெக தலைமை நடத்திய விரிவான பூத் அளவிலான உள்முகக் கள ஆய்வுகளின்படி, பல தொகுதிகளில் அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகளைத் தொடர்ந்து, சுமார் 60,000-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் 65-க்கும் மேற்பட்ட முக்கிய வேட்பாளர்கள் பனையூருக்கு நேரில் வரவழைக்கப்பட்டனர்.

அதில் கே. ஏ.

செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த்

அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கே. ஏ.செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் வேட்பாளர்களும் முகவர்களும் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து விளக்கப்பட்டதாகத் தெரிகிறது-

வாக்கு எண்ணிக்கை மையங்களில் எத்தகைய விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பது குறித்து மிகத் தெளிவான கட்டளைகள் வேட்பாளர்களுக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதாவது ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவிலும் பதிவாகும் வாக்குகளைத் துல்லியமாகச் சரிபார்க்க வேண்டியதன் அவசியத்தை கட்சித் தலைமை வலியுறுத்தியதாம்.

கவனக்குறைவு கூடாது

அதுமட்டுமல்ல, தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை எந்தவொரு இடத்திலும் கவனக்குறைவாக இருக்கக்கூடாது என்று எச்சரித்துள்ளது.

குறிப்பாக, மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு ஊசலாடும் தொகுதிகளில் எதிர்த்தரப்பினர் மறுவாக்கு எண்ணிக்கை கோரவோ அல்லது சட்டச் சிக்கல்களை உருவாக்கி முடிவுகளைத் தாமதப்படுத்தவோ வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. இத்தகைய சூழல் நீண்ட கால சட்டப் போராட்டங்களுக்கு வழிவகுக்கும் என்பதால், இதனை எதிர்கொள்ள வேட்பாளர்கள் தங்களுக்குக் கீழ் அனுபவம் வாய்ந்த சட்ட வல்லுநர் குழுவைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்படும் தருணங்களில் உணர்ச்சிவசப்பட்டு தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வேட்பாளர்களுக்குக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதிமுக, திமுக செல்வாக்கு

ஜனநாயக முறைப்படி வெற்றியை நிலைநாட்டுவதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் தேவையற்ற மோதல்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்றும் தலைமை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் தங்களின் செல்வாக்கை நிலைநிறுத்தப் போராடும் நிலையில், தவெகவின் இந்தத் தீவிரமான முன்னேற்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. வாக்கு எண்ணிக்கை நாளான மே மாதம் 4-ஆம் தேதி தேர்தல் களத்தில் வெளிப்படப்போகும் மக்கள் தீர்ப்பு, தமிழ்நாடு அரசியலின் அடுத்தகட்ட நகர்வைத் தீர்மானிக்கும் காரணியாக அமையும் எனலாம்.      அதிமுகவில் எடப்பாடி கே. பழனிசாமி ஒன்றும் எம்ஜிஆர் அல்லது ஜெயலலிதா போல கவர்ச்சி மிகுந்த தலைவர் இல்லை இருந்த போதிலும் கட்சி வாக்கு 20 சதவீதம் மட்டுமே அவர் தரப்பு உள்ளது ஆனால் அவரிடம் கூட்டணி வைத்த பாஜகவின் இந்து வாக்கு வங்கி மற்றும் பாமகவின் வட மாவட்ட வாக்கு வங்கி தென் மாவட்ட அமமுக வாக்கு வங்கி அவரது பலம் ஆனால் கட்சி வாக்கு மட்டும் வெற்றியை தீர்மானிக்காது மக்கள் வாக்கு தான் வெற்றியைத் தரும், அதை பெறக்கூடிய ஆற்றல் எடப்பாடி கே பழனிசாமிக்கு இல்லை, அவர்கள் கட்சி பழைய நிலையில் இல்லை,  கூட்டணி மடடுமே அதை ஈடு செய்கிறது, ஆனால் கூடடணி வேட்பாளர்களுககு பல அதிமுக பிரமுகர்கள் சரியாக வேலை செய்யவில்லை,திமுகவுக்கு கிடைக்க வேண்டிய இஸ்லாமிய ஓட்டுகளையம் மீனப் பகுதி கிருஸ்தவ மக்கள் ஓட்டுக்களும் அரசியல் சாராத மக்கள் வாக்குகள், மிதக்கும் வாக்காளர்கள், இளைஞர்கள், யுவதிகள், பாட்டிகள், என பலரும் இந்தத் தேர்தலில் விஜய்க்கு வாக்களித்துள்ளனர்,  நாம் சந்திக்கும் மக்களிடம் 90 சதவீதம் கூறுவது அவர்கள் விஜயை ஆதரித்து வாக்களித்ததான தகவலே,  நடிகர் விஜய் மட்டும் சினிமா முகமா.. கடந்த காலங்களில் திமுகவில் முதல் தலைவர் அண்ணாதுரை, இரண்டாம் தலைவர், கருணாநிதி,  மூன்றாம் தலைவர் அவர் மகன் ஸ்டாலின், அடுத்து உறுவான அவர் மகன் உதயநிதி எல்லோரும் சினிமா கூட்டம் தான், எதற்கு விஜயை மட்டுமே இவர்கள் சினிமா நடிகன் என எதிர்க்க வேண்டும். காரணம் இவர்கள் கட்சியை இதோடு முடிக்க வந்த பரமாத்மா என்ற பயம் அவரை வழிநடத்தும் ஜீவாத்மா மீதான பயம் காரணம். திமுகவினர் எல்லாம் நேர்மையாக ஆட்சி நடத்தியது போல எரிச்சல் அடைவது மக்கள் இவர்கள் மீது காட்டிய எரிச்சல் தானே, இவர்கள் தேர்தலில் கொட்டிய கோடிகள் வீனாய் போக விஜய் காரணம், மக்கள் இவர்கள் கொடுத்த பணத்தை வாங்கிவிட்டு விசில் ஊதிய கதைகள் வரவர இவர்களைக் கோபப்பட வைக்கிறதுன்பதே உண்மை.     

"இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமா தான்...                                இங்கே எம் ஜி ஆர் வந்ததும், என் டி ஆர் வந்ததும், இந்தச் சினிமா தான்,...              கலை வளந்ததும் இங்கே தான், காதல் சொன்னதும் இங்கே தான்,                            கட்சி வளத்ததும், ஆட்சி புடிச்சதும்  இந்தச் சினிமா தான்,  அட அமெரிக்காவுல ஆட்சி அமைச்சதும் இந்தச் சினிமா தான்"  இப்போது பாஜக தவிர எல்லோரும் சினிமா நபர்கள் தானே, 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...