கே.சி.திருமாறனுக்கு திருப்புத்தூர் மக்கள் வெற்றி தேடித் தந்தால் இரயில்வே திட்டம் வரும் பாஜக முன்னால் தலைவர் கே.அண்ணாமலை தகவல்
பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் K.அண்ணாமலை தேர்தல் பரப்புரை பயணத் திட்டத்தில் தேசிய ஜனநாயக் கூட்டணியின் சார்பில்,
அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் முன்னாள் மாநிலத் தலைவர் கே அண்ணாமலை மேற்கொள்ளவிருக்கும், இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரை விவரங்கள் குறித்து தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் மாநில தேர்தல் பணிக்குழு அமைப்பாளர் BJP பொன். ராதாகிருஷ்ணன் சார்பாக அறிக்கை அதன்படி .சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் NDA கூட்டணி சார்பில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் கே.சி.திருமாறனை திருப்பத்தூர் பேரூந்து நிலையம் அருகில் ஆதரித்து பாஜக தமிழக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்,
கே. சி.திருமாறன் வெற்றி பெற்று அநத விழாவுக்கு இரயில்வே அமைச்சரை அஸ்வின் வைஸ்ணவை வரவழைத்து ரயில்வே திட்டம் பெறறுத் தருவதாக வாக்குறுதி அளித்து, 20 ஆண்டு காலமாக மக்களை நம்பாமல் பணத்தை மட்டுமே நம்பி வெற்றி பெற்று வந்த அமைச்சர் கரு.பெரிய கருப்பன் இந்த முறை கே. சி.திருமாறனிடம் தோல்வியடைவார் எனவும் அவர் செய்த மற்றும் செய்து வரும் ஊழலைப் பட்டியலிட்டார், அதில் என்டிஏ கூட்டணிக் கட்சிகள் 12 ன் திரளான மக்களுடன் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நிகழ்வில் வேடபாளர் வேல் வழங்கினார்.தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு, வளர்ச்சியடைந்த பாரதத்திற்கு, வளர்ச்சியடைந்த தமிழகம் தேவை என்ற கொள்கையோடு 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களத்தில் பணியாற்றி வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் KC திருமாறனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை
அதேபோல காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டியனுக்கு ஆதரவாகவும்,
வாக்குகள் சேகரித்தார், உடன் கூட்டணிக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர், அதேபோல் இராஜபாளையம் தொகுதியின் வேட்பாளர் ஜெ.பிரசில்லா பாண்டியனுக்கு வாக்கு சேகரித்தார், மேலும்
சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழ்நாடு பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன் தேர்தல் பிரச்சாரத்திற்கு இன்று முதல் இரண்டு நாள் பயணமாக பாஜக தேசியத் தலைவர் தமிழ்நாடு வந்தார்.
இந்தப் பயணத்தின் போது, இராமநாதபுரம் மற்றும் அறந்தாங்கியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்களில் உரையாற்றவும். மேலும் சாத்தூர், மதுரை தெற்கு மற்றும் கந்தர்வக்கோட்டை ஆகிய தொகுதிகளில் நடைபெறவுள்ள சாலை வழி சநந்திப்புக் காட்சிகளிலும் பங்கேற்கிறார் அவர் உலங்கு வானூர்தி மூலம் சாத்தூரில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் வந்து இறங்கினார்! தேசிய பாஜகவின் தலைவர் நிதின் நபீன் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருந்து வந்துள்ள மேலிடத் தேர்தல் பொறுப்பாளரும் தேசிய செய்தித் தொடர்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நரசிம்மராவ் மற்றும் முன்னாள் ஆந்திராவின் அமைச்சர் பெத்தரெட்டி ஆகியோரும் இணைந்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் வெற்றிக்காகச் சாத்தூர் எங்கும் சாலைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள்.நிகழ்வில் மூத்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் அணைத்து பிள்ளைமார் சங்கத்தின் தலைவர் ஆறுமுகம் பிள்ளை பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை வரவேற்றார்கள்.
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு,
சாத்தூர் தொகுதி மக்களின் அபாரமான ஆதரவு, உற்சாக வரவேற்பு மற்றும் அன்பான ஒத்துழைப்புடன் இந்த நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது. மக்களின் ஆதரவு தேசிய ஜனநாயக கூட்டணியின் மீது உள்ள நம்பிக்கையை தெளிவாக வெளிப்படுத்துகிறது. இந்த அன்பும் நம்பிக்கையும் எங்களை நெகிழ வைத்ததுடன், மக்களுக்கு சேவை செய்யும் எங்கள் அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.
சாத்தூர் மக்களே, உங்கள் நம்பிக்கையே எங்கள் பலம் என இன்றைய சாலை வழி நெடுக நடந்த பிரச்சாரம் பெருந்திரளான மக்கள் கூட்டம், திமுக மற்றும் காங்கிரஸின் மோசமான ஆட்சிக்கு எதிரான மக்களின் தெளிவான தீர்ப்பாகும். மக்களின் இந்த மாபெரும் உற்சாகம், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையையும், இங்கு ஒரு 'இரட்டை எஞ்சின்' அரசாங்கம் அமைய வேண்டும் எனும் அவர்களின் விருப்பத்தையும் பிரதிபலிக்கிறது. என வேட்பாளர் தெரிவித்தார்.கே.அண்ணாமலையின் அடுத்த 9 நாட்களுக்கான தேர்தல் பரப்புரைப் பயணத் திட்டம் கீழே உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) ஒரே "நட்சத்திரப் பேச்சாளராக" அவர் உருவெடுத்துள்ளார்.
அவர் அடுத்த 9 நாட்களில் 43 பேரணிகளில் பங்கேற்க உள்ளார். ஏற்கனவே கடந்த 4 நாட்களில் மட்டும் 21 பேரணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 64 பேரணிகள் மூலம், பாஜக போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளையும் பிரச்சாரம் செய்வதுடன், சுமார் 30 வேட்பாளர்களுக்காகவும் அவர் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இன்னும் ஏராளமான வேட்பாளர்கள் அவரைத் தங்கள் தொகுதிகளுக்கு வருமாறு அழைக்கின்றனர், ஆனால் நேரமின்மை காரணமாக அவரால் அனைவரையும் சந்திக்க இயலவில்லை.
அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் அலைமோதுகின்றனர். சந்தேகத்திற்கு இடமின்றி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்று மிகவும் பிரபலமான மற்றும் அனைவராலும் விரும்பப்படும் ஒரு தலைவராக அண்ணாமலை திகழ்கிறார்! என்பது தெரிகிறது









கருத்துகள்