ஜன நாயகன் திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் வருகிறது
தவெக தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான அவரது கடைசி திரைப்படம் ஜன நாயகன் திரைப்படம் தணிக்கை பிரச்னைகளால் தை பொங்கல் நாளில் வெளியீட்டிலிருந்து ஒத்திவைக்கப்பட்டது.
பின், மறுதணிக்கை செய்யப்பட்டு மே மாதம் வெளியீடாக வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் இப்படத்தின் முதல் 5 நிமிடக் காட்சிகள் வெளியானது.
தொடர்ந்து, முழுப்படமும் இணையத்தில் கசிந்து திரைத்துறையினர் முதற்கொண்டு பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது. மேலும், இப்படத்தைப் பகிர்வோர்கள் உரிமையியல், குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என தயாரிப்பு நிறுவனம் எச்சரித்து வக்கீல் நோட்டீஸ் வெளியிட்டது. இந்த நிலையில், இப்படத்திற்கான தணிக்கை சான்றிதழைத் தணிக்கை வாரியம் வருகிற ஏப்ரல். 24 ஆம் தேதி நாளிட்டு தயாரிப்பு நிறுவனத்துக்கு கொடுக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சான்றிதழ் கிடைத்ததும் ஏப்ரல் மாதம் வெளியீட்டிலேயே ஜன நாயகனைத் திரைக்குக் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணைத்தும் இனி நடிகர் விஜய்க்கு சாதகமாகவே நடக்கும் இது மக்கள் தந்த தீர்ப்பு மூலம் கிடைக்கும் வெற்றி.






கருத்துகள்