பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ரிசர்வ் வங்கி. நிர்வாக குறைபாடுகள் மற்றும் விதிகளை மீறிய காரணத்தால் தடை விதிப்பு.
ஏப்ரல் மாதம் 24, 2026 அன்று, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் (Paytm Payments Bank) வங்கி உரிமத்தை ரத்து செய்தது. தொடர்ந்து வங்கி விதிமுறைகளை மீறியது மற்றும் நிர்வாகத்தில் இருந்த தீவிர குறைபாடுகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், பேடிஎம் இனி வங்கிச் செயல்பாடுகளை மேற்கொள்ள முடியாது.
விதிமுறைகளை மீறுதல், KYC குறைபாடுகள் மற்றும் வங்கி விதிமுறைகளுக்கு இணங்காத நிர்வாகம். காரணமாக
பேடிஎம் வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டாலும், வாடிக்கையாளர்கள் தங்களது பணம் மற்றும் வைப்புத்தொகையை திரும்பப் பெறலாம். வங்கிச் செயல்பாடுகளை நிறுத்த ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது, மேலும் வங்கியைக் கலைப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பேடிஎம் ஆப் மூலமான UPI சேவைகள், பிற வங்கிகளுடன் இணைக்கப்பட்டு தொடர்ந்து செயல்படும், ஆனால் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு மூலம் அல்ல.
பேடிஎம் வாலட், ஃபாஸ்டேக் (Fastag) போன்றவற்றில் உள்ள பணத்தை பயனர்கள் பயன்படுத்தலாம் அல்லது திரும்பப் பெறலாம்.
புதிய டெபாசிட் அல்லது பணப் பரிமாற்றம் செய்ய முடியாது.
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி, One 97 Communications மற்றும் விஜய் சேகர் சர்மா ஆகியோருக்குச் சொந்தமானது.



கருத்துகள்