கோயம்பத்தூர் மாவட்டம் ஏழாம் படைவீடான மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைப்பதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில்,
சென்னை உயர்நீதிமன்றம் வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் எனச் சுட்டிக்காட்டி, அப்பகுதியில் 500 மீட்டர் சுற்றளவில் பெரிய கட்டுமானங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. அதே நிலைதான் திண்டுக்கல் மாவட்டம் சாணார் பட்டி வட்டாரம் கோணப்பட்டி மலையில் ஜோதி முருகன் கோயிலில் இருந்து அகற்றப்பட்ட சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் பெரும்பாலான கோயில்கள் அரசு புறம்போக்கு நிலங்களில் தான் உள்ளன என நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார்.
இது போன்ற வழக்குகளில், "அரசு புறம்போக்கு நிலத்தில் முருகனும் வேண்டாம், சிலுவையும் வேண்டாம்" என்பது போன்ற கருத்துகள், அனுமதி பெறாமல் வைக்கப்படும் சிலைகளை அகற்றுவது தொடர்பான சட்ட ரீதியான விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளன. உரிய அனுமதி பெறாமல் கட்டப்படும் புதிய வழிபாட்டுத் தலங்களை அனுமதிக்கக் கூடாது என்ற விதிமுறை இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. கோணப்பட்டி மலை முருகன் சிலை மீண்டும் வைப்பது குறித்த விவகாரத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சிலைகள் அகற்றம் தொடர்பாகக் தமிழ்நாட்டில் மட்டுமே நிலவும் சட்டப் போராட்டங்களின் ஒரு பகுதியாகும். மீண்டும் முருகன் சிலையை நிறுவி வழிபாடு செய்து கொள்ள, தற்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஒருங்கிணைந்த ஹிந்து சக்திக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கலாம்.
திண்டுக்கல், மாவட்டம் சிறுமலை அருகில் அதன் வடகிழக்குப் பகுதி சாணார்பட்டி ஒன்றியம், கோணப்பட்டி மலையில் பல ஆண்டுகளாக சுயமாகத் தோன்றிய முருகப்பெருமானை வைத்து கிராம மக்கள் பல தலைமுறை வழிபாடு செய்து வந்தனர்.
இந்த நிலையில் முருகப்பெருமான் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வந்தது.
உடனே பொங்கி எழுந்த வருவாய்த்துறையினர் கடந்த மாதம் முருகன் சிலையை அகற்றி திமுக அரசின் தங்களது கடமை உணர்ச்சியை வெளிப்படுத்தினர். அரசியல் தூண்டுதல் காரணமாக
ஜெனிபர் என்ற கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் ஹிந்து முன்னணிப் பொறுப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு இரண்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கோணப்பட்டி மற்றும் ஐஞ்சுபுளிப்பட்டி பகுதியில் கன்னடம் பேசும் இந்து ஒக்கலீக கௌடர்கள், கிருஸ்தவ மக்கள் வசிக்கும் நிலையில் நிலையில் இந்து முன்னணி சென்னை உயர் நீதி நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தது.
வழக்கறிஞர் இந்தூ முன்னணியின் சட்டப் போராட்டத்தால் பறிமுதல் செய்யப்பட்ட முருகன் திருமேனியை கமிட்டியிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் முருகன் சிலையை நிறுவி வழிபாடு செய்து கொள்ள உத்தரவு பிறப்பித்தும் உயர் நீதிமன்றம் தற்போது ஆணையிட்டது.தமிழ்நாட்டில் பெரும்பாலான கோயில்கள் அரசு புறம்போக்கு நிலங்களில்தான் உள்ளது. இதுவே தவறான நிலை இதை உறுவாக்கியது யார், இந்த நிலங்களை சமஸ்தானங்கள் செட்டில்மென்டுக்கு முன எப்படி இருந்தது என்பது இங்கு கவனிக்க வேண்டியது அவசியம்.
கோவில்களை அரசு புறம்போக்கு என வகைப்படுத்தியது யார் சுதந்திரம் அடைவதற்கு முன் அவ்வாறு இருந்ததா என்பதே இங்கு எழு வினா ஊழல் அரசாங்கம் தான் தங்களது வசதிக்காக இந்த நிலைப்பாடு எடுத்த நிலையை காண்கிறோம்.
அரசு புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்ட கோணப்பட்டி மலைக்குன்றில் உள்ள அய்யனார் கோயிலில் முருகன் சிலையை நிறுவலாம் ;என செந்தில் குமார் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு அனுமதி வழங்கி உத்தரவு."மாவட்ட ஆட்சியர் தாசில்தார், காவல்துறை உள்ளிட்ட அரசு அலுவலர்களுக்கு, தமிழ்நாடு கோவில்கள் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறையின் சட்டம் குறித்து எந்த விதமான சட்டத் தெளிவுமில்லை' என, அதிருப்தி தெரிவித்த மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மதுரை கிளை, திண்டுக்கல் மாவட்டம் கோணப்பட்டி மலையில், அரசு தரப்பில் அகற்றப்பட்ட ஜோதி முருகன் சிலையை, மீண்டும் நிறுவ உத்தரவிட்டது. கோவில் நடவடிக்கைகளில் தலையிட வருவாய்த்துறை, காவல்துறை அலுவலர்களுக்கு உரிமை இல்லை. அவர்கள் கிராம மக்களின் அனுமதியின்றி சிலையை தன்னிச்சையாக எடுத்துச் செல்ல முடியாது. இந்திய
அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கிய மத சுதந்திரம், அவரவர் கலாசாரம் மற்றும் சமூகத்திற்கேற்ப செயல்படுவதற்கான உரிமையை உறுதி செய்துள்ளது. சிலையை மீண்டும் நிறுவ திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி தாலுகா தாசில்தார், மற்றும் காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும். என்ற மனுவை உயர்நீதிமன்ற
நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கார்த்திகேய வெங்கடாஜலபதி ஆஜரானார்.
அதில் தரப்பட்ட
நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவு:
அனுமதியின்றி முருகன் சிலையை நிறுவியதாக அரசு தரப்பில் தெரிவித்தது. இவ்வழக்கு நிலுவையில் இருந்த போது, சிலையை மீண்டும் நிறுவ அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும். அதைப் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என, நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் ஜனவரி மாதம் 29 ஆம் தேதி ஒரு உத்தரவு பிறப்பித்தார். காவல்துறை தரப்பில், 'மனுதாரர் உள்ளிட்ட சிலரின் இச்செயலானது சட்டம் -ஒழுங்கு பிரச்னையை உருவாக்கக்கூடும்' என, தெரிவிக்கப்பட்டது.
அக்குன்றானது அரசு புறம்போக்கு நிலமாக வகைப்படுத்தப்பட்ட சர்வே எண்ணில் அமைந்துள்ளது. அதன் மீது ஒரு வேல் நிறுவப்பட்டுள்ளது. அது கிராம மக்களால் வழிபடப்படுகிறது. இவ்விபரம் . வருவாய்த்துறை ஆவணங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலை வழிபடுவதற்கு எவ்விதமான தடையும் இல்லை என, அரசு தரப்பில் ஒப்புக்கொண்டுள்ளனர். இவ்விஷயமே, அவ்வேலைக் கொண்ட ஒரு கோவில் அங்குள்ளது என்பதை நிரூபிக்க போதுமானது.
வேல்' என்பது முருகனுக்குரியது என்பது நன்கு அறியப்பட்ட உண்மை. வருவாய்த்துறை ஆவணங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, அச்சிறு குன்றின் மீது ஒரு வேல், ஏற்கனவே இருக்கும் நிலையில், அதனுடன் சேர்த்து முருகன் சிலையை பிரதிஷ்டை செய்வது தவறல்ல. சிலையை நிறுவுவது ஆட்சேபனைக்குரியது என, அரசு தரப்பில் *முன்வைக்கும் வாதத்திற்கு அடிப்படை ஆதாரமில்லை. வேல், தொன்றுதொட்டு அங்கு இருந்து வருவதால், அப்பகுதியானது வேலுடன் கூடிய ஒரு பழமையான முருகன் கோவில் என்றே கருதப்பட வேண்டும். 'அங்கு ஒரு பழமையான கோவில் இருந்ததற்கான எவ்வித ஆதாரமும் மனுதாரரால் சமர்ப்பிக்கவில்லை' என, அரசு தரப்பு முன்வைத்த கருத்து முற்றிலும் தவறு. அது வருவாய்த்துறை ஆவணங்களுக்கு முரணானது.
வேலுடன் சேர்த்து முருகனின் சிலையை அங்கு நிறுவுவது, அரசியலமைப்பு பிரிவுகளின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மத சுதந்திரத்திற்கு உட்பட்டது. கோவில் மற்றும் அதற்குச் சொந்தமான நிலங்களை பாதுகாக்கும் பொருட்டு, கோவிலின் மூலவர் பெயரிலேயே கோவில்களுக்கு பட்டா வழங்க வேண்டிய தருணம் இது.
'அங்கு கரடுமுரடான பாதை உள்ளது. முறையான பாதை, பாதுகாப்பு இல்லாததால் சிலையை நிறுவ அனுமதி வழங்க முடியாது' என, அரசு தரப்பு வேறு காரணம் கூறியது. இவ்வாதம் விசித்திரமானது; அது ஏற்க முடியாதது.
பழநி கோவிலில் முன்பு கரடுமுரடான பாதை இருந்தது. பின், மலையில் ஏறுவதற்காக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன. சிலையை நிறுவுவதில் கிராம மக்களுக்கு விருப்பமில்லை என்பதற்கு, அரசு தரப்பில் ஆதாரம் எதுவும் சமர்ப்பிக்கவில்லை. முருகனுக்கு பூஜைகள் அல்லது அங்கு திருவிழாக்களை நடத்துவதால் மட்டும் சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்படாது. கோவிலின் பக்தர் என்ற முறையில் மனுதாரர் வழக்கு தாக்கல் செய்ய, நிவாரணம் கோர உரிமையுடையவர்.
மனுதாரர் ஒரு தனிநபர்; அறங்காவலர் அல்ல. அறநிலையத்துறையின் கீழ் பதிவு செய்யவில்லை என்ற அரசு தரப்பின் வாதங்கள் அறநிலையத்துறை சட்டத்தின் விதிகளுக்கு முரணானவை.
மாவட்ட ஆட்சித் தலைவர் , தாசில்தார், காவல்துறையினர் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள், ஹிந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் குறித்து எவ்விதமான தெளிவும் இல்லை என்பதைத் தான் இது வெளிப்படுத்துகின்றன. ஆட்சியர் ஜனவரி ., 29 ஆம் தேதியில் பிறப்பித்த உத்தரவில், சிலையை நிறுவ அனுமதி வழங்க மறுத்துள்ளார். அது ரத்து செய்யப்படுகிறது. சிலையை மனுதாரர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
அவர்கள் சிலையை குறிப்பிட்ட இடத்தில் நிறுவ வேண்டும். அவர்களும், பிற பக்தர்களும் இணைந்து திருவிழாக்களை நடத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

.jpg)
.jpg)


கருத்துகள்