முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எதிரிகளைக் கட்டுப்படுத்த தவெக தலைவர் நடிகர் விஜய் நடத்திய சத்ரு சம்ஹார யாகம்

சத்ரு சம்ஹார யாகம் செய்து சாமி தரிசனம் செய்தார் தவெக தலைவர் நடிகர் விஜய் சத்ரு சம்ஹார ஹோமத்தை ஜென்ம நட்சத்திர திதிகளில் செய்வது சிறப்பு. 



முருகன் வழிபாட்டிற்குரிய வைகாசி விசாகம், கார்த்திகை மாதம், கந்த சஷ்டி விரத தினங்களில் செய்வது சிறப்பான பலன், மேலும் முருகன் கோயிலில் இந்த ஹோமத்தை செய்வது பலன்களை விரைவாகத் தர வல்லதாகும். யாக வேள்வி குண்டம் அமைத்து, ஹோமம் செய்வதில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த வேதியர்கள் சக்தி வாய்ந்த மந்திரங்களைத் துதித்து, யாகத்தீ வளர்த்து முறையாக ஹோமத்தை செய்வதால் நிச்சயமான பலன்களைத் தருகிறது. ஹோமத்திற்காக 6 வகையான பூக்கள், பழங்கள், திரவியங்கள் மற்றும் நைவேத்திய பிரசாதங்களை வழங்க வேண்டும்.

சத்ரு சம்ஹார ஹோம பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள் மற்றும் ஹோம குண்டத்தில் இடப்பட்ட பொருட்களின் புனித அஸ்தி போன்றவை பிரசாதமாகத் தரப்படுவதை பூஜையறையில் வைத்து தினமும்  வழிபடுவதும் அந்த சாம்பலில் தினமும் சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வதும் தோஷங்களைப் போக்குகிறது.

சத்ரு சம்ஹார ஹோமத்தின் பிரதான நோக்கமாக இருப்பது  நேரடி மற்றும் மறைமுக எதிரிகளை அறவே ஒழிப்பதோடு, பின் வரும் காலங்களில் எத்தகைய எதிரிகளும் ஏற்படாமல் தடுக்க வல்லதாகிறது. மேலும் அத்தகைய எதிரிகளால் நமக்கு தீய மாந்திரிக கலையின் மூலம் செய்யப்பட்ட செய்வினை, மாந்திரீக ஏவல் போன்றவற்றின் எதிர்மறை ஆற்றல்களை அழித்துக்  காக்கிறது. துஷ்ட சக்திகள் எப்போதும் நுழையாமல் தடுக்கிறது காரியங்களில் தடை, தாமதங்கள் ஏற்படாமல் கெட்டது அனைத்திலும் சிறப்பான வெற்றியை பெருமாறு செய்ய வல்ல ஒரு ஹோமம் இந்த சத்ரு சம்ஹார ஹோமம்..கைக்கு அருகே வெற்றி. பல்வேறு கணிப்புகளுக்கு மத்தியில் 60 லிருந்து 140 தொகுதிகளுக்குக் குறைவில்லாமல் தவெக ஆட்சியைப் பிடிக்குமென ஒருபக்கம் புகழ்பெற்ற ஜோதிடர்கள் மற்றும் தேர்தல் சர்வே நிபுணர்கள் தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு சொல்லப்படுவதால், தற்போது விஜய்க்கும் மக்கள் மீதான அந்த நம்பிக்கை அபரிமிதமாக வளர்ந்துள்ளது.


 வாக்கு எண்ணிக்கை மையங்களில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் குறிப்பாக திமுக என்ன மாயாஜாலம் செய்யும் என்பதை அவரது அலுவலகம் சார்ந்த ஜான் ஆரோக்கியசாமியும் அரசியல் தேர்தல் பிரிவு ஆதவ் அர்ஜுனாவும் நடிகர் விஜய்யிடம் வலியுறுத்தியிருப்பதால் வாக்கு எண்ணிக்கை நடக்கும் 63 மையங்களிலும் கவனம் தேவை என்பதை தவெகவின் மாவட்ட செயலாளர்களிடம் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் நடிகர் விஜய்.

மா.செ.க்களிடம் பேசும் விஜய், வெற்றி நமது கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கிறது. நல்ல தீர்ப்பை மக்கள் நமக்கு அளித்திருக்கிறார்கள். தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியும் தேர்தல் மேலாண்மைப் பிரிவுச் செயலாளர் ஆதவ் அரஜுனாவும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் , மற்றும் நடிகர் விஜய்யின் நண்பர் விஷ்ணு ரெட்டி உள்ளிட்ட சிலருடன் நேற்று முன்தினம் பேசிக்கொண்டிருந்த நடிகர் விஜய், உங்களிடமிருந்து மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் எனக்கு வரும் தகவல்களும் நமக்கு பாசிட்டிவ் தகவல் தான் 

அதற்கு ஜான் மற்றும் ஆதவ் இருவரும், இந்த தேர்தலில் வீசியிருப்பது விஜய்யிசம். தமிழக மக்கள் ஒரு முடிவு எடுத்தால் அது ஒரே மாதிரி இருக்கும். சென்னையில் உள்ள ஒருவர் நினைக்கும் அதே விசயத்தை கன்னியாகுமரியில் இருக்கும் கடைகோடி சாமானியனும் நினைப்பான். அதனால் தான், தமிழ்நாடு எப்போதும் ஒரே மாதிரி அலை வீசும். இந்தத் தேர்தலில் வீசியிருப்பது விஜய் அலை. இதனை விஜய்யிசம் என்றுதான் எல்லோரும் சொல்லி வருகிறார்கள்.



ஆட்சி நம் வசம் வந்துவிடும். தவெக ஆட்சி அமைந்து விட்டால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு தவெக தான். 1967- ஆம் ஆண்டில் காங்கிரசிடமிருந்து திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. அதன்பிறகு திராவிடக் கட்சிகள் தான் ஆட்சி செய்தன. திமுகவிடம் இழந்த ஆட்சி அதிகாரத்தை இப்போது வரை காங்கிரசால் மீட்க முடியவில்லை. அதேபோல தவெகவிடம் ஆட்சியை இழக்கும் திமுக, இனி எப்போதும் மீட்க முடியாது என அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தச் சூழலில்தான், பிரபல ஜோதிடரிடம் ஆலோசித்தார் விஜய். அப்போது, கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வெற்றி இருக்கிறது. அதை முழுமையாக உங்கள் வசமாக்க திருச்செந்தூர் முருகனுக்கு வழிபாடு நடத்தி வாருங்கள் என யோசனையின் படியே வழிபாடு நடத்தியிருக்கிறார் நடிகர் விஜய்.ஃபிரபல ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேல், அளித்த பேட்டியில் நடிகர் விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்து கணிப்புகளை வெளியிட்டார்.

கடந்த காலக் கணிப்புகளை நினைவுகூர்ந்தவர், 2021-ஆம் ஆண்டில் திமுக மு. க.ஸ்டாலின் முதல்வராவார் என்றும், எடப்பாடி கே.பழனிசாமி ஜெயிக்க மாட்டார் என்றும் தான் முன்கூட்டியே வீடியோ வெளியிட்டதாகக் குறிப்பிட்டார். அதேபோல், 2016-ஆம் ஆண்டில் ஜெயலலிதா குறித்துத் தான் சொன்ன கணிப்புகளும் பலித்ததாகத் தெரிவித்தார். அந்த அனுபவத்தின் அடிப்படையில், இந்த முறை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் மீண்டும் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

விஜய்யின் ஜாதகப்படி நான் சொல்கிறேன், இந்தத் தேர்தல் ஆட்டத்தில் அவர் நிச்சயமாக வென்று விடுவார். நடிகர் விஜய்தான் அடுத்த முதல்வர், அவரே ஆளும் கட்சியாக வருவார். இது எனது தனிப்பட்ட விருப்பமல்ல, ஜோதிடக் கணிதத்தின் படி நான் சொல்கிறேன். இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன் போன்ற மாமன்னர்கள் ஜோதிடத்தை பின்பற்றியே செயல்பட்டனர். அந்த வரிசையில் எனது கணிப்பின்படி நடிகர் விஜய் வெற்றி பெறுவது உறுதி. நடிகர் விஜய்க்கு இருக்கும் ஆதரவு குறித்து பேசியவர், தலைவர் விஜய்க்கான ஆதரவு சுனாமி போல உள்ளது. சுனாமி வருவதைக் கூடக் கணித்து விடலாம், ஆனால் நடிகர் விஜய்க்கு இருக்கும் ஆதரவின் அளவைக் கணிக்க முடியாது. அந்த அளவிற்கு மக்கள் ஆதரவு சுனாமி போலத் திரண்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வரும்போது இது அனைவருக்கும் புரியும் என்றார்.தமிழ்நாட்டில் அதிமுக துவங்கிய போது எம்ஜிஆரை மலையாளி எனவும், செல்வி ஜெ.ஜெயலலிதா வந்தபோது கன்னடத்துக்காரி என்ற கூட்டம் தான் தற்போது தமிழ் நடிகர் விஜய் வந்த போது தற்குறி என்கிறது. த்ராவிடர் கழகம் எனும் திகவை ஈ. வே. ராமசாமியின் உதவியாளராக வந்த திமுக துவங்கி உடைத்து சி.என்.அண்ணாதுரை, மற்றும் ஈ. வே. ராமசாமி அண்ணன் வெ.கிருஷ்ணசாமி மகன் ஈ.வெ கி சம்பத் ஆகியோருடன் இணைந்த அனைவரையும் கண்ணீர் துளிகள் என்றார் ஈ வெ ராமசாமி.

படிக்காத கு.காமராஜை படித்த சீனிவாசன் விருதுநகரில் வென்றார் என்றார்  சி. என்.அண்ணாதுரை. 

உச்ச நடிகன் பயந்து ஒதுங்கிய ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாகச் சொன்னபோது மத அரசியல் என்றார்கள். அவர் உடனே ஆன்மீக அரசியல் என்றார். ஆனால் அவர் செய்த சில பழைய தவறு காரணமாக பின்வாங்க வேண்டியநிலை அது வெளிவராத ரகசியம்.

தற்போது நடிகர் விஜய் ய் கட்சியினரை தற்குறிகள் என்கிறார்கள்.   

இது தமிழர்களை இழிவபடுத்தும் அதே தொடர் செயல். தான் இது ஊழல் வாதிகள் செய்யும் வாடிக்கை நிலை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...