முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மக்கள் எதிர்ப்பு அலையில் சிக்கிய திமுக கூட்டணி

மக்கள் எதிர்ப்பு அலையில் சிக்கிய திமுக கூட்டணி,


ஐந்து ஆண்டு காலம் ஊழல் லஞ்ச லாவண்ய ஆட்சி நடத்தி மக்களுக்கு பலவகையில் தீங்கு செய்துவிட்டு பணம் கொடுத்தால் வெற்றி பெறலாம் என மக்கள் மீதான தவறான கண்ணோடடம் கொண்டு திமுக செயல்படுதவதால் காங்கிரஸ் கட்சியின் நான்கு தலைமுறை தலைவராக உள்ள ராகுல் தமிழ்நாடு பிரசாரத்திற்கு வராததால் காங்கிரஸின் 28 சட்டமன்றத் தொகுதிகளிலும் கார்கே. ராகுல் மோதல் சிக்கல்.எதிரொலி பின்னணி

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிட்டுகிறது. திமுகவிடம் கார்கே பேசி மல்லுக்கட்டி அவரது ஆதரவாளர்களுக்கு மட்டுமே கடந்த முறையை விட கூடுதலாக 3 தொகுதிகளை காங்கிரஸ் பெற்ற நிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட அக்கட்சி தலைவர்கள் இன்னும் பிரசாரம் செய்ய தமிழ்நாடு வரவில்லை. இதனால் காங்கிரஸ் தலைவர்கள் மீது முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அதிருப்தியில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.



தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர்களும், தலைவர்களும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் ஒரு வாரமே உள்ளதால் அனைவரும் சக்கரமாகச் சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர்.

இதற்கிடையே தான் தற்போது வரை காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் தமிழ்நாட்டில் பிரசாரம் செய்யவில்லை. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி யாருமே தமிழகத்துக்கு பிரசாரம் வரவில்லை. அவர்கள் பிரசாரம் செய்ய வருவார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் கூறியிருந்தாலும் கூட இன்னும் அதற்கான தேதி ராகுல் இணங்காத நிலையில் அறிவிக்கப்படவில்லை.

பிரசாரத்துக்கு வராத காங்கிரஸ் கட்சித் தலைவர்கள்




இது திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி தொகுதி பங்கீட்டின் போது திமுகவிடம் மல்லுக்கட்டி கடந்த முறையை விட கூடுதலாக 3 தொகுதிகளை பெற்று காங்கிரஸ் 28 இடங்களில் போட்டியிடுகிறது. இப்படியான சூழலில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் பிரசாரத்துக்கு வராதது திமுகவை அப்செட்டாக்கி உள்ளது. திமுக மட்டுமின்றி காங்கிரஸ் வேட்பாளர்களையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

அதுமட்டுமின்றி திமுகவிடம் மல்லுக்கட்டிய காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலில் அதிக இடங்களில் வென்று பலத்தை நிரூபிக்கத் துடிக்கின்றனர்.    இதற்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியின் பிரசாரம் வலு சேர்க்கும். ஆனால் அவர்கள் மாநிலத் தலைவராக செல்வம் உள்ள நிலையில் பாதுகாபபான நிலை இல்லை எனக் கருதுவதால் அவர் மவுனமாக தமிழகத்தை புறக்கணித்து வருகின்றனர். இது திமுகவிடம் மல்லுக்கட்டிய காங்கிரஸ் இளைய தலைவர்களை சோர்வடையச் செய்துள்ளது.

ராகுல் காந்தியிடம் கார்கே மூலம் காய் நகர்த்தி சீட்டு வாங்கியவர்கள் ராகுல் வருவது சந்தேகம் தான் ? என்பதால் 

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வம் பெருந்தகை, ப சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்பட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரசாரம் செய்தாலும் கூட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியின் பரப்புரை என்பது அதிக பலனைத் தரும். இதனால் அவர்கள் நிச்சயம் தமிழகம் வந்து பிரசாரம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் எதிர்பார்க்க 

ஆனால் தற்போது அதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ளது. இதற்கிடையே தான் நாளை முதல் வரும் 18 ம் தேதி வரை நாடாளுமன்றத்தில் பெண்களுக்கன 33 சதவீத இடஒதுக்கீடு மற்றும் நாடாளுமன்ற லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது தொடர்பான சட்ட முன்வடிவு பற்றிய விவாதம் தொடங்குிறது. இதனை காங்கிரஸ் கட்சி தீவிரமாக எதிர்த்து வருகிறது. இதனால் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய சூழல் உள்ளது.





இதனால் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் மேலிட தலைவர்களின் பிரசாரம் என்பது கேள்விக்குறி தான். ஒருவேளை ராகுல், பிரியங்கா ஆகியோர் பிரசாரம் செய்ய விரும்பினால் ஏப்ரல் மாதம் 19, 20, 21 ஆகிய தேதிகளில் வரலாம். ஆனால் அவர்கள் இப்போது உள்ள மாநிலத் தலைமையை நம்பி வரமாடடார் என்பதே தற்போது வேறு திட்டமா எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

ராகுல் காந்தி தவிர்ப்பது ஏன்?









ராகுல் காந்தி தமிழகத்தில் பிரசாரம் செய்யாமல் இருப்பதன் பின்னணியில் 2 முக்கிய விஷயம் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒன்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் தலைமை மாறும் வரை நிலவும் உள்கட்சி பிரச்சனை. 2வது தொகுதி பங்கீட்டின் போது திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சியை உடைக்க நினைத்து நடத்திய விதத்தால் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது ராகுல் காந்தி பகிரங்க அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தான் புதுச்சேரி சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போதும் கூட ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின் உடன் மேடையைப் பகிர்ந்து கொள்ளவில்லை. தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடந்த முறை 25 தொகுதிகள் வாங்கி 18 ல் வென்றது. இந்த முறை 28 வாங்கி உள்ளது. இதில் அதிக இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே காங்கிரஸ் கட்சி அடுத்த முறை திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை பெற முடியும். ஆனால் அதற்கு தற்போது உள்ள ஆளும் கட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலையில் அனல் பறக்கும் நிலை காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு தான் ஏற்படும். அதேவேளையில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் தோல்வியடையும் போது அது அதிமுக - பாஜக கூட்டணிக்கு சாதகமாக அமையலாம். இதனால் காங்கிரஸ் மேலிடம் மீது முதல்வர் மு. க.ஸ்டாலினும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதோடு கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த மக்கள் விரோத நிகழ்வுகள் வேங்கைவயல் தண்ணீர் தொட்டி சம்பவம்,  




பகுஜன் கட்சி ஆம்ஸ்ட்ராங் படுகொலை,  

‘ஓசி பஸ்’ என்று பெண்களை விமர்சித்த பொன்முடி,  

நீட் தேர்வு ரத்து எனக் கூறி தந்திரமாக ஏமாற்றியது,  

கல்விக் கடன் தள்ளுபடி எனக் கூறி மாணவர்களை ஏமாற்றியது,  

விவசாயக் கடன் தள்ளுபடி எனக் கூறி விவசாயிகளை ஏமாற்றியது  

பத்திரப்பதிவுக் கட்டணம்  ஊழலுக்கு உயர்வு,   

திமுக நிர்வாகி ஜாஃபர் சாதிக் உள்ளிட்ட பலருக்கும் போதைப் பொருள் வழக்கு  நீதி வழங்காத திமுக, 

மின்சார கட்டணம், மாதம் தோரும் கணக்கெடுப்பு நடத்தாமல் ஏமாற்றியது, சொத்து வரி, வீட்டு வரி உயர்வு,  

அண்ணா பல்கலைக்கழகப் பாலியல் குற்றவாளி ஞானசேகரன் அமைச்சர் உடன் சந்திப்பு விசாரணை தவறு,









கள்ளக்குறிச்சி கள்ளசாராய மரணங்கள்,

காவிரியில் மேகதாது அணை கட்டும் கர்நாடக காங்கிரஸ்,

அம்மா உணவகம் மூடப்படுகிறது,  

சென்னை வெள்ளம் – 4000 கோடி பேக்கேஜ் ஊழல் 

பொங்கல் பரிசு தொகுப்பில் ஒழுகும் வெல்லம் உள்ளிட்ட ஊழல்  செய்தது, 

அரசு மருத்துவமனையில் கஞ்சா செடி,  

மாற்றுத்திறனாளி உலகக் கோப்பை வென்றதாக ஏமாறிய உளவுத்துறை,  

காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் படுகொலை,  


மதுரை மாநகராட்சியில் 200 கோடி ஊழல் – மேயர் மாற்றம்,  

திருபுவனம் அஜீத்குமார் லாக்கப் மரணம், 

மரக்காணம் மீன்பிடித் துறைமுகதா திட்டம் ரத்து,  

கோயம்பத்தூர் கார் குண்டு வெடிப்பு,  

ரெட் ஜெயின்ட் மூவி திரைப்படம் மட்டுமே வெளியாகும் நிலை சினிமா கொள்ளை,

திருத்தணியில் வடமாநிலரை வெட்டிய சிறுவர்கள்,  



12 மணி நேர வேலை செய்ய வேண்டும் மசோதா,  

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்,  

திமுகவின் ஒரே குடும்பம் பல வெளிநாடுகளில் முதலீடு, சுற்றுப்பயணம்  

எண்ணற்ற பாலியல் குற்றங்கள், நிர்வாகச் சீர்கேடு,

இருபதுக்கும் மேற்பட்ட லாக்கப் மரணங்கள்,  

சென்னை ஏர் ஷோவில் 5 பேர் மரணம்,  

கரூரில் விஜய் நடத்திய கூட்டத்தில் அரசு நிர்வாகக் குறைபாடு காரணமாக 41 பேர் மரணம்  

LGBQ ஆதரவு நிலைப்பாடு,  





சென்னையில் நடிகைக்காக ஃபார்முலா கார் பந்தயம்,  மு.கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவு சின்னம்,  

டெல்டா பகுதியில் தண்ணீரில் நெல் மூடைககளை வீணாக விட்டது,  

காலையில் நடைபயிற்சி செல்லும் போது மூவி ரிவ்யூ,  

திமுக இளைஞரணி மாநாட்டில் உணவுப் பொருட்கள் சூறையாடல்,  

கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் சீண்டல்,  

மு.கருணாநிதிக்கு நாணயம் வெளியிட்டது,  

ஊடக சுதந்திரத்தை பறித்தது,  

500க்கும் மேற்பட்ட FL2 லைசன்ஸ் வழங்கியது,  

தூத்துக்குடி வெள்ளத்தால் வந்த பாதிப்பு  சரி செய்யாதது,

தனியாக தொலைக்காட்சி பத்திரிகையாளர் மழைநீர் பள்ளத்தில் விழுந்து மரணம்,  

திமுக கொடி பொருத்திய காரில் ECR சாலையில் அராஜகம்,  


திமுக கூட்டத்தில் உணவு மற்றும் மதுபானம் பீர் வழங்கியது கள்ளக்குறிச்சி,  

செந்தில் பாலாஜி ஓராண்டுக்கு மேலாக சிறை,  

பள்ளிக்குள் மாணவிகள் மது அருந்தியது,  

கே.என்.நேரு 2000 கோடி ரூபாய் ஊழல்,  

TRB ராஜா வெள்ளை அறிக்கை கேட்ட வெள்ளை பேப்பர்,  

சட்டப்பேரவையில் நேரலையை துண்டித்து ஓடுவது,  

சேகர்பாபு பக்தரிடம் வம்பு செய்தது,  

1000 ரூபாய் பேனருக்கு 7000 ரூபாய் செலவு,  

மரக்காணத்தில் 20 பேர் கள்ளசாராய மரணம்,  


ஆன்லைன் சூதாட்டம் ரம்மியை தடை செய்யாதது,  

திமுக நிர்வாகி தெய்வச்செயல் மனைவியை பாலியல் தொழிலில் தள்ள முயற்சி,  

பல்லாவரம் எம்எல்ஏ வீட்டில் வேலை செய்த பெண்ணுக்கு நேர்ந்தது கொடுமை,  

திமுக நிர்வாகியான  கவுன்சிலர் கணவர் செல்வம் வெட்டிப் படுகொலை,  

கஞ்சா விற்பனைக்கு எதிர்த்த அதிமுக பகுதிச் செயலாளர் கொலை,  கனிம வளங்கள் கொள்ளை போவதை தட்டிக் கேட்ட VAO படுகொலை,  

ரேஷன் கடைகளில் பொருட்கள் இல்லை,  

100 நாள் வேலைத் திட்டத்தில் 60 நாள் மட்டுமே,  

TASMAC பாட்டிலுக்கு ரூபாய் 10 குடிகாரர்களிடம் வசூல் செய்து சுரண்டல், 

பெண் கால்பந்து வீரருக்கு தவறான சிகிச்சையால் உயிரிழப்பு,  

பேருந்துகள் வரவில்லை என மாணவர்கள் போராட்டம்,  

4 ஆண்டுகளாக மடிக்கணினி வழங்கவில்லை,  

G-Square நிறுவனத்தின் அதீத வளர்ச்சி நியோமேக்ஸ் மோசடி பிரச்சனை தீராத காரணம், 

250க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடல்,  

சென்னையில் கழிப்பறை கட்டுவதில் ஊழல்,  

அரசு பேருந்துகள் அடிக்கடி பழுது, விபத்து,  

30,000 கோடி ரூபாய் கொள்ளை  என அமைச்சர் PTR பழனி வேல் தியாகராஜன் தகவல்,  

மெரினா கடற்கரையில் கட்டப்பட்ட wood பாலம் 2 மாதத்தில் சேதம்,  

போராடிய மாற்றுத்திறனாளிகளை 70 கிமீ தள்ளி கொண்டு போய் நடுக்காட்டில் இறக்கியது,  

சவுக்கு சங்கர் கைது,  


ஆசிரியர்கள் போராட்டம்,   கோவில் யானைகள் மரணம், விசாரணை இல்லாமல் செய்தது, கோவில் நகை ஆபரணங்களை சுவாமிக்கு அணிவிக்காமல் உருக்கி கட்டியாக்கி ஊழல் செய்து விற்றது, 

செவிலியர்கள் போராட்டம்,  

VAO க்கள் போராட்டம்,  

அரசு ஊழியர்கள் போராட்டம்,  

அரசு மருத்துவர்கள் பற்றாக்குறை போராட்டம்,  போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்,  

தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம்,  

கே.என்.நேரு ஆதரவாளர்களால் திருச்சி சிவா வீடு சூறையாடியது,  

டங்ஸ்டன் எடுக்கும் திட்டம்,  






NLC – விவசாயிகள் நிலத்தில் JCB,  

கள்ளக்குறிச்சி பள்ளிக்கூடம் சூறை, மானவி படுகொலை,

வடமாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல், 

திருப்பரங்குன்றம் பிரச்சினையை கையாள தவறியது நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு, 

போக்சோ வழக்குகள் அதிகரிப்பு, 

90. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் விழாக்காலங்களில் இல்லாதது, 



10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பலர் கலந்து கொள்ள வராமல் போனது 

சமூக வலைத்தளங்களில் பதிவுகள் போட்ட அதிமுக நிர்வாகிகள் கைது,  

5 ஆண்டில் 6 லட்சம் கோடி கடன்,  

ஆலந்தூரில் காவலர் விஜயன் படுகொலை,  

புதிய தார் சாலைகள் அடுத்த நாளே சேதம், நடிகை வசிக்கும் கடற்கரை சாலை பகுதியில் பலகோடி மதிப்பு தார்சாலைகள், 

ஆவின் பச்சை பால் பாக்கெட் நிறுத்தம்,  

சேலம் மாடர்ன் தியேட்டர் நிலம் மோசடி முயற்சி, 

“அப்பா” என்று அழையுங்கள் –என ஸ்டாலின்  கருத்து, 

பல சினிமா கலைஞர்களை வைத்து பாராட்டு விழாக்கள் – கோடிக் கணக்கில் விளம்பரம்,  

ஆட்சிக்கு வந்த ஆரம்பத்தில் 12 மணி நேர பணிக்கு முயற்சித்து பின் வாங்கியது!,

குப்பை வரி  எனும் நூதன கொள்ளை,

சவுக்கு சங்கர் வீட்டில் காங்கிரஸ் பிரமுகர் மூலம் மனித மலம் கலந்து கழிவை ஊற்றியது

ஓசி பிரியாணிக்காக பாக்ஸிங் ஃபைட்,

ஜாதிப் பெயரைச் சொல்லி பலரையும் திட்டும் அமைச்சர்கள்,

ஆற்று வெள்ளத்தில் அடித்துச் சென்ற பாலம்,

சிமெண்ட் இல்லாமல் போடப்பட்ட சிமெண்ட் சாலைகள்,

மதுவிலக்குக்கு பதிலாக மது விற்பனை அமோகம், 

மறைந்த முதல்வர் மரணம் குறித்த விசாரணை ஊழல் குறித்து தோல்வி,

கொடநாடு கொலை வழக்கு விசாரணையில் தோல்வி,

ஆயிரம் ரூபாய் சென்று சேராத பல குடும்பப் பெண்கள் குடும்ப அட்டையில் உயிருள்ள பலரைக் கொண்றதாக பதிவு,   காரணம் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே என மாற்றியது, 

மலைகளை உடைத்து கேரளாவுக்குக் கடத்துவது 

ரெட் பிக்ஸ் ஊடகவியலாளர் கைது,

ஏர்போர்ட் மூர்த்தி மீது வன்முறைத் தாக்குதல்,

சாலைகளில் நீதிமன்றம் உத்தரவு மீறி பேனர் வைத்தது

அரசு பணத்தில் விளம்பரம் தேடுதல், பஸ்களில் விளம்பரம் செயது அடையாளம் மாற்றியது,

திமுக MLA பழனியாண்டியின் ரௌடி ஆட்கள் உள்பட

நிருபரைக் கொலை செய்ய முயற்சி,

TNSPC ரத்து மாணவர்களின் எதிர்கால கல்விக்கனவோடு விளையாடிய நிகழ்ச்சி

 “ஸ்டாலின் தான் இந்த ஐந்து வருடம் ஆண்டாரு அவர் விடியல் தந்தாரா? ஐந்தாண்டு மக்கள் குடும்பங்கள் சோதனைகள் மட்டுமே சந்தித்து வந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதியன்று, மத்திய சட்டத் துறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்குக் கொடுத்த பதில் தரவுகளின்படி, 2021 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகளில், தமிழ்நாட்டில் பதிவான பாலியல் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை, 39,999. இந்தத் தரவுகள், தேசிய நீதித்துறை தரவுத் தளம் (NJDG) படி, எடுக்கப்பட்டவை. 




பாஜக முன்னால் தலைவர் கே.அண்ணாமலை பேசும்போது, 39,900 வழக்குகள் என்று, 99 வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கூறி விட்டேன் என்றார் உண்மையில் உண்மை சரிபார்ப்பு செய்திருக்க வேண்டும். 

ஆனால், திமுகவின் கடந்த ஐந்து ஆண்டு ஊழல் கையாலாகாத ஆட்சியை விமர்சிக்கும் போது மட்டும் துள்ளிக்குதித்து ஓடி வரும் YouTurn என்ற so called fact check இணைய தளம், எந்த ஆதாரமும் இல்லாமல், தங்களுக்கு விருப்பமான வழக்கு எண்ணிக்கையைக் கூறி, 20,989 வழக்குகள்தான் பதிவாகியிருக்கின்றன என்கிறது. 

அதிலும் குறிப்பாக,  ஆண்டு வாரியாக வழக்கு விவரங்களைக் கூறும் போது, பதட்டத்தில், 2024 ஆம் ஆண்டு விவரங்களை இரண்டு முறை திருப்பிக் கூறுகிறார். எங்கிருந்து வந்த அழுத்தம் என்பது தெரியவில்லை. 



முதலமைச்சர்  இட்லிக்கு சட்னி வைத்துக் கொள்வாரா அல்லது சாம்பாரா என்ற அளவில் தான், தமிழகத்தில் சில உண்மை சரிபார்ப்புத் தளங்கள் இயங்குகின்றன. ஆகவே, தங்கள் அறிவெல்லைக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் தலையிட்டு, தங்கள் பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாமென்று, இந்த so called fact check இணைய தளங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன். என்கிறார் ஆக இப்படி இன்னும் இதில் விடுபட்டுள்ள பல பாதிப்பு மக்கள் பாதிப்பு, இதன் காரணமாக இப்போது எதிர்ப்பு அலை திமுகவின் கூட்டணிக் கட்சிகளை சுழன்று அடிக்கத் துவங்கியுள்ளது தான் உண்மை. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கை 15-4-2026 ல் வெளியிடப்பட்டது.!   பல முக்கியமான அம்சங்கள் நிறைந்த இந்த அறிக்கை தமிழ்நாடு முழுமையையும்  கணக்கில் கொண்டு தொகுதி வாழ் மக்களின் தேவைகள் குறைபாடுகள் எனப்பல்வேறு கேட்பு மனுக்கள் விசாரணைகள் அவற்றின் மீதான ஆய்வுகளுக்குப் பிறகு வரைவு செய்யப்பட்டுள்ளது.  இந்த அறிக்கை வெளியிடப்படும் நாளில்  சென்னையில் இதை தயாரித்த குழு உறுப்பினர் வழக்கறிஞர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் கூறுகையில் "தேர்தல் அறிக்கையை கவனமாகப் படித்து மக்கள் தங்கள் நலன்கள் குறித்துச் சிந்தனை செய்வீர்கள் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு தாரீர்" எனக் கோறுகிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...