தமிழ்நாடு முதல்வராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்கும் விழா,
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று மே மாதம் 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற்றது.
முதல்வர் சி ஜோசப் விஜய் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அந்தக் கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னால் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் லீமாரோஸ் மார்ட்டின் திரையுலக நண்பர்கள், முதல்வரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நடிகை திரிஷா, நடிகர்கள், ஜெய், சஞ்ஜீவ், ஜனநாயகன் பட நிறுவனம், தயாரிப்பாளர் சிவா உள்ளிட்ட பலர் ஓய்வு பெற்ற இஆப அதிகாரி சகாயம் மனைவியுடன் பங்கேற்றுள்ளனர். மற்றும் புதிதாக கூடடணி சேர்ந்த கம்யூனிஸ்ட் கடசிகள் மற்றும் முஸ்லீம் லீக் கட்சி பிரமுகர்கள் சடடமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சராகப் பொறுப்பேற்கும் பலரது உறவினர்கள் தவெக நிர்வாகிகள் மற்றும் பல தொண்டர்கள் சில ஆட்சிப்பணி மற்றும் காவல் பணி அதிகாரிகள் பங்கேற்க விழாவில் வந்தேமாதரம் மற்றும் தமிழ்தாய் வாழ்த்து, தேசியகீதம் இசைக்கப்பட்டது, பதவி ஏற்புக்கு பின்னர் தமிழ்நாடு முதல்வராக சி.ஜோசப் விஜய் இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கும் மற்றும் ஒன்பது அமைச்சர்களுக்கும் ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும் இரகசியக்காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
அதன் பிறகு மேடையில் பேசிய முதல்வர் சி. ஜோசப் விஜய், “எப்படித் தொடங்குவதெனத் தெரியவில்லை. சினிமாவில் எப்படியாவது கஷ்டப்பட்டு வெற்றி அடைய வேண்டுமென இருந்த சாதாரண உதவி இயக்குநரின் மகன் நான். வறுமை என்றால் என்ன என்பது குறித்து எனக்கும் தெரியும். மன்னர் பரம்பரையிலிருந்து வந்து விடவில்லை இந்த விஜய் உங்கள் அண்ணன், உங்கள் தம்பி, உங்கள் மகன் மாதிரி தான் நானும். அப்படித்தான் நானும் உணர்கிறேன். நீங்களும் என்னை அப்படி நினைத்ததால் தான் எனக்கு சினிமாவில் மிகப்பெரிய இடம் கொடுத்தீர்கள். நீ வா தம்பி நாங்கள் பாத்துக்குறோம் என நீங்கள் எனக்கு வாய்ப்புக் கொடுத்தீர்கள். இந்தப் பயணத்தில் எனக்கு ஏராளமான கஷ்டங்கள் இருந்தாலும், எனக்காக உடன் இருந்த உங்களுக்கும் அதே கஷ்டங்கள், அதே அவமானங்கள். அதை நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் என்னுடன் இருந்தீர்கள்.
என்னை முதல்வராக்கியிருக்கிறீர்கள். என்னுடைய உறவுகளே, சொந்தங்களே நான் தேவதூதன் கிடையாது. அது செய்வேன், இது செய்வேன் எனச் சொல்லி ஏமாற்ற மாட்டேன். எது சாத்தியம் என்பதை மட்டுமே செய்வேன். தமிழ்நாட்டில் ரூபாய் .10 லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளது. தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துவிட்டுச் சென்றுள்ளார்கள். அப்படியான ஒரு நிலையில் தான் இந்தப் பொறுப்பை நான் கையில் எடுத்திருக்கிறேன். அரசிடம் என்ன இருக்கிறது, எது இல்லை என்பது குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட இருக்கிறேன். அதைத் தான் முதலில் செய்ய இருக்கிறேன். எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக ஒளிவு, மறைவில்லாமல் செய்வேன். எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். நான் கூறியதை படிப்படியாக நிறைவேற்றுவேன். அதற்கு அவகாசம் கொடுங்கள். பெண்கள் பாதுகாப்பை ஸ்ட்ரிக்டாக வைத்திருப்பேன். போதைப்பொருள் தடுப்புக்கு உரிய முயற்சி எடுப்பேன். சட்டம் ஒழுங்கு மூலம் எல்லாருக்குமான பாதுகாப்பை உறுதி செய்வேன். நண்பர்களாக இருந்தாலும், எதிரிகளாக இருந்தாலும் 8 கோடி மக்களும் என் மக்கள் தான்.
கல்வி, மருத்துவம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் முழு கவனம் செலுத்துவேன். மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசா கூட தொடமாட்டேன். இந்த விஜய் தவறு செய்ய மாட்டான். அது யாராக இருந்தாலும் சரி, தவறு செய்ய விடமாட்டேன். என் தலைமையில் தான் முழு அதிகாரமும் இருக்கும். என்றார் முதல்வர் கூறிய அணைத்தும் மக்கள் கவனம் பெற்ற நிலையில் (வெள்ளை அறிக்கை வேண்டும். திமுக ஆட்சியில் வெளி நாட்டு பயணங்களில் முதலீடுகளில் எவ்வளவு என்ன நடந்தது . அது வெறும் சுற்றுலா பயணமா? என அதையும் விளக்கி வெள்ளை அறிக்கையாகத் தரவேண்டும். ரூபாய்.10 லட்சம் கோடி கடன், கஜானாவை காலியாக திமுக வின் மு. க.ஸ்டாலின் அரசு துடைச்சி வைத்தது பற்றிய ஒரு வெள்ளை அறிக்கை வேண்டும்..இது நாம் வைக்கும் கோரிக்கை) தவெக நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும்,
கோபிசெட்டிபாளையம் தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான கே.ஏ. செங்கோட்டையன் அமைச்சராகப் பதவியேற்ற பின்பு, பேசியது “என் வாழ்நாளில் நினைத்துப் பார்க்காத ஒன்றாக இருக்கிறது” என்றார “நம்முடைய முதல்வரோடு இன்று பதவிப் பிரமாணம் செய்தது என் வாழ்நாளில் நினைத்துப் பார்க்காத ஒன்றாக இருக்கிறது. ஆகவே, இது இமாலய வெற்றி என்று தான் கருதுகிறேன்.அவருடைய செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் நான் கூர்ந்து கவனித்தேன். புரட்சித்தலைவருடனும், அம்மாவுடனும் பயணம் செய்திருக்கிறேன். முதல்வர் விஜய்யோடு பயணிக்கும் போதும் அதேமாதிரி உணர்கிறேன்.
இந்த அரசுக்கு என் உயிர்மூச்சுள்ள வரை, உறுதுணையாக இருப்பேன்” எனத் தெரிவித்தார்.இன்றைய பதவியேற்பு விழாவில் சில முக்கிய Impressive அம்சங்கள்:
விஜய்யின் attire. கோட்சூட் முதல்வர் சிறப்பு ஆனால் சம்பிரதாய அரசியல் வேஷ்டி, சட்டை மக்களை அரசியலில் இருந்து ஒரு தொலைவில் வைத்துள்ளது. இது அதிலிருந்து மாறி ஒரு professional touch. சிறப்பு
இந்த அரசு transparency கடைபிடிக்கும் என்றது மற்றும் அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவேன் எனச் சொன்னது. ஊழலுக்கு இவர் எதிரி எவ்வளவு தூரம் இது சாத்தியம் எனத் தெரியவில்லை. ஆனால் அந்த எண்ணமே சிறப்பு பெரிய விஷயம்.
தவெக’வினரை வெளிப்படையாகக் கண்டித்தது. ஆட்சிக்கு வந்துவிட்டோம் என்றதும் ஒவ்வொரு ஏரியாவிலும் உள்ள குட்டி தெய்வங்ள் ஆட்டம் போடுவார்கள் என்பது தான் எல்லாக் கட்சிகளிலும் உள்ள பிரச்சனை. அதை உணர்ந்து அதை பொது மேடையிலேயே கண்டித்தது சிறப்பு
‘மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசா கூடத் தொட மாட்டேன்’ எனச் சொன்னது. அமைச்சர்கள் எல்லோரும் இதைக் கடைப்பிடிப்பது சாத்தியமா எனத் தெரியவில்லை. என்றாலும் பதவியேற்ற எந்த முதல்வரும் இதுவரை இப்படிச் சொன்னதே இல்லை.
எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என்று வெளிப்படையாகக் கேட்டது. இருப்பது பெரிய சுமை. அதை எடுத்ததும் முடிப்பேன் என்றில்லாமல் இதை எடுத்து, புரிந்து, நகர அவகாசம் தேவை என்பதைப் பலர் புரிந்துகொண்டது நல்லது.
எல்லாவற்றிற்கும் மேல். தன் உறுதிமொழியைக் பார்க்காமல் படித்தது. மற்றும் அதை சம்பிரதாயமாக இல்லாமல் உணர்வுப் பூர்வமாகக் கூறியது இதற்கு முன்பு இப்படி நடந்ததாக நினைவில்லை. உறுதிமொழி சொல்லும் தொனியும் வேகமும் இத்தனை நாள் தான் காத்த அமைதியை உடைத்தெரிவது போலிருதது. அது ஒரு மாஸ் காட்சி.நடிகர் மற்றும் த.வெ.க தலைவர் சி. ஜோசப் விஜய்யின் பூர்வீகம் இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகிலுள்ள முத்துப்பேட்டை கிராமம். இவரது தாத்தா, கீழக்கரை முத்துப்பேட்டையில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் இதனால் இந்த ஊருடன் விஜய்யின் குடும்பத்திற்கு நெருங்கிய தொடர்பு உண்டு.முக்கியத் தகவல்கள்:பூர்வீக கிராமம்: முத்துப்பேட்டை, இராமநாதபுரம் மாவட்டம்.தொடர்பு: விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பள்ளிப் படிப்பை அருகில் உள்ள கமுதிகோட்டையில் முடித்தார்.தாத்தா: சேனாதிபதி பிள்ளை முத்துப்பேட்டையில் வாழந்தவர். அவரது பேரன் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற நிலையில், முத்துப்பேட்டை கிராம மக்கள் இதனை உற்சாகமாகக் கொண்டாடினர். சி. ஜோசப் விஜய்யின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் ‘ரூட்’ வியூகம்!
விஜயின் அரசியல் எழுச்சிக்கு அவரது மேலாளர் ஜெகதீஷ் மற்றும் ‘தி ரூட்’ நிறுவனத்தின் அரசியல் வியூகமே முக்கியக் காரணம். கடந்த 10 ஆண்டுகளாக டேட்டா அனலிட்டிக்ஸ் மூலம் இளைஞர்களின் மனவோட்டத்தைக் கணித்து, வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் வாயிலாக ஒரு டிஜிட்டல் அலையை வார்ரூம் அமைத்து உருவாக்கினர். சினிமா பாணி எடிட்டிங் மற்றும் ரீல்ஸ்கள் மூலம் சி. ஜோசப் விஜய்யின் பிம்பத்தைக் கவர்ச்சிகரமாகக் கட்டமைத்து, அவரை ஒரு தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக மாற்றியுள்ளனர். இதுவே இப்போது மக்கள் அபரிமிதமான ஆதரவு அலை காரணம்.. பதவி ஏற்ற முதல்வர் தலைமைச் செயலகம் வந்து முதல்வர் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையாவை நியமனம் செய்து உத்தரவிட்ட முதலமைச்சர் உள்ளிட்டவர்கள் வரும் 12 ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்பார்கள், புதிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பி. வெங்கட்ரமணன் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் அவரது தந்தை பத்மநாபன் ஆவார் 48 வயதில் கட்சிப் பொருளாளர், சட்டம் மற்றும் வணிகவியலில் பல பட்டங்களைப் பெற்றுள்ளார், M.Com மற்றும் LLM: அண்ணாமலை பல்கலைக்கழகம் LLB (சட்டம்): பெங்களூர் பல்கலைக்கழகம் MBA பெரியார் பல்கலைக்கழகத்தில் முடித்வர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பல ஆண்டுகள் வழக்கறிஞராவார்.
முதல்வர் விஜயின் மேலாளர் 2000-ஆம் ஆண்டு முதல் (சுமார் 26 ஆண்டுகளாக) முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை மேலாளராகப் பணியாற்றுகிறார். முதல்வர் சி ஜோசப் விஜயின் நிழலாகவும், மிகவும் நம்பத்தகுந்த நபராகவும் அறியப்படுகிறார்.
'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியைத் தொடங்கியதில் இருந்து, கட்சியின் மிக முக்கியப் பொறுப்பான பொருளாளர் பதவியை வெங்கட்ரமணன் கவனித்து வருகிறார். தவெக சார்பில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டார்.
இந்தத் தேர்தலில் 70,070 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் த. வேலுவை (41,098 வாக்குகள்) 28,972 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சட்டமன்ற உறுப்பினராக (MLA) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி மீனாட்சி. (இவர் 'சாய் விஜய் அறக்கட்டளையின்' அறங்காவலர்).
விஜய்யின் பல வருட நண்பராகவும், ஆலோசகராகவும், தற்போது கட்சியின் முக்கியத் தூணாகவும் வெங்கட்ரமணன் செயல்படுகிறார். தற்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்.
தற்போது திமுக சார்பாக எதிர்கட்சி தலைவராக எஸ் உதயநிதி தேர்வாகியுள்ளார். டாக்டர்.பி.செந்தில்குமார் மற்றும் ஜி.லட்சுமி பிரியா ஆகியோர் முதல்வர் சி.ஜோசப் விஜய்யின் செயலாளர்-I மற்றும் II ஆக நியமிக்கப்பட்டுள்ளனர்.


























































கருத்துகள்