மே மாதம் 4 ஆம் தேதி ,2026 அன்று 17 வது
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான முடிவுகளை ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் வழங்கி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2026 மே மாதம் 5, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில் 16வது தமிழ்நாடு சட்ட மன்றப்பேரவையை ஆளுநர் கலைத்துள்ளார்.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவையை வரவழைப்பதன் மூலம் அடுத்த அரசியலமைப்புச் சட்டச் செயல்முறை இப்போது தொடங்கும். எம்.எல்.ஏ.க்கள். உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்த பிறகு, சட்டசபை அதன் சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கும். இதைத் தொடர்ந்து, சபையில் பெரும்பான்மை ஆதரவைக் கோரும் கட்சியோ அல்லது கூட்டணியோ, தேவைப்பட்டால், நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் சட்டசபையில் பலத்தை நிரூபிக்க வேண்டும். பெரும்பான்மையை நிறுவியதும்,
புதிய அரசாங்கம் முறையாக பதவியில் தொடரும். இந்த நடைமுறைகள் முடியும் வரை, நிர்வாகத்தில் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக தற்போதுள்ள அரசாங்கம் பொதுவாக ஒரு கவனிப்புத் திறனில் செயல்படுகிறது.ஆட்சி அமைக்க தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிமுக தலைவர்களில் ஒருவரான சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுகவில் வெற்றி பெற்ற சடடமன்ற உறுப்பினர்களில் 40 பேர் (எடப்பாடி கே. பழனிசாமி ஆதரவாளர்கள் ஏழுபேர் தவிர) ஆதரவளிக்கத் திட்டமிட்டது தெரிகிறது.
அதிமுக சி.வி.சண்முகம் தலைமையில் நல்லிரரவில் நடந்த இரகசிய ஆலோசனைக் கூட்டத்தில் தீர்வு.
மக்கள் ஆதரவு பெற்றுத் தேர்தலில் வென்ற தவெக தலைவர் ஜோசப் விஜய் சந்திரசேகர் முழு மெஜாரிட்டி அரசாக அமைவதில் இனி எந்த விதமான தடையும் இருக்காது. இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியான பல்லாயிரம் கோடிகளை வாரி வஞ்சமாகக் கொடுத்த திமுகவும், தன்னோடு சேர்ந்த கூட்டணிக்கட்சிகளைத் திட்டமிட்டு தோற்கடித்த அதிமுகவும் பணம் வாரிக் கொடுத்த அதிமுகவும் வீழ்த்தப்பட்டுள்ளது. பணமே செலவு செய்யாத சாமானியன் தவெகவில் விஜய் என்ற ஒரே முகமாக ஜனநாயகன் விஜய் ஜனநாயகத்தை நிலை நாட்டியுள்ளார் 2024ஆம் ஆண்டு திரைத்துறையில் இருந்து அரசியலில் கால்தடம் பதித்த விஜய் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டு ஆட்சியைப் பிடித்து முதல்வராகியுள்ளார்.
அந்த வகையில் தவெக 108-1 =107 தொகுதிகளிலும், திமுக கூட்டணிக் கட்சிகள் பல 73 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான 117 தொகுதிகளை எட்ட முடியாத காரணத்தால், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள ஆதரவு கோரப்பட்டது, தமிழ்நாட்டில் பல வருடங்களுக்கு பிறகு தொங்கு சட்டசபை உருவாகுமோ எனப் பயந்த நிலையில் அது இனி நடக்காது என்பது தற்போது தெளிவாகிறது.நேற்றிரவு முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்.பி. வேலுமணி, நத்தம் இரா.விஸ்வநாதன், டாக்டர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது தவெகவிற்கு ஆதரவு தர ஆலோசிக்கப்பட்டது
சி.வி.சண்முகம் தலைமையில் 40 எம்எல்ஏக்கள் தவெகவிற்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளதாக தகவல் அதிமுகவில் வெற்றி பெற்ற30 நபர்கள் தொலைபேசியை அணைத்து விட்டு ஏற்கனவே மாயமான நிலையில் 27 நபர்கள் மட்டுமே அதிமுக நடத்திய சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆகவே தலைவர் மற்றும் துணைத்தலைவர் கொரடா உள்ளிட்ட பொறுப்புகளின் தேர்வு நடத்த முடியாமல் சிலுவம்பாளையம் எடப்பாடி கே பழனிசாமியை குள்ளம் பாளையம் கே. ஏ.செக்கோட்டையனிடம் ஏமாந்து போனதே நிஜம் இதை நாம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே தெரிவித்த அரசியல் நிலை தற்போது அறங்கேறியது, இதுவரை தமிழ்நாடு ஏன் இந்திய அரசியல் களத்தில் பதவி ஏற்கும் முன் யாரையும் முதல்வராக அங்கீகரித்து நடத்தாதாத மத்திய அரசு மாண்புமிகு ஜோசப் விஜய் சந்திரசேகரை ஆளுநர் பதவி ஏற்கும் முன்னரே முதல்வராக அங்கீகாரம் செய்த நிகழ்வு ஊழலற்ற மக்கள் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி, இனி அதிமுகவில் ஐந்து மந்திரிகளும் இணைந்து நல்லாட்சி நடத்தப்போகும் புதிய முதல்வருக்கு பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பாக வாழ்த்துக்கள். காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு அளித்த நிலையில் கரூர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் செல்வி செ.ஜோதிமணி உள்ளிட்ட சிலர் பேச்சைக் கேட்டு தவெகவினர் யாரும் தமிழ்நாடு ஆளுநர்ரை வசைபாடதீர்கள்
விசிக மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் நாங்கள் திமுகவுடன் தான் இருக்கிறோம் தவெகவிற்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று தெரிவித்துவிட்டார்கள். அதிமுக ஆதரவில்லை எனக் கூறிவிட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் 5 MLA க்களை மட்டும் வைத்துக்கொண்டு சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாது. அப்படி நிரூபிக்க முடியாமல் போனால், கவர்னர் சட்டசபையை முடக்கி ஜனாதிபதி ஆட்சி அறிவித்து மறு தேர்தல் அறிவிக்கவேண்டும்.
இதை தான் ஆளுனர் தடுத்து தவெகக்கு இன்னும் கூடுதல் நேரம் அளித்து தவெக விஜய் நன்மை செய்துள்ளார்.தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க தேசிய ஜனநாயக கூட்டணி முழு ஆதரவு அளிக்க வேண்டுமென பாஜக தேசிய தலைவர்களுக்கு, மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கோரிக்கை.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "எந்தவித அரசியல் பின் புலம் இன்றி, மக்கள் சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வெற்றி பெற்றுள்ள புதிய தலைவருக்கு, தன்னை ஒரு சிறந்த நிர்வாகியாக நிரூபிக்க குறைந்தபட்சம் 6 மாத அவகாசத்தை தமிழ்நாடு அரசியல் கட்சிகள் வழங்க வேண்டும். 2026 தேர்தலில் 108 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், விஜய் தலைமையில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளின் எம்எல்ஏக்களும், தலைவர்களும் பெருந்தன்மையுடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அதன் பின், தவெக ஆட்சியின் செயல்பாடுகளை பொறுத்து, ஒவ்வொரு கட்சியும் தங்கள் கொள்கைகளுக்கு ஏற்ப முடிவெடுத்து நாகரீக அரசியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்கி, தமிழக அரசியலில் ‘குதிரை பேரம்’ என்ற அவப்பெயருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தவெக எந்தவித அழுத்தமும் இன்றி சுதந்திரமாக ஆட்சி அமைக்கவும், அவர்கள் விரும்பினால் மட்டுமே கூட்டணி அமைக்கவும் அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.தமிழக தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் பழனிசாமியிடம், தேசியத் தலைவர்கள் இது குறித்துப் பேசி, தவெக சுய விருப்பத்துடன் ஆட்சி அமைக்கவும், ஊழல் மற்றும் பிரிவினைவாத சக்திகளின் அழுத்தம் இன்றி செயல்படவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி முழு ஆதரவளிக்க வேண்டும்.
திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற மக்களின் எண்ணம் ஒருபுறம் இருந்தாலும், மாற்றத்துக்கான அடையாளமாக தவெக தலைவர் விஜய்யை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்." என கூறப்பட்டுள்ளது.





























கருத்துகள்