2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு 62 மையங்களில் மே மாதம் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
அதில் 3 அடுக்கு பாதுகாப்பு மற்றும் QR குறியீடு அடையாள அட்டை கட்டாயம். மதுரையில் அதிகபட்சமாக 5 மையங்கள் அமைந்துள்ளன. அதன் முக்கிய விவரங்கள்: மொத்த மையங்கள்: 62, பாதுகாப்பு.சிறப்பம்சம்: QR குறியீடு அடையாள அட்டை கட்டாயம்.ஆய்வு: மாவட்ட ஆட்சியர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் தொடர்ந்து ஆய்வு செய்கின்றனர். ஒவ்வொரு தொகுதிக்கும் மாவட்ட ஆட்சியர்கள் அரசியல் ஆதரவாக செயல்படலாம் எனற நிலை வரக்கூடாது எனபதால் மேலிட மத்திய உயர் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டள்ளனர்,
வாக்கு எண்ணிக்கை மையங்கள் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனும் வேட்பாளர் பிரதிநிதிகளுடனும் அரசு அலுவலர்களான தேர்தல் அதிகாரிகள் ஆலோசனைகளை நடத்தினர். ஏப்ரல் மாதம் 23 -ஆம் தேதி ஆண் வாக்காளர்கள் 2.35 கோடி பேரும், (ஒட்டுமொத்த ஆண் வாக்காளர் எண்ணிக்கையில் 83.96 சதவீதம்), பெண் வாக்காளர்கள் 2.52 கொடி பேரும் (எண்ணிக்கையில் 86.20 சதவீதம்), மூன்றாம் பாலினத்தவர்கள் 4517 பேரும் ( ஒட்டுமொத்த 54.44 சதவீதம் ) வாக்களித்தனர்.
இந்த சூழ்நிலையில் மே மாதம் 4 -ஆம் தேதி மேற்கு வங்காளம், தமிழ்நாடு, அஸ்ஸாம், கேரளா உள்ளிட்ட நான்கு மாநிலங்களிலம், பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திலுமா வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. போலியான கருத்துக் கணிப்புகளான திணிப்பு மத்தியில் வாக்கு எண்ணிக்கை நாளுக்காக அனைவருமே காத்திருக்கின்றனர்.
இந்தச் சூழலில் தான் தமிழ்நாடு முழுக்க 64 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதிலும் குறிப்பாக, சேலம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அதிகபட்சமாக 4 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளதில்,
மே நான்காம் தேதி காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கும் எனவும்,
காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவில் முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும்.
எட்டரை மணி அளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் (EVM) உள்ள வாக்குகள் எண்ணும் பணி துவங்கப்படும்.
500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேஜை என்ற விதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் மையங்கள் விபரம் :- திருவள்ளூர்-3, சென்னை-3, காஞ்சிபுரம்-1, வேலூர்-1, கிருஷ்ணகிரி-1, தர்மபுரி-1 திருவண்ணாமலை-2, விழுப்புரம்-3, சேலம்-4, நாமக்கல்-1, ஈரோடு-2, நீலகிரி-1, கோயம்புத்தூர்-1, திண்டுக்கல்-1, கரூர்-1, திருச்சிராப்பள்ளி-2, பெரம்பலூர்-1, கடலூர்-4, நாகப்பட்டினம்-1, திருவாரூர்-1, தஞ்சாவூர்-3, புதுக்கோட்டை-1, சிவகங்கை-1, மதுரை-5, தேனி-1, விருதுநகர்-1, இராமநாதபுரம்-1, தூத்துக்குடி-1, திருநெல்வேலி-1, கன்னியாகுமரி-1 அரியலூர்-1 திருப்பூர்-1, கள்ளக்குறிச்சி-5, தென்காசி-1, செங்கல்பட்டு-1, திருப்பத்தூர்-1, ராணிப்பேட்டை,1 மயிலாடுதுறை,-1 ஆகியவற்றில் மூன்றடுக்குப் பாதுகாப்பில் வாக்குப்பெட்டிகள், சீலிடப்பட்ட அறையில் பாதுகாக்கப்படுகிறது,






கருத்துகள்