தமிழ்நாட்டில் 84 மாவட்ட முதன்மை நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்து உயா்நீதிமன்றத் தலைமைப் பதிவாளா் உத்தரவு
தமிழ்நாட்டில் 84 மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிகளைப் பணியிட மாற்றம் செய்து சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளா் எஸ்.அல்லி உத்தரவு.
சென்னை உயா்நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளர் ஆா்.தோத்திர மேரி, சேலம் மாவட்ட வணிக வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், சென்னை 10-ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி சுமதி சாய்பிரியா, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாகவும்,
சென்னை முதலாவது கூடுதல் குடும்பநல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி, சென்னை உயா்நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளராகவும், சென்னை குடும்ப நல நீதிமன்ற முதன்மை நீதிபதி எஸ் .சுபா தேவி, தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாகவும், திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிபதி மதுசூதனன், சென்னை சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டனா்.
மேலும், செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதியான ஈ.சசிகலா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அவருக்கு பதிலாக செங்கல்பட்டு வணிக வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் நீதிபதி சுஜாதா குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளாா். இவா்கள் உள்பட மொத்தம் 84 மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவகரத்து வழக்கை விசாரித்து வந்த செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சசிகலா பொறுப்பேற்ற ஒரேமாதத்தில் பணியிடமாற்றம் செய்யப்பட்டார் அவருடன் சேர்த்து 82 நீதிபதிகளை பணியிடமாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் எஸ்அல்லி உத்தரவிட்டுள்ளார்.
அதுபோல முன்னால் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு, பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்க்குகளை விசாரித்த
நீதிபதிகளும் பணியிட மாற்றம், செய்து சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் அல்லி உத்தரவிட்டுள்ளார்.











கருத்துகள்