முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மேற்கு வங்காள முதல்வராகும் சுவேந்து அதிகாரி மே 9 ஆம் தேதி பதவியேற்பு

மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் படி தோல்வியடைந்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி


தவறான காரணங்களைச் சொல்லி நான் ராஜினாமா செய்ய மாட்டேன் என அடம் பிடித்தால் தேசிய பாதுகாப்புச் சட்டம் தான் அவர் மீது பாயும்!.எதையும் மதிக்கத் தெரியாத அகம்பாவங்களுக்கு ஜனநாயகத்தில் இடமில்லை  மேற்கு வங்காளத்தில் மே மாதம் 9-ஆம் தேதியில் பதவியேற்பு விழா முதல்வர் சுவேந்து அதிகாரிக்கு ஆளுனர் ஆர். என். ரவி பதவிப்பிரமாணமும், இரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறர்,       சுவேந்து அதி​காரி மற்றும் அக்னிமித்ரா பால் பெயர்கள் பரிசீலனையில் இறுதியில் 

மேற்கு வங்க மாநிலத்​தின் அடுத்த முதலமைச்சராக பா.ஜ.க.​வின் வெற்றி நாயகன் என்று அழைக்கப்படும் சுவேந்து அதி​காரி பதவி​யேற்க உள்​ளார்.

இதன் மூலம், தன் அரசி​யல் குரு​வான மம்தா பானர்​ஜி​யின் இடத்தை தட்​டிப் பறித்த சுவேந்து அதி​காரி. மேற்கு வங்காள தேர்​தலில் அமோகமாக வெற்றி பெற்று ஆட்​சி​யைப் பிடித்​த பாஜகவின் சட்​டமன்​றக் கட்சி உறுப்பினர்கள் குழுக் கூட்​டம், கொல்​கத்​தா​வில் நாளை வெள்ளிக்​ கிழமை மே  மாதம் 8 ஆம் தேதி நடை​பெறும் கூட்​டத்​தில், சட்டமன்​றக் கட்​சித் தலை​வ​ராக சுவேந்து அதி​காரி ஒரு​மன​தாகத் தேர்ந்​தெடுக்​கப்படுகிறார். பாஜக வின் மாநிலத் தலை​வர் சாமிக் பட்​டாச்​சார்​யா, சுவேந்து அதிகாரி​யின் பெயரை முன்​மொழிய, மத்​திய உள்​துறை அமைச்சர் அமித் ஷா அதை முறைப்​படி அறிவிக்கிறார். தொடர்ந்​து, சுவேந்து அதி​காரி, சாமிக் பட்​டாச்​சார்யா மற்​றும் பா.ஜ.க. தேசிய பொதுச் செய​லா​ளர் சுனில் பன்​சல் ஆகியோர் ஆளுநர் மாளி​கைக்​குச் சென்று ஆட்சி அமைக்க உரிமை கோர உள்​ளனர்.


புதிய அரசு பதவி​யேற்​கும் விழா சனிக்​கிழமை மே மாதம் 9 ஆம் தேதி நடை​பெறும் என சாமிக் பட்​டாச்​சார்யா உறு​திப்​படுத்​தினார்.  நோபல் பரிசு பெற்ற வங்கத்தின் கவிஞர் ரவீந்​திர​நாத் தாகூரின் பிறந்த நாளான ‘ரவீந்​திர ஜெயந்​தி’ அன்று இப்​ப​தவி​யேற்பு விழா நடைபெறு​வது குறிப்​பிடத்​தக்​கது.மேற்கு வங்​கத்​தில் முதல் முறை​யாக அமைய​வுள்ள பா.ஜ.க. ஆட்சி​யின் தொடக்க விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி கலந்​து​கொள்​வார் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. மேலும், மத்​திய அமைச்சர்​கள், கூட்​டணி கட்​சித் தலை​வர்​கள் மற்​றும் பல்​வேறு மாநிலங்​களின் முதலமைச்​சர்​களும் இந்த பிரம்​மாண்ட விழா​வில் பங்​கேற்க உள்​ளனர்.

மேற்கு வங்​கத்​தின் முதலமைச்​சர் என்​பவர் மண்​ணின் மைந்தராக​வும், வங்​காள மொழி​யில் பயின்​றவ​ராக​வும் இருக்க வேண்​டும் என்று அமித் ஷா ஏற்​கெனவே குறிப்​பிட்​டிருந்​தார். அந்த தகு​தி​கள் அனைத்​தை​யும் பூர்த்தி செய்​பவ​ராக சுவேந்து அதி​காரி திகழ்​கிறார். இதனிடையே முதல்​வர் பதவிக்​கான பந்தயத்தில் அசன்​சோல் தெற்​குத் தொகு​தி​யில் வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க.​வின் அக்​னிமித்ரா பாலின் பெயரும் பலமாக  பேசப்படு​கிறது.

பா.ஜ.க.​வின் மூத்த நிர்​வாகி ஒரு​வர்  பேசுகை​யில், “முதல்​வர் பதவிக்​கான பட்​டியலில் சுவேந்து அதி​காரி​யின் பெயர் முதலிடத்​தில் உள்​ளது. அதே நேரத்​தில், மாநிலத் தலை​வர் சாமிக் பட்​டாச்​சார்யா மற்​றும் மாநிலத் துணைத் தலை​வர் அக்​னி மித்ரா பால் ஆகியோரின் பெயர்​களும் முன்​மொழியப்​பட்​டுள்​ளன” என்றார்.

அசன் ​சோல் தெற்​குத் தொகு​தி​யில் திரிணா​மூல் காங்​கிரஸின் தபஸ் பானர்​ஜியை 40,000-க்​கும் அதி​க​மான வாக்​கு​கள் வித்தியாசத்​தில் வீழ்த்தி அக்​னிமித்ரா பால் அபார வெற்றி பெற்றுள்​ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...