அதிமுகவுக்குள் பெரும் குழப்பம் கடந்த ஜந்து நாட்களாக நடந்து தற்போது இறுதி திலையை எட்டியுள்ளது,
முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், எஸ்.பி. வேலுமணி, டாக்டர் சி. விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், லீமாரோஸ் மார்ட்டின் ஆகியோர் தலைமையில் 34 எம்எல்ஏக்கள் தனியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இந்த ஆலோசனைகா கூட்டம் எடப்பாடி கே.பழனிச்சாமியை கட்சியிலிருந்து விலக்குவதா
அல்லது கட்சியை இரண்டாகப் பிரிப்பதா என்பதே அதிமுகவில் 47 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த 34 பேரும் தனி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். நேற்று காலையில் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் அதிமுக கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பன்னிரண்டு நபர்கள் மட்டுமே ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு நடைபெற்றதைத் தொடர்ந்து கடந்த 4-5 நாட்களாக 34 எம்எல்ஏக்கள் பாண்டிச்சேரி ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த அனைவரும் சென்னை வந்து சேர்ந்தனர்.
சென்னையில் சி.வி. சண்முகம் தலைமையில் நடைபெற்ற தனி ஆலோசனைக் கூட்டத்தில் மரகதம் குமாரவேல், நத்தம் விஸ்வநாதன், சத்தியபாமா, ரவி மனோகர், கே.பி. அன்பழகன், இசக்கி சுப்பையா உள்ளிட்ட 34 எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டம் அதிமுகவின் காலை நடந்த ஆலோசனையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது கூட்டம் முடிந்த பின்பு எடப்பாடி கே பழனிசாமி சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அறிக்கையை மட்டுமே வெளியிட்டார். சட்டமன்ற கட்சித் தலைவர் தேர்வு எதுவும் நடக்கவில்லை.
கொரடா உள்ளிட்ட தேர்வுகள் நடக்கவில்லை, அது குறித்து அறிவிப்புகள் எதுவும் வரவில்லை நாம் கடந்த நான்கு நாட்கள் முன்பே கூறியபடி இந்த சம்பவங்கள் அறங்கேறியது, தவெக பதவி ஏற்பில் தனது மருமகன் ஆதவ் அர்ஜுனா அமைசசராவதை நேரில் குடும்பத்து உறுப்பினர்களுடன் கண்ட
அதிமுக எம்எல்ஏக்களில் ஒருவரான லீமா ரோஸ் இந்த தனிக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
புதுச்சேரி ரிசார்ட்டில் இருந்து திரும்பிய எம்எல்ஏக்கள்
அதிமுகவின் 47 எம்எல்ஏக்களை எடப்பாடி பழனிச்சாமி புதுச்சேரி ரிசார்ட்டில் 27 நபர்களை மட்டுமே தங்க வைத்திருந்தார். இன்று அவர்களும் எதிர்ப்புக் குரல் எழுப்பவே எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட 13 நபர்கள் ஒரு அணி சி. வி. சண்முகம் தலைமையில் 34 எம் எல் ஏக்கள் ஒரு அணி
இந்த எண்ணிக்கை அதிமுகவின் மொத்த பலத்தில் இரு மூன்றில் 2 பங்கிற்கு மேல். தற்போது இந்த 34 எம்எல்ஏ-க்களும் தனியாகப் பிரிந்தால், தற்போது அவர்களுக்கு தமிழ்நாடு அரசு முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு முழுப் பாதுகாப்பு வழங்கி வருகிறது கட்சி மாறும் சட்டத்தால் (ஆண்டி டிஃபெக்ஷன் சட்டம்) அவர்களைப் பாதிக்காது, தற்போது 3ல் 2 பகுதி எம்எல்ஏ-க்கள் தனியாக செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழ்நாடு அரசியல் சூழலை முழுமையாக மாற்றியுள்ளது. 34 எம்எல்ஏக்களின் நகர்வு கட்சியின் அதிமுக என்ற கட்சியின் எதிர்காலத்தையே பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் தவெக அரசுக்கு 13 ஆம் தேதி நடைபெறும் வாக்கெடுப்பில் முழு ஆதரவு அளிக்க உள்ளது அப்போது தவெக அரசு ஏற்கனவே உள்ள 120 உடன் 34 இணைந்து ஆதரவு தரும் போது அதன் பலப்பரிட்சையில் 154 ஆக எண்ணிக்கை உயரும், அதன்பின் மறுநாள் தமிழ்நாடு மாநில முதல்வர் சி. ஜோசப் விஜய். அமைச்சர்கள் கே. ஏ. செங்கோட்டையன் மற்றும் ப. வெங்கட்ராமன் உடன் டெல்லி சென்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர், நிர்மலா சீத்தாராமன் ஆகியோரையும், தனது பதவி ஏற்பில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தியையும் அவரது நண்பர் பிரவீன் சக்கரவர்த்திமையும் சந்தித்து பேசுவார். தமிழ்நாடு அரசியல் களம் சி. ஜோசப் விஜய் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிகழ்வு காரணம் திமுகவில் கூட்டணியை முழுவதும் உடைத்து வெளிக்கொண்டு வந்ததுடன், அதிமுகவில் பிளவு ஏற்பட்ட நிலையில் அரசியல் தெளிவு கொண்ட பின்னணி முதல்வருக்கு ஆதரவுக் களத்தில் உள்ளது இங்கு கவனம் பெறுகிறது,
திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கடசிகள் போன்ற நபர்கள் இனி தவெகவுக்கு அழுத்தம் தர முடியாது.நேற்று மதியம் எம்ஆர்சி நகரில் எஸ். பி.வேலுமணி மற்றும் சி.வி சண்முகத்தை சந்தித்துப் பேசினர். சிவி சண்முகம் தலைமையிலான எம்எல்ஏக்கள் சிலர், முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்து அவரைச் சந்திக்க இருப்பதாகவும் தகவல் சிக்கல்களுக்கு எந்தத் தீர்வும் ஏற்படாவிட்டால், நாளை எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்கும் விழாவில், இந்த மோதல் வெளிப்படும் எடப்பாடி. கே. பழனிசாமி நேற்று மிகுந்த அவமானத்தைச் சந்தித்ததாகத் தகவல்,









கருத்துகள்