ஒப்பந்தப் பணிக்கான மொத்த தொகையில், 10 சதவீதத்தை கமிஷனாக தரக் கேட்ட 'தாட்கோ' அலுவர்கள் மீது புகார்
அது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒப்பந்ததாரர், ஊழல் தடுப்புக் கண்காணிப்பாளர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்துள்ளார்'தாட்கோ' என்பது , தமிழ்நாடு அட்டவணைப் பட்டியல் ஜாதி மற்றும் மலைவாழ் மக்கள் இனம் சார்ந்த வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில்,படடியல் ஜாதி மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில், வீடுகள் கட்டுவது, சாலைவசதி, மின்சாரம், தண்ணீர் தொட்டி, அறிவுசார் மையங்கள், சமுதாயக் கூடங்களை அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்கின்றன. இந்தப்பணிகளுக்கான ஒப்பந்தத்தை, எஸ்.சி., - எஸ்.டி. பட்டியல் ஜாதியை சேர்ந்தவர்களுக்கு வழங்க வேண்டும் என, அரசாணை உள்ளதாகவும். ஆனால், தாட்கோ அலுவலர்கள், அதைக் கண்டு கொள்ளாமல், அவர்களுக்கு வேண்டிய தனிப்பட்ட நபர்களுக்கு, 'டெண்டரில்' முன்னுரிமை அளிப்பதாகக் குற்றச்சாட்டு உள்ள நிலையில், ஒப்பந்தப் பணிகளை 'எடுக்கும் ஒப்பந்ததாரர்களிடம் அந்த அலுவலர்கள் லஞ்சத்தை கடடாயக் கமிஷனாகக் கேட்பதாகப், புகார் எழுந்துள்ளது. ஒப்பந்தத் தொகையில், 7 முதல் 10 சதவீதம் வரை கமிஷன் கேட்கின்றனர். எனவும்
அதை, 'எம். செட்டில்மென்ட்' என அழைக்கின்றனர். அதாவது, 'மினிஸ்டர் செட்டில்மென்ட்' என்று (கோட்வேர்டு) அதற்கு அர்த்தமாம். கமிஷன் தர மறுத்தால், ஒப்பந்ததாரர்களுக்கு வேலை முடிந்தும் பணம் வழங்காமல் இழுத்தடிப்பதாகவும் அது தொடர்பாக, மதுரை மாவட்டத்தைங் சேர்ந்த, 'தாட்கோ' பணி ஒப்பந்ததாரர் கயல்விழி, தமிழ்நாடு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
கடந்த 2024 - 2025 ஆம் நிதியாண்டில், 'தாட்கோ'வில் சிவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்து, திருப்பரங்குன்றம் மற்றும் மாடக்குளம் பகுதிகளில், ஒப்பந்தப் பணிகளை நிறைவு செய்துள்ளேன். தற்போது நடந்த
மாடக்குளம் விடுதிப் பணிக்கான, ரூபாய் 55 லட்சம் கட்டுமான தொகையில், 'எம்' செட்டில்மென்ட் என்ற முறையில், 10 சதவீதம் தொகையை 'தாட்கோ' தலைமைப் பொறியாளர் அன்பு தேவகுமாரி என்னிடம் கேட்டார். நான் லஞ்சம் தர மறுத்ததால், கடைசிவரை நிதி வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளனர்.
மேலும், 'லஞ்சப் பணம் ரூபாய் 5.5 லட்சத்தை தர மறுத்தால், அடுத்த பணிகளுக்கான ஒப்பந்தத்தை இனிமேல் வழங்க மாட்டோம்' எனவும் மிரட்டுகிறார்.
இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், நீதிமன்றம் இடைக்காலத் தடை வீதித்தது, 'தாட்கோ' சார்பில் தொடர்ந்து, எனக்கு பணி வழங்க உத்தரவிட்டது.ஆனால், நீதிமன்ற உத்தரவை 'தாட்கோ'
அலுவலர்கள் பின்பற்றாமல், தொடர்ந்து பணி வழங்காமல், லஞ்சம் தர வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகின்றனர்.
இந்தப்பிரச்னையில் தாட்கோ நிர்வாக இயக்குநர் கந்தசாமி, தலைமைப் பொறியாளர் அன்பு தேவகுமாரி உள்ளிட்டோர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்". என அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்