முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விண்ணேத்திபாறை மங்கள தேவியில் மறைந்து போன திராவிடக் கொள்கை

கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், குமுளி அருகே விண்ணேத்திப்பாறை, கடல் மட்டத்திலிருந்து 5,000 அடி உயரத்தில் மங்கலதேவி கண்ணகி கோட்டம் உள்ளது.


சேரன் செங்குட்டுவனால் 2,000 ஆண்டுகளுக்கு முன் இமயமலை கல் கனகதிவிஜயனை வென்று கொண்டுவந்து நிறுவப்பட்ட இந்தக் கோட்டம், கண்ணகியைத் தெய்வமாக வழிபடும் ஸ்தலமாகும். இது தமிழ்நாடு-கேரளம் எல்லையில் அமைந்துள்ள கோட்டம் கவனிப்பாரற்று கிடக்கிறது, அரசு ஒரு குடமுமுக்கு நடத்தவில்லை, 

1976-க்குப் பிறகு இரு மாநிலங்களுக்கிடையேயான எல்லை சர்ச்சையால் பராமரிப்பு குறைந்து சிதிலமைந்துள்ளது. சித்ரா பௌர்ணமி தினத்தன்று மட்டும் பொதுமக்கள் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது.        சோழ தேசம் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து மதுரை பாண்டிய நாட்டு கடைச்சனேந்தல் எனும் கடைச்சிலம்பேந்தல் ஏரிக்கரையிலிருந்து அக்கினிப் பிழம்பாக பந்தடி பாண்டியர் அரண்மனை அகில் கடந்து வாயில் நுழைந்த கண்ணகி மனம்‌ கலங்கியவளாய்‌

மன்னனை நோக்கி 

"நீர்வார்‌ கண்ணை  எம்முன்‌ வத்தோய்‌!யாரையோ நீ! மடக்கொடி யோய்‌!" எனத்‌ 

தேராமன்னா செப்புவது உடையேன்‌,எள்ளறு சிறப்பின்‌ இமையவர்‌ வியப்பப்

புள்ளுறு புன்கண்‌ தீர்த்தோன்‌ அன்றியும்‌வாயில்‌ கடைமணி நடுநா நடுங்க‌

ஆவின்‌ கடைமனி உகு நீர்நெஞ்சுசுடத் தான் தான் ‌ 


அரும்பெறல்‌ புதல்வனை ஆழியில் மடித்தோன்

பெரும்பெயர்ப்‌ புகார்‌என்‌ பதியேஅவ்வூர்   ஏசாச்‌ சிறப்பின்‌ இசைவிளங்கு பெருங்குடி

மாசாத்து வாணிகன்‌ மகனை ஆகி      வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்

சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்து ஈங்கு     என்கால்‌ சிலம்பு பகர்தல் வேண்டி நிப்பாற் ்‌

கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி    கண்ணகி என்பது என் பெயரே! எனப்‌ "பெண்‌ அணங்கே!


கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று    வெள்வேல் கொற்றம் காண் என. "உரைத்த காதையின் 

தெளிவுரை:  கோவலன் மனைவியும், 

மானாயக்கன் செட்டியார் மகளுமான கண்ணகி பாண்டிய மாமன்னன் நெடுஞ்செழியன் அவை முன்னே சென்றதும்‌ அவன்‌, கண்ணீர்‌

பெருக இங்கு எமது முன்னே வந்த பெண்ணே) நீ யார்‌ எனக்

கூறுவாய்‌” என்றான், உடனே கண்ணகி சிற்றம்‌ மிகுந்தவளாய்

"ஆராய்ந்து அறியாத மன்னவனே! நான்‌ யார்‌ என்று கூறுகிறேன்

இகழ்தல்‌ இல்லாத சிறப்பினையுடைய தேவர்கள்‌ வியப்படையும்

படிப்‌ புறாவின்‌ துன்பத்தைத்‌ தீர்த்த சிபிச்‌ சக்கரவர்த்தி ஆட்சி



புரிந்தது சோழ தேசம் புகார்‌ என்னும்‌ நகரம்‌. அது மட்டும்‌ அல்லாது கன்றை

இழந்த பசு ஒன்று கண்ணீர்‌ மல்க அரசனது வாயில்‌ மணியை

நசுங்குமாறு கொன்ற தன்‌ அருமையுடைய மைந்தனைத் தன்னு

டைய தேர்சக்கரத்தால் மடியச் செய்து தண்டித்த மனு நீதிச்

சோழன் வாழந்த பதியும்‌ புகார்‌ நகரம்‌ ஆகும்‌. நீதி முறையில்‌

பெரும் புகழைப்பெற்ற 'புகார்நகரமே என்னுடைய ஊர்‌ ஆகும்.

அவ்வூரில் பிறரால் குற்றம் சொல்லுவதற்கு இல்லாத பெருஞ்

சிறப்பால் புகழ் விளங்க மேவும் பெருங்குடி மரபில் மேவும்


மாசாத்துவான்‌ செட்டியார் என்னும்‌ வணிகரின்‌ மகனாய்‌, வாழவேண்டும்

என்னும் விருப்பத்தோடு ஊழ்வினை துரத்த வந்து நின்னுடைய

நகரை அடைத்து இங்கு என்னுடைய காற்சிலம்பை விற்க வரும்

போது உன்னால்‌  படு கொலை செய்யப்யப்பட்ட கோவலன்‌ மனைவி

வீரக் கழல் அணிந்த வேந்தே கண்ணகி என்பது என் பெயர் என்றாள்.

அதனைக்‌ கேட்ட பாண்டியன் பெண்ணே கள்வனைக் கொல்

லுதல்‌ அநீதி அன்று,  செங்கோளுக்குரிய வெற்றி என்று காண்பாய் என்றான்.

பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் அநீதி இழைத்தமை குறித்து மன்னன் முன்னர் தேரா மன்னா என்று அழைத்தமையும், தன்னுடைய காற் சிலம்பினை விற்க வந்தவனைப் பாண்டியன் கொல்லப் பணிந்தான் என்று பகர்ந்தமையும் அரசன் தன் செவியிற் கொள்ளானாகிப் பெசத்தலைப்பட்டான் என்க. ஆதலால் கண்ணகியின் காற் சிலம்பைக்‌ கோவலன்‌ விற்க வந்ததன்‌ என்பதனை ஓர்கிலாய்க்‌கள்வனை. கொல்லுதல்‌ அநீதியன்று என்று சாற்றினன்‌ என்பதாம்‌.  வரலாறு அன் பின் தனது கணவன் குற்றமறவன் என்பதை நிரூபித்து அரசன் அழிய அவை அழிய மதுரை அழிய கால்நடையாக வருஷநாடு வழியில் 14 நாட்கள் நடந்து பளியங்குடி வழியாக சேர நாட்டு மங்கலதேவி என அழைக்கப்படும்  மலைவனத்தை அடைகிற கண்ணகியை பூந்தேரில்  கோவலன் ஆன்மா மற்றவர்கள் பார்வைக்கு உரூவமாகவும், அரூபமாகவும் வந்து கூட்டிச்சென்றதான ஸ்தலம் கேரளம் மாநிலத்தில் தமிழ்நாடு எல்கைக்கு அப்பால் அமைந்துள்ளது, கடந்த ஆண்டு சித்திரா பௌர்ணமி போல் இல்லாமல் இந்த ஆண்டில் இருமாநில தேர்தல் நேரத்தில் வந்த சித்திரா பௌர்ணமி விழா கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி விழாவில் கேரளம் காவல்துறை கெடுபிடி காரணமாக பக்தர்கள் அதிருப்தி


தமிழ்நாடு- கேரளம் எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோட்டம் (கோவில்) சித்ரா பவுர்ணமி விழாவில், இரு மாநில பக்தர்கள் திரளாகவே பங்கேற்றனர்.

தேனி மாவட்டம், கூடலுார் அருகே தமிழ்நாடு - கேரளம் எல்லை, விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று மட்டுமே விழா கொண்டாடப்படும். இந்த பழமை வாய்ந்த கோவிலுக்குச் செல்ல கேரள வனப்பகுதி வழியாக, 14 கி.மீ., துாரத்தில் ஜீப் செல்லும் பாதையும், தமிழ் வனப்பகுதியான பளியன்குடியிலிருந்து, செங்குத்தாக 6.6 கி.மீ., தெள்ளுக்குடி வழியாக, 3.5 கி.மீ., துாரம் நடைபாதையும் உள்ளது.


நேற்று, சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு, தொழும் தெய்வம் கண்ணகி பச்சை நிறப் பட்டுடுத்தி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தமிழ்நாடு பூஜகர் இராஜலிங்கம் பூஜை செய்தார்.வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிகமாக பக்தர்கள் வந்தனர். குமுளியிலிருந்து கேரளத்து வனப்பகுதி வழியாக கோவிலுக்குச் செல்ல, பேரூந்து நிலையத்தில் இருந்து அரசும் தனியாரும் ஒப்பந்தம் செய்த ஜீப்புகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த முறை குறைத்ததால் தரிசனம் முடித்து மாலை 6.30 மணிக்கு திரும்பிச் செல்ல முடியாமல் பக்தர்கள் சிரமப்பட்டனர்.

கோவில் வளாகத்தில் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில், வருவாய்த் துறையினர் வனத்துறையினர் தீயணைப்பு மற்றும் மருத்துவத் துறையினர், ஹிந்து சமய அறநிலையத்துறையினர், இருந்த நிலையில் விழக்க்குழுவினர் பொங்கல் வைக்க முயன்ற போது, அனுமதி இல்லை எனக்கூறி கேரளம் காவல்துறையினர் தடுத்தனர். இரண்டு (இடுக்கி,தேனி)மாவட்ட ஆட்சியர்கள் கூட்டுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படியே பொங்கல் வைப்பதாக, தமிழ்நாடு வருவாய் துறையினர் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்த பின், அனுமதி அளித்தனர்.

இதற்கிடையே, தரிசனம் முடித்து கோவில் வளாகத்தில் இளைப்பாறிய பக்தர்களை மதியம், 12:00 மணிக்கே கோவிலை விட்டு வெளியேற வேண்டும் என கேரளம் காவல் துறையினர் கெடுபிடி காட்டியதால், பக்தர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். இந்த நிலையில் இனி தமிழ்நாடு ஆட்சி மாற்றம் நடந்து அடுத்து அமையும் ஆட்சி இதற்கு நல்ல தீர்வு காணவேண்டும் என பக்தர்கள் பகிரங்கமாகவே பேசினர்.  பாரத நாடு ஒரே நாடு இதில் உள்ளே உள்ள மாநிலங்களின் இது போன்ற சிறு சிறு பிரச்சனைகளுக்கே தீர்வு வராத போது தான் நாட்டு பிரிவினைகள் பெரிதாகத் தெரிகிறது., இதுவரை ஆட்சி செய்த திராவிடம் பேசுபவர்கள் இங்கு மட்டுமே 50 வருஷம் காணவில்லையே  ஏன்?திராவிடப் பகுதி தானே கேரளம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...