முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு முதல்வராக தலெக தலைவர் ஜோசப் விஜய்,சந்திரசேகர் நாளை பதவி ஏற்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய்,சந்திரசேகர்


தமிழ்நாடு  முதலமைச்சராக நாளை மே மாதம் 10, 2026  பகல் 11 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவியேற்க உள்ளார். தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டு வென்ற திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் சிபிஐ, சிபிஐ (எம்), ஐயூஎம்எல், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை, ஆளுநர் மாளிகையில் தவெக தலைவரும், சட்டப்பேரவைக்கு குழுத் தலைவருமான ஜோசப் விஜய் இன்று மே 9 அன்று மக்கள் பவனில் நேரில் சந்தித்தார்.





அப்போது, அவர் கோரிக்கை ஏற்று ஆட்சியமைக்க ஆளுநர் முதல்வராக நியமித்து பதவிஏற்க உத்தரவிட்டார், அவருடன் சில முக்கியத் தலைவர்கள் கே. ஏ. செங்கோட்டையன், புஸ்ஸி என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முதல்வருடன் பத்து அமைச்சர்கள் பதவி ஏற்கிறனர். விழா ஏற்பாடுகளை அரசு சிறப்பாகசா செய்து வருகிறது. பிரச்சினைகளும், சவால்களும் தான் ஒரு மனிதனை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றன!



தவெக கட்சி ஆரம்பித்து இரண்டே ஆண்டில்  நினைத்துப் பார்க்க முடியாத வெற்றியை தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் தந்துள்ளார்கள்.!






எந்தக் கூட்டணி பலமும் இல்லாமல், அதிமுக, திமுக என்ற 2 பெரிய கட்சிக் கூட்டணிகள் பெற்ற ஒட்டு மொத்தத் தொகுதிகளை விட அதிகத் தொகுதிகளில் விஜயின் தவெக வென்றுள்ளது. தவெக மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். அதைத்தான் நாம் கடந்த ஆறுமாதம் முன்பே கூறினோம்.

கடந்த இரண்டாண்டுகளாக மக்கள் பிரச்சினைகளை பெரிய அளவில் பேசி கவனப்படுத்தாமலேயே, கவர்ச்சி நிறைந்த 


 கட்சிக் கட்டமைப்பை  வலுப்படுத்தவோ, நிர்வாகிகளுடனான தனிப்பட்ட நல்லுறவை பேணவோ, மக்களை தேடிச் சென்று இயல்பாக சந்திக்கவோ முயற்சி செய்யாமலேயே, ஒரு  தன்னெழுட்சி தான் இவ்வளவு அதிகமான வெற்றியை விஜய் பெற்று விட்டார். காரணம், ஒரு நல்ல தலைவன் வரமாட்டானா? என மாற்றத்திற்கு மக்கள் ஏங்கியதே ! உண்மை 










மேற்படி விஷயங்களில் கவனம் செலுத்தி, இன்னும் விஜய் உழைத்திருந்தால் முழு மெஜாரிட்டி தவெக வுக்கு கிடைத்திருக்கும். 

அத்துடன் மிக எளிய பின் புலத்தில் இருந்து எம்.எல்.ஏ ஆகும் வாய்ப்பு பெற்றவர்கள் அதாவது சிலர் சலவைக் கடை மற்றும் சலூன் கடை நடத்திய நிலையில் சட்டமன்ற உறுப்பினர் ஆனது வரலாற்றுப் புதுமை தான்,பிரச்சாரத்திற்கும், வாகனத்திற்கும் கூட செலவழிக்க இயலாமல், கடைசி நேரத்தில் பூத் கமிட்டியில் இருப்பவர்களுக்கு சாப்பாடு உள்ளிட்ட அடிபப்டை விஷயங்களுக்கு கூட செலவு செய்ய இயலாதவர்களாக தவித்துப் போயினர். இந்த நிலையில் கூட பலர் வெற்றி பெற்றனர் என்றாலும், போதுமான உதவியும், தலைமையின் ஒத்துழைப்பும் அமையாத நிலையில் கடும் உழைப்பை செலுத்தியும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர்கள் பலர் தோற்க நேர்ந்தது! இப்படிப்பட்டவர்களுக்கு மட்டும் விஜய் தேவையான பொருளாதார உதவி தந்திருந்தால் வெற்றி இன்னும் பிரகாசமாக இருந்திருக்கும். அறுதிப் பெரும்பானமையே கிடைத்திருக்கும்.

மேலும், எளிய பின்புலத்தில் இருந்து இளைய தலைமுறையினர் பலர் சட்டமன்றத்திற்குள் நுழையும் வாய்ப்பைப் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. 





ஜாதிகளைக் கடந்து, மத உணர்வுகளைக் கடந்து மக்கள் நல்லாட்சிக்கு வாக்களிக்கக் கூடியவர்கள். பணத்தை பொருட்டாக மதிக்காமல் நல்லாட்சிக்கு சமரசமில்லாமல் தங்கள் வாக்கை  செலுத்தி உள்ளனர் என்பதும், முகமே தெரியாத பலரது வெற்றி பேசப்படும் நிலையில், தங்கள் மீது அக்கறை இல்லாத வேட்பாளர்களை மக்கள் தூக்கி எறியத் தயங்கமாட்டார்கள் என்பதையும் நிருபித்துவிட்டனர். ஆனால் தற்போது ஆதரவு தரும் கட்சிகள் எல்லாம் ஒன்று மதம் சார்ந்த கட்சி, மற்றொன்று ஜாதி சார்ந்த கட்சி அடுத்து உள்ள கட்சிகள்  காங்கிரஸ் போல போலி மதசார்பின்மை பேசும் கட்சிகள். தான் ஆதரவுக் கூட்டணி ஆகவே எச்சரிக்கை தேவை. அவர்கள் கொள்கை தவெகவை வெற்றி பெற வைக்க வில்லை மக்கள் உங்களுக்கு ஊழல் மற்றும் லஞ்சம் லாவண்யத்திற்கு எதிரான தலைவராகப் பார்த்து தான் அவர்கள் உங்கள் மீதான நம்பிக்கை வைத்து ஆதரவு தந்து அது வெற்றி என மாறியது.

இதே போல, ’நல்லாட்சி தருவேன்’ என நிருபிக்க வேண்டிய கட்டாயம் முதல்வராகும் விஜய்க்கு இருக்கிறது. ஆகவே, அவர் இனி மேல் தனது சினிமா இமேஜை தூக்கி வைத்து விட்டு ஒரு மக்கள் தலைவனாக களத்தில் இறங்கி எளிமையாய் எந்த பந்தாவும் இல்லாமல்  பேசிப் பழகி செயலாற்ற வேண்டும்.

பக்கத்து மாநிலத்தில் ஆட்சி செய்யும் கேரள முதல்வர்கள், அமைச்சர்களை போல, எப்போதும் மக்களோடு மக்களாக கலந்து உறவாடி, தன்னை எளிமைப்படுத்திக் கொண்டால் தான் அதிகாரிகளும், நிர்வாகிகளும் மறைக்கும் விஷயங்களை மக்கள் வழியாக விஜய் கேட்டறிய முடியும்.

விஜய்க்கு மாபெரும் மக்கள் ஆதரவு இருக்கிறது எனத் தெரிய வந்தாலும் கூட, அவரோடு கூட்டணி சேர்ந்து இளைய தலைமுறையினரிடம் நம்பிக்கையை வென்றெடுக்கும் வாய்ப்பை திமுக கூட்டணிக் கட்சிகள் தவறவிட்டுவிட்டனர். இதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது, ’விஜய்யோடு சேரலாம். ஆனால், செலவுக்கு பணம் கிடைக்காது’ என்பதே.


தன் கூட்டணிக் கட்சிகளுக்கு தேர்தல் செலவாக தொகுதிக்கு 20 கோடி திமுக தந்துள்ளது. அவர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி, இது தவிர, கட்சித் தலைமைக்கும் தனியே தந்தார்களாம். இந்தப் பணத்தை இழக்க விரும்பாதே தவெக கூட்டணியை முதலில் திமுக கூட்டணிக் கட்சிகள் தவிர்த்ததாகச் சொல்லப்படுகிறது.

காங்கிரஸ் இரண்டாம் கட்டத் தலைவர்கள், நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணிக்கு ஆசைப்பட்டனர். ஏன், காங்கிரஸ் ராகுல் காந்தியே தவெகவுடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டினார். ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வம் பெருந்தகையும், அவரது தலைவர் ப.சிதம்பரமும், மல்லிகார்ஜுன கார்கேவும் தவெகவுடன் சேரும் வாய்ப்பைத் தடுத்து காங்கிரசின் எதிர்காலத்தைக் கெடுத்து விட்டனர்.

எப்படியோ, தனித்துவிடப்பட்டதால் மக்களின் கூடுதல் அனுதாபம் பெற்று தவெக இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மக்கள் வைத்த நம்பிக்கையை நாம் காப்பாற்ற வேண்டும் என்ற பயம் மனதில் எப்போதும் இருந்து கொண்டே இருந்தால் தான் தவெகவினருக்கு தவறு செய்ய வாய்ப்பிருக்காது. அதிகமாக ஆதிக்கம் செலுத்த காங்கிரஸ் தவெகவை ஆதரிக்கும் எனத் தெரிகிறது. அதன் எண்ணிக்கை போதாது. ஆகவே,  உடைந்த ஒரு பகுதி அதிமுக வெளியில் இருந்து ஆதரவு தரலாம் என்ற பேச்சும் பலமாக அடிபடுகிறது. உடனே அடுத்த தேர்தலை மக்களுக்கு நிர்பந்திப்பதை தடுக்க வேண்டிய கடமை தங்களுக்கு இருக்கிறது என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுவது கவனத்திற்கு உரியதாகும். 



ஆனால், அந்த ஆதரவு நீடிக்குமா? நிலைக்குமா? தெரியாது. பாமக, விசிக போன்ற சிறிய கட்சிகளை உள்ளுக்குள் கொண்டு வந்து அமைச்சர் பதவிகள் தர நேர்ந்தால் அவர்களை கட்டுப்படுத்தி வழி நடத்தும் ஆளுமை  மிகமிக அவசியம். இல்லாவிட்டால், கூட்டணிக் கட்சி குடைச்சல்களால் விஜய் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலை மதி நுட்பத்துடனும், சகிப்புத் தன்மையுடனும் சமாளித்து நல்லாட்சி தருவதில் தான் விஜய்யின் அரசியல் எதிர்காலம் உள்ளது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற தீராத ஆவல் மனதில் கழன்று எறிந்தால், சூழல்கள் கனிந்து, நல்லோர்களின் ஆதரவை இயற்கை சக்தி பெற்றுத் தரும்! `மதவாத சக்திகளுக்கு தமிழகத்தில் இடம் தர மாட்டோம் என்று உறுதியளித்தார்'' - CPM தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன். இ யூ முஸ்லீம் லீக் யார்?

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் என்ற மதவாதக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் என்கிற  பட்டியல் சமூக ஜாதியக் கட்சி, கம்யூனிஸ்டுகள் என்கிற ஹிந்து மத விரோத கட்சிகள், காங்கிரஸ் என்கிற போலி மதசார்பின்மை பேசும் கட்சி ஆகிய மதவாத சக்திகளின் தயவில் ஆட்சியை அமைக்க காத்திருக்கும் த வெ க இந்த உறுதியை அளிப்பது வேடிக்கையாகவே பார்த்தாலும் .தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் எதிர்பார்க்கப்படும் அமைச்சர்களின் தற்காலிகப் பட்டியல்:  பொது நிர்வாகம், காவல்துறை மற்றும் உள்துறை  முதலமைச்சர் ஜோசப் விஜய் சந்திரசேகர், பொதுப்பணித் துறை கே. ஏ. செங்கோட்டையன், நகராட்சி நிர்வாகத் துறை  புஸ்ஸி என். ஆனந்த், மின்சாரத் துறை  சி.டி.ஆர். நிர்மல் குமார்,  விளையாட்டு மற்றும் மதுவிலக்குத் துறை  ஆதவ் அர்ஜுனா, ஆதி திராவிடர் நலத்துறை இராஜ்மோகன், சிறுபான்மையினர் நலத்துறை முஸ்தபா, பதிவு மற்றும் வணிக வரித்துறை அருண்ராஜ்,   பள்ளிக் கல்வித்துறை வெங்கட் ரமணன்,  இறுதி அமைச்சரவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக  அரசிதழ் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னால் அமைச்சர்கள் சி வி. சண்முகம், எஸ். பி.வேலுமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 3 பேர் தலைமையில் 35 எம்.எல்.ஏ.க்கள் ஏற்கனவே வெளிவந்த பின்  உடைகிறது எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக,  துரோகத்திற்கு துரோகம் தான் பரிசாகக் கிடைக்கும்  அந்த வகையில் அதிமுக உடைகிறது CV சண்முகம் தலைமையிலான அதிமுக MLA பிரிவினர் தமிழக வெற்றிக்கழகத்தினரிடம் பேச்சுவார்த்தை. நடத்தும் நிலையில் சிவி சண்முகம் தலைமையிலான எம்எல்ஏக்கள் குழு தமிழக வெற்றிக் கழகம் விஜய் தலைமையிலான ஆட்சி அமைக்க மேலும் ஆதரவு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெக ஆட்சிக்கு CPI(M) ஆதரவளித்ததை அடுத்து மாநிலக்குழு அலுவலகத்திறகு வருகை தந்த தவெக தலைவர் சி.ஜோசப் விஜய்  CPI(M) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷணன், சண்முகம் உள்ளிட்ட பலர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றதைத் தொடர்ந்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், என்.குணசேகரன், கே.பாலபாரதி, அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், ஆர்.சச்சிதானந்தம், சட்டமன்ற உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி உள்ளிட்ட மாநிலச் செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்களை சந்தித்து நன்றி கூறிய சந்திப்பில் தவெக தலைவர்கள் புஸ்ஸி என். ஆனந்த், கே.ஏ.செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா, வெங்கட்ராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். விஜய் தரப்பில் ஆளுநரிடம் ஆட்சிக்கு ஆதரவு அளித்துள்ள எம்எல்ஏக்களின் பட்டியலில்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ ஆதரவு என்றும் கூறி இருந்த நிலையில் தவெக-வை ஆட்சி அமைக்க அழைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தாக்கல்.  அது வாபஸ் பெற வேண்டும். தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தலில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ள 107 தவெகவை ஆட்சி அமைக்க அழைக்க பொறுப்பு ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி முன்னாள் ஐ.ஜி Dr.M.ராமசுப்ரமணி வழக்கு தாக்கல்! காரணம் காங்கிரஸ் தூண்டுதல் ஆதரவு தருகிறோம், தரவில்லை எனச் சொல்ல எதற்கு இவ்வளவு காத்திருப்பு. விசிக வுக்கு காரணம் பேரம் பேசியது வெளியே அனைவருக்கும் புரிகிறது.  இப்போது அனைத்து ஆதரவையும் விட்டுவிட்டு தவெக விஜய்க்கு மக்கள் கொடுத்த 107 ஜ நம்பி தனித்து ஆட்சி அமைக்கக் கோரிக்கை விடுத்தால் சட்டப்படி புளோர் test நடத்த வேண்டும்.. அதைத் தாண்டி இடதுசாரிக் கம்யூனிஸ்ட் கட்சி பின்னாலே சுற்றுவது ஏதோ உள் நோக்கம் மட்டுமே தெரிகிறது.. அனைவருக்கும் பொதுவான கட்சியாகவே தவெக ஆட்சி அமையுங்கள். அஇஅதிமுக சார்பாக 2022-ஆம் ஆண்டு மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட சி.வி சண்முகம்,நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மைலம் தொகுதியின் MLA-வாக வெற்றி பெற்றுள்ள நிலையில்,இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவிக் காலம் கொண்ட தனது ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.அதனால் காலியாகயுள்ள  மீதமுள்ள இரண்டு ஆண்டுகளுக்கான பதவிகாலத்திற்கு  புதிய உறுப்பினரை தேர்வு செய்ய ராஜ்யசபா தேர்தல் அடுத்த 6 மாதத்திற்குள் நடத்தப்படும்.எனவே சட்டபேரவை பலத்தின் அடிப்படையில் தவெகவிற்கு தனது முதல் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும்! இஸ்லாமிய வேட்பாளர்கள் மதம் சார்ந்த கட்சியில் மதசார்பற்ற கூடடணி எனக் கூறி சிதம்பரம், நாகப்பட்டினம், பாபநாசம், வாணியம்பாடி, நன்னிலம், மணப்பாறை, மயிலாடுதுறை, பண்ருட்டி ஆகிய தொகுதிகளில் முஸ்லீம்கள் போட்டியிடும் நிலையில் மதம் சார்ந்த ஹிந்து, கிறிஸ்தவ, பௌத்த, சமண அல்லது ஜைன மார்வாடிகள் வாக்குகள். கிடைத்திருக்குமா?  ஏனெனில் பாஜக மட்டுமே மதவாதக் கட்சி எனும் இவர்கள் கூடடணிக் கருத்து. இந்தத் தேர்தலுடன் முடிவானால் மகிழ்ச்சி. மக்கள் விஜய் முதல்வர் பதவி ஏற்பை மகிழ்வுடன் கொண்டாடுகின்றனர். வாழ்த்துக்கள் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...