தவெக தலைவர் விஜய் முதல்வராக 7ஆம் தேதி தவெக தலைவர் பதவி ஏற்பதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த தடபுட ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டு, விஜய் முதல்வராக பதவி ஏற்கும் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது
தகவல் தமிழக அரசியலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று இருக்கிறது. இது அனைத்துமே தவெக உடன் காங்கிரஸ் கூட்டு சேர்ந்த பின்பே அரங்கேறிய சம்பவம் என்பதும், இதன் பின்னணியில் என்ன நடந்தது என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.
108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையான 118 தொகுதிகள் இல்லாத நிலையில் மற்ற கட்சிகளின் ஆதரவை தவெக கோர வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதில் அதிமுக தரப்பில் சி வி சண்முகம் மற்றும் எஸ் பி வேலுமணி ஆகியோருடன் செங்கோட்டையன் பேசி வந்திருக்கிறார், மேலும் பாமக தரப்பிலும் செங்கோட்டையன் பேசி வந்ததாக கூறப்படுகிறது.
அதிமுக தரப்பில் சி வி சண்முகம் மற்றும் எஸ் பி வேலுமணி தரப்பு தவெகவுக்கு ஆதரவு கொடுக்க முடிவு செய்து இருக்கிறார்கள், எடப்பாடி இதற்கு சம்மதம் தெரிவிக்க வில்லை என்றாலும் கூட பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் சி வி சண்முகம் மற்றும் எஸ் பி வேலுமணி பக்கம் நிற்பதால் தவெகவுக்கு அதிமுக ஆதரவு நிலைப்பாடு எடுக்க அதிக வாய்ப்பு இருந்தது, குறிப்பாக துணை முதல்வர் உட்பட அமைச்சரவையில் இடம் ஆகியவை பெறுவதற்கான முடிவில் சி வி சண்முகம் மற்றும் எஸ் பி வேலுமணி ஆகியோர் செங்கோட்டையனிடம் பேசி வந்து இருக்கிறார்கள்.
இதற்கு இடையில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியுடன் ஆதவ் அர்ஜுனா பேசி வந்திருக்கிறார், காங்கிரஸ் கைவசம் வெறும் 5 தொகுதிகள் தான் உள்ளது இருந்தும், காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு கொடுக்க முன் வந்த பின்பு, அவர்களை தொடர்ந்து கம்யூனிஸ்ட் , விசிக, போன்ற கட்சிகள் வந்துவிடும் இது போன்ற சிறிய கட்சிகளை ஒருங்கிணைத்து ஆட்சி அமைத்து விடலாம் என்று விஜய்யிடம் ஆதவ் அர்ஜுனா பேசி இருக்கிறார்.
இதனை தொடர்ந்து எங்கே மற்ற எந்த கட்சியாவது முதலில் சென்று தவெகவில் துண்டை போட்டு விடக்கூடாது என வெறும் 5 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி முண்டியடித்து கொண்டு திமுகவுக்கு கல்தா கொடுத்துவிட்டு தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது. ஆனால் காங்கிரஸ் உள்ளே வந்த பின்பு தான் விஜய்க்கு சிக்கல் தொடங்கி இருக்கிறது, காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா எதிர்பார்த்தது போன்று இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் , விசிகவும் தவெகவுக்கு ஆதரவு கொடுக்க வரவில்லை.
மேலும் அதிமுக தரப்பில் இருந்து காங்கிரஸ் இருக்கும் இடத்திற்கு தங்கள் வருவதற்கு யோசிக்க வேண்டும் என ஒரே போடாக செங்கோட்டையனிடம் தெரிவித்து இருக்கிறார்கள் சி வி சண்முகமும், எஸ் பி வேலுமணியும், அதுமட்டுமின்றி அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக அன்புமணி ராமதாசை தொடர்பு கொண்டு தவெக தரப்பு பேச காங்கிரஸ் இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க விரும்பவில்லை, இருந்தாலும் பரிசீலனை செய்வதாக தெரிவித்து விட்டாராம் அம்புமணி ராமதாஸ்.
இப்படி ஒரு சூழலில் தனி மெஜாரிட்டிக்கான 118 சட்டமன்ற உறுப்பினர்களின் கையப்பமிட்ட பட்டியலை கொடுத்தால் தான் பதவி பிரமாணம் செய்வேன் என்று தமிழக ஆளுநர் தவெக தரப்பிடம் தெரிவிக்க, விஜய்க்கு வழங்கப்பட்ட முதல்வருக்கான பாதுகாப்பு முதற்கொண்டு திரும்ப பெறப்பட்டு இருக்கிறது, செங்கோட்டையன் சாமர்த்தியமாக காய்களை நகர்த்தி அதிமுக தரப்பில் இருந்து 32 க்கு மேற்பட்ட எம் எல் ஏக்களை தவெக பக்கம் கொண்டு வருவதற்கு முயற்சித்து வந்த நிலையில்,
வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் பானையை உடைத்த கதையாக காங்கிரஸ் என்கிற தேவையில்லாத ஆணியை தவெகவுக்குள் ஆதவ் அர்ஜுனா கொண்டு வந்து விஜய் முதல்வராக பதவி ஏற்பு விழாவுக்கு ஆப்பு வைத்து விட்டார் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களின் பட்டியலை தமிழ்நாடு ஆளுநர் மேதகு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் மற்றும் பிற அதிகாரிகளுடன் நேற்று மக்கள் பவனில் சந்தித்து வழங்கினார்கள். இந்த நிலையில்108 எம்எல்ஏக்கள் உள்ள தனிப்பெரும் கட்சியாக தனித்து தவெக ஆளுனரிடம் வந்து ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை
காங்கிரஸ் கடசியடன் எம்எல்ஏக்கள் இணந்து கூட்டணி ஆட்சி அமைக்க ஆதரவு எனக் கூறி 113 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமைக் கடிதம் மூலம் கோரியுள்ளது த.வெ.க என - மக்கள் பவன் தகவல் கூட்டணி ஆட்சி எனக் குறிப்பிட்டுள்ளதால் 118 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும் என ஆளுனர் கேட்பதில், தார்மீகம் சட்டம் மற்றும் நியாயம் அனைத்தும் உள்ளது. அதோடு கூட்டாக தேர்தல் மூலம் போடடி இல்லாத நிலையில் ஒரு பொது வேலைத்திடடம் மற்றும் கூட்டணிக்கு ஒரு பெயர் வைக்க வேண்டும் இது நடக்கவில்லை என மத்திய அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஏ. ஆர். எல். சுந்தரேஷன் தகவல் தனிப்பெரும் கட்சி என்று 108 எம்.எல்.ஏக்கள் பட்டியலை கொடுக்காமல் கூட்டணி ஆட்சி என்று காங்கிரஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களையும் சேர்த்து ஆட்சி அமைக்க கூட்டாக உரிமை கோரியது விஜய் தரப்பின் தவறு
இதை மறைத்து மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் பேசுகிறார், அது திமுகவை விட்டு வந்த காங்கிரஸ் தவெகவை விட்டு விடக்கூடாது என்பதால், அவர்கள் தவறான வழிகாடடுதல் மூலம் காய்நகர்த்தி விஜய் முதல்வராவதை தடுக்கும் நோக்கம் தெரிகிறது.
அதுதான் இப்போதைய முக்கிய சிக்கல். கூட்டணி ஆட்சி என்றால் மீதமுள்ள எம்.எல்.ஏக்களின் பட்டியல் எங்கே என கேட்டிருக்கிறார் ஆளுநர். அதில் தவறில்லை.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் முதன் முதலாக தன்னுடைய கடசி பிரதிநிதியை அனுப்பி ஆதரவு கேட்டிருந்தால், அவர் நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்து, ஆட்சி நடத்த ஒத்துழைப்பு நல்கியிருப்பார். ஆனால் அவர் ரகசிய பேசசில் வைத்த டிமாண்ட் என்பது செங்கோட்டையன் மீதானது அதை ஏற்கவிலை தவெக.
யாரோ கொடுத்த ஆலோசனையை நம்பி விஜய் மோசம் போயிருக்கிறார் எனலாம். குறிப்பாக, காங்கிரஸை அழைத்தது. அவர்கள் நிபந்தனை விதித்ததை ஏற்றது பாஜகவை மிகுந்த உஷ்ணமாக்கியிருக்கிறது.
ஆட்சி அமைக்க ஆளுநர் மாளிகைக்கு செல்லும் விஜய் ஒரு பூங்கொத்து வாங்கிக்கொண்டு ஆளுநரை சந்திக்க வேண்டும் என்ற மரபும் மரியாதையைக் கூடவா கே. ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் கூறியிருக்கமாட்டார்கள் ? ஆனால், ஆளுநர் தவெக தலைவர் விஜய்க்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.
ப்ரோட்டோகால் என்றால் என்னவென்றாவது சொல்லியிருக்க வேண்டாமா ? ஆர்.வி.அர்லேகருக்கு ஆதரவுக் கடிதம் வழங்க வலியுறுத்தி சில கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. இதில் வேடிக்கை என்னவென்றால், ஆதரித்து வளிவர மாட்டாத விசிக கமயூனிஸ்ட் கட்சிகளை ஏன் விஜய் நமப வேண்டும் இருபது ஆண்டுகளுக்கு முன், 234 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில், 96 இடங்களை மட்டுமே பெற்ற திமுக, 68 இடங்களை பெற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தமிழகத்தில் ஆட்சி அமைத்தது. அது கூடடணி ஆட்சி என முதலில் கூறவில்லை ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவுக்கு திமுக ஆதரவு
நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் மரபுகளை நன்கு அறிந்த தமிழ்நாடு அரசின் முன்னாள் அதிகாரி ஒருவர், ஆளுநர் ஆதரவுக் கடிதம் கேட்பதில் தவறில்லை, ஆனால் அவர் தலை எண்ணக் கூடாது என்று விளக்குகிறார். எந்தக் கட்சியும் தனது பலத்தை வெளிப்படுத்துவதற்கு சபையின் தளமே சிறந்த இடமாகும். தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை ஆதரவை தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகம் ஏற்படுத்தவில்லை என்பதைத் தொடர்ந்து, அவர் முன்னோடியாகப் பல வாய்ப்புகள் உள்ளன. வியாழன் (மே 7, 2026) பிற்பகல், ஆளுநருக்கும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் 108 இடங்களைப் பெற்றுள்ள டிவிகேயின் நிறுவனர் சி. ஜோசப் விஜய்க்கும் இடையே கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற இரண்டு சுற்றுச் சந்திப்புக்குப் பிறகு, அர்லேகரின் அலுவலகம் இந்த நிலையைப் பகிரங்கப்படுத்தியது. தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சிராப்பள்ளி (கிழக்கு) ஆகிய இரண்டு இடங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், கட்சியின் எண்ணிக்கை 107 ஆக இருக்கும். ஆளுநர் ஸ்ரீ ராஜேந்திர அர்லேகர் பாப்,
2018 ல் கர்நாடக ஆளுநர் வெளியிட்ட இந்தக் கடிதத்தை பலர் கூறுவது , அங்கு தனிப்பெரும் கட்சி ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டு, அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் நிரூபிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற போது அமலில் இருந்த "தேர்தல் நடத்தை விதிமுறைகள்"திரும்ப பெறப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் தேர்தல் அதிகரிக்கும் கடிதம்.ஆளுநரை சந்திக்க சென்ற அணியினரிடம் பேசியதிலிருந்து கிடைத்த தகவல்..
தவெக செய்திருக்கும் அடிப்படை பிழை
ஆளுநரை சந்திக்க தங்கள் கட்சி வாங்கிய தனித்த எண்ணிக்கை மட்டும் காட்டாமல்(108) 107 + காங்கிரஸோடு சேர்த்து 112 என்று காட்டியிருக்கிறது தவெக இதனைப் பார்த்த ஆளுநர் 118 இல்லையா?எ ன்று கேட்டிருக்கிறார்.107(1 சபாநாயகர்)என்ற தங்கள் பெற்ற எண்களை மட்டும் காட்டி இருந்தால் பதவியேற்ற பிறகு 14 நாட்களில் உங்கள் பெரும்பான்மையை நிரூபித்துக் கொள்ளுங்கள் என்று ஆளுநர் கூறியிருப்பார்.இவர்கள் போகும்போது தேவையே இல்லாமல் காங்கிரஸையும் எக்ஸ்ட்ரா லக்கேஜ் ஆக சேர்த்துக் காட்டியது நேரிட்டிருக்கும் இந்த குழப்பத்திற்கு காரணம் என்று சட்டவல்லுநர்களால் கூறப்படுகிறது. ஆளுநரைச் சந்திக்கும் போது சிங்கிள் லார்ஜஸ்ட் பார்ட்டியாக என்ன செய்ய வேண்டும் என்ற தரவுகளோடு செல்லாமல் தவெக சென்றது உருவாகி இருக்கும் வதந்திகளுக்கும், புரளிகளுக்கும் காரணம்.தங்களது புரிதல் பிழையை மறைக்கவே நரேட்டிவ்கள் செட் செய்யப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.இந்த தருணத்தை பாஜக பயன்படுத்த வாய்ப்புகள் உண்டு என்பதையும் மறுக்க முடியாது.ஆனால்,K.A.செங்கோட்டையன் போன்ற முன்னாள் அமைச்சர்கள் இருக்கும்போதே இந்தப் பிழை எப்படி ஏற்பட்டது என்பது புரியவில்லை?இவர்கள் இதை மட்டும் செய்யவில்லை லோக்பவனுக்கு தாங்கள் வாங்கிய ஓட்டு சதவீதம் இது என்று மின்னஞ்சலும் அனுப்பி இருக்கிறார்கள்.அது தவறு இல்லை;ஆனால் அது ஒரு மரபே இல்லை என்பது தான் எதார்த்தமான உண்மை.இவர்களின் சட்ட ரீதியான புரிதலுக்கு இவைகளே மிகச்சிறந்த உதாரணங்களாக திகழ்கின்றன! இதில் பொது நீதி யாதெனில் ஆளுநரை விமர்சனம் செயயும் கம்யூனிஸ்ட் கடசிகள் தவெக தரப்புக்கு ஆதரவு தந்து ஆட்சி அமைக்கலாமே ஏன் அதை செய்யவில்லை


















கருத்துகள்