முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பள்ளிக்கல்வித்துறையில் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூபாய்.100 கோடி மோசடி பி.டி. அரசகுமார் கைது

 தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறையில் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூபாய் .100 கோடி மோசடி 

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் பி.டி. குமார் என்ற பி.டி.அரசக்குமார் கைது.. 

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகவும், NOC  தடையில்லா சான்றிதழ்  லஞ்சம் மூலம் பெற்றுத் தருவதாகவும் மோசடி.

தமிழ்நாடு தனியார் பள்ளிகளுக்கான கூட்டமைப்பு செயலாளர் இளங்கோவன் கொடுத்த புகாரில் சென்னை குற்றப்பிரிவு காவல்துறை நடவடிக்கை.. 

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்' என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கத்தை நடத்தி அதை மாவட்டம் தோரும் நிர்வாகிகள் நியமித்து நடத்தி வந்துள்ளார் இந்த பி.டி. குமார் எனும் B.T.அரசகுமார்.

தி.மு.க பிரமுகரான அரசகுமார், முன்னாள்  தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் முத்துகுமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு. விசாரணை இனி தீவிரமடையும் இதில் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை PMLA சட்டமும் பாயும். மோசடி, லஞ்சம், குண்டர் சட்டம் பி.டி.அரசகுமார் தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் மீது மத்திய குற்றப்பிரிவு வழக்கு; 2013- ஆம் ஆண்டில் ரூபாய் .14 லட்சம் மோசடி, குண்டர் சட்ட கைது, கட்சி தாவல்  கல்வித்துறையில் தொடர் ஊழலின் அடையாளம்!

 “ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அமைக்க அனுமதி வாங்கித் தருவதாக ரூபாய் 14 லட்சம் மோசடி; 6 வழக்குகளில் கைது; குண்டர் சட்டத்தில் சிறை; பாஜகவில் இருந்து திமுகவுக்கு கட்சி மாற்றம்; கல்வியமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடன் இவர் ஒரே சமூகம், அதே போல முன்னால் முதல்வர் மு.க. ஸடாலின் இவர் மனைவியின் சமூகம் 

ஜூன் 27, 2026  தமிழ்நாட்டின்  தனியார் பள்ளிகள் சங்கத் தலைவரும், அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் (AIPEIA) நிறுவனருமான பி.டி. அரசகுமார்  மீது மத்திய குற்றப்பிரிவு (CCB) வழக்குப் பதிவு செய்துள்ளது. லஞ்சம், மோசடி உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தொடர்பாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர், திமுக தலைமையக செய்தித் தொடர்பாளராகவும், கல்வியமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் உறவினராகவும் உள்ளார். 

2013-ஆம் ஆண்டு, பி.டி. குமார் தற்போது அரசகுமார் மீது முதல் பெரிய மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த சிவானந்தம் என்பவரிடம், புதுக்கோட்டையில் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அமைக்க அனுமதி வாங்கித் தருவதாக கூறி, ரூபாய் 14 லட்சம் பணத்தை வாங்கியுள்ளார். ஆனால், அவர் அனுமதி வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட சிவானந்தம், புதுக்கோட்டை காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து, அரசகுமார் கைது செய்யப்பட்டு, திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இது மட்டுமல்ல, அரசகுமார் மீது ஏழு வழக்குகள் வரை பதிவு செய்யப்பட்டுள்ளன. பள்ளி தொடங்க அங்கீகாரம் வாங்கித் தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கியுள்ளார். காசோலை மோசடி வழக்குகள் பல அவர் மீது அறந்தாங்கி, மணப்பாறை உள்ளிட்ட பல இடங்களில் உள்ளன.

அரசகுமார் மீதான வழக்குகள் தொடர்ந்த நிலையில், அவர் மீது குண்டர் சட்டம்  பாய்ந்தது. தனது கல்வி நிறுவனங்களில் பங்குதாரராகச் சேர்ந்தால் அதிகளவில் வருவாய் கிடைக்கும் எனக் கூறி, சிலரிடம் பணம் பெற்றுக்கொண்டு, பணத்தை திருப்பிக் கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்ததாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் சுமார் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் அரசகுமார் கைது செய்யப்பட்டு திருச்சிராப்பள்ளி சிறையில் அடைக்கப்பட்டார். மாவட்டக் காவல் துறையின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அரசகுமார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

அரசகுமார்,  2019-ஆம் ஆண்டு, பாஜக மாநில துணைத் தலைவராக இருந்தவர், ஒரு திருமண நிகழ்வில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைப் புகழ்ந்து பேசிய வீடியோ வைரலானது. “ஸ்டாலின் விரைவில் முதலமைச்சராகும் ரிப்பன் டைம் வரும்” என்று அவர் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் பாஜக உயர்மட்டம் அதிர்ச்சியடைந்து, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரியது. இதையடுத்து, சில நாட்களில் அவர் பாஜகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்வு நடந்தது.

இந்த கட்சி மாற்றம், அரசகுமார் ஒரு வாய்ப்புவாதி’ என்பதை உறுதிப்படுத்தியது. பாஜகவில் இருந்த போது ஸ்டாலினைப் புகழ்ந்து, பின்னர் திமுகவில் இணைந்தது அவரது அரசியல் நிலைப்பாட்டின் தெளிவின்மை

அரசகுமார், தற்போது திமுக தலைமையக செய்தித் தொடர்பாளராக உள்ளார்.  அன்பில் மகேஷ், திருவெறும்பூர் தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.

அரசகுமார் மீதான வழக்குகள் மற்றும் புகார்கள் நீண்ட காலமாக இருந்தபோதிலும், அவர் திமுகவில் தொடர்ந்து இருப்பதும், கட்சியின் முக்கிய பிரமுகராக இருப்பதும், அரசியல் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியது. குறிப்பாக, கல்வியமைச்சர் அன்பில் மகேஷும் அரசகுமாரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அரசகுமார் மீதான வழக்குகளில் அன்பில் மகேஷின் நிலைப்பாடு முக்கியமானதாகிறது.

பி.டி. அரசகுமார் போன்ற ஒரு நபர், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவராகவும், திமுகவின் முக்கிய பிரமுகராகவும் இருப்பது, கல்வித்துறையில் நிலவும் ஊழல் கலாச்சாரத்தின் அடையாளமாகும். இந்த வழக்குகளில் அன்பில் மகேஷின் பங்கு என்ன என்பதும் புது புயலைக் கிளப்பி உள்ளது.   தவெக அரசு, ஊழல் ஒழிப்பில் தீவிரம் காட்டுவதால் அரசகுமார் மீதான CCB வழக்கு, அந்த உறுதிமொழிக்கு ஒரு சோதனையாகும். இந்த வழக்கில் உண்மை வெளிவந்து, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையெனில், இது திமுக ஆட்சியில் கல்வித்துறையில் நிலவிய ஊழலின் மற்றொரு உதாரணமாக மட்டுமே இருக்கும்.’

தற்போது, CCB அரசகுமார் மீதான வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் முடிவு, தமிழ்நாடு கல்வித்துறையில் நிலவும் ஊழல் குறித்து முக்கிய சமிக்ஞையாக அமையும். மேலும், அரசகுமாரின் திமுக தொடர்பு மற்றும் கல்வியமைச்சர் அன்பில் மகேஷுடனான உறவு, இந்த வழக்கில் அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். தவெக அரசு, இந்த வழக்கை எவ்வாறு கையாளுகிறது என்பதை பொதுமக்கள் கவனித்து வருகின்றனர்.    அதேபோல் தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரி மற்றும் பல கல்லூரிகள்  கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் convenor கமிட்டி உறுப்பினராக ஒருவரை நியமித்தது 

அவர் திமுக உறுப்பினர். திமுக கல்வியாளர் அணியின் துணைத்தலைவர். கட்சி உறுப்பினரை ஒரு பல்கலைக்கழக convenor கமிட்டி உறுப்பினராக நியமித்தது ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர் விவரங்கள் கூட பல்கலைக்கழகத்தில் இல்லாத அவல நிலையில் அதை சரி செய்ய எந்த முயற்சியும் எடுக்காமல் தங்கள் கட்சி உறுப்பினரை உயர் பொறுப்பில் நியமித்து

பல்கலைக்கழக convenor கமிட்டிகளில் 3 அல்லது 4 உறுப்பினர்களாவது இருப்பார்கள். ஆனால் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் திமுக உறுப்பினர் தவிர வேறு யாரும் இருக்கிறார்களா என்பதும் மர்மமானது. மாணவர்களுக்கு கல்வியும் ஒழுக்கமும் சொல்லித்தரக்கூடிய ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கும் கல்லூரிகளை நடத்துவதில் மு. க.ஸ்டாலின் அரசு எத்தனை அலட்சியம் காட்டியது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். 

தவெக அரசு இந்த விஷயத்தில் என்ன செய்ய போகிறது? திமுக உறுப்பினரின் கட்டுப்பாட்டில் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் தொடர்ந்து சீரழிய அனுமதிக்க போகிறதா? உடனடியாக சீர் செய்ய வேண்டிய இந்த விஷயத்தை பற்றி இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது ஏன் என அறப்போர் இயக்கம் தெரிவித்து பதிவு செய்துள்ளது. இந்த நிலையில்    காவல்துறை தகவல் படி தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசியல் மற்றும் அதிகாரப்பூர்வ தொடர்புகள் மூலம் பள்ளி அங்கீகாரம், தரம் உயர்த்துதல், சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூபாய் 100 கோடிக்கு மேல் மோசடி செய்த 59 வயது நபர் ஒருவரை சென்னை நகரக் காவல் துறையின் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சனிக்கிழமை கைது செய்தனர். தியாகராயநகரைச சேர்ந்த, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலர் இளங்கோவன் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. புகாரின் படி, மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி நிர்வாகங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரந்தர அங்கீகாரம், தரம் உயர்த்துதல் மற்றும் டிடிசிபி, சிஎம்டிஏ போன்ற ஏஜென்சிகளின் அங்கீகாரம் பெறுவதில் சிரமத்தை எதிர்கொண்டன. அரசியல் மற்றும் உத்தியோகபூர்வ தொடர்புகள் மூலம் இந்த அனுமதிகளை அவர் பெறலாம் என தனியார் பள்ளிகள் சங்கம் கூறியது. பல பள்ளி நிர்வாகிகளிடம் பணம் வசூலித்தும், உறுதியளித்த அனுமதியைப் பெறாமலோ, தொகையைத் திருப்பித் தராமலோ ரூபாய் .100 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளது. புகாரின் அடிப்படையில், சென்னை நகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்தனர்.  ஏ.அமல்ராஜ், கூடுதல் காவல்துறை ஆணையர் பி.சி.தேன்மொழி மேற்பார்வையில், பொருளாதார குற்றப்பிரிவு உதவி ஆணையர் வி.இ.செந்தில் தலைமையிலான தனிப்படையினர் பி. டி.அரசகுமாரை சனிக்கிழமை இன்று கைது செய்தனர். ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு பின், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முன் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...