முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

12 திமுகவின் தலைவர்கள் மீதான குற்றச்சாட்டை அண்ணாமலை திரும்பப் பெறவில்லை, டி. ஆர் பாது மட்டுமே அவதூறு வழக்கை வாபஸ் வாங்கியுள்ளார்

அவதூறு வழக்கை சாட்சிகளுக்கான நிலையில் திமுகவின் டீ ஆர் பாலு திரும்பப் பெறுகிறார். ஆக. ஊழல் உண்மை.

என்பதே இதில் கருத்து வீ த லீடர் அமைப்பு அண்ணாமலை மீதான வழக்கை திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு திரும்பப் பெற்றார். 




திமுகவின் தற்போதய தலைவரும் முன்னாள் முதல்வருமான மு. க.ஸ்டாலின், அவரது மகனும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி, நடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, டிஆர்.பாலு உள்ளிட்ட 12 நபர்களின் சொத்துப் பட்டியலை டிஎம்கே ஃபைல்ஸ் என்ற பெயரில், 2023 ஆண்டு ஏப்ரல் மாதம் முன்னாள் பாஜக தலைவரும் வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவருமான அண்ணாமலை வெளியிட்டிருந்தார்.  இதில் டி.ஆர் பாலு மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாக அதில் குறிப்பிட்டிருந்த நிலையில் திமுக பொருளாளரும், நடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர் பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது அவதூறு வழக்கைத் தாக்கல் செய்தார்.அதில் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள், தன்னுடைய பெயருக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி 100 கோடி ரூபாய் கேட்ட மான நஷ்ட ஈடு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.



இந்த வழக்கில் சென்னை பெருநகர சைதாப்பேட்டை 17 வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் முன் குறுக்கு விசாரணை நடந்ததில் டி.ஆர்.பாலுவை அண்ணாமலையும் நேரில் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை மூலம் கேள்விகளைக் கேட்டு பதிவு செய்திருந்தனர்.

கடந்த 26ஆம் தேதி நடந்த விசாரணையின் போது, டி.ஆர். பாலுவிடம், அண்ணாமலை குறுக்கு விசாரணை நடத்தினார்.

இதையடுத்து வழக்கு விசாரணை ஜூன் மாதம் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, டி.ஆர்.பாலு சார்பில், அண்ணாமலை மீது தொடரப்பட்ட மான நஷ்ட வழக்கை திரும்ப பெறுவதாகக் கூறி மனு தாக்கல் செய்யப்பட்டதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.            தமிழ்நாடு அரசியலில் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் போது, உண்மையைத் துரத்துபவர்களுக்கு எதிராக சட்டத்தை ஆயுதமாக்கும் பழக்கம் திமுகவுக்கு இப்போது புதிதல்ல. 2023-ஆம் ஆண்டில் அண்ணாமலை வெளியிட்ட 'DMK Files' மூலம் திமுக தலைவர்களின் சொத்து விவரங்கள், குடும்ப நிறுவனங்கள் மற்றும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுகள் பொதுமக்கள் முன் வைக்கப்பட்டதில் டி.ஆர். பாலு உள்ளிட்டோருக்கு எதிரான கேள்விகளும் இடம்பெற்றிருந்தன. இதைத் தொடர்ந்து பாலு தொடுத்த அவதூறு வழக்கு, நீண்ட நாட்களாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குறுக்கு விசாரணையில் அண்ணாமலை பாலுவை நேருக்கு நேர் எதிர்கொண்டார்; கப்பல் வாங்கிய விவகாரம், சொத்து மூலங்கள் உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்த நிலையில், இன்று டி.ஆர். பாலு அந்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். இது ஒரு பக்கம் பாலுவின் தார்மீகத் தோல்வியை மட்டுமே காட்டுகிறது. DMK Files-ல் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நீதிமன்றத்தில் பதில் சொல்ல முடியாமல், வழக்கை திரும்பப் பெற வேண்டிய நிலைக்கு திமுகவின் தலைவர்களில் ஒருவரான டி. ஆர்.பாலு தள்ளப்பட்டிருக்கிறார். இது வி த லீடர் தலைவர் அண்ணாமலையின் துணிச்சலான அணுகுமுறைக்கு கிடைத்த ஒரு வெற்றி எனக் கூறலாம். குறுக்கு விசாரணையில் பாலு தரப்பில் இருந்து அண்ணாமலையின் குடும்பத்தினர் மீதான கருத்துகள் எழுந்த போது, அண்ணாமலை தனி அவதூறு வழக்கு தொடுக்கப் போவதாக அறிவித்திருந்தார். அந்த உறுதியுடன் போராடியிருந்தால், ஊழல் குறித்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்த முடியும்.

ஆனால், வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அண்ணாமலை 'சமாதானம்' என்று ஏற்றுக்கொண்டாலும் அவர் கூறிய ஊழல் முடிந்தது விடவில்லை நிலைப்பாடு ஏமாற்றமாக வில்லை ஒரு பக்கம் DMK-வின் ஊழலை அம்பலப்படுத்தியுள்ளார்  ஊழல் சமரசத்திற்கு அவர் தயாராகி அவர் கருத்தை மறுக்வில்லை இது அவரது அரசியல் பயணத்தில் உறுதியை வெளிப்படுத்துகிறது. ஊழல் எதிர்ப்பு என்பது தேர்தல் பிரச்சாரத்திற்கான கருவி மட்டுமல்ல; அதை நீதிமன்றம் வரை தொடர்ந்து, பொதுமக்களுக்கு உண்மையை எட்டச் செய்ய வேண்டிய போராட்டம். சமாதானம் என்ற பெயரில் பின்வாங்குவதில்லை DMK-வுக்கு மீண்டும் மூச்சு விட வாய்ப்பு அளிப்பதாக அமையக் கூடாது என்பதே பலரது  கருத்து.   அண்ணாமலையின் வழக்கறிஞருக்கு ஆர்வமில்லையாம். மூத்த வழக்கறிஞர் வில்சன் கூறுகிறார் இல்லையென்றால் என்ன? மானம் கெட்டது ஊழல் செய்ததாகக் கூறிய பாலுவுக்குத் தானே. அவர் ஏன் வழக்கை வாபஸ் வாங்க வேண்டும்.  இதற்கு முன் ஒரு நாள் குறுக்கு விசாரணையில் உண்மை வெளிவந்து மானம் "கப்பல்" வரை ஏறியது. தொடர்ந்து நடத்தினால் இன்னும் என்னவெல்லாம் வெளிவரும் என்ற பயம் தான் என மக்களே பேசும் நிலை

அண்ணாமலை ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி. அவரிடம் எதிர்பார்க்கப்படுவது, சட்டத்தின் முழு வலிமையையும் பயன்படுத்தி ஊழலுக்கு எதிரான போரைத் தொடர்வது தான். வழக்கு வாபஸ் என்பது டி. ஆர். பாலு மற்றும் திமுகவின் தோல்வி; ஆனால் அதை 'சமாதானம்' என்று கொண்டாட ஏதுமில்லை, நடவடிக்கை வரலாம் அரசியல் உருவகத்திற்கு பொருந்தாது. உண்மையான மாற்றத்தை விரும்புபவர்கள், இத்தகைய சமரசங்களுக்கு அப்பாற்பட்டு, தொடர்ச்சியான நடவடிக்கைகளை எதிர்பார்க்கின்றனர். DMK Files-ஐ வெளியிட்ட துணிவு இருந்தால், அதன் விளைவுகளை முழுமையாக எதிர்கொள்ளும் உறுதியும் தேவை. இல்லையெனில், இது வெறும் அரசியல் நாடகமாக மட்டுமே முடியும். தமிழ்நாட்டு மக்கள் இன்னும் உண்மையான கணக்கு வழக்கை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

மொத்தத்தில் நீதிமன்ற நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது.  T.R. பாலு மீதும் அந்த 12 நபர்கள் மீதும் அரசு ஊழல் தடுப்புத் துறையே வழக்குத் தொடரலாம், காரணம் வலுவான ஆதாரங்கள் உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...