தென் அமெரிக்கா வெனிசுலாவில் 2026 ஜூன் 24 அன்று ஏற்பட்ட பயங்கர இரட்டை நிலநடுக்கத்தில் இதுவரை 1,430-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான மக்களைக் காணவில்லை 39 வினாடிகள் இடைவெளியில் அடுத்தடுத்து தாக்கிய இந்த நிலநடுக்கங்கள் அந்த நாட்டையே நிலைகுலையச் செய்து இந்த இயற்கைப் பேரிடர் ஒரே நிமிட இடைவெளியில் இரண்டு பெரிய பூகம்பங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன.ரிக்டர் அளவுகளில் முதலாவது நிலநடுக்கம் 7.2 ரிக்டர் அளவிலும், அதைத் தொடர்ந்து வந்த இரண்டாவது நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவிலும் பதிவாகியுள்ளது.
மையப்பகுதி: வெனிசுலாவின் வடக்கு கரீபியன் கடற்கரை பகுதியிலுள்ள மோரோன் நகருக்கு மேற்கே 28 கிலோமீட்டர் தொலைவை மையமாகக் கொண்டது. தற்போதைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 1,430 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 65,000-க்கும் மேற்பட்ட மக்களைத் தேடும் பணி மற்றும் 2000 நபர்கள் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்தப் பேரழிவினால் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 70 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. தலைநகர் கராகஸ் மற்றும் லா குவைரா ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகின. கராகஸ் சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரைகள் இடிந்து விழுந்ததால் விமான நிலையம் மூடப்பட்டது. ஜூன் 24 பேரழிவிற்குப் பிறகும், ஜூன் 27 அன்று 4.7 ரிக்டர் அளவில் மீண்டும் ஒரு நில அதிர்வு ஏற்பட்டு மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மீட்புப் பணிகள் தொடர வெனிசுலா அரசு நாட்டில் அவசரநிலையை அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா, மெக்ஸிகோ, சுவிட்சர்லாந்து, கொலம்பியா உள்ளிட்ட பல நாடுகளின் சர்வதேச மீட்புக் குழுவினர் மற்றும் அவசரக்காலப் பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.




கருத்துகள்