முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பழனி உள்ளிட்ட 214 கோயில்களுக்கு அறங்காவலர் குழு நியமனத்திற்கான அறிவிப்பு

பழனி, சமயபுரம் உள்ளிட்ட பரம்பரை அல்லாத 214 கோயில்களுக்கு அறங்காவலர் குழு நியமனத்திற்கான அறிவிப்பு வெளியீடு 

கோயில்களின் விவரம், இணையத்தில் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது   

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 திருக்கோயில்களுக்கு

பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கான

தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறங்காவலர் நியமன அறிவிப்பு அறங்காவலர் நியமனம் செய்யப்படவுள்ள திருக்கோயில்கள் விவரம், தகுதிகள், விண்ணப்ப படிவம் ஆகியவை (www.hrce.tn.gov.in) என்ற துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.




இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களுக்கு பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் (Non-hereditary Trustees) விண்ணப்பங்கள் மூலம் முறையாக நியமிக்கப்படுகிறார்கள். இதற்கான தகுதிகள், நியமன முறைகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிகள் கீழே சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.1. அறங்காவலர்கள் தகுதிகள்இந்து மதம்: விண்ணப்பதாரர் கண்டிப்பாக இந்து மதத்தைச் சார்ந்தவராகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.பின்னணி: ஒழுக்கமானவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், கோயில் திருப்பணிகளில் ஆர்வம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.








சமூகப் பிரதிநிதித்துவம்: அறங்காவலர் குழுவில் கட்டாயம் பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் (SC/ST) சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.2. நிர்வகிக்கும் அதிகார அமைப்புகள்ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ள கோயில்கள்: மாநில அரசால் நேரடியாக அறங்காவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.ரூ.10 லட்சத்திற்கும் குறைவான வருமானம்: மாவட்ட அளவிலான குழுக்கள் மூலமாக நியமிக்கப்படுகின்றனர்.கோயில் குழு அமைப்பு: ஒவ்வொரு கோயில் அறங்காவலர் குழுவிலும் குறைந்தபட்சம் 3 முதல் அதிகபட்சம் 5 உறுப்பினர்கள் வரை இருப்பார்கள்.3. விண்ணப்பிக்கும் முறைகோயில் நிர்வாகப் பணிகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பங்களிப்பை உறுதி செய்யவும் அவ்வப்போது அறநிலையத்துறை சார்பில் அறிவிப்புகள் (Notifications) வெளியிடப்பட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.






ஆர்வமுள்ளவர்கள் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் HR&CE Official Website வாயிலாக அறிவிப்புகளைக் கண்டறிந்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டத்தின் கீழ் இந்து சமய திருக்கோயில்களின் நிர்வாகத்தை மேலாண்மை செய்வதற்காக பரம்பரை நிர்வாகத்தில் இல்லாத ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.






இவ்வாறு அமைக்கப்படும் ஒவ்வொரு அறங்காவலர் குழுவிலும் மூன்று அறங்காவலர்களுக்கு குறையாமலும், ஐந்து அறங்காவலர்களுக்கு மிகாமலும் உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும். இக்குழுவில் பெண் உறுப்பினர் ஒருவரும் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த உறுப்பினர் ஒருவரும் இடம் பெற வேண்டும். இக்குழுவின் பதவிக்காலம் இரண்டாண்டுகள் ஆகும்.



தக்கார் நியமனம் அறங்காவலர் குழுவின் பதவிக்காலம் முடிந்த பின்னர் அல்லது தற்காலிகமாக காலியிடம் ஏற்படும் பொழுது அடுத்த அறங்காவலர் குழுநியமனம் செய்யப்படும் வரை, திருக்கோயிலின் அறங்காவலருக்குரிய கடமைகளை செய்திட இடைக்கால ஏற்பாடாக தகுதியான ஒருவர் தக்காராக நியமனம் செய்யப்படுவார்.அறங்காவலர்கள் நியமனம்

இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டத்தின் கீழ் இந்து சமய திருக்கோயில்களின் நிர்வாகத்தை மேலாண்மை செய்வதற்காக பரம்பரை நிர்வாகத்தில் இல்லாத ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். ஸ்கீம் இல்லாத தேவஸ்தான சமஸ்தான நிர்வாகம் மற்றும் மடாதிபதி இல்லாத பரம்பரை அறங்காவலர் இல்லாத ஆலயங்களில் மட்டுமே அறநிலையத்துறை அறங்காவலர்களை நியமனம் செய்யமுடியும், அதை ஊழலுக்கு அப்பாற்பட்டு நல்ல நபர்கள் நியமித்தால் நல்லது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...