அரசு வழக்கறிஞர்கள் நியமனம்
தொடர்பான வழக்கில் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய தமிழ் நாடு அரசுக்கு செனனை உயர் நீதிமன்றம், மதுரை கிளை உத்தரவிட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தவெக கூட்டணி ஆட்சியமைத்தது. தொடர்ந்து பல்வேறு நீதிமன்றங்களுக்கான புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் கூடுதல் அட்வகேட், கூடுதல் அரசு வழக்கறிஞர், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள் என 204 பணிகள் அடங்கிய நியமனம் குறித்து சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடிதம் அளிக்கப்பட்ட நிலையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், தமிழ் நாட்டில் உள்ள உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் அரசு சார்பாக வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டு வருவதில் அரசு அரசியல் தலையீடுகள் உள்ளது.
தற்போதைய ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சியில் இருக்கக்கூடிய ஒரு அரசியல் கட்சி (காங்கிரஸ்) கட்சி எந்தெந்த நீதிமன்றங்களில் யார் யாரை நியமிக்க வேண்டும் என தனது கட்சிக்காரர்களை அறிவித்துள்ளது. அது அனைத்து சமூக வலைதளங்களிலும் தற்போது பரவியும் வருகிறது. இது முற்றிலும் சட்ட விரோதம். அரசியல் தலையீடு இல்லாமல் உரிய தகுதி உடைய வழக்கறிஞர்களை நியமனம் செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் ஜோதி ராமன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த பொழுது அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் சரவணன் ஆஜராகி, இந்த கடிதத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள நபர்கள் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட மாட்டார்கள் என உறுதியளித்தார். இருந்தும் அரசு தரப்பில் இந்தக் கடிதம் குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர். தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் தகுதியின் அடிப்படையில், சட்டத்துறைஅல்லது உள்துறை மூலம் நேரடி விண்ணப்பங்கள் அல்லது தேர்வு குழு பரிந்துரைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மாவட்ட மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு ஏற்ப நியமன விதிகள் மாறுபடும்.பின்வரும் தகுதிகள் மற்றும் நடைமுறைகள் மூலம் தகுதியான வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுகின்றனர்: அடிப்படைக் தகுதிகளாக Eligibility Criteria கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டமும் (LLB) இந்திய வழக்கறிஞர்கள் மன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்திருக்க வேண்டும் மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞராக (Public Prosecutor அல்லது Addl. Public Prosecutor) பணியாற்ற குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் நீதிமன்ற அனுபவம் கட்டாயம். உயர் நீதிமன்றத்தில் கூடுதல் அரசு பிளீடர் போன்ற உயர் பணிகளுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவமும், அதிகபட்ச வயது வரம்பு 60-க்குள் இருக்க வேண்டும். நியமன நடைமுறை (Notification): அரசாணை (G.O.) அல்லது மாவட்ட ஆட்சியர் இணையதளம் மூலமாக தகுதி வாய்ந்த வழக்கறிஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது (உதாரணமாக, மே மற்றும் ஜூன் மாதங்களில் அறிவிக்கப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் உரிய படிவங்களை பூர்த்தி செய்து, பார் கவுன்சில் சான்றிதழ், அனுபவ சான்றிதழ்கள் மற்றும் புகைப்படங்களுடன் சம்பந்தப்பட்ட துறையிடம் சமர்ப்பித்த பின் தேர்வுக் குழு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, மாநில அரசின் சட்ட அதிகாரிகளால் தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்படுகிறது. மாநில அரசுடன் ஆலோசித்து, தகுதியான வழக்கறிஞர்களை குறிப்பிட்ட பணிக்காலத்திற்கு (பொதுவாக 3 ஆண்டுகள்) நியமித்து அரசாணை வெளியிடப்படும்.தமிழ்நாடு அரசு சார்பில் நீதிமன்றங்களில் வாதாட மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் மாநிலத்தின் தலைமை வழக்கறிஞராகவும், பி.வி.பாலசுப்பிரமணியம் மற்றும் டி.கௌதம் ஆகியோர் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.சமீபத்திய நியமனங்களின் சென்னை உயர் நீதிமன்றம்: உரிமையியல் (Civil) வழக்குகளில் அரசு சார்பில் ஆஜராக 10 வழக்கறிஞர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், குற்றவியல் மூத்த வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்யன் உட்பட பல வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மதுரை கிளைக்கு உரிமையியல் வழக்குகளில் அரசு சார்பில் வாதாட 7 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.விசாரணை நீதிமன்றங்கள் தமிழ்நாடு காவல்துறை மற்றும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குகளுக்காக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ச்சி பெற்ற அரசு உதவி வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுகின்றனர். அரசு வழக்குகளை நிர்வகிக்கும் முக்கியப் பொறுப்புகள் மற்றும் அதிகாரப்பூர்வ அரசாணைகள் பற்றிய கூடுதல் விவரங்களை தமிழ்நாடு அரசு சட்ட அதிகாரிகள் நியமனம் 2026.
உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கான 140 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது,
தமிழ்நாடு அரசின் பொது (சட்ட அதிகாரிகள்) துறை, 12.06.2026 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு எண் 1/2026 மூலம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் பணியாற்றுவதற்கான அரசு சட்ட அதிகாரிகளுக்கு தகுதியான வழக்கறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள அறிவிப்பின் படி மொத்தம் 140 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 99 இடங்களும், மதுரை கிளைக்கு 41 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
சென்னை மதுரை மொத்தம்
கூடுதல் அட்வகேட் ஜெனரல் (Additional Advocate General) 5 3 8
மாநில அரசு வழக்கறிஞர் (State Government Pleader) 1 - 1
அரசு வழக்கறிஞர் (Government Pleader) - 1 1
சிறப்பு அரசு வழக்கறிஞர் (Special Government Pleader) 20 8 28
கூடுதல் அரசு வழக்கறிஞர் (Additional Government Pleader) 30 14 44
அரசு வழக்கறிஞர் – சிவில் (Government Advocate – Civil) 40 14 54
அரசு வழக்கறிஞர் – வரிகள் (Government Advocate – Taxes) 3 1 4
மொத்தம் 99 41 140
வயது வரம்பு இல்லை
பின்வரும் பணிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை:
Additional Advocate General,
State Government Pleader,
Government Pleader,
Special Government Pleader,
அதிகபட்ச வயது 60
பின்வரும் பணிகளுக்கு விண்ணப்பதாரர் 60 வயதை பூர்த்தி செய்திருக்கக் கூடாது:
Additional Government Pleader,
Government Advocate (Civil),
Government Advocate (Taxes),
கல்வித் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் (LL.B.) பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாடு பார் கவுன்சிலில் Advocates Act, 1961-ன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
அனுபவத் தகுதி (Standing at the Bar)
Additional Advocate General,
குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வழக்கறிஞர் அனுபவம்.
அதில் குறைந்தது 7 ஆண்டுகள் உயர்நீதிமன்றத்தில் வழக்காடியிருக்க வேண்டும்.
State Government Pleader
குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம்.
அதில் 7 ஆண்டுகள் உயர்நீதிமன்ற அனுபவம்.
Government Pleader
குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம்.
அதில் 7 ஆண்டுகள் உயர்நீதிமன்ற அனுபவம்.
Special Government Pleader
குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம்.
அதில் 7 ஆண்டுகள் உயர்நீதிமன்ற அனுபவம்.
Additional Government Pleader
குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் அனுபவம்.
அதில் 5 ஆண்டுகள் உயர்நீதிமன்ற அனுபவம்.
Government Advocate (Civil / Taxes)
குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம்.
அதில் 3 ஆண்டுகள் உயர்நீதிமன்ற அனுபவம்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பங்கள் முழுமையாக ஆன்லைன் மூலம் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இணையதளம்: www.lawofficerscivil.tn.gov.in
விண்ணப்பிக்க கடைசி நாள்:
29.06.2026 மாலை 5.45 மணி
ஆன்லைன் அல்லாத விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.
பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள்
1.கல்விச் சான்றிதழ்கள்.
2.தமிழ்நாடு பார் கவுன்சில் பதிவு சான்றிதழ்.
3.தேவையான அனுபவத்தை நிரூபிக்கும் வகையில் மூத்த வழக்கறிஞர் அல்லது உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் சான்று.
நியமனம் முழுமையாக ஒப்பந்த (Contractual) அடிப்படையில் இருக்கும்.
அரசு நிர்ணயிக்கும் காலத்திற்கு பணி வழங்கப்படும்.
ஒரு மாத முன் அறிவிப்பு அல்லது ஒரு மாத Retainer Fee வழங்கி எந்த நேரத்திலும் நியமனம் ரத்து செய்யப்படலாம்.
தவறான தகவல் வழங்கப்பட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் அல்லது நியமனம் ரத்து செய்யப்படும்.
தேர்வு மற்றும் நியமனம் 2017-ஆம் ஆண்டு சட்ட அதிகாரிகள் நியமன விதிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு, உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் அரசு தரப்பில் ஆஜராக விரும்பும் அனுபவமிக்க வழக்கறிஞர்களுக்கு முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக 140 காலியிடங்கள் ஒரே அறிவிப்பில் வெளியிடப்பட்டிருப்பது சட்டத்துறையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது வயது, அனுபவம் மற்றும் தகுதிகளை சரிபார்த்து, ஜூன் 29, 2026-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த நியமனம் நேர்மையாக நடந்தால் தவெக ஆட்சி ஊழல் ஒழிக்கும் என நம்பலாம்.




















கருத்துகள்