முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடிகை சுகன்யா வழக்கில் 30 ஆண்டுகள் கடந்து வந்த தீர்ப்பு மேல்முறையீட்டு முடிவில் தீர்வாகும்

நடிகை சுகன்யா குறித்து நீண்ட கால சந்தனக் கடத்தல் கொள்ளையன் வீரப்பன் அளித்த ஒரு  அவதூறு பேட்டியை ஒளிபரப்பியதற்காக, சன் டிவி நிறுவனத்திற்கு ரூபாய் .10 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

                                     (வழக்கு தாகல் செய்த காலத்தில்) 

தற்போது அந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது வழக்கின் துவக்கம் :- 1996-ஆம் ஆண்டு, சந்தனக் கடத்தல் கொள்ளையன் வீரப்பனை பேட்டி கண்டு அதனை சன் டிவி ஒளிபரப்பிய. பேட்டியில் கொள்ளையன் வீரப்பன் நடிகை சுகன்யா குறித்து தெரிவித்த அவதூறு கருத்துக்களுக்கு எதிராக நடிகை சுகன்யா தொடர்ந்த. வழக்கை விசாரித்த சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் 2015- ஆம் ஆண்டில் சன் டிவி ரூபாய் .10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சன் டிவி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தற்போது விசாரணை நீதிமன்றம் வழங்கிய உத்தரவை உறுதி செய்தது.


மேற்கண்ட ஒளிபரப்புக்கு முன் அநாவசியமான அல்லது அவதூறான கருத்துக்களை எடிட் செய்யும் உரிமை சன் டிவிக்கு இருந்தும், அவர்கள் அதைச் செய்யவில்லை என்றும், கொள்ளையன் வீரப்பன் கூறிய குற்றச்சாட்டுகளைச் சரிபார்க்கத் தவறியது அவர்களின் தவறு என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவின் மகனுடன் நடிகை சுகன்யாவுக்கு தொடர்பிருப்பதாக 1995-ஆம் ஆண்டு ஒளிபரப்பான பேட்டியில் கூறப்பட்ட விவகாரம் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

                        (தீர்ப்பு வந்த போது)

அதனைத் தொடர்ந்து நடிகை சுகன்யா அவதூறு மற்றும் மானநஷ்ட வழக்கை சிட்டி சிலில் நீதிமன்றம் மூலம் தொடர்ந்தார்.




 நீண்டகாலமாக நடைபெற்று இந்த வழக்கில், 2015-ஆம் ஆண்டு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் சுகன்யாவுக்கு சாதகமாக தீர்ப்பளித்து ரூபாய் .10,00,500 நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு உயர் நீதிமன்றம் மூலம் செய்யப்பட்டிருந்தது.




இந்த நிலையில், சுமார் 30 ஆண்டுகளைக் கடநது வந்த இந்த வழக்கில் மீண்டும் நடிகை சுகன்யாவுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

 செய்திகளின் உண்மைத்தன்மையை சரிபார்க்காமல் செய்தி வெளியிட முடியாது என்றும், ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்ததுள்ளது. 




முப்பது வருஷம் நீடித்த இந்த வழக்கின் தீர்ப்பு, தனிநபர் கண்ணியத்தையும் ஊடகப் பொறுப்பையும் மீண்டும் விவாதப் பொருளாக்கியுள்ளது.

1995-ஆம் ஆண்டில் இருந்ததை விட, இன்று 2026- ஆம் ஆண்டில் சமூக ஊடகங்களின் வளர்ச்சி மிகவும் அதிகம். 




"வியூஸ்" (Views) மற்றும் "லைக்ஸ்"களுக்காக எதையும் பேசலாம் என்ற போக்கு சமூக வலைதளங்களில் பெருகிவரும் இந்தச் சூழலில், அரசின் பதிவு பெற்ற ஒரு பிரபல தொலைக்காட்சிக்கு இந்தத் தீர்ப்பு ஒரு எச்சரிக்கை மணி.

சமூக வலைதளங்களில் சிலர் உரிய அனுமதி இல்லாமல் பகிர்வது தவறு ஆனால் உரிய அனுமதி பெற்ற செய்தி பருவ இதழ்கள் மற்றும் காட்சி ஊடகங்கள் பகிர்வதற்கு முன், தீர்ப்பின் சமீபத்திய அதிகாரப்பூர்வ நீதிமன்ற ஆவணங்கள் அல்லது நம்பகமான செய்தி ஆதாரங்களை நன்றாக சரிபார்ப்பது அவசியம்.



ஆதாரமற்ற வதந்திகளைச் செய்தியாக்குவது கருத்துச் சுதந்திரமல்ல, அது ஒருவரது வாழ்வைச் சிதைக்கும் ஆயுதம் என்பதை உரிய ஊடகங்களும் மற்றும் சில ஆர்வக்கோளாறு உள்ள முகநூல், யூடியூப் போன்ற தளங்களில் உள்ளோரும் உணர வேண்டும். இதுவே இந்த தீர்ப்பு கூறும் கருத்து.இந்திய அரசியலமைப்பில் பத்திரிகை சுதந்திரம் . இருப்பினும், சட்டப்பிரிவு 19(1)(a)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள "பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தின்" ஒரு பகுதியாகவே பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறது.




அது வரம்பற்றதல்ல. நாட்டின் நலன் கருதி, சட்டப்பிரிவு 19(2)-ன் கீழ் அரசு பின்வரும் காரணங்களுக்காகப் பத்திரிகை சுதந்திரத்தின் மீது நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்கலாம். இதில் முக்கிய சில வழக்குகள் உள்ளது. ரொமேஷ் தாப்பர் எதிர் மெட்ராஸ் மாநிலம் (1950):தீர்ப்பில், கருத்துக்களைப் பரப்புவதும், புழக்கத்தில் விடுவதும் பத்திரிகை சுதந்திரத்தின் முக்கிய அங்கம் என உச்ச நீதிமன்றம் முதலில் உறுதி செய்தது.






மற்றும் சகால் பேப்பர்ஸ் எதிர் இந்திய ஒன்றியம் (1961): பத்திரிகை சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் அடித்தளம் என நீதிமன்றம் சட்டப்பிரிவு 361A: நாடாளுமன்றம் அல்லது மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தொடரின் உண்மைச் செய்திகளைப் பத்திரிகைகளில் வெளியிடுவதற்கு ஊடகங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. இது பதிவுகள் இல்லாத சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப் உள்ளிட்டவைகளுக்குப் பொருந்தாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...