மத்திய பதிவு சட்டத்திற்கு விரோதமாக மாநில பதிவு திருத்தச்சடடம் 34 சி உள்ள நிலையில் அதை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டத்தின் புதிய திருத்தம் பிரிவு 34-C சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை ரத்து செய்தது.
போலிப் பத்திரப்பதிவுகளைத் தடுப்பதற்காகத் தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்திருத்தம், பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், தன்னிச்சையானதாக இருப்பதாகக் கூறி நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.பிரிவு தமிழ்நாடு அரசு 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் தேதியன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற இந்த புதிய சட்டத்திருத்தத்தை அமல்படுத்தியதன்படி, அசையா சொத்துக்களைப் பதிவு செய்யும்போது பின்வரும் ஆவணங்கள் கட்டாயமாக்கப்பட்டது அசல் மூலப் பத்திரம், சொத்தின் முந்தைய அசல் பத்திரம் கண்டிப்பாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பத்திரம் பதிவு செய்வதற்கு 10 நாட்களுக்குள் பெறப்பட்ட தற்போதைய வில்லங்கச் சான்றிதழ் . பூர்வீகச் சொத்தாக இருந்தால் வருவாய்த்துறை வழங்கிய பட்டா.அசல் பத்திரம் தொலைந்திருந்தால் காவல்துறை வழங்கிய கண்டுபிடிக்க முடியவில்லை என்ற Non-traceable Certificate மற்றும் ஆங்கில தமிழ் நாளிதழ்களின் விளம்பரம். தேவை என்ற நிலையில்
இந்தச் சட்டத்திருத்தத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் என். சதீஷ்குமார், எம். ஜோதிராமன் ஆகிய நீதிபதிகள் அமர்வு ஜூன் 23, 2026 அன்று ரத்து செய்தது. அதில் பத்திரப்பதிவுத் துறை என்பது ஆவணங்களின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும் ஒரு நிர்வாக அமைப்பு மட்டுமே தவிர, சொத்து உரிமையை (Title) தீர்மானிக்கும் அதிகாரம் அதற்கு அதற்கு இல்லை. சொத்துக்களைப் பரிமாற்றம் செய்வது என்பது இந்திய அரசியல் சாசனம் பிரிவு 300 -A-ன்கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமை. அசல் பத்திரம் இல்லை என்பதற்காகப் பதிவை மறுப்பது மக்களின் அடிப்படை உரிமையைப் பாதிக்கும். இந்தச் சட்டத்திருத்தத்தை அமல்படுத்துவதில் சார்பதிவாளர்களுக்குத் தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லை. இதனால் அசல் ஆவணம் இல்லாத பொதுமக்கள் சொத்துக்களைப் பதிவு செய்ய முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.
தற்போதைய நிலை (உத்தரவின் முக்கிய அம்சங்கள்)அசல் பத்திரம் தேவையில்லை: இனிமேல் அசல் மூலப் பத்திரம் இல்லாவிட்டாலும் பொதுமக்கள் தடையின்றிப் பத்திரப்பதிவு செய்துகொள்ளலாம். அது அவர்களின் சொத்தாக இருக்கும் நிலையில் முறையான வில்லங்கச் சான்று: மோசடிகளைத் தடுக்க, சொத்துக்களின் சர்வே எண் மற்றும் கதவு எண் வாரியாக அனைத்து வில்லங்க விவரங்களையும் துல்லியமாகத் தொகுத்து பொதுமக்களுக்கு வழங்க நீதிமன்றம் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.2025-ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசு, பதிவுத்துறைச் சட்டத்தில் (Registration Act, 1908) 34-சி எனும் புதிய பிரிவை இணைத்து, 'அசல் ஆவணங்களை உற்பத்தி செய்தல்' (Production of Original documents) எனும் சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியது. இதன்படி, நிலம், வீடு போன்ற அசையா சொத்துக்களைப் பதிவு செய்யும்போது, அந்தச் சொத்தின் அசல் உரிமை ஆவணத்தை (Original Parent Document) கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில், பதிவு செய்ய முடியாது எனக் கட்டாயமாக்கியது
மோசடிப் பத்திரப்பதிவுகளைத் தடுக்கும் நோக்கில் இந்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில்
இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து, பல தரப்பினர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த நீதிபதிகள், அசல் ஆவணங்களை கட்டாயமாக்கும் இந்த சட்டத்திருத்தம், மத்திய சட்டமான பதிவுச் சட்டம், 1908-ன் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானது என்று கூறியுள்ளனர்.
"பதிவுச் சட்டத்தின் பிரிவு 69, விதிகளை உருவாக்கும் அதிகாரத்தை வழங்குகிறது. ஆனால், அந்த அதிகாரம், மத்திய சட்டத்தின் விதிகளுக்கு முரணான விதிகளை உருவாக்க அனுமதிக்காது. இந்த சட்டத்திருத்தம், பதிவு அலுவலர்களுக்கு அளவுக்கதிகமான அதிகாரத்தை வழங்குகிறது. மேலும், அசல் ஆவணத்தை இழந்தவர்கள் அல்லது அதைப் பெற முடியாதவர்களின் உரிமைகளைப் பாதிக்கிறது" என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், "அசல் ஆவணம் இல்லாத நிலையில், நகல் அல்லது சான்றளிக்கப்பட்ட பிரதிகளை அடிப்படையாகக் கொண்டு பதிவு செய்ய மறுக்கும் அதிகாரத்தை இந்த சட்டத்திருத்தம் வழங்குகியது. இது பதிவு அலுவலர்களின் அதிகாரத்தை மீறுவதாகும்" என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
'இந்த சட்டத்திருத்தம், மோசடியைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டது உண்மை தான். ஆனால், அது பல எளிய மக்களின் சொத்துரிமைகளை பாதிக்கும் விதமாக அமைந்தது. பலர் தங்களின் பழைய ஆவணங்களை 100 ஆண்டுகள் பூர்வீகம் என்பதால் இழந்து விடுகிறார்கள்; அல்லது குடும்பப் பிரச்சினைகளால் அசல் ஆவணங்களைப் பெற முடியாமல் தவிக்கிறார்கள். இந்தச் சட்டம், அத்தகையவர்களின் பதிவைத் தடுத்து, அவர்களின் சொத்து உரிமைகளை பறிக்கும் ஒரு கருவியாக மாறியிருக்கும். உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, சாதாரண மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு முக்கியமான முடிவாகும். மேலும், இந்த தீர்ப்பு, எதிர்காலத்தில் இதுபோன்ற சட்டத்திருத்தங்களை கொண்டுவரும் போது, அது அடிப்படை உரிமைகளுக்கு முரணாக இல்லாமல் மற்றும் மத்திய சட்ட விதிகளை மீறாமல் இருப்பதை உறுதி செய்யும்.'




கருத்துகள்