தமிழ்நாட்டில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம். இன்று (ஜூன் 15) 56 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஐஜி உமா, சென்னை காவல்துறை தலைமையக டிஐஜியாகவும் சென்னை காவல்துறை தலைமையகத்தின் துணை ஆணையர் பால கிருஷ்ணன், சென்னை காவல்துறை சைபர் குற்றப்ப்பிரிவு துணை ஆணையராகவும்,
சென்னை மத்தியக் குற்றப்பிரிவு III, டிசிபி ஆரோக்கியம், சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமைத்துறை கண்காணிப்பாளர் மற்றும் உதவி ஐஜி ஆகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையர் வனிதா, ஆவடி காவல் ஆணையரகத்தின் டிசிபி ஆகவும்
சென்னை காவல்துறை வடக்கு போக்குவரத்து துணை ஆணையர் குமார், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன கண்காணிப்பாளர் ஆகவும்,
புளியந்தோப்பு துணை ஆணையர் முத்துக்குமார், சென்னை காவல் வடக்கு போக்குவரத்து துணை ஆணையராகவும்,
காத்திருப்போர் பட்டியலில் இருந்த கண்காணிப்பாளர் கோபி, சென்னை பூக்கடை துணை ஆணையராகவும்
காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஸ்டீபன் ஜசுபாதம், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு III துணை ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதுபோன்று பல்வேறு மாவட்டக் கண்காணிப்பாளர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, கடலூர் மாவட்டக் கண்காணிப்பாளர் ஆகவும்
விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் சாய் பிரனீத், திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகவும்,
கடலூர் மாவட்டக் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், திண்டுக்கல் மாவட்டக் கண்காணிப்பாளர் ஆகவும்
திருவண்ணாமலை மாவட்டக் கண்காணிப்பாளர் சுதாகர், என்ஆர்ஐ பிரிவு கண்காணிப்பாளர் ஆகவும்,
மதுரை வடக்கு டிசிபி மதிவாணன், விழுப்புரம் மாவட்டக் கண்காணிப்பாளர் ஆகவும்,
சேலம் மாவட்டக் கண்காணிப்பாளர் கௌதம் கோயல், விருதுநகர் மாவட்டக் கண்காணிப்பாளர் ஆகவும்
நாமக்கல் மாவட்டக் கண்காணிப்பாளர் விமலா, சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக் கண்காணிப்பாளர் ஆகவும்
சென்னை காவல்துறை தலைமையகக் கண்காணிப்பாளர் மற்றும் உதவி ஐஜி அருண் கபிலன் தர்மபுரி மாவட்டக் கண்காணிப்பாளர் ஆகவும்,
தர்மபுரி மாவட்டக் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், கோயம்புத்தூர் நகர போக்குவரத்து டிசிபி ஆகவும்
கிருஷ்ணகிரி மாவட்டக் கண்காணிப்பாளர் தங்கதுரை கோயம்பத்தூர் வடக்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகவும்
காத்திருப்போர் பட்டியலில் இருந்த சரவணன் ஐபிஎஸ், திருநெல்வேலி நகர கிழக்கு துணை ஆணையராகவும்
காத்திருப்போர் பட்டியலில் இருந்த பிரபாகர் ஐபிஎஸ் தாம்பரம் போக்குவரத்துத் துணை ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.







கருத்துகள்