தமிழ்நாடு முழுவதும் 60 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (RTO) ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு உள்ளிட்ட சேவைகளுக்காக இடைத்தரகர்கள் மூலம் 114 RTO அலுவலகங்களில் லஞ்சம் வசூலிக்கப்படுவதாக வந்த புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் சென்னை நகரில் (வளசரவாக்கம், தாம்பரம், அண்ணா நகர் போன்றவை), காரைக்குடி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, ஆலங்குடி, பெருந்துறை, கோயம்பத்தூர் , மதுரை, மற்றும் தென்காசி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை அதில் கணக்கில் வராத சுமார் ரூபாய் .37.81 லட்சம் ரொக்கம் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி நடத்தும் நபர்கள் மற்றும் இடைத்தரகர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.பரமக்குடியில் முதுகுளத்துார் சாலையில் ஆர்.டி.ஓ., அலுவலகம் செயல்படும் நிலையில் தணிக்கை செய்ய இடமில்லாததால் ஐ.டி.ஐ., வளாகத்தில் பணிகள் நடக்கிறது. இங்கு வியாழக்கிழமை மதியம் 3:00 மணிக்கு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் இராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு செய்த போது புரோக்கர்கள், டிரைவிங் ஸ்கூல் ஊழியர்கள் ஓட்டம் பிடித்தனர். அவர்களைப் பிடித்து விசாரித்த துணைக் கண்காணிப்பாளர் இராமச்சந்திரன் கூறிய போது: வாகன ஆய்வாளர் தங்கராஜ் மற்றும் ஓட்டுனர்கள், புரோக்கர்களிடம் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூபாய் . 1 லட்சத்து 92 ஆயிரத்து 650 ரூபாய் இருந்தது கண்டறியப்பட்டது. புரோக்கர்களின் அலைபேசிகளைச் சோதித்த போது, வாகன ஆய்வாளர், உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு ரூபாய் .5 லட்சம் அளவிற்கு ஜி பே மூலம் பணப் பரிமாற்றம் நடந்தது தெரிந்தது எனத் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் பலர் தற்போது கூகுள் பே (Google Pay) போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலமாகவும் லஞ்சம் பெற்றுள்ளது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக எதிர்கால நடவடிக்கைகளை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து உரிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில்
சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மீது துறைரீதியான மற்றும் சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் பாய்ந்து வருகின்றன. அதில திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் எந்தக் கணக்கிலும் வராத ரூபாய் .92 ஆயிரம் சிக்கியது தொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் பத்மபிரியா, புரோக்கர்கள் 8 பேர் மீது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு அதேபோல் பரமக்குடி அலுவலகத்திலும் நடந்தது ஆர்.டி.ஓ அலுவலகங்களில் அதிரடியாக நுழைந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் கட்டுக்கட்டாக பணம் மற்றும் ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.
அதிக புகார்களில் சிக்கிய 60 அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் ஏடிஜிபி ஏ.அருண் உத்தரவின் பேரில், கடந்த வியாழக்கிழமை ஒரே நேரத்தில் நடந்திய சோதனையில் சென்னையில் வளசரவாக்கம், புளியந்தோப்பு, கொத்தூர், அண்ணா நகர், சோழிங்கநல்லூர், தாம்பரம், அயனாவரம் அலுவலகங்களில் நடைபெற்றது.
நண்பகல் தொடங்கிய சோதனை மாலைக்குப் பின்னர் நடந்து படிப்படியாக நிறைவு பெற்றது. சோதனை நடைபெற்ற 60 இடங்களில் 34 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், 6 மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள் என 40 அலுவலகங்களில் இருந்து மட்டும் கணக்கில் வராத ரூபாய் .37,81,168 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதில் ரூபாய் .31,85,700 ரொக்கமாகவும், ரூபாய் .5,95,468 கைப்பேசி செயலி வாயிலாக ஜி. பே மூலம் அனுப்பப்பட்டதுமாகும். இந்த முறை வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களுக்கு இடைத்தரகர்களாகச் செயல்பட்ட சில ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்தும் கணிசமான அளவு கணக்கில் வராத பணத்தைக் கைப்பற்றியுள்ளனர். அதேபோல கைப்பேசி செயலி வாயிலாக பெறப்பட்ட பணத்தையும் அந்தத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் பல முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன, 40 அலுவலகங்களிலிருந்து மட்டும் தான் கணக்கில் வராத .ரூபாய் 37,81,168 ប់ ប្រ செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக
கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூபாய் .3,77,300, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ரூபாய் .2,31,100, இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ரூபாய் .1,92,040, கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ரூபாய் .1,87,650, மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூபாய் .1,75,730, திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ரூபாய் .1,31,190 எனப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கான விளக்கங்களும், ஆவணங்களும் கோரப்படும். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊழல் தடுப்பு <மற்றும் கண்காணிப்புத் துறையினர் தெரிவித்தனர்.












கருத்துகள்