திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகில் கண்ணிகைப்பேரிலுள்ள தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையான St Peter's Paul Seafoods Exports நிறுவனத்தில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு காரணமாக 7 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், 60-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆலையில் இருந்த அளவீட்டு வால்வில் measure valve ஏற்பட்ட பழுது காரணமாக அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையின் (NDRF) 4வது பட்டாலியன் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. தமிழ்நாடு அரசு, இந்த விபத்து குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதுடன், ஆலை உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். கசிவு ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணிகள் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் விரைவுபடுத்தி முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவை தொடர்ந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு விரைந்தார் அமைச்சர் ராஜ்மோகன்
அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார் அமோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழந்த நிலையில் தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத்துறை இயக்குநர்கள் தலைமையில் விசாரணைக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயுக கசிவு ஏற்பட்டுள்ளது. ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு காரணமாக 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மயக்கமடைந்துள்ளார். அம்மோனியா வாயுவை சுவாசித்த சில தொழிலாளர்களுக்கு வாய், மூக்கில் ரத்தம் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்ட பலரில் 9 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 9 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 9 பேரில் 7 பெண்கள் உயிரிழந்தனர், மற்றவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து, அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் உயிரிழந்த மஞ்சங்கரணையில் உள்ள வேல்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் . அமோனியா வாயு கசிவு பாதிப்பை அடுத்து சம்பவ இடத்துக்கு அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழு பெரியபாளையத்துக்கு விரைந்தது
இந்த நிலையில், அமோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழந்த காரணமாக தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரத்துறை இயக்குநர்கள் தலைமையில் விசாரணை குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. 24 மணி நேரத்திற்குள் இடைக்கால அறிக்கை மற்றும் 3 நாட்களுக்குள் இறுதி அறிக்கையையும் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, பெரியபாளையம் அருகே அமோனியா வாயு கசிந்து விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையின் உரிமையாளர் மோகன் (வயது 59) மற்றும் மேலாளர் டேனியல் (வயது 68) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமோனியா என்பது நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களால் ஆன ஒரு வேதிச் சேர்மமாகும் (மூலக்கூறு NH₃). இது கடுமையான நெடியுடைய, நிறமற்ற வாயுவாகும். இது இயற்கையாக மனித உடலிலும், சுற்றுச்சூழலிலும் காணப்பட்டாலும், தொழிலகங்களில் செயற்கையாக உருவாக்கப்பட்டு பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. விவசாயத்திற்குத் தேவையான உரங்களில் யூரியா உள்ளிட்டவை தயாரிக்க முக்கிய மூலப்பொருளாக விளங்குகிறது. பெரிய தொழிற்சாலைகள், குளிர்பதனக் கிடங்குகள் மற்றும் ஐஸ் தொழிற்சாலைகளில் குளிரூட்டியாகப் பயன்படுகிறது. வீடுகளில் பயன்படுத்தப்படும் கண்ணாடி துடைப்பான்கள் மற்றும் இதர துப்புரவுப் பொருட்களில் அமோனியா சேர்க்கப்படுகிறது.
தொழிற்சாலைகள்: பிளாஸ்டிக், சாயங்கள், வெடிமருந்துகள் மற்றும் மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. அமோனியா வாயு மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. இது காற்றில் அதிக அளவில் கலக்கும்போது, கடுமையான மூச்சுத்திணறல், கண் எரிச்சல், மயக்கம் மற்றும் தோல் பாதிப்புகளை ஏற்படுத்தும். அமோனியா 100 ஆண்டுகளுக்கும் மேலாக உலகில் உற்பத்தி செய்து பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு வேதிப்பொருள்.
உலகின் மொத்த உற்பத்தியில் எடையளவில் (டன்னளவில்) இரண்டாவதாக உள்ள வேதிப்பொருள் உற்பத்தி செய்யும் வேதிப்பொருட்களில் மொத்த மதிப்பில் (பணம்), முதல் இடம் வகிக்கின்றது 1980 ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் ஆண்டொன்றுக்கு 100 மில்லியன் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக உறபத்தி செய்யப்பட்டது. அமோனியா பயிர்களுக்கு இடும் உர உற்பத்தியில் பயனாகும் ஒரு பொருள். பல்வேறு வகையான மருந்துப்பொருட்கள் உற்பத்தியிலும் அமோனியா பயன்படுகின்றது.அனைவரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அங்கேயே தங்கியிருந்து பணி புரிந்து வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது. அப்பாவித் தொழிலாளர்களின் பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்தப்பட்டதா? உரிய பணி விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா, அவர்களின் இருப்பிடம் தகுதி வாய்ந்ததா என்பதை தொடர்புடைய துறை அதிகாரிகள் விசாரிக்க வேண்டும்.













கருத்துகள்