முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதல்வர் அறிவித்த அரசு மது விற்பனைக் கடைகள் 717 மூடிய பட்டியல் வெளியானது

 வழிபாட்டு ஸதலங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகாமையில் 500 மீட்டர் தொலைவிற்குள் இருந்த 717 அரசு மது விற்பனைக் கடைகளை மூடுவதற்கு முதல்வர்  உத்தரவிட்டிருந்ததன்படி, தற்போது மூடப்பட்ட அந்த 717 கடைகளின் அதிகாரப்பூர்வ விவரப் பட்டியலைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது


தமிழ்நாடு முழுவதும் 717 அரசு மது விற்பனைக் கடைகள் மூடப்பட்டதாக உள்ள விவரம் :- 

சென்னை வடக்கு மாவட்டத்தில் 13 கடைகள், சென்னை மத்தியில் -9 , சென்னை தெற்கில்-9, காஞ்சிபுரம் வடக்கு-10, காஞ்சிபுரம் தெற்கு-8, திருவள்ளூர் கிழக்கு-27, திருவள்ளூர் மேற்கு-6 என சென்னை மண்டலத்தில் மொத்தம் 82 அரசு மது விற்பனைக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

இதேபோல், கோயம்பத்தூர் வடக்கு-48, கோயம்பத்தூர் தெற்கு-23, கரூர்-8, ஈரோடு-42, திருப்பூர்-31, நீலகிரி-27 என கோயம்பத்தூர் மண்டலத்தில் மொத்தம் 179 அரசு மது விற்பனைக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

அரக்கோணம்-7, தர்மபுரி-7, கிருஷ்ணகிரி-7, நாமக்கல்-14, சேலம்-22, திருவண்ணாமலை-19, வேலூர்-6 என சேலம் மண்டலத்தில் மொத்தம் 82 அரசு மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

கடலூர் மாவட்டத்தில் 21 கடைகள், நாகப்பட்டினம்-4, புதுக்கோட்டை-17, பெரம்பலூர்-6, தஞ்சாவூர்-6, திருச்சிராப்பள்ளி -15, திருவாரூர்-6, விழுப்புரம்-9 என திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் மொத்தம் 84 அரசுமதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

இதேபோல், திண்டுக்கல் மாவட்டத்தில் 26 கடைகள், கன்னியாகுமரி-15, இராமநாதபுரம்-29, தேனி-12, திருநெல்வேலி-33, தூத்துக்குடி-63, மதுரை தெற்கு-39, மதுரை வடக்கு-13, விருதுநகர்-42, சிவகங்கை மாவட்டத்தில் 18 கடைகள் என மதுரை மண்டலத்தில் மொத்தம் 290 அரசு மது விற்பனைக் கடைகள் மூடப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுமது விற்பனைக் கடைகளில் சராயப் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூல் செய்த 200 பணியாளர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அரசு மது விற்பனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதுவிலக்குத் துறையைப் பொருத்தவரை, அரசு மது விற்பனைக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கும் விவகாரமும் மிக முக்கியமான பிரச்சனையாக குடிக்கும் நபர்கள் மத்தியில் உள்ளது.

கடந்த திமுக ஆட்சியில், மது போத்தல்களுக்கு எம்.ஆர்.பி. விலையை விட பத்து ரூபாய் அதிகமாக வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்தன. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய், “பாட்டிலுக்கு 10 ரூபாய்” என்ற பாடலைப் பாடி அந்த விவகாரத்தை பெரிதாக்கினார்.

இதையடுத்து, தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்த பிறகும் அரசு மது விற்பனைக் கடைகளில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்குவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது. பல்வேறு இடங்களில் மது குடிப்பவர்கள், பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலிப்பது தொடர்பான சம்பவங்களை படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியும் வருகின்றனர்.

இந்த நிலையில், அரசு மது விற்பனைக் கடைகளில் நடைபெற்று வந்த முறைகேடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டதில், மதுபான பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக புகார்கள் எழுந்தது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சுமார் 200 மது விற்பனைப் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அரசு மது விற்பனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 நிர்வாகத்தில் கூடுதல் வசூல் உள்ளிட்ட முறைகேடுகளை முற்றிலுமாக தடுப்பதற்கு அரசு தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், 1983 ஆம் ஆண்டு எம். ஜி. ராமச்சந்திரன் தலைமையிலான அதிமுக அரசால், தமிழகத்தில் சாரயம் மதுவகைகளின் மொத்த விற்பனைக்காக தொடங்கப்பட்டது. இந்திய நிறுவனச் சட்டம் - 1956 ன் படி மாநில அரசின் கட்டுப்பாட்டின் படி இயங்கும் அமைப்பாக நிறுவப்பட்டது. தமிழ்நாட்டில் நீண்ட காலமாக மதுவிலக்கு அமலில் இருந்து வந்துள்ளது. முதன் முதலில் 1937 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் சி. ராஜகோபாலச்சாரியின் காங்கிரஸ் கட்சி அரசால் மதுவிலக்கு அமல் படுத்தப்பட்டது. அன்றிலிருந்து 2001 வரை, 1971–74, 1983–87, 1990–91 ஆகிய சிறு கால இடைவெளிகளைத் தவிர தமிழ்நாட்டில் மது விற்பனை தடை செய்யப்பட்டிருந்தது.பொதுவாக மது என அறியப்பட்ட எத்தனால் அடங்கிய குடி போதை வஸ்து வேதியியல் வரைவிலக்கணத்தின் படி மது என்பதில் வேறு கலவைகளும் அடங்குகின்றன. மதுபானங்கள் பொதுவாக கரும்புக் கழிவு மொலாசஸ் மூலம் பியர் வகைகள், பழரச வகைகள், வடி பானங்கள் என மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன. எத்தனால் உளத்தூண்டல் போதை மருந்து இது மூளைத்திறன் மயக்க மருந்தாகவும் செயற்படுகிறது. கூடுதலான நாடுகள் மது உற்பத்தி, விற்பனை, உட்கொள்ளல் தொடர்பான பல விதிமுறைகளைக் கையாண்டு வருகின்றன. மதுபானம் உலகின் கூடுதலான நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டும் பலரால் உட்கொள்ளப்பட்டும் வருகின்றது. மதுபானங்களை உட்கொள்ளல்  1990 வரை தலைமறைவாக நடந்த நிலை மாறி சில கலாச்சாரங்களில் சமூக நிகழ்வுகளில் முக்கிய அம்சமாகவே மாறி காணப்படுகிறது.

குருதியில் காணப்படும் எத்தனால் அளவு ஒரு குறித்த அளவை விஞ்சினால் அவர் சட்டரீதியாக போதையுற்றவராக கருதப்படுவார். இவ்வாறு போதையுற்றவர்கள் வாகனம் செலுத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது தடுக்கப்பட்டுள்ளது. மதுபானங்கள் பழக்க அடிமைத்தனத்தை தூண்டும் தன்மை உடையன.1980 களில் குடிப்பவர்களின் குறைந்தபட்ச வயது 26 ஆக இருந்தது. 2007 ஆம் ஆண்டில்  18 ஆகக் குறைந்துவிட்டது. அசோசெம் என்கிற வர்த்தகக்கூட்டமைப்பின் சமூக வளர்ச்சிப் பிரிவு செய்த ஆய்வில், 19-26 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் மத்தியில் குடிப்பழக்கம், 60 சதவீதம் அதிகரித்துள்ளதென்கிறது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் டீன் ஏஜ் குடிப்பழக்கம் 100 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.. படிபகங்களை தனியாரும் குடிப்பகங்களை அரசும் நடத்தும் நிலை மாற வேண்டும் அதன் பிறகு படிப்படியாக மது விலக்கு கொண்டு வரவேண்டும் என்பதே சமூக அக்கறை கொண்ட பல தலைவர்ளின் கருத்தாக உள்ளது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...