முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மணல் கொள்ளையில் 8 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டவிரோத மணல் கடத்தல் மற்றும் பணமோசடி விவகாரம் தொடர்பாக,


நீர்வளத்துறை (பொதுப்பணித்துறை) உயர் அதிகாரிகள் மற்றும் மணல் குவாரி ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை (ED) அதிரடி சோதனை ஏற்கனவே நடத்தியது. தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலமாக ஆற்று மணல் விற்பனை செய்யப்படுவதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாகவும், கணக்கில் காட்டப்படாமல் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்  செய்யப்படுவதாகவும் அமலாக்கத்துறைக்கு புகார்கள் வந்ததன் அடிப்படையில் அமலாக்கத்துறை (ED) வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.சோதனைக்கு உள்ளான  நீர்வளத்துறையின் முதன்மைப் பொறியாளர் முத்தையா மற்றும் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம்


ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. முக்கிய மணல்  ஒப்பந்ததாரர்களான புதுக்கோட்டை எஸ்.ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் மற்றும் கரிகாலன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் தீவிர சோதனைகள் நடைபெற்றது. அதோடு சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள நீர்வளத்துறை முதன்மை அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டனர். இந்த அதிரடி சோதனைகளில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், சுமார் ரூபாய் .12.82 கோடி ரொக்கப் பணம், மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இந்த விவகாரத்தில் திருச்சிராப்பள்ளி, கரூர், தஞ்சாவூர், அரியலூர், வேலூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கும் விளக்கம் அளிக்கக் கோரி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. சம்மனை எதிர்த்து திமுகவின் கடந்த அரசு நீதிமன்றம் சென்ற போதிலும், உச்ச நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன் பேரில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். இவ்வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.  இந்த நிலையில் ஆட்சி மாற்றம் தமிழ்நாட்டில் நடந்த பின்னர், கடந்த கால மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்த திமுக ஆட்சிக் காலத்தில் மணல் குவாரிகளில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக அதிகாரி ஒருவர் மீது அமலாக்கத்துறை வீட்டிற்கு சென்று சோதனை நடத்தியது. அவர் திருவள்ளூர் கோட்டத்தில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தவர், அவர் பணி செய்த நாட்களில் கிட்டத்தட்ட 500 கோடிக்கு மேல் பணம் சம்பாதித்துள்ளார். 

அப்படியானால் திமுக ஆட்சி தலைமைக்கு எவ்வளவு ஊழல் பணம் கொடுத்திருப்பார். என மக்களே கற்பனை செய்து பாருங்கள்.

மணல் குவாரி  முறைகேடுகளில் அவருக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்க துறைக்கு தெளிவான ஆதாரம் கிடைத்ததன் பேரில் அவரது வீட்டில் அப்போது சோதனை நடந்தது.  ஆனால் கடந்த ஆட்சியில் அவர் மாற்றம் செய்யப்படவில்லை. ஊழல்வாதிகள் எப்படி மாற்றுவார்கள் பணம் வராதே!

தற்போது தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு ஊழல் அதிகாரிகள் ஒவ்வொருவராக பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். அந்த வகையில் கடந்த காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு தற்போது வரை ஊழல் செய்தவர்கள் எந்த வெட்கமுமில்லாமல் வலம் வரும் அந்த அதிகாரியை தகுதி குறைந்த பணியில் மாற்றம் செய்து நீர்வளத் துறை உத்தரவிட்டிருப்பது அந்த துறை வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது. 

கடந்த காலங்களில் அதிமுக திமுக என எந்த ஆட்சி வந்தாலும் அவரை மாற்ற முடியாமல் தைரியமாக ஊழல் அவரை வலம் வர வைத்தது அவரை மீறி யாரும் முக்கிய பணியிடத்துக்கு வர முடியாது என்ற நிலையும் இருந்தது.

அப்படிப்பட்ட அதிகாரி ஒருவரை தமிழக வெற்றிக்கழக அரசு தூக்கி எறிந்துள்ளது தான் பாராட்டி குறிப்பிடத்தக்கது.

அந்தப் பொறியாளர் பெயரே பொதுப்பணித் திலகம் அவர் மீதான முக்கிய முறைகேடு குற்றச்சாடடு  பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கி, விசாரணை அமைப்புகளின் வளையத்தில் இருந்தும், இவர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நீர்வளத்துறையில் இணைத் தலைமைப் பொறியாளர்  பதவியில் அமர்த்தப்பட்டது குறித்து துறை ரீதியான அதிகாரிகள் கடுமையான அதிருப்தியைத் தெரிவித்தனர். ஒப்பந்தப் பணிகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு, 8 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. தன் சிறப்பு 

அரசு வளங்களைத் தனது சுயநலனுக்காகப் பயன்படுத்தியது மற்றும் திறமையான அதிகாரிகளை திட்டமிட்டுப் புறக்கணித்ததாகவும் இவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. சிக்கிய இவர் இனி சிக்கப்போவது பலர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...