முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருச்செந்தூர் மற்றும் தில்லை வாழ் அந்தணர்கள் பக்தர்கள் மத்தியில் பணம் வாங்குவதால் அறநிலையத்துறையின் நடவடிக்கை

இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நடத்திய ஆய்வில்  அர்ச்சகர் பணம் பெற்றதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் காவல்துறை சார்பில் வழக்குப் பதிவும் செய்தனர்.


திருச்செந்தூர் முருகன் கோயிலில் கைங்கர்யம் மேற்கொள்ளும் தமிழ்நாட்டில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர். முருகனின் படை வீடுகள் அனைத்தும் குறிஞ்சி நிலமான மலைகளில் அமைந்திருக்கும் போது, திருச்செந்தூர் கோயில் மட்டும் நெய்தல் நிலமான  கடற்கரைக் கோயிலாக அமைந்திருப்பது தனிசிறப்பு,


 கோயில் கட்டுமானங்கள் அனைத்தும் பல்வேறு காலக்கட்டங்களில் பல புகழ்பெற்ற பாண்டிய மன்னர்களாலும், பின்னர் சமஸ்தான ஜமீன்தார்களாலும் புனரமைக்கப்பட்டிருப்பதாக வரலாற்றுப் பதிவுகள் குறிப்பிடும், ஆலயம்,

திருச்செந்தூர் கோயில் கடற்கரை பாதை செல்லும் வழியில் உள்ள கல்தூண்களில் காணும் குறிப்புகளில், பத்தாம் 11ஆம் நூற்றாண்டுகளில் கோயிலுக்காக நிலங்கள் தானம் வழங்கப்பட்டது" எனவும்,  ஆய்வாளர்கள் உறுதி செய்கின்றனர்.   மன்னர் குலசேகர பாண்டியன் காலத்தில் கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டதாகவும், நிலம் தானம் வழங்கப்பட்டதாகவும் கல்வெட்டுகளில் இருப்பதால், திருச்செந்தூர் முற்காலப் பாண்டியர்கள் காலத்திற்கும் முற்பட்டது" எனலாம்


"திருச்செந்தூர் கோயில் ஆரம்பத்தில் சிவன் கோயிலாக இருந்து , சிவன் கோயில்களில் பின்பற்றப்படும் ஆகம விதிகள் அனைத்தும் இங்கும் கடைபிடிக்கப்படும்" என்பதை கோயில் பணிகள் செய்யும் அர்ச்சகர்களும் உறுதிப் படுத்துகின்றனர்.

கோயில் புனரமைப்பில் பாண்டிய மன்னர்கள், நாயக்க மன்னர்கள், மற்றும்  சமஸ்தான ஜமீன்களின் பங்கும் உள்ளது எனக் கூறும் வரலாற்று ஆய்வாளர்கள் , பல்வேறு காலக்கட்டங்களில் பலரால் கோயில் கட்டுமானங்கள் விரிவடைந்ததாகவும், தொல்லியல் ரீதியாக இறுதியாக கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் பத்து மற்றும் 11ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்ததாக இருந்தாலும், சங்க இலக்கியங்களில் திருச்செந்தூர் குறித்து நக்கீரர் பாடலில் 'திருச்சீரலைவாய்' என்கிறது,


புலவர் நக்கீரர் வாழ்ந்த காலத்தை இலக்கிய ஆய்வாளர்கள் கி.பி இரண்டாம் நூற்றாண்டு என்று குறிப்பிடுவதால் கோயில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது, அதற்கு முன் ஏற்பட்டது  னச் சொல்லலாம்,               கல்வெட்டுகள் மூலம் சோழர்கள் மற்றும் பாண்டிய மன்னர்களின் பங்களிப்பு  குறிப்பாக, வரகுண பாண்டியன் (கி.பி. 875) மற்றும் பிற்காலப் பாண்டிய மன்னர்களின் காலக் கல்வெட்டுகள் மூலமும், கி.பி. 1656-ஆம் ஆண்டு கல்வெட்டு, டச்சுக்காரர்களின் ஆக்கிரமிப்பிற்குப் பின் மதுரை பாணடிய நாட்டை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் கோயில் மீண்டும் புதுப்பித்து  கும்பாபிஷேகம் நடந்து வரலாறு கொண்டது,   17 ஆம் நூற்றாண்டுகளில் திருச்செந்தூர் நிலப்பரப்புகளைக் கைப்பற்றிய டச்சுக்காரர்கள் திருச்செந்தூர் முருகன் சண்முகர் சிலையைக் கொள்ளையடித்து சென்றதாக வரலாற்றுத் துறைப் பேராசிரியர் முனைவர் கல்யாணசுந்தரம் எழுதிய திருச்செந்தூர் முருகன் கோயில் வரலாறு நூலில் குறிப்பிடுகிறார்.


15, மற்றும் 16 ஆம் நுற்றாண்டுகளில் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த போச்சுகீசியர்களிடமிருந்து நிலப்பரப்பைக் கைப்பற்றிய டச்சுக்காரர்கள், 1648 ஆம் ஆண்டில்  தரங்கம்பாடி மற்றும் நாகப்பட்டினத்திலிருந்து திருச்செந்தூரைக் கைப்பற்ற மேற்கொண்ட முயற்சிகள் அணைத்தும் தோல்வியடைந்ததனால் இலங்கை சென்று மீண்டும் படைகளைத் திரட்டி 1649 ஆம் ஆண்டில் திருச்செந்தூர் முருகன் கோயிலை டச்சுக்காரர்கள் கைப்பற்றினர்" என வரலாற்று ஆய்வாளர் கல்யாணசுந்தரம் அதே நூலில் குறிப்பிடுகிறார்.

திருச்செந்தூர் கோயிலை மீட்டெடுக்க மக்களாதரவோடு டச்சுக்காரர்களை எதிர்த்து நாயக்க மன்னர்கள் போரிட்டனர் அதில் சில உயிரிழப்புகள் ஏற்பட்டதற்காக  "டச்சுக்காரர்கள் இழப்பீடு கேட்டனர்" என அதே நூல் கூறுகிறது,

கேட்ட இழப்பீட்டுப் பொருளுதவி மறுக்கப்பட்டதால் திருச்செந்தூர் கோயிலில் இருந்து சண்முகர் சிலையையும், நடராஜர் சிலையையும் டச்சுக்காரர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக அதே நூலில் காணலாம், 


ஓரு வருடத்திற்குப் பின் டச்சுக்காரர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தி 1651ஆம் ஆண்டில் சிலைகளை மீட்டதாகவும் தகவல் உண்டு,  திருச்செந்தூர் சூரபத்மனான அசுரன் வதம் நடக்கும் வரை அவன் ஆதிக்கத்தில் கீழ் அடிமையாக இருந்த பிராமணர்கள், முருகன் சூரபத்மனை வதம் செய்ய வந்த போது, முருகனுக்கு ஆதரவாக நின்று போர் புரிந்தனர்." என வரலாறு கூறும் திரிசுதந்திர அர்ச்சகர்கள் சங்கத்தின் தலைவர் வீரபாகு மூர்த்தி கருத்தாக 

"முருகன் கோயிலில் அனைத்து வகைகளிலும் சேவையாற்றுவதே எங்களின் தலையாய பணி 1954 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை கோயிலின் முழுக்கட்டுப்பாடும் எங்களிடம் தானே இருந்தது, அதன்பிறகு அமைந்த அரசு இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் சென்றது,





கோயிலில் சேவை செய்யும் எங்களுக்கு அரசின் எந்தவித பணப்பலன்களும் கிடைக்கவில்லை, கால காலமாக சேவையாற்றும் எங்களுக்கு ஊதியம் வழங்காவிட்டாலும் 1965 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்த பங்குத் தொகைகளை கடந்த 8 ஆண்டுகளாக அரசு வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. அதனை முறையாக வழங்கினால் எங்களின் வாழ்வாதாரத்திற்கு அதனைப் பயன்படுத்திக் கொள்வோம், எங்களை இந்த விரும்பத்தகாத நிலைக்குத் தள்ளுவதே அரசுதான் மேலும் அதிகாரிகளின் 100 ரூபாய் டோக்கன் முறைகேட்டை மறைக்க அர்ச்சகர்களை பலிகடா ஆக்குவதாகக்" கூறுகிறார்.

அர்ச்சகர்களுக்கு பங்குத்தொகை வழங்கப்படாத விவகாரம் குறித்து  இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கருத்தாக "பங்குத்தொகை விவகாரம் தொடர்பாக எங்களிடம் எந்தக் கோரிக்கையும் வரப்பெறவில்லை அதனை முறையாக அவர்கள் கேட்டால் அதனை அரசு பரிசீலிக்கும். அதற்காக முறைகேடாக பணம் பெறுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது" என்றார்.  முன்னாள் திமுக அமைச்சரும் திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன்  அறிக்கையில், "பல நூற்றாண்டுகளாக திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான உதவியும், வழிகாட்டுதலும், திரிசுதந்திர அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்,

அறநிலையத்துறையைச் சாராத இவர்கள் மரபு வழியாகச் செய்து வரும் தரிசன உதவிக்கு பக்தர்கள் தரும் தட்சணையை அவர்கள் பெறுகிறார்கள் ஆனால் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் இதனை இழிவுபடுத்தியுள்ளார்" எனும் குற்றச்சாட்டிற்கு எக்ஸ் தளத்தில் பதிலளித்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், "பக்தர்களிடம் சட்டத்துக்கு புறம்பாகப் பணம் பெற்றுத் தான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை, அப்படிச் செய்வது சேவையுமில்லை,

 தவறு செய்தவர்களைத் தண்டித்தால் தங்களுக்கு ஏன் பதற்றம் வருகிறது, திருச்செந்தூரில் நடந்து வரும் மேலும் பல முறைகேடுகளை வெளிக்கொண்டு வருவேன்" எனக் கூறியுள்ளார்.முன்னால் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.,  கடந்த ஐந்து ஆண்டுகளாக அவரது தொகுதியில் உள்ள ஆலயத்தில் ஊழலற்ற நிர்வாகம் நடந்ததாகக் கூற முடியுமா என்பது எழுவினா, அங்கு பணி செய்து தற்போது சிவகங்கை மாவடடத்தில் பணி செய்யும்  டெல்டா மாவட்டத்தைச் சேர்த்த முனடாசுக் கவிஞர் பெயர் கொண்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மட்டுமே கடந்த காலத்தில் பல கோடி ஊழல் செய்துள்ளார், அதாவது கடை மறு குத்தகூ உண்டியல் திருவிழா கந்தர்சஷ்டி விழா மற்றும் இதறவகை என கணக்கில் வந்த வராத வகையில் நடத்திய ஊழலில் இந்த சட்டமன்ற உறுப்பினர் எதாவது நடவடிக்கை எடுத்தாரா என்பதே பக்தர்கள் கேள்வி எந்த வகையில் கோயில் புகழ் தற்போதய அமைச்சரால் சிறுமைப்படுத்தப் பட்டது, எந்த வகையில் அர்ச்சகர் சமூகம் இழிவுபடுத்தப் பட்டது என்பதை இன்னும் இவர் தெளிவு படுத்தவில்லை, தெளிவுபடுத்தினால், நானும் உடன்சேர்ந்து; இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் ஊழலுக்கு எதிரான செயல்பாட்டை ஆதரிக்கும் நிலை  காரணம் ஊழல் ஒழிய வேண்டும்,  குறிப்பிட்டு  புதிய செய்தி தரலாம்,  எனப் பார்த்தால்; ஒரு கருத்தும் வலுவாக இல்லையே. இவர் கடந்த ஆட்சியில் ஊழலை ஆதரித்து ஊழல் செய்தவர்களில் இவரும் ஒருவர் ஏன்பதால் அதை நாமும் விட்டு விடலாம்,

திரிசுதந்திர அர்ச்சகர் சமூகம் குறித்துத் தேடினால்  பாரம்பரிய உரிமை என்பது 

இவர்களுக்கு ,ஊழல் செய்ய தரப்பட்டதல்ல பக்தி மார்க்கம் வளர்க்க மட்டுமே, பக்தர்களிடம் பணம் பறிக்க ஏற்பட்டதல்ல, (திரிசுதந்திர அர்ச்சகர் சமூகம்)

கோயில் உருவான காலம் தொட்டே மரபு வழியாகப் பூசை மற்றும் வழிபாட்டு உதவிகளைச் செய்து வரும் பூசாரிகள் ஆவர். பெயர்க்காரணமாகப் பார்தால் திரிசுதந்திரம் என்பது இறைவனின் மூன்று நிலைகளான 'காரியம், கைங்கரியம், ஸ்தானிகம்' என்பது கோயில் பூஜை நிர்வாகம், இறைப்பணி, மற்றும் வழிபாட்டு ஒருங்கிணைப்பு ஆகியவற்றைச் செய்யும் சுதந்திரம் பெற்றவர்கள் என்பதைக் குறிக்கிறது. 

இவர்கள் தாமிரபரணி ஆற்றின் கிளையாறுகள் மூன்றும் இணையும் முக்காணி உள்ள ஸ்ரீவைகுண்டம்  பகுதியைச் சார்ந்த பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில் சிதம்பரம்  தில்லையம்பல தீட்சிதர்கள் மற்றும் திருச்செந்தூர் திரிசுதந்திரர்கள் ஆகிய இரு தரப்பினருமே  புகழ்பெற்ற ஆலயங்களில் வழிபாட்டு உரிமைகளைத் தங்களின் மரபுரிமை வழி பரம்பரைச் சொத்தாகக் கொண்டுள்ளனர். பாரம்பரிய உரிமை, கோவில் நிர்வாகத்தில் அரசின் தலையீடு மற்றும் பக்தர்களிடம் லஞ்சம் பெறுதல் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இவ்விரு தரப்பினர்கள் மீதும் பலவித வழக்குகள் மற்றும் சர்ச்சைகள் தொடர்ந்து நடந்தவாறு உள்ளன. தில்லை தீட்சிதர்கள்  சிதம்பரம் நடராஜர் கோவிலில் பல நூற்றாண்டுகளாக தீட்சிதர்கள் மட்டுமே பூசை மற்றும் நிர்வாகத்தை மேற்கொண்டு வருகின்றனர். கோவிலை இந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்கக் கூடாது என்றும், இது தங்களின் தனிப்பட்ட மதம் சார்ந்த உரிமை என்றும் தீட்சிதர்கள் உச்சநீதிமன்றம் வரை  தொடர் வழக்குகள் நடத்தி சாதகமாகத் தீர்ப்பளித்தது, கோவில் நிர்வாகம் தீட்சிதர்கள் வசமே இருக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டது. கனகசபையில் பக்தர்கள் பாடல்பாடி தரிசனம் செய்வதைத் தடுத்தது தொடர்பாகவும், சிறுவர்கள் பால்ய விவாஹத் திருமணங்கள் போன்ற காரணங்களுக்காகவும் தீட்சிதர்கள் மீது சர்ச்சைகளும் வழக்குகளும் தொடர்ந்து பதிவாகின்றன. அதேபோல திருச்செந்தூர் திரிசுதந்திரர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அர்ச்சனை, தரிசன வழிகாட்டுதல் போன்றவற்றை காலம் காலமாக மரபுவழியாகச் செய்து வருபவர்கள் திரிசுதந்திரர்கள் (முக்காணியர்கள்) ஆவர். கோவில் மூலவர் பூஜை உரிமைகளைப் பெற இவர்களுக்கும் பிற பூசாரிகளுக்குமிடையே நீண்ட காலமாக வரலாற்றுச் சச்சரவுகள் நடந்துள்ளன. திரிசுதந்திரர்கள் என்பவர்கள் அறநிலையத்துறையின் நேரடி ஊழியர்கள் அல்ல என்பதால், அவர்கள் மீது பக்தர்களிடம் அதிகமான கட்டணம் மற்றும் லஞ்சமாகப் பணம் வசூலிப்பதாகத் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளும் உள்ளன. பக்தர்களிடம் பணம் வசூலித்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் அறநிலையத்துறையும் ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இரண்டு தரப்புமே ஆகம விதிகளின்படி பாரம்பரியப் பூசாரிகளாக இருந்தாலும், பக்தர்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்தல் மற்றும் அரசின் நிா்வாகக் கட்டுப்பாடுகளை எதிர்த்தல் போன்ற காரணங்களால் சட்டப் போராட்டங்களை எதிர்கொண்டுள்ளனர்.                திருச்செந்தூர் பதிகமிது பாடித் துதிப்போம்.

1. வீதிசுற்றிக் கீழ்ப்புறமும் கடலுங் கண்டேன். விஸ்தாரக் கொடிமரமு மங்கே கண்டேன் ஆதியெனும் மூலமதை அங்குக் கண்டேன் அடியெனும் செந்தில்நகர் வலமாய் வந்தேன் நீதிபுகழ் கோபுர மேற்புறத்திற் கண்டேன் நிச்சமாய் உனதழகைக் காண வேண்டி ஆதியெனும் கடற்கரையில் வந்துநின்று ஆரூப தரிசனங் கண்டருள் பெற்றேனே.

2. மந்தாரை பிச்சிமுல்லை வனமும் கண்டேன், மணல்மேட்டுக் குவட்டழகு மலையுங் கண்டேன் வந்தவர் நோய் பிணிதீர்க்கும் வளமுங் கண்டேன் வருந்தும் அடியார்க்கு வரமீயக் கண்டேன் சிந்தா நவமணி விளக்கு ஒளியுங்கண்டேன் திருச்செந்தூ ரதிபனைக் காணவென்று அந்தரமாய்க் கடற்கரையில் வந்துநின்று ஆரூப தரிசனங் கண்டருள் பெற்றேனே.

3. நாழிநல்ல கிணறு தன்னை நானுங் கண்டேன் நன்மைபெறத் தீர்த்தமதில் ஆடிக்கொண்டேன் வாழிசொலு மறையோர்கள் தன்னைக் கண்டேன்  மண்டபமுந் திருமதிலுஞ் செந்தூருங் கண்டேன் கோழியெனுஞ் சேவல்மயில் தன்னைக் கண்டேன் குமரனிரு தாளிணையைக் காண வென்று ஆறுதலாய்க் கடற்கரையில் வந்து நின்று ஆரூப தரிசனங் கண்டருள் பெற்றேனே.

4. மூன்றுசுத்து மண்டபமுஞ் சுற்றிப் பார்த்தேன் முன்னாலே வீரபத்ரன் தன்னைக் கண்டேன் நானுமே மலைக்குடைவில் பெருமாள் கண்டேன் நல்லவள்ளி சன்னதியும் பிறகு கண்டேன் தேனுடன் பாலாபிஷேகம் செய்யக் கண்டேன் சிவனார்தம் பாலகனைக் காணவேண்டி ஆனதொரு கடற்கரையில் வந்து நின்று ஆரூப தரிசனங் கண்டருள் பெற்றேனே.

5. ஆறுமுக நயினார் தன்னழகு கண்டேன் அவருடைய சண்முக விலாசங் கண்டேன் கூறுமடியார்கள் வினை தீர்க்கக் கண்டேன் குன்றுருவ வேல் வாங்கி நிற்கக் கண்டேன். வேறுவினை யணுகாம லிருக்கக் கண்டேன், வேலவனார் தம்பதத்தைக் காண வென்று ஆறுதலாய்க் கடற்கரையில் வந்து நின்று ஆரூப தரிசனங் கண்டருள் பெற்றேனே.

6. மங்களம்சேர் தெய்வானை தன்னைக்கண்டேன் மதகரிதான் வாசலிலே வரவுங் கண்டேன் பங்கயஞ்சேர் பன்னிருகை வேலுங் கண்டேன் பதக்கமுத்துச் சரப்பளிகள் தன்னைக் கண்டேன் தங்கமயக் கோபுரத்தில் தீபங் கண்டேன் சங்கரனார் பாலகனைக் காண வேண்டி அங்கசங்கக் கடற்கரையில் வந்து நின்று ஆரூப தரிசனங் கண்டருள் பெற்றேனே.

7. மாசிமாதம் திருவீதி சுத்திவரவுங் கண்டேன் மனிதருக்கு மடத்திலன்னம் வழங்கக் கண்டேன் தேசிக்காய் சப்பரத்தின் சாயல் கண்டேன். தினந்தினமும் பூச்சரங்கள் தூவக் கண்டேன் வாசனையாம் பெரியோர்கள் தன்னைக் கண்டேன் வள்ளியுட கணவனைநான் காண வென்று ஆதியெனும் கடற்கரையில் வந்து நின்று ஆரூப தரிசனங் கண்டருள் பெற்றேனே.

8. மாசிமகம் ரதமேறி வரவுங் கண்டேன் மனிதரெல்லாம் கூடிவடம் பிடிக்கக் கண்டேன் தேசிக்காய்ச் சப்பரத்தின் சாயல் கண்டேன் திருவருளும் பூச்சரங்கள் தொங்கக் கண்டேன் நீதிபுகழ் சண்முக விலாசங் கண்டேன் நிச்சமாய் உனதழகைக் காண வேண்டி ஆசையெனும் கடற்கரையில் வந்து நின்று ஆரூப தரிசனங் கண்டருள் பெற்றேனே.

9. கஞ்சமலர்த் தாளிணையை நானுங் கண்டேன் கதிர்வேலுஞ் சூலமுமுன் கையிற் கண்டேன் நெஞ்சமதில் வேதியர்சம் பத்துங் கண்டேன் தினந்தினமும் சந்தனா பிஷேகங் கண்டேன் வஞ்சமெனும் மாயமதை நீக்கக் கண்டேன் மனதறிய வுந்தனை நான் காணவேண்டி அஞ்சலெனும் கடற்கறையில் வந்து நின்று ஆரூப தரிசனங் கண்டருள் பெற்றேனே.

10. செகத்திலுள்ளோ ருன்பாதம் பணியக் கண்டேன் தினந்தினமும் மறையோர்கள் துதிக்கக் கண்டேன் சுகத்திலே நானடியேனி ருக்கக் கண்டேன் துயரமெல்லா முன்பாதம் செல்லக் கண்டேன் மகத்திலே ரதத்தில் வருமழகு கண்டேன் மனதறிய உனதழகைக் காண வேண்டி அகத்தியமாய்க் கடற்கறையில் வந்து நின்று ஆரூப தரிசனங் கண்டருள் பெற்றேனே.

11. வண்ணமயில் வாகனத்தில் வரவுங் கண்டேன் மறையோர்கள் தினமு மன்னம் புசிக்கக் கண்டேன் திண்ணமுடன் வள்ளிமனை தனையுங் கண்டேன் தினந்தினமும் பள்ளியறை சேரக் கண்டேன் கின்னரர்தம் பூர்வீணை முழங்கக் கண்டேன் கிலேசமெல்லாம் தீர்த்துன்னைக் காண வேண்டி அன்னம்போல் கடற்கரையில் வந்து நின்று ஆரூப தரிசனங் கண்டருள் பெற்றேனே". என்கிறது பதிகம்    முன்னால் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.,  கடந்த ஐந்து ஆண்டுகளாக அவரது தொகுதியில் உள்ள ஆலயத்தில் ஊழலற்ற நிர்வாகம் நடந்ததாகக் கூற முடியுமா என்பது எழுவினா, அங்கு பணி செய்து தற்போது சிவகங்கை மாவடடத்தில் பணி செய்யும்  டெல்டா மாவட்டத்தைச் சேர்த்த முனடாசுக் கவிஞர் பெயர் கொண்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மட்டுமே கடந்த காலத்தில் பல கோடி ஊழல் செய்துள்ளார், அதாவது கடை மறு குத்தகூ உண்டியல் திருவிழா கந்தர்சஷ்டி விழா மற்றும் இதறவகை என கணக்கில் வந்த வராத வகையில் நடத்திய ஊழலில் இந்த சட்டமன்ற உறுப்பினர் எதாவது நடவடிக்கை எடுத்தாரா என்பதே பக்தர்கள் கேள்வி எந்த வகையில் கோயில் புகழ் தற்போதய அமைச்சரால் சிறுமைப்படுத்தப் பட்டது, எந்த வகையில் அர்ச்சகர் சமூகம் இழிவுபடுத்தப் பட்டது என்பதை இன்னும் இவர் தெளிவு படுத்தவில்லை, தெளிவுபடுத்தினால், நானும் உடன்சேர்ந்து; இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் ஊழலுக்கு எதிரான செயல்பாட்டை ஆதரிக்கும் நிலை  காரணம் ஊழல் ஒழிய வேண்டும்,  குறிப்பிட்டு  புதிய செய்தி தரலாம்,  எனப் பார்த்தால்; ஒரு கருத்தும் வலுவாக இல்லையே. இவர் கடந்த ஆட்சியில் ஊழலை ஆதரித்து ஊழல் செய்தவர்களில் இவரும் ஒருவர் ஏன்பதால் அதை நாமும் விட்டு விடலாம்,

திரிசுதந்திர அர்ச்சகர் சமூகம் குறித்துத் தேடினால்  பாரம்பரிய உரிமை என்பது  இவர்களுக்கு ,ஊழல் செய்ய தரப்பட்டதல்ல பக்தி மார்க்கம் வளர்க்க மட்டுமே, பக்தர்களிடம் பணம் பறிக்க ஏற்பட்டதல்ல, (திரிசுதந்திர அர்ச்சகர் சமூகம்)

கோயில் உருவான காலம் தொட்டே மரபு வழியாகப் பூசை மற்றும் வழிபாட்டு உதவிகளைச் செய்து வரும் பூசாரிகள் ஆவர். பெயர்க்காரணமாகப் பார்தால் திரிசுதந்திரம் என்பது இறைவனின் மூன்று நிலைகளான 'காரியம், கைங்கரியம், ஸ்தானிகம்' என்பது கோயில் பூஜை நிர்வாகம், இறைப்பணி, மற்றும் வழிபாட்டு ஒருங்கிணைப்பு ஆகியவற்றைச் செய்யும் சுதந்திரம் பெற்றவர்கள் என்பதைக் குறிக்கிறது. இவர்கள்  தாமிரபரணி ஆற்றின் கிளையாறுகள் மூன்றும் இணையும் முக்காணி உள்ள ஸ்ரீவைகுண்டம்  பகுதியைச் சார்ந்த பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...