தமிழ்நாட்டின் அமைச்சரவை மூப்புப் பட்டியலில் நிதித்துறை அமைச்சர் இருபத்து ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார்.
கட்சியில் உள்ள சீனியாரிட்டி என்பது வேறு. அமைச்சக நிர்வாகத்தில் அது வேறு என்பதை எப்படிக் கவனிக்காமல் விட்டனர்,
மாநிலத்தில் முதன்மை அமைச்சர் எப்போதுமே முதலிடம் வகிப்பார். அவர் பொறுப்பில் தான் இஆப, இகாப உள்ளிட்ட குடிமைப்பணி நிர்வாகம் மற்றும் காவல் கட்டுப்பாடு இருக்கும். காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் கு.காமராசர் ஆட்சியில் மட்டும் தான் காவல் துறை அமைச்சர் பொறுப்பு பூ.கக்கன் வசம் கொடுக்கப்பட்டிருந்தது,
முதலமைச்சர் பொறுப்புக்கு அடுத்து நிதித்துறை அமைச்சர் இடம்பெறுவார். நாட்டின் நிதியை பெருக்குதல், நிதிப்பற்றாக்குறையை சீர் செய்தல், நிதி தொடர்பான இன்னபிற முக்கிய திட்டமிடல்களை நிதியமைச்சர் கைக் கொள்வார். வருவாய்த்துறைக்கான வழிகாட்டியாக இவரது துறை இருக்கும்.
மூன்றாவது வருவாய்த்துறை. இந்தத் துறையின் அமைச்சர், நிதியமைச்சரின் ஆலோசனை பெற்று வருவாய்க்கு உண்டான வழிவகையை செய்வார். மிக முக்கியமான துறையாக இது கவனம் பெறுகிறது.
நான்காவது உயர்கல்வி அல்லது சட்டம் மற்றும் சிறைத்துறை அல்லது மின்சாரத் துறை இடம்பிடிக்கும். இந்தத் துறைகளின் அவசியத்தை விட மிக மிகத் தேவையுள்ள முக்கியத்துறையாக ஆட்சியாளர்கள், விவசாயத்துறை அல்லது PWD எனப்படும் பொதுப்பணித்துறையைக் கருதினால் இவற்றில் ஒன்று நான்காமிடம் பிடிக்கும். மற்றவை ஐந்து, ஆறு, ஏழு என்ற வரிசை முறைப்படி அமையும். நாட்டு மக்களின் அடிப்படை விஷயங்களை உள்ளடக்கிய துறைகளின் வரிசையானது, அந்தவகையில் முதல் எட்டு இடத்தில் அமைந்துவிடும்.
திமுகவும் அதிமுகவும் ஆட்சி செய்து ஆண்டு முடித்த 1967 தொடங்கி, 2025 வரை இந்த வரிசை தான் பதவி மூப்பு எனப்படும் (சீனியாரிட்டி) வரிசையில் அமைந்திருந்தது. கட்சியில் மிகவும் மூத்தவர் என்பதால் தான் கடந்த முறை திமுக ஆட்சியில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்த .கே.துரைமுருகன், முதலமைச்சர் பொறுப்புக்கு அடுத்த இடத்தில் அவை முன்னவர் என்ற அடையாளத்துடன் இரண்டாமிடம் வகித்தார்.
அதிகாரிகள், மூத்த அரசியல்வாதிகளான மாண்புமிகுக்கள் செங்கோட்டையன், ஜேசிடி பிரபாகரன் போன்றோர் இதை சுட்டிக்காட்டியிருக்கலாம் தமிழ்நாடு
அமைச்சரவையின் மூப்புப் பட்டியலை அரசு வெளியிட்டதில் முதல்வர் சி. ஜோசப் விஜய் முதலிடத்தில் இடம்பெற்ற நிலையில், அமைச்சரவையில் மிகவும் மூத்தவராக கருதப்படும் கே. ஏ.செங்கோட்டையன் 5 வது இடத்தில் இருப்பது கவனத்தை ஈர்த்தது. விசிக சார்ந்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு புதியவர் 14-வது இடத்தை பெற்றார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வென்றது. காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவுடன் முதவ்வர் சி. ஜோசப் விஜய் ஆட்சி அமைத்துள்ளார் மே மாதம் 10 ஆம் தேதி முதல்வராகப் பொறுப்பேற்றார் அவருடன் அன்றைய தினம் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்பட 9 பேர் அமைச்சர்களாகினர்.
பத்து நாட்கள் கழித்து அமைச்சரவை மீண்டும் விரிவாக்கப்பட்டது. கூட்டணிக் கட்சிகளும் அமைச்சரவையில் இடம் பெர்ற நிலையில், முதலவர் சி. ஜோசப் விஜய் கேபினட்டில் தற்போது 34 பேர் அமைச்சர்களாக உள்ளனர். தமிழ்நாடு அமைச்சரவையில் மூப்புப் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளதன்படி முதல்வர் முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்தும், மூன்றாம் இடத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் 4-வது இடத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் ஆகியோர் உள்ளனர்.
கேபினட்டில மிகவும் மூத்தவராக உள்ள செங்கோட்டையன் 5-வது இடத்தில் உள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பொறுப்பை அமைச்சர் செங்கோட்டையன் வைத்துள்ளார், கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த காங்கிரசின் விஸ்வநாதன் 11 வது இடத்தில் கல்வித்துறை அமைச்சர் உள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் 12 வது இடத்திலும், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் ஷாஜகான் 13 வது இடத்திலும், சமூக நீதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் வன்னி அரசு 14 வது இடத்திலும் உள்ளனர்.
அரசு வெளியிட்ட அமைச்சர்களின் மூப்பு பட்டியல் விவரம் வருமாறு;
2.என். ஆனந்த் - ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர்
3.ஆதவ் அர்ஜுனா - பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்
4.டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் - சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர்
5.கே.ஏ. செங்கோட்டையன் - வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்
6.பி. வெங்கடரமணன் - உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்
7.ஆர். நிர்மல்குமார் - எரிசக்தி வளங்கள் மற்றும் சட்டத் துறை அமைச்சர்
8.ராஜ்மோகன் - பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் துறைகள்: பள்ளிக் கல்வி, தொல்லியல், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடு, தகவல் மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவுச் சட்டம், செய்தித்தாள் காகிதக் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சிடுதல், அரசு அச்சகம்.
9.டாக்டர் டி.கே. பிரபு - இயற்கை வளங்கள் துறை அமைச்சர் துறைகள்: கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்.
10.எஸ். கீர்த்தனா - தொழில்துறை அமைச்சர்
11.பி. விஸ்வநாதன் - உயர்கல்வித் துறை அமைச்சர்
12.எஸ். ராஜேஷ் குமார் - சுற்றுலாத்துறை அமைச்சர்
13.ஏ.எம். ஷாஜஹான் - சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர்
14.வன்னி அரசு - சமூக நீதித் துறை அமைச்சர்
15.ஏ. விஜய் தமிழன் பார்த்திபன் - போக்குவரத்துத் துறை அமைச்சர்
16.பி. ராஜ்குமார் - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்
17.வி. சம்பத் குமார் - பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர்
18.எம். விஜய் பாலாஜி - கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர்
19.கே. விக்னேஷ் - மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
20.கே. தென்னரசு - வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர்
21.ஜெ. முகமது ஃபர்வாஸ் - தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்
22.வி. காந்திராஜ் - கூட்டுறவுத் துறை அமைச்சர்
23.கே. ஜெகதேஸ்வரி - சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர்
24.வினோத் - வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர்
25.சி. விஜயலட்சுமி - பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர்
26.டி. சரத்குமார் - மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர்
துறைகள்: மனிதவள மேலாண்மை மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன்.
27.ரமேஷ் - இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்
28.பி. மதன் ராஜா - குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர்
29.என். மேரி வில்சன் - நிதி, திட்டமிடல் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர்
30.ஸ்ரீநாத் - மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை அமைச்சர்
31.எஸ். கமலி - கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர்
32.ஆர். குமார் - செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்
33.ஆர்.வி. ரஞ்சித்குமார் - வனத்துறை அமைச்சர்
34.டி. லோகேஷ் தமிழ்செல்வன் - வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை அமைச்சர்
35.ராஜீவ் - சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் உள்ளனர்






கருத்துகள்