தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (TNTEU) கடுமையான நெருக்கடியில் உள்ளது. சுமார் 680 தனியார் உள்பட இணைப்புக் கல்வியியல் கல்லூரிகளுடன் இயங்கும் பல்கலைக்கழகம்,
ஆசிரியர் பயிற்சியின் தரத்தை உறுதி செய்ய வேண்டிய நிறுவனமாக இருந்த நிலையில், பல ஆண்டுகளாக ஊழல் முறைகேடுகள், மற்றும் நிர்வாகத் தவறு காரணமான தோல்விகளால் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு தகவலறியும் உரிமை RTI-Act மனுவுக்கும் பதில் அளிக்க முடியாத நிலைக்கு முந்தைய திமுக அரசு தள்ளியது என்பது இந்தப் பிரச்சினையை வெளிப்படுத்துகிறது.
சில அமைப்புகள் தொடர்ந்து RTI மூலம் வெளிப்படுத்திய தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. பல தனியார் B.Ed., M.Ed. கல்லூரிகள் போதிய தகுதிவாய்ந்த பேராசிரியர்கள் இல்லாமல், ஒரே பேராசிரியர் பல கல்லூரிகளில் பெயரளவில் பட்டியலிடப்பட்டு, இணைப்பு அங்கீகாரம் பெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் வெளியான ‘ghost faculty’ மோசடிக்கு ஒப்பான நிலை TNTEU-விலும் நிலவுவதாகக் கூறுகிறது. சில கல்லூரிகளில் உள்கட்டமைப்பு, நூலகம், ஆய்வக வசதிகள் குறைவாகவே உள்ளன. NCTE விதிமுறைகளை மீறியும், முறையான ஆய்வுகளின்றி இணைப்புகள் வழங்கப்பட்ட சம்பவங்கள் பல உள்ளன,
இது மட்டுமல்லாமல். பட்டங்கள் விற்பனையும், தேர்வு முறைகேடுகளும், பணியாளர் அங்கீகார ஊழல் என பல்வேறு குற்றச்சாட்டுகள் தற்போது வெளியாகியுள்ளன. investigative அறிக்கைகள் B.Ed., M.Ed. பட்டங்கள் இரண்டு லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவதாகக் கூறுகின்றன. இத்தகைய மோசடிகள் எதிர்கால ஆசிரியர்களின் தரத்தைச் சீரழித்து, மாணவர்கள் பள்ளிக்கல்வியின் அடித்தளத்தையே பாதிக்கும். முந்தைய திமுக அரசின் காலத்தில் நிர்வாகம் சீரழிந்து தடுமாறியது. நிரந்தரத் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் நியமனங்கள் தாமதம், RTI பதிலளிப்பில் தோல்வி ஆகியவை நம்பிக்கையை இழக்கச் செய்தன. பல கல்லூரிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டாலும், முழுமையான சீர்திருத்தம் நடைபெறவில்லை.
தனியார் கல்வி நிறுவனங்களின் பெருக்கம் மக்கள் தொகைக்கு ஏற்ப வரவேற்கத்தக்கது, ஆனால் லாப நோக்கத்திற்காக உள் கட்டமைப்பு இல்லாமல் தரத்தை தியாகம் செய்வது கல்வியில் ஏற்க முடியாதது. தகுதியான பேராசிரியர்கள், சம்பளப் பதிவுகள், உள்கட்டமைப்பு ஆகியவை இல்லாத கல்லூரிகள் ஆசிரியர் பயிற்சியை வியாபாரமாக்குகின்றன. இணைப்பு ஆய்வுக் குழுக்களின் அறிக்கைகள் பொதுமக்களுக்கு வெளிப்படையாக்கப்பட வேண்டும். பணி செய்யும் பேராசிரியர்களின் பயோடேட்டா, சம்பள விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது, ஆனால் இன்னும் முழுமையாக நடைபெறவில்லை. தற்போது
தமிழக வெற்றிக் கழக கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், உயர் கல்வி காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் விஸ்வநாதன் எடுக்கப்போகும் நடவடிக்கை மீது மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். கல்வியை மையப்படுத்திய கொள்கைகள், ஊழல் ஒழிப்பு, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை வலியுறுத்திய தவெக அரசு, TNTEU-வில் உடனடி சீர்திருத்தங்களை மேற்கொள்ள முன்வர வேண்டும். முதலில், நிரந்தர நிர்வாகிகளை நியமித்து நிர்வாகத்தை திறம்படச் செயல்படுத்த வேண்டும். அனைத்து இணைப்பு ஆய்வறிக்கைகளை வெளியிடுதல், போலி பேராசிரியர்கள் மீது நடவடிக்கை, உள்கட்டமைப்பு சரிபார்ப்பு, NCTE விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துதல் ஆகியவை மிகவும் அவசியம்.
தனியார் கல்லூரிகளுக்கு கடுமையான தர நிர்ணயம் குறித்து அளவுகோல்களை வகுத்து, முறைகேடு செய்யும் நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். உண்மையான தகுதி வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்கும் பயிற்சி முறையை உறுதி செய்ய வேண்டும். இது வெறும் நிர்வாகச் சீர்திருத்தம் அல்ல; தமிழ்நாட்டின் எதிர்கால தலைமுறைக்கான முதலீடு. பள்ளிகளில் தரமான ஆசிரியர்கள் இல்லாவிட்டால், கல்வி முன்னேற்றம் சாத்தியமல்ல.
தவெக கூட்டணி அரசு இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, கல்வியில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை நிலைநாட்டினால், வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையாக அமையும். மக்கள் கண்காணிப்பும், சரியான பதிவு நாளேடு மற்றும் செய்தி மற்றும் காட்சி ஊடகங்களின் பங்கும் இதில் முக்கியம். ஆசிரியர் கல்வியில் சீர்திருத்தம் என்பது தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்தும் முக்கியமான படியாகும். இப்போது சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால், பிரச்சினை ஆழமாகி, மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். தீர்வு வருமா என்பது அரசின் காங்கிரஸ் அமைச்சர் உறுதியையும் செயல்பாட்டையும் பொறுத்தது.
பள்ளிக் கல்விதுறை, உயர்கல்வி துறை அமைச்சர்கள் கவனத்தில் கொண்டு பரிசீலிக்க வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்புகளாகும்.










கருத்துகள்