கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சார்பில் போட்டியிட்டு மூன்று முறை சட்டமனன்றத்திற்குத் தேர்வானவவர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பேத்தி விஜயதாரணி.
2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டமன்ற உறுப்பினர் பதவி முடியும் முன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டு விஜயதாரணி தோல்வியடைய. காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் வெற்றி பெற்ற சூழலில் விஜயதாரணி ஜூன் மாதம் 13 ஆம் தேதி முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைவராக உள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் பொதுச்செயலாளர் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் இணைந்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய விஜயதாரணி, ”இரண்டரை ஆண்டுகாலம் பாஜகவில் இருந்தும் மக்கள் பணியாற்றுவதற்கு வாய்ப்பில்லாத சூழ்நிலை இருந்ததாகவும். காரணம் கூறியவர் மேலும் " த.வெ.க-வில் இன்றைக்கு தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்கி, ஊழலற்ற ஆட்சியை வழங்கவும், போதை கலாச்சாரத்தை ஒழிக்கவும், பெண்களுக்குப் பாதுகாப்பை வழங்கவும் சூளுரைத்து, நம்முடைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்றைக்குத் தமிழகத்தை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.
மக்கள் பணியாற்றுவதற்கு நிச்சயமாக இங்கு களம் இருந்து கொண்டிருக்கிறது.
மக்களுக்காக உழைக்கும் இடத்தில் தொடர்ந்து பணியாற்றிய நான், தொடர்ந்து மக்கள் பணியாற்ற, அந்த மனதோடு மக்களோடு நெருங்கி வாழ வேண்டும் என்ற அடிப்படையில் இன்றைக்கு தவெகவில் இணைந்திருக்கிறேன்.
அமைச்சர்கள் எல்லோரும் சாமானிய மக்களாக இன்றைக்கு எல்லோரையும் அரவணைத்து, ஒட்டுமொத்த தமிழக மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு இணைந்து மக்கள் பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
மக்கள் பணியாற்றுவதற்காகப் பாஜகவில் இணைந்தும், அதற்குண்டான வாய்ப்பு என்பது கிடைக்காமல், இரண்டரை ஆண்டுகாலம் மிகவும் நெருக்கடியில் இருந்து கொண்டிருந்த சூழ்நிலை உங்களுக்கெல்லாம் தெரியும்.
ஆனால், தற்போது த.வெ.க-வில் சாமானிய மக்களும் மக்கள் பணி ஆற்ற முடியும் என்பதைத் த.வெ.க நிரூபித்திருக்கிறது. எந்த விமர்சனம் வந்தாலும் அதைப்பற்றி நான் பொருட்படுத்தவிலலை
மக்கள் பணியாற்றுவதற்கு ஒரு தளம் என்பது அவசியம். அது சரியான தளமாக இருக்க வேண்டும்; அது ஊழலற்ற தளமாக இருக்க வேண்டும்; பெண்களுக்கு வாய்ப்பு தரக்கூடிய, பாதுகாப்பு தரக்கூடிய ஒரு தளமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு தளமாகத் தான் தமிழக வெற்றிக் கழகத்தை நான் பார்க்கிறேன்” என்று கூறினார். அவர் கருத்து படி பாஜக என்பது சாமானியன் இருக்க முடியாத கட்சி எனத் தெரிவித்து விலகியுள்ளார், இதில் இருந்து அறிய வேண்டியது யாதேனில் இவருக்கு பாஜக வாய்ப்பு அளிக்காமல் ஒரு சமானியனுக்கு அங்கு வாய்ப்புகள் வழங்கி இருந்தால் என்ன சொல்லி விலகியிருப்பார், உண்மை அவருக்கே வெளிச்சம், சில வசந்த் காலப் பறவைகள் இலை உதிர்காலத்தில் தங்காது என்பதே, இவர்கள் சொல்லிக்கொள்வது போல பெரிதாய் உழைப்பை கட்சிக்குத் தருபவர்களா என்றால் இல்லை என்று தான் பதில் வரும் இவர்கள் உழைப்பு வழி மாற மாட்டார்கள், ஆனால் பலனோ பெரிய அறுவடையாக வர வேண்டும் அதுவே அவர்கள் இருக்குமிடம் யாரோ ஒருவரின் உழைப்பு இவர்களைப் போன்றவர்களுக்கு 'அது' -இஷ்டம் போல கொட்டுவது தான் அதிர்ஷ்டம்
கேரளாவில் பீதாம்பரமும், ராமச்சந்திரனும் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள வந்து பட்டபாடு கொஞ்சம் நஞ்சமல்ல. 1921 -ஆம் ஆண்டில் திருச்சூரில பிறந்த என்.பீதாம்பரமும், மருதூரில 1917-ஆம் ஆண்டில் பிறந்த எம். ஜி.ராமச்சந்திரனும் உழைப்பு மூலம் வநத நாயகர்கள்.
1927-ஆம் ஆண்டில் பத்து வயதில் திருச்சிராப்பள்ளிக்கு தனது அண்ணன் எம். ஜி.சக்ரபாணி துணையோடு எம். ஜி.ராமச்சந்திரனும், யார் உதவியும் இல்லாமல் 1931-ஆம் ஆண்டில் மெட்ராஸ் கோடம்பாக்கம் ஏரியாவுக்கு பீதாம்பரமும் வந்து சேர்ந்து ஸ்டூடியோவில் மேக்கப் மேன் ஒருவரிடம் உதவியாளராக என்.பீதாம்பரமும், மெட்ராஸ் சென்ட்ரல் வால்டாக்ஸ்ரோடு ஒற்றைவாடை நாடக கம்பெனியில் எம். ஜி.ராமச்சந்திரனும் சேர்ந்து உழைக்க ஆரம்பித்து ராமச்சந்திரன் உழைப்பால உச்சம் தொட்ட ஹீரோ ஆனார். மருதூர் கோபால கிருஷ்ணமேனன் மகனான ராமச்சந்திரன் தான் எம்ஜிஆர் ஆனார்.
தமிழ்நாட்டு சூப்பர்ஸ்டார் எம்ஜிஆர், கன்னடத்தின் சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், ஆந்திரப் பிரதேசம் சூப்பர் ஸ்டார் என்.டி.ஆர். என மூன்று மாநில சூப்பர் ஸ்டார்களின் முகமாக 'முகவரியாக அதே காலத்தில் பீதாம்பரம் வளர்ந்தார். அடிமைப்பெண் எம்ஜிஆர் பாத்திரம், கர்ணன் படத்தில் என்டிஆரின் கிருஷ்ணர் பாத்திரம் யாவும் மேக்கப் பீதாம்பரமே.
எம்ஜிஆர் 1987-ஆம் ஆண்டும், பீதாம்பரம் 2011-ஆம் ஆண்டும் காலமானார்கள். எம்ஜிஆருக்கு நேரடி வாரிசு இல்லை, ஆனால் பீதாம்பரம் போலவே மகன் பி.வாசு கடின உழைப்பாளி. பி.வாசுவை இயக்குநர் ஸ்ரீதர் உடன் சேர்த்துக்கொண்டார். இளமை ஊஞ்சலாடுகிறது வரை உதவியாளராய் இருந்து. பிற்காலத்தில் சந்தான பாரதியோடு கைகோத்து பாரதி -வாசு, என பன்னீர்புஷ்பங்கள் திரைப்படம் கொடுத்தனர். பின்னர் தனித்தனியே படம் இயக்கினர்.
என் தங்கச்சி படிச்சவ வெற்றிப் படத்தில் சினிமா கணக்கைத் தொடங்கி, சின்னத்தம்பி, மன்னன், வால்டர் வெற்றிவேல், சந்திரமுகி என பிளாக் பஸ்டர் படங்களைக் கொடுத்து என்.பீதாம்பரம் மகனாக இல்லாமல் தனிக்காட்டு ராஜாவாக வெற்றியைக் குவித்தார், P.வாசு. அந்த இயக்குனர் பி.வாசுவின் சகலை தான் சென்னையில் நீண்ட கால அதிமுக காரர் தான் நா. பாலகங்கா வி
கே.சசிகலா நடராஜனுக்கு இருந்த நல்ல பழக்கம், எம்ஜிஆர் சார்பாக இருந்த பலரை ஜெ.ஜெயலலிதாவுக்கு முன் நிறுத்தி, 'இவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும்' எனப் பரிந்துரை ஜெ.ஜெயலலிதாவின் புரிதலால் பலருக்கு அந்தவகையில் புதுவாழ்வு அமைந்தது.
அப்படி மறைந்த பீதாம்பரம் மகன் பீ.வாசு என்பாரின் சகலையான நா.பாலகங்கா வி. கே.சசிகலா நடராஜன் மூலம் இன்னாரின் உறவினர் என போயஸ் கார்டனில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பின்
நா.பாலகங்காவுக்கு எம்.பி., எம்எல்ஏ, மேயர் என அடுத்தடுத்து வாய்ப்புகளை வாரி வழங்கினார். தோற்றுக்கொண்டே இருந்தவரை ராஜ்யசபா எம்.பி. ஆக்கி டெல்லிக்கு அனுப்பினார். நிரந்தர மாவட்டச் செயலாளராக தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்துக்கொண்டே இருந்தார். நிரந்தர எதிர்க்கட்சியான திமுகவை எதிர்த்து வாழ்நாளில் ஒரு அறிக்கைகூட கொடுக்காத என் பாலகங்காவுக்குத் தான் எத்தனை எத்தனை வாய்ப்புகள். தலைகுப்புற கவிழ்க்கும் தோல்விகளின் காரணியாக எந்நாளும் இருப்பவை தலைமைகளே தவிர தொண்டன் இல்லை.
அதில் தற்போது தவெகவில் ஓடிப்போனவர் தான் நா.பாலகங்கா
நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலில் துறைமுகம் தொகுதியை ராயபுரம் மனோவுக்கு கொடுத்திருந்தார் எடப்பாடி. கே. பழனிசாமி என்.பாலகங்காவுக்கு ஏன் தரவில்லை? என உள்ளூர் அதிமுக தொண்டர்கள் சிலரிடம் கேட்டால், "திமுக வேட்பாளர். பி. கே. சேகர்பாபுவுக்கு என்.பாலகங்காவின் விலைதெரியும் என்பது எடப்பாடி. கே. பழனிசாமிக்கும் தெரிந்திருக்கும்" என்கின்றனர்.
தவெகவில் இணைந்திருக்கும் நா.பாலகங்கா மற்றும் "மக்கள் பணி செய்யாமல் உறக்கமே வரவில்லை" என்று கூறியுள்ளார், அது என்ன உழைப்பு என்பது தான் தெரியவில்லை.
ஆனால் அதே வேளையில் பீ.வாசு உள்ளிட்ட எண்ணற்றோர் தங்களின் உயர்வுக்காக போயஸ் கார்டனையோ ராமாவரம் தோட்டத்தையோ இதுவரை பயன்படுத்திக் கொண்டதில்லை என்பதையும், கவனிக்க வேண்டும்,
அதிமுகவில் இருந்து விலகி, தவெகவில் இணைந்திருக்கும் மற்றும் பலரில் ஒருவர் தான் கே.டி. பச்சமால். 2013-ஆம் ஆண்டில் ஜெ.ஜெயலலிதாவின் அமைச்சரவையில் வனத்துறை மந்திரியாக இருந்தபோது, ஏதோ ஒரு காரணமாக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நடவடிக்கையால் பதவியை
இழந்தவர். தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர். நேற்றுவரை அதிமுககாரர். தவெகவில் இணைந்தபோது அவர் அளித்த பேட்டியைப் பாருங்கள்.
"அதிமுகவில் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே பதவியும், மரியாதையும். தீய சக்தி திமுகவோடு கூட்டணி அமைத்து எம்ஜிஆர உருவாக்கிய ஜெயலலிதா வளர்த்த கழகத்தை சிதைத்து கருணாநிதி வாரிசின் உதவியோடு கழக ஆட்சி மலர்வதை ஒருபோதும் என்னால் ஏற்கமுடியாது. ஆகவே 'தூய' தவெகவில் என்னை இணைத்துக் கொள்கிறேன்" என்கிறார் இவர் குறித்து ஒரு முன்கதை சுருக்கம் இது
மந்திரி கே.டி. பச்சமாலிடம் உதவியாளரான சகாயத்துக்கும், வனத்துறை ஊழியர் ஆறுமுகத்துக்கும் சொத்து தகராறு.
2011- ஆம் ஆண்டில் ஆறுமுகமும் அவரது மனைவி ஜெகதீஸ்வரியும் மர்மமான முறையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்த வழக்கில் மந்திரி கே. டி.பச்சமாலின் உதவியாளர் சகாயம், அப்போது A-1 குற்றவாளி. பலர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக் கேட்டு ஜெகதீஸ்வரியின் அம்மா குமாரி மற்றும் பலர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கு விசாரணை வேகம் பிடித்த நிலையில் தான் பச்சமாலின் மந்திரி பதவியையும், மாவட்டச் செயலாளர் பதவியையும் பறித்து மார்ச் மாதம் 2013-ஆம் ஆண்டில் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார்.
முன்னதாக எம்.பி., தேர்தலிலும் (1999) பச்சமாலுக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்து உயர்த்தி விட்டார் ஜெ.ஜெயலலிதா. அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றாலும், 2011-ஆம் ஆண்டில் மீண்டும் வாய்ப்புக் கொடுத்து எம்எல்ஏ வும் ஆக்கி, அமைச்சராகவும் ஆக்கினார் ஜெ.ஜெயலலிதா.
அதிமுகவில் ஜெ.ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட ஐவர் குழுவால் தான் தனது அமைச்சர் பதவி போனதாகக் கருதினார். அதற்கு எதிர்வினையை ஜெ. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை ஆற்றாமல். ஜெ. ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக உடைந்தபின் ஆற்றினார்.
தீவிர டிடிவி தினகரன் ஆதரவாளராகவே மாறினார். தளவாய் சுந்தரம் போன்றோர் டிடிவி தினகரனை விட்டுப் போனபோது கூட கே.டி. பச்சமால் மீது மிகுந்த நம்பிக்கையை வைத்திருந்த டிடிவி. தினகரனின் நம்பிக்கையைத் தூக்கிப்போட்டு விட்டு அதிமுகவில் எடப்பாடி கே. பழனிசாமி அணியை ஏற்றார்.
ஓ.பன்னீர் செல்லம் வி. கே.சசிகலா நடராஜன் , டிடிவி தினகரன், போன்றோரை மறுத்து ஒதுக்கி, "ஒன்றுபட்ட அதிமுகவே எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக தான்" என வெளிப்படையாகவே பேசிவந்த கே. டி.பச்சமால் தான் இப்போது அதிமுகவை 'மற்றும் பலர்' இருக்கக்கூடிய கட்சி என விமர்சித்து விட்டு, தவெகவில் இணைத்துக் கொண்டிருக்கிறார்.
நிறம் மாறும் இவர்கள் எந்தவகையில் சிறந்தவர்கள் என்பதை இனி மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்,
குயில்களின் குஞ்சுகள் பிற பறவைகளின் கூடுகளில் வளர்கின்றன. பெண் குயில் ஒரு நல்ல கூட்டைத் தேர்ந்தெடுத்து, அந்த கூடு காலியாக இருக்கும் போது, தனது முட்டையை அதில் வைக்கிறது. காகம் இதை அறியாமல் அதை தனது சொந்த முட்டைகளாக நினைத்துக்கொண்டு, அதனை அடைகாக்கி வளர்க்கிறது.அது பிறக்கும் போது, கூட்டில் உள்ள மற்ற முட்டைகளையோ அல்லது குஞ்சுகளையோ தள்ளிவிட்டு, தனக்கான உணவினை மட்டும் பெறுகிறது. இது கொடூரமாக தோன்றினாலும், இதுவே அதன் வாழ்வாதாரம் இது சோம்பேறித்தனம் அல்ல. அறிவியல் படி, குயில் சோம்பேறி அல்ல. இது மிக வெற்றிகரமான உயிர்வாழும் உத்தி.
பெண் குயில் அவை வளர்க்கப்பட்ட அதே இனப் பறவைகளின் கூடுகளை அடையாளம் கண்டு, அதன் முட்டைகளை அதே போல உருவாக்குகின்றன. இதனால் மற்ற கூடுகளில் மேலும் முட்டைகளை இடுவதற்கு ஆற்றல் அதற்கு கிடைக்கிறது. இது ஒரு குறைபாடல்ல, புத்திசாலித்தனமான உத்தி. அதைத்தான் சில கட்சி மாறும் அரசியல் வாதிகள் மத்தியில் காண்கிறோம்.






.jpg)









கருத்துகள்