முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாவாடை சாமியைக் காக்க என் எல் சி க்கு எதிராகப் போராடும் படையாட்சிகள்

பாவாடை சாமியைக் காக்க என் எல் சி க்கு எதிராகப் போராடும் படையாட்சிகள்,



ஆதரவுத் தலைவர்களின் கண்டனக் குரல். .  என்.எல்.சி நிலக்கரி சுரங்க மூன்றாவது விரிவாக்கத்திற்காக 30 கிராம மக்களின் குலதெய்வக் கோயிலை இடிப்பதா? 



பாமக மற்றும் தவாக கட்சிகள் கண்டனம் .பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த மந்தாரக்குபபம்,தெற்கு மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள அங்காளம்மன் பாவாடைராயன் கோயிலை, நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக கையகப்படுத்நி இடிக்க என்.என்.சி நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. லட்சக்கணக்கான மக்களின் இறை நம்பிக்கையாகத் திகழும் அங்காளம்மன் பாவாடைராயன் கோயிலை இடிக்க என்.எல்.சி நிர்வாகம் துடிப்பது கண்டிக்கத்தக்கது. தெற்கு மேலூரில் அமைந்திருக்கும் அங்காளம்மன் பாவாடைராயன் கோயில் அப்பகுதியில் உள்ள 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்களின் குலதெய்வக் கோயிலாக திகழ்ந்து வருகிறது. கடலூர் மாவட்டத்திற்கு அப்பால் அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் குல தெய்வக்கோயிலாகத் திகழ்கிறது.இந்தக் கோயில் அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள நிலங்களை என்.எல்.சி நிறுவனம் ஏற்கனவே ஆக்கிரமித்துள்ளது. இப்போது 1ஏ சுரங்கத்தின் விரிவாக்கத்திற்காக கோயிலை இடிக்கும் முயற்சியில் என்.எல்.சி நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் வாழும் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், அதையும் மீறி கோயிலை இடிக்க என்.எல்.சி நிர்வாகம் துடிக்கிறது. இதற்காக தமிழ்நாடு அரசின் ஆதரவையும் கோரியிருக்கிறது. 






அங்காளம்மன் -பாவாடைராயன் கோயில் அதே பகுதியில் நீடிப்பதால் என்.எல்.சிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. அதே நேரத்தில் அந்தக் கோயில் இடிக்கப்பட்டால் லட்சக்கணக்கான மக்களின் இறை நம்பிக்கை பாதிக்கப்படும். இவற்றைக் கருத்தில் கொண்டு தெற்கு மேலூர் அங்காளம்மன் பாவாடைராயன் கோயிலை இடிக்கும் முடிவை என்.எல்.சி நிறுவனம் கைவிட வேண்டும்; இந்த விஷயத்தில் என்.எல்.சிக்கு தமிழ்நாடு அரசும் போதிய அழுத்தம் கொடுத்து இந்த முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும்' ஏன வலியுறுத்தியுள்ளார். இந்த ஆலயத்தை வழிபடும் மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பாவாடைராயன், மற்றும் பாவடைப் பிரியன், பவாடைசாமி, எனப் பெயர் வைத்து வருகின்ற நிகழ்வு நாம் காண்லாம், பாமகவின் முன்னால் தலைவர்களில் ஒருவராக இருந்த நெய்வேலி வாழைச் செலவன் கூறக் கேட்டுள்ளோம்.


தமிழக அரசு தலையிட்டு கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்துள்ள தெற்கு மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள அங்காளம்மன் - பாவாடைராயன் கோயிலை, நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக இடிக்க என்.என்.சி நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. லட்சக்கணக்கான மக்களின் இறை நம்பிக்கையாகத் திகழும் அங்காளம்மன் - பாவாடைராயன் கோயிலை இடிக்க என்.எல்.சி நிர்வாகம் துடிப்பது கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே இருந்தவர்கள் கடலூரை சுரண்டியது போதும்..என்.எல்.சி. நிறுவனம் கையகப்படுத்தியுள்ள நிலத்தில் உள்ள குலதெய்வக் கோயிலை இடிக்கும் முடிவை கைவிட தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

மக்களின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் அங்காளம்மன் - பாவாடைராயன் கோயிலை இடிக்கும் முடிவை என்.எல்.சி. நிறுவனம் கைவிட வேண்டும். தமிழக அரசு என்.எல்.சி.க்கு ஆதரவு அளிக்காமல், மக்களின் உணர்வுகளையும் இறை நம்பிக்கையையும் மதித்து மக்கள் பக்கம் நின்று, என்.எல்.சி. நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி கோயிலை இடிக்கும் முடிவை கைவிட முயற்சி எடுக்க வேண்டும்.






என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தனது சுரங்கங்களை விரிவாக்கம் செய்யும் நோக்கில் நெய்வேலி, விருத்தாசலம், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் விளைநிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

விளைநிலங்களுக்கு உரிய இழப்பீடு, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு நிரந்தர வேலை மற்றும் குடியிருக்க மாற்று இடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான காவல்துறையினர் முன்னிலையில் சுரங்க விரிவாக்கப் பணிக்கான நிலம் கையகப்படுத்தும் பணியை என்.எல்.சி. மேற்கொண்டபோது, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நான் களத்துக்கு வந்து ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தியதன் காரணமாகவே நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே நெய்வேலி அருகே அமைந்துள்ள தெற்கு மேலூர் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் - பாவாடைராயன் கோயில், அப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்களின் குலதெய்வக் கோயிலாக உள்ளது.

இக்கோயில் கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வாழும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் குலதெய்வக் கோயிலாகவும் உள்ளது.

இந்தக் கோயிலை ஒட்டிய நிலங்களை என்.எல்.சி. ஏற்கனவே கையகப்படுத்தியுள்ள நிலையில், 1ஏ சுரங்கத்தின் விரிவாக்கத்திற்காக கோயிலை இடிக்கும் முயற்சியில் என்.எல்.சி. நிர்வாகம் தமிழ்நாடு அரசின் ஆதரவை கோரியுள்ளது.

கோயிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மக்களின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் இக்கோயிலை இடிக்கும் முடிவை என்.எல்.சி. நிறுவனம் கைவிட தமிழக அரசு என்.எல்.சி.க்கு ஆதரவு அளிக்காமல், மக்களின் உணர்வுகளையும் இறை நம்பிக்கையையும் ஏற்று மக்கள் பக்கம் நின்று, என்.எல்.சி. நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி கோயிலை இடிக்கும் முடிவை கைவிட முயற்சி எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.


நெய்வேலி மந்தாரக்குப்பம் அருகே உள்ள தெற்கு மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காளம்மன் - பாவாடைராயன் கோவில், அப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களின் குலதெய்வமாக விளங்குகிறது. பாவாடைராயன் தமிழ் மக்களின் முக்கிய காவல் தெய்வம் ஆவார்.கோவில் பற்றிய முக்கிய தகவல்கள்:அமைவிடம்: நெய்வேலி மந்தாரக்குப்பம் அருகேயுள்ள தெற்கு மேலூர் (Therku Melur).தெய்வம்: பார்வதியின் அவதாரமான அங்காளபரமேஸ்வரி அம்மனின் மடியில் அமர்ந்து அருள்பாலிக்கும் காவல் தெய்வம்.வரலாறு: பல நூற்றாண்டுகள் பழமையானது; கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் வாழும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் குலதெய்வ வழிபாட்டுத் தலமாக உள்ளது.திருவிழாக்கள்: சித்திரை மாதம் 10 நாட்கள் திருவிழாவும், ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் ஊஞ்சல் உற்சவமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தற்போதைய நிலை:என்.எல்.சி (NLC) நிலக்கரி சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக இந்த இடத்தை கையகப்படுத்தி, இக்கோவிலை இடிக்க நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...