சென்னை தலைமைச்செயலகத்தில் கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தின் குழந்தையை முதல்வர் சி ஜோசப் விஜய் தூக்கி மகிழ்ந்தார்.
கீர்த்தி சக்ரா விருது பெற்ற தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தை சென்னை தலைமைச்செயலகம் வரவழைத்து முதல்வர் விஜய் பாராட்டினார். அப்போது மீனாட்சி சுந்தரத்தின் அசாத்திய வீரத்தைப் பாராட்டி அரசு சார்பாக ரூபாய் 48 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் சி. ஜோசப் விஜய் வழங்கினார்.
தொடர்ந்து, மீனாட்சி சுந்தரத்தின் குழந்தையை தூக்கிக் கொஞ்சிய முதல்வர் விஜய் தனது மடியில் அமர வைத்துக்கொண்டார். 2024-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் 19-ஆம் தேதி தெற்கு காஷ்மீர், குல்காம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்ததில் நடைபெற்ற போரில் மீனாட்சி சுந்தரம் தாக்குதலுக்கு உள்ளானபோதும் எதிரிகள் மீது தாக்குதல் நடத்தி , அவரது குழுவினரைக் காத்து 5 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றார். இதில், மீனாட்சி சுந்தரம் முகம் உள்ளிட்ட இடங்களில் காயமடைந்த நிலையில் இரு தீவிரவாதிகளை அவர் சுட்டுக் கொன்றாா்.
தொடா்ந்து, ராணுவத்தில் வீரதீரச் செயலுக்காக வழங்கும் நாட்டின் உயரிய கீா்த்தி சக்ரா விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வின்போது அமைச்சர், உயர் அதிகாரிகள் மற்றும் மீனாட்சி சுந்தரத்தின் குடும்பத்தினர் உடனிருந்தனர்.2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ஆம் தேதி தெற்கு காஷ்மீர், குல்காம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளைச் சுற்றி வளைத்து நடைபெற்ற போரில் மீனாட்சி சுந்தரம், அவரது குழுவினர் 5 பேரைக் காப்பாற்ற தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றார். இருந்ந போதிலும் ராணுவத்தில் வீரதீரச் செயலுக்காக வழங்கும் நாட்டின் உயரிய கீர்த்தி சக்ரா விருது அவருக்கு வழங்கப்பட்டது.லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரம் இந்திய ராணுவத்தில் ஆற்றிய அசாத்திய வீர தீரச் செயலுக்காக நாட்டின் இரண்டாவது மிக உயரிய அமைதிக்காலப் பதக்கமான "கீர்த்தி சக்ரா" விருதைப் பெற்ற தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்.
இந்திய ராணுவத்தின் பீரங்கி படைப் பிரிவில் பணியாற்றி கல்காம் மோதல் 2024 ஆம் ஆண்டு: டிசம்பர் மாதம் 19 ஆம் தேதியன்று, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் பகுதியில் ஹிஜாபுல் முஜாகிதின் அமைப்புத் தீவிரவாதிகளுக்கு எதிரான அதிரடித் தாக்குதலில் ஈடுபட்ட நிலையில் கடுமையான காயங்கள்: அதிகாலை வேளையில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில், மீனாட்சி சுந்தரத்தின் முகத்தாடையிலும் வலது தோள்பட்டையிலும் தோட்டாக்கள் பாய்ந்து இரத்தம் சொட்டச் சொட்ட, கடுமையான காயம்பட்ட நிலையிலும் தனது கடமையிலிருந்து பின்வாங்காமல், உடலின் முழு பலத்தையும் திரட்டித் தொடர்ந்து போராடி 5 பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்றார். இந்த பயங்கர மோதலுக்குப் பிறகு டெல்லி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு, முகச் சீரமைப்புக்காக இதுவரை 7 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
இவரது இணையற்ற தைரியத்தைப் பாராட்டி, இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த 2026 ஜூன் 8 அன்று புதுடெல்லியில் இவருக்கு அதிகாரப்பூர்வமாகக் "கீர்த்தி சக்ரா" விருதை வழங்கிக் கௌரவித்தார் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்தின் வீரத்தைப் பாராட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் 48 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை தலைமைச் செயலகத்தில் வைத்து இவரிடம் வழங்கினார். ராணுவ வீரரின் குடும்பத்தினரையும் நேரில் அழைத்து முதல்வர் மற்றும் படைவீரர் நலத்துறை அமைச்சர் ஆகியோர் கௌரவித்தனர்.தேனி மாவட்டம்,கம்பம் வட்டம், காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ஐயப்பன் - பழனி மணி தம்பதியரின் மகன் .மனைவி முத்தமிழ்செல்வம்,மகள்: பவதீர்த்தி (ஒரு வயதுக் குழந்தை).








கருத்துகள்