திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகில் , 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கொடிய குற்றத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதே போல, காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில், பத்து வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த சில மாதங்களாகவே, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குற்றங்களில், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பது அதிகரித்துள்ளது.
இந்த ஜூன் மாதத்திலேயே, சென்னையில் மூதாட்டியிடம் சங்கிலி பறிக்க முயன்ற ஒரு வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம், தாம்பரம் அருகே இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த வழக்கு, திருவள்ளூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய வழக்கு, சென்னை வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே 61 வயது பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, சென்னை வேளச்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், 15 வயது சிறுவன் உட்பட மூன்று வடமாநில தொழிலாளர்கள் கைது, சென்னை மதுரவாயல் பகுதியில் அதிகாலையில் வீட்டிற்கு வெளியே கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த வழக்கு என, தொடர்ந்து பல குற்றங்களில், வட மாநில இளைஞர்கள் கைது செய்யப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
குற்றங்களில் ஈடுபடுபவர்களை, காவல்துறை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்வது பாராட்டத்தக்கது. ஆனால், குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது தமிழக அரசு?
பணி நிமித்தமாக, பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழகத்துக்கு வருவதும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், பல இடங்களுக்குச் செல்வதும் இயற்கை. ஆனால், பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் குறித்த சரியான விவரங்கள், அவர்களை பணியிலமர்த்தும் ஒப்பந்ததாரர்களிடமோ அல்லது, நிறுவன உரிமையாளர்களிடமோ இருக்கிறதா? இந்த விவரங்கள், தமிழக அரசிடம் வழங்கப்படுகிறதா? இதனை முறைப்படுத்த வேண்டாமா?
தமிழ்நடு அரசு உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் வடமாநிலங்களைச் சேர்ந்த எத்தனை தொழிலாளர்கள், எந்தெந்த நகரங்களில் இருக்கிறார்கள், அவர்கள் சொந்த ஊர் உள்ளிட்ட விவரங்கள், தற்போதைய பணியிடங்கள் மற்றும் தங்குமிடம் என, அனைத்துத் தகவல்களையும், வடமாநிலத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் உரிமையாளர்கள், தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டும். இதனை தமிழ்நாடு அரசும் முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார் திருவள்ளூர் மாவட்ட கும்மிடிப்பூண்டியில் பீகாரைச் சேர்ந்த மூன்று வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம். சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப் பட்ட நிலையில் மரணம். பொதுமக்கள் பிடித்து ஒப்படைத்த பீகார் மாநிலக் குற்றவாளி கைது இந்த நிலையில் பொதுமக்கள் சாலை மறியல். மாவட்ட காவல்துறை , சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தின் கும்மிடிப்பூண்டி அடுத்த சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் ஐநூறுக்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் உள்ளன. பெரும்பாலும் வடமாநிலத் தொழிலாளர்களே அதிக அளவில் வேலை செய்கின்றனர்.
சிப்காட் பகுதியையொட்டிய புதுப்பேட்டை கிராமத்தில் பீகார், உத்தரபிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட் போன்ற வடமாநிலத்தவர் குடும்பத்தோடும், தனியாகவும் வாடகை வீடுகளில் இங்கே வசித்து வருகின்றனர்.
நேற்று மாலை இந்தப் பகுதியில் வசித்த வடமாநில தம்பதியின் 3 வயது பெண் குழந்தை திடீரென மாயமானாள். அந்தக் குழந்தையை உறவினர்கள் தேடித்திரிந்த போதுதான் இந்தக்கொடூரம் தெரிய வந்திருக்கிறது.
சம்பவம் குறித்து அண்ணாமலை எடப்பாடி கே.பழனிசாமி, உதயநிதி ஸ்டாலின், மருத்துவர் அன்புமணி ராமதாஸ், எம்.பி., கனிமொழி கருணாநிதி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதே திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே ஏழுவயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக 41 வயது குற்றவாளி நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், கும்மிடிப்பூண்டியில் அடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது, இனி வடமாநிலத்தில் இருந்து பணி செய்யும் நபர்கள் மீதான பார்வை அவசியம் என்பதே.






கருத்துகள்