அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர்
பதவியை ஜூன் மாதம் 16, 2026 ல் ராஜினாமா செய்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து, விராலிமலை சட்டமன்ற தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மே மாதம் 13 ஆம் தேதியன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக கொறடா உத்தரவை மீறி தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு ஆதரவாக டாக்டர் சி.விஜயபாஸ்கர் வாக்களித்ததன் காரணமாக அவரது மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகள் பறிக்கப்பட்டன. எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைமை, உண்மையான விமர்சனங்களையும் குறைகளையும் கேட்பதில்லை என்று அவர் குற்றம் சாட்டினார் அதில் "தலைமை என்பது அதிகாரமோ அல்லது ஆணவமோ அல்ல, அது அரவணைப்பது" என்று எடப்பாடி கே.பழனிசாமியைச் சாடினார். மேலும், "இது முடிவல்ல, ஒரு புதிய தொடக்கம்" என்றும் அவர் ஆடியோ செய்தி வெளியிட்டார் அடுத்தகட்ட அரசியல் நகர்வு ஜூன் மாதம் 22-ஆம் தேதி முதல்வர் சி.ஜோசப் விஜய்யின் பிறந்தநாள் விழாவில், டாக்டர் சி.விஜயபாஸ்கர்
தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகிகின்றன. அதே வேளையில், ஆளும் திமுக தரப்பிலும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கடந்த ஒரே மாதத்தில் பதவியை ராஜினாமா செய்யும் 5-வது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 42 ஆகக் குறைந்துள்ளது. மரகதம் குமரவேல், எஸ். ஜெயக்குமார், பி. சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்தனர். முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி மற்றும் இந்த 5 அதிமுக எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகளையும் சேர்த்து, தமிழகத்தில் தற்போது மொத்தம் 6 தொகுதிகள் காலியனதாக அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்க உள்ளன.டாக்டர் சி.விஜயபாஸ்கர்
இவர் ரொம்ப ஸ்மார்ட்டானவர். ஆகத் திறமை வாய்ந்த இயல்பிலேயே ஊழல்முறைகேடுகளில் கொடி கட்டிப் பறப்பவர். அதாவது மற்றவர்களின் உழைப்பை உறிஞ்சிக் கொழுக்கும் அட்டைப்பூச்சிக்கு நிகாரானவர் என பலரால் விமர்சிக்கப்படும் நபர்
சுகாதாரப் பணியாளர்களான செவிலியர்களின் அடிமாட்டுச் சம்பளத்திலும் கமிஷன் பிடுங்க தனியார் நிறுவனம் மூலம் திட்டம் தீட்டி அம்பலப்பட்டவர் விஜயபாஸ்கர்.
2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம், புகார்தாரர் ஒருவரிடமிருந்து ரூபாய் .100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை மிரட்டிப் பறித்ததாக அவர் மீது சிபி-சிஐடி (CB-CID) வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டதை கடந்த திமுக அரசை சரிகட்டியதால் சமாளித்தார்..!
அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த போது (2016-2021), வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் .35.79 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக இவர் மீதும் இவர் மனைவி மீதும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும் இன்று வரை வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இதுவரை நடவடிக்கையின்றி தப்பித்து வருகிறார் என்றால், திமுகவிலும் மிக நல்ல தொடர்பில் தானிருந்தார்.
இளைஞர்களை சீரழிக்கும் குட்கா விற்பனையை அனுமதித்தற்காக ரூபாய் 39.91 கோடி லஞ்சம் பெற்றவர்.
2016 ஆம் ஆண்டு அப்போலோ மருத்துவமனையில் முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நவம்பர் மாதத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் இல்லத்தில் ஒரு சோதனை நடந்ததில் அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின்படி 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மட்டுமே அரசு மருத்துவமனைகளுக்கு மருந்து மாத்திரைகள் வாங்கிய வகையில் ஊழல் செய்து கையூட்டாக டாக்டர் சி.விஜயபாஸ்கருக்கு ரூபாய் .5.16 கோடி கிடைத்திருக்கிறது. சுகாதாரத்துறை நியமனங்கள் மற்றும் பணியிட மாற்றங்கள் மூலம் ரூபாய் . 2 கோடியே 38 லட்சத்து 75 ஆயிரம் கையூட்டாகவே கிடைத்துள்ளது. டாக்டர்
எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர்கள் நியமனத்தில் ரூபாய் .32 லட்சம் லஞ்சமாக வாங்கப்பட்டிருக்கிறது.தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மருந்துகள் மற்றும் தளவாடங்களை வாங்கிய வகையில் மட்டும் ரூபாய் .1.28... கோடி லஞ்சம் போன்ற தகவல்கள் கண்டறியப்பட்டது.
எனில், அதற்கு முன்னும், பின்னுமாக எத்தனை கோடிகள் சம்பாதித்திருப்பார் ! அந்த வகையில் இன்று பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதி இந்த வில்லங்க டாக்டர் சி.விஜயபாஸ்கர். பல கல்லூரிகள், குவாரி என பல வகையில் சொத்துக்கள் ராப்பூசல் கிராமம் மட்டுமல்ல பல இடங்களில்
புதுக்கோட்டை மாவட்டத்தின் மிகப் பெரிய கோடீஸ்வராக தற்போதுள்ள டாக்டர் சி.விஜயபாஸ்கர் உயர்ந்துள்ளதற்கு பின்னணியில் எங்கும் ஊழல், எதிலும் லஞ்சம் மட்டுமின்றி, இயற்கை வளங்களை அழிக்கும் குவாரிகள் உள்ளிட்ட ஏகப்பட்ட தொழில்கள், வியாபாரங்கள் செய்து வருபவர்.
ஒவ்வொரு ஓட்டுக்கும் தலா 2,000 முதல் 5,000 வரை தந்து விராலிமலையில் சட்டமன்ற உறுப்பினர் ஆனவரான டாக்டர் சி.விஜயபாஸ்கர் தற்போது ராஜினாமா செய்திருக்கிறார் என்றால், இழந்த பணத்தைவிட அதிக ஆதாயம் கருதியே அடுத்தகட்ட நகர்வை எடுத்திருப்பார் என்பது உறுதி.
இவரை தற்போது நேர்மையான ஆட்சி தர இதுவரை ஆர்வம் காட்டும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைப்பதால் அப்படி இணைத்தால், அது தமிழக வெற்றிக் கழகத்தை பாதிக்க வாய்ப்பு உண்டு என அக் கட்சியின் நபர்கள் பேசுவது தெரிகிறது.ஜனவரி மாதம் 2025 ல், புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து போராடிய ஜாபர் அலி, கனிமக் கொள்ளையர்களால் லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்டதாக வழக்கு உள்ள நிலையில்
பிரதான எதிர்க்கட்சியாக இருந்தும், அதிமுக இதை கையில் எடுக்காததன் காரணம், கனிமவளக் கொள்ளையை செய்ய உடந்தையாக இருந்ததே டாக்டர் சி. விஜயபாஸ்கர் என்பதே பரவலாக பேச்சு.
புற்றுநோயை உண்டாக்கும் குட்கா தயாரிப்பாளர்களிடம் மாத மாமூல் வாங்கி அதற்காக சிபிஐ வழக்கை இப்போதும் எதிர்கொண்டுள்ளார்.
கொரோனா காலத்தில் வாங்கப்பட்ட உபகரணங்கள் அனைத்திலும், 40 சதவீதம் கமிஷன் புகழ் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தான்.
இவர் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த காலத்தில், செவிலியர் மாறுதலுக்கு லஞ்சம் வாங்க ஒரு பிஏ, மருத்துவர் மாறுதலுக்கு லஞ்சம் வாங்க ஒரு பிஏ, மருந்து கொள்முதலில் லஞ்சம் வாங்க ஒரு பிஏ, மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் லஞ்சம் வாங்க ஒரு பிஏ, செவிலியர் கல்லூரி ஒப்புதலுக்கு லஞ்சம் வாங்க ஒரு பிஏ, மருத்துவ கல்லூரி அனுமதிக்கு லஞ்சம் வாங்க ஒரு பிஏ என 12 பி.ஏக்களை வைத்திருந்த ஒரே அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தான்.
மணல் மும்மூர்த்திகளான புதுக்கோட்டை எஸ். ஆர். இராமச்சந்திரன், திண்டுக்கல் இரத்தினம் மற்றும் கரிகாலனின் காட்பாதர் இந்த டாக்டர் சி விஜயபாஸ்கர் தான் என பலரும் பேசும் நிலை. மணல் கடத்தலை தடங்கலின்ச்றி செய்ய புதுக்கோட்டைக்கு வருண் குமாரின் மனைவியை எஸ்பியாக திமுகவிடம் பேசி புதுக்கோட்டையில் நியமனம் செய்ததும் இவர் தான் எனப் பேசப்படுகிறது.




கருத்துகள்