முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஆளுநர் உரையுடன் துவங்கியது,

தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்  இன்று (18.6.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 17-வது  சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.


அவர் வெளியிட்ட x தளப் பதிவின் தமிழாக்கம் :-“தமிழக சட்டப்பேரவையில் இன்று புதிய சகாப்தம் உதயமாகிறது என்பதை மக்களுக்குத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

மூன்றாண்டுகளுக்குப் பிறகு, ஆளுநர் உரை எந்த இடையூறும் இன்றி இன்று சட்டசபையில் வாசிக்கப்பட்டது மனதுக்கு அளவற்ற திருப்தியைத் தருகிறது. 


மேலும், மாநில அரசுக்கும் ராஜ்பவனுக்கும் இடையே இணக்கமான சூழல் நிலவ வேண்டும் என்ற தமிழக மக்களின் எதிர்பார்ப்பை முதன்முறையாக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடிய வரலாற்று நிகழ்வு ஜனநாயகத்தின் மாண்பிற்குச் சான்றாக விளங்குகிறது - இது மிகையாகாது.

ஜனநாயகத்தில், ஆளும் ஒரு அரசாங்கம் அனைத்துக் கட்சிகளுக்கும் இடையே ஒருங்கிணைக்கப்பட்ட, இணக்கமான உறவை ஏற்படுத்தி, மக்களின் எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் நிறைவேற்றி, நிலையான, முன்மாதிரியான நிர்வாகத்தை நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும். அந்த இலக்கை நோக்கி நாம் அனைவரும் இணைந்து இந்தப் பயணத்தைத் தொடங்கியிருப்பது மனதிற்கு திருப்தியைத் தருகிறது." எனத் தமிழ்நாடு ஆளுநர்.தகவல்தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் முழுமையாக வாசித்தார்.



2026 மே மாதம் 10-ஆம் தேதி முதல்வராக சி. ஜோசப் விஜய் பதவியேற்றதும், மறுதினம் சட்டப்பேரவையைக் கூட்டி எம்எல்ஏ-க்கள் அனைவரும் பதவியேற்றனா். மே மாதம் 13-ஆம் தேதி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 எம்எல்ஏ-க்களின் ஆதரவைப் பெற்று தவெக அரசு பெரும்பான்மையை நிரூபித்ததையடுத்து, அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை கூடியது.



புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் முறைப்படி ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரின் உரையுடன் தொடங்கிய  கூட்டத்தொடரில் சட்டப்பேரவை மரபுபடி, முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இறுதியில், தேசிய கீதம் பாடப்படும் நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து, கூட்டத்தொடரின் தொடக்கத்திலேயே இரண்டாவதாக தேசிய கீதமும் பாடப்பட்டது. இந்த நிலையில், கடந்த திமுக ஆட்சியில் 


2023-ஆம் ஆண்டு சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடரில் ஆளுநா் ஆா்.என்.ரவி உரையாற்றியபோது, மகளிா் முன்னேற்றம், மதச்சாா்பின்மை, சுயமரியாதை, பெரியாா், அம்பேத்கா், கலைஞா் ஆகிய வாா்த்தைகளை வாசிக்கவில்லை. இதையடுத்து, தமிழக அரசு உரையில் அந்த வாா்த்தைகள் இடம்பெறும் என்று அப்போதைய முதல்வா் மு.க. ஸ்டாலின் அவையில் கூறியதால், ஆளுநா் பாதியிலேயே புறப்பட்டுச் சென்றாா்.




2024-ஆம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத் தொடரிலும், தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடா்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை எனக் கூறி, ஆளுநா் உரையை வாசிக்காமல் சென்றாா். பின்னா், தமிழில் அந்த உரையை பேரவைத் தலைவா் பி. எஸ்.அப்பாவு வாசித்து அவைக் குறிப்பில் பதிவு செய்தாா். இதேபோல், கடந்த 2025, 2026-ஆம் ஆண்டுகளிலும் முதலில் தேசிய கீதம் பாடப்படவில்லை எனக் கூறி ஆளுநா் ஆா்.என்.ரவி வெளியேறிய நிலையில், இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை எந்த மாற்றமுமின்றி, உள்ளதை அப்படியே வாசித்தார் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர். இதில், மத்திய அரசுக்கு எதிரான வரிகளும், மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிரான வரிகளும் இருந்தது.


”மத்திய அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் செலுத்தும் வரியில் இருந்து தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய உரிய நிதிப் பகிர்வினைக் கோருவதற்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்படும். அவ்வாறு தீர்மானம் நிறைவேற்றுவதோடு மட்டும் நின்றுவிடாமல், உச்ச நீதிமன்றம் வரை சென்று நிதிப் பகிர்வினை சட்டரீதியாகப் பெறுவதற்காக சட்ட வல்லுநர்கள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்படும். தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒவ்வொரு ரூபாய் வருவாயும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வில் மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறை அறிக்கையாக வெளியிடப்படும். மேலும், தமிழ்நாட்டிற்குரிய நியாயமான நிதிப் பகிர்வை மத்திய அரசிடமிருந்து பெறுவது உறுதி செய்யப்படும்.1968 ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, "மும்மொழிக் கொள்கை நீக்கப்பட வேண்டும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட வேண்டும்", என்ற தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அன்று முதல் இன்று வரை தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என்ற சூழ்நிலையில், அதனையே இந்த அரசு தொடர்ந்து கடைபிடிக்கும்.

தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ இந்த அரசு கடுமையாக எதிர்க்கும். தேசியக் கல்விக் கொள்கையை கொள்கையின்படி மும்மொழிக் கடைபிடித்தால் தான் அனைவருக்கும் கல்வி இயக்கம்' திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கு நியாயமாகக் கிடைக்கப் பெற வேண்டிய 3,458 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க முடியும் என்ற மத்திய அரசின் நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இது மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிப்பதற்குச் சமமாகும். மும்மொழிக் கொள்கையை பின்பற்றினால் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து, தமிழ்நாட்டிற்குரிய நிதியை உடனடியாக விடுவிக்க மத்திய அரசை இந்த அரசு வலியுறுத்தும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், கல்வியானது பொதுப் பட்டியலில் இருப்பதன் காரணமாக நீட் தேர்வு, தேசியக் கல்விக் கொள்கை திணிப்பு, மும்மொழிக் கொள்கை போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, கல்வியை பொதுப் பட்டியிலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொள்ளும், இந்த அரசு ஆட்சியில் இருக்கும் வரை விவசாயிகள் நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண் எடுக்க இலவச அனுமதி அளிக்கப்படும். கனிம வளக் கொள்ளையை தடுக்க அரசு இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கும்.

18,274 ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்படும்.

அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு மேற்கொள்ளும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை முடித்த பின் மாநில அரசு சமூக நீதிக் கணக்கெடுப்பை மேற்கெள்ளும்.

தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணாவின் ஆட்சிக்கு பின் இருமொழி கொள்கை  நடைமுறையில் உள்ளது.

இருமொழிக் கொள்கையே இந்த அரசும் தொடர்ந்து பின்பற்றும்., மக்களே நாட்டின் உண்மையான எஜமானர்கள்” என்ற முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாதுரை உரையை சுட்டிக்காட்டி தனது உரையைத் தொடங்கிய ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் 36 நிமிடங்கள் பேசினார்.

இறுதியில், திருவள்ளுவரின் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வள்ளுவர் வாக்குடன் நிறைவு செய்தார்.

மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதிதாக அமைந்துள்ள அரசும், புதிய ஆளுநரும் இணக்கமான போக்கை வெளிப்படுத்தினர்.

தமிழ்நாடு அரசு தரப்பிலும், ஆளுநருக்காக முதல்முறையாக சட்டப்பேரவையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து தேசிய கீதமும் பாடப்பட்டுள்ளது.

அடுத்த 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில், தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்படும் சட்ட முன்வரைவுகளுக்கும் உடனுக்குடன் ஆளுநர் ஒப்புதல் பற வாய்ப்புகள் உள்ளதாகவே தெரிகிறது, மேலும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிபபை ஆளுநர் வெளியிட்ட நிகழ்வு அனைவராலும் வரவேற்கப்படுதிறது,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...